பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஏப்ரல் 12

நாம் மட்டுமே பரம யோக்கியம்




என்னவோ தொட்டதர்க்கெல்லாம்அரசியல் வாதிகளையே பழிக்கிறோம். அவர்கள் மட்டும் எங்கிருந்து வந்துவிட்டார்கள்? அவர்கள் நமிடமிருந்து சென்றவர்களே அல்லவா? அவர்கள் மட்டும் என்ன வேற்று கிரக வாசிகளா? இல்லையே! முதலில் நம் மக்களின் "பொது புத்தி" மாறியுள்ளதா? எல்லாவற்றுக்கும் நமக்கு குறுக்குவழியே வேண்டியுள்ளது. சட்டங்களும் ,நடைமுறை அமைப்புகளும் நமக்கு பெரும் இடஞ்சல்கள். இப்படித்தானே நாமும் இருக்கிறோம். சென்னையில் எங்காவது ஒரு பொது இடத்தில் கவனியுங்கள். ஆணோ, பெண்ணோ, வயது வேறுபாடு இன்றி எப்படியெல்லாம் தம்மை மட்டும் முன்னிருதிக்கொள்ள விழைகிறார்கள் என்று தெரியும். மக்களின் பண்பாடு என்பது  காப்பியும், இட்டிலியும்,தலைவாழை இலை சாப்பாடும், பட்டுப்புடவையும், சங்கீத கச்சேரி கேட்பதும், கைகளிலும், 
கழுத்திலும், காதிலும் பொன் நகைகள் போட்டுக்கொள்வதும்,
 பட்டுப்புடவையும், வேட்டி சட்டை உடுத்திக்கொள்வதும், மஞ்சு விரட்டி மாடு பிடிப்பதும் ,கிராமத்து கோவில்களில் கிடா வெட்டி கறி சோறு துண்ணுவதும் மட்டும்தானா??


ஏதோ ஒரு அலுவலாக வரிசைகளில் நிற்கும் போதும் கூட அந்த வரிசையை தாண்டி அடுத்த பக்கம் போக எண்ணுபவர்கள் எந்த அளவு அராஜக போக்குடன் நடந்துகொள்கிறார்கள் என்பது அனுபவத்தில் தெரியும். சடாரென்று நம் மீது மோதுவார்கள், நாம் திகைத்து சற்று ஒதுங்க , அந்த கேப்பில் உள்ளே நுழைந்து மேலும் வழி உண்டாகி கடந்து செல்கிறார்கள். சற்று ஒதுக்க சொன்னால் எவரும் ஒதுங்கி வழிவிடுவார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிக மிக அரிது. நம் மீது மோதிய பின் கேட்டால் " நான் வேண்டுமென்றா மோதினேன் " என்ற பதில் வேறு வரும்! அதுவும் படித்தவர்களாக தங்களை கட்டிக்கொள்ளும் பராரிகள் எல்லாமே இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.இதில் ஆண் பெண் சமத்துவம் நன்றாக செழித்து ஓங்கி வளர்ந்துள்ளது குறித்து பெண்ணின வாதிகள் தங்களின் தலைகளை மேலும் சற்று நிமிர்த்திக்கொள்ளலாம்.காதில் செல் போனுடன் ஏதோ இவர்கள் பேச்சை நிறுத்திவிட்டால் உலகமே நின்றுவிடும் போல ஒரு அதீத கவனத்துடன் பேசிக்கொண்டு,ஆடு மாடுகள் செல்வது போலவே போகிறார்கள். தாம் யார் மீது மோதுகிறோம், யார் கால்களை மிதிக்கிறோம் என்ற அடிப்படை அறிவு கூட அற்று.  முதுகில் கனத்த மூட்டையாக கிடக்கும் பை சொல்லும் இவர்கள் படிக்கும் அல்லது வேலைக்கு செல்லும் யுவதிகள் அல்லது வாலிபர்கள் என்று 

கேவலம், இன்னமும் தெரு ஓரங்களில் மலம் கழிப்பதையும், எச்சில் துப்புவதயுமே ,குப்பைகள் கொட்டுவதையும், சிறுநீர் கழிப்பதயுமே நம்மால் நிறுத்த முடியவில்லை. பொது இடங்களில் தம்மை மட்டுமே முன்னிறுத்தும் பழக்கம் உள்ள நமக்கு நம் அரசியல் வாதிகளை , ஆட்சியாளர்களை மட்டும் குற்றம் சொல்லி சொல்லி "நாம் மட்டுமே பரம யோக்கியம்" என்று பசப்பி திரிய நன்றாகவே வருகிறது.பிறரை மட்டுமே குற்றம் குறைகள் சொல்ல நமக்கு மட்டும் என்ன அருகதை உள்ளது?


நாங்கள் மட்டும் இப்படித்தான் இருப்போம். ஆனால் ஆட்சியில் வருபவர்கள் மட்டும் உத்தம சீலர்கலாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒன்னாம் நம்பர் அயோக்கியத்தனம் இல்லையா? பொது இடங்களில் ஒரு ஒழுங்கை, நெறியை நாம் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படை அறிவு தெளிவு கூட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லை.


தொட்டதற்கெல்லாம், அது பஸ் பயணமோ, ரயிலோ, சினிமா காட்சியோ, ரேஷன் கடையோ,பாஸ்போர்ட் அலுவலகமோ,அல்லது வேறு எந்த அரசு,தனியார் அலுவலகங்களோ,ஆஸ்பத்திரியோ,
அல்லது பொதுக்கழிபிடமோ எல்லா இடத்திலும்  அடுத்தவர்களை பின்னுக்குத்தள்ளிவிட்டு "தான் " மட்டுமே முந்திப்போக வேண்டும் என்ற புத்தி நமக்கு இருக்கும் வரை ஊழலும் முறைகேடுகளும் மலிந்துதான் கிடக்கும். நம்மைபோன்றவர்களே நம்மை ஆள,அரசியல் செய்ய வருகிறார்கள். நமக்கு கருணாநிதி, ஜெயலிதா, ராமதாசு, திருமாவளவன், விசய காந்து போன்றவர்களே கிடைப்பார்கள் நம்மை ஆள.


அணைத்து மத,சாதி, வழிபாட்டு தளங்களிலும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அங்கும் நாமே முந்தி சென்று "சாமியை" பார்த்துவிடவேண்டும் என்ற அல்ப குணங்கள் நம்மிடம் மிக அதிகம்தானே! அந்த புத்தி நம்மிடம் இருப்பதால் தானே டிக்கெட் வைத்து பணம் கொடுத்து "சாமியை" வணங்கும் முறையும் நாம் பின்பற்றுகிறோம் சற்றும் இது குறித்து அறிவோ,பிரக்ஜயோ, வெட்கமோ இன்றி? கடவுளை /சாமியார்களை /அல்லது அவர்களின் பிரதிநிதிகளை (எந்தமதமாக இருக்கட்டும்) தரிசிக்க  காசு கொடுக்கும்,வாங்கும் சமூகத்தில் வாழ்கிறோம் ஆனால் லஞ்சமும்,இலவசமும் மட்டும் வேணாம் என்று கூப்பாடு போடுவோம்.என்ன மொள்ளமாரித்தனம் இது? 


கையூட்டு கொடுத்தும்,வாங்கியும் காரியங்களை செய்யும் நாம் 
காரியம் சாதிக்கொள்ளும் நமக்கு "இலவசங்கள்" என்றால் மட்டும் கசப்பதேன்? சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்?நம்மிடம் கொஞ்சமாவது நேர்மை உணர்வும், நியாயமும் இறக்கிறதா முதலில் யோசிப்போம்.





17 comments:

சென்னை பித்தன் சொன்னது…

நாட்டைச் சுத்தமாக வைப்பதற்கு முன் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள் என்று சொல்வார்கள். மாற்றங்கள் நம்மிடமிருந்துதான் பிறக்க வேண்டும்.நன்று,மாணிக்கம்!

சக்தி கல்வி மையம் சொன்னது…

சரியான நேரத்தில் தேவையான பதிவு ..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சரியான நேரத்தில் சரியான இடுகை..

ராஜ நடராஜன் சொன்னது…

வழிகாட்டுவதற்கும்,நல்ல முறையில் நிர்வகிக்க மட்டுமே நாம் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம்.இவர்களுடன் அரசு கட்டமைப்பில் பணிபுரியும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளும் போது அதன் வழி நடத்தலைப் பொறுத்தே விளைவுகள் இருக்கும்.உதாரணம் தேர்தல் கமிஷன் மற்றும் கல்மாடி,ராசாவின் நிர்வாகங்கள்.

மக்களுக்கான மாற்றங்களைக் கொண்டு வருவது சட்டங்களும்,நிர்வாகத்திறமையுமே.இதே மக்களை வேறு நாடுகளீல் பாருங்கள்.எவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறார்களென்று.

பெயரில்லா சொன்னது…

Nice one.

வைகை சொன்னது…

உண்மைதான்.. வெளிநாட்டில் இருந்து வரும் போது அந்த நாட்டில் ஒழுங்காக வரிசையை கடைபிடிப்பார்கள்..ஆனால் இங்கு வந்து இறங்கியதுமே முண்டி அடித்து.. குடி நுழைவில் தெரிந்த காவலரிடம் சொல்லி முன்னாடி செல்வார்கள்! நம் மக்களின் மனோபாவம் அப்படி!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நாங்கள் மட்டும் இப்படித்தான் இருப்போம். ஆனால் ஆட்சியில் வருபவர்கள் மட்டும் உத்தம சீலர்கலாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒன்னாம் நம்பர் அயோக்கியத்தனம் இல்லையா? பொது இடங்களில் ஒரு ஒழுங்கை, நெறியை நாம் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படை அறிவு தெளிவு கூட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லை.//

இடிமுழக்கம்......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தொட்டதற்கெல்லாம், அது பஸ் பயணமோ, ரயிலோ, சினிமா காட்சியோ, ரேஷன் கடையோ,பாஸ்போர்ட் அலுவலகமோ,அல்லது வேறு எந்த அரசு,தனியார் அலுவலகங்களோ,ஆஸ்பத்திரியோ,
அல்லது பொதுக்கழிபிடமோ எல்லா இடத்திலும் அடுத்தவர்களை பின்னுக்குத்தள்ளிவிட்டு "தான் " மட்டுமே முந்திப்போக வேண்டும் என்ற புத்தி நமக்கு இருக்கும் வரை ஊழலும் முறைகேடுகளும் மலிந்துதான் கிடக்கும். நம்மைபோன்றவர்களே நம்மை ஆள,அரசியல் செய்ய வருகிறார்கள். நமக்கு கருணாநிதி, ஜெயலிதா, ராமதாசு, திருமாவளவன், விசய காந்து போன்றவர்களே கிடைப்பார்கள் நம்மை ஆள.//

சரியான விளாசல்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கையூட்டு கொடுத்தும்,வாங்கியும் காரியங்களை செய்யும் நாம்
காரியம் சாதிக்கொள்ளும் நமக்கு "இலவசங்கள்" என்றால் மட்டும் கசப்பதேன்? சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்?//

நல்லா வாரு வாருன்னு வாரிட்டீங்க போங்க....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவர்கள் நமிடமிருந்து சென்றவர்களே அல்லவா? //
வாஸ்தவமான கேள்வி.
மக்கள் எவ்வழி! மன்னன் அவ்வழி.!!

மனம் திறந்து... (மதி) சொன்னது…

Hello world!

1. You really want to make a difference: Just don't blame it on others.
Have guts? Try this: Send your children, after education, to the Army for two years, then put them in Politics for five years. Then only allow them to come back and lead a life of their own!

I am sure you won't come back and complain!

2. The moment you say I am a decent guy and I won't do dirty jobs, you lose all the right to call the other guy, who is doing the dirty job, a Dirty Fellow!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

கையூட்டு கொடுத்தும்,வாங்கியும் காரியங்களை செய்யும் நாம்
காரியம் சாதிக்கொள்ளும் நமக்கு "இலவசங்கள்" என்றால் மட்டும் கசப்பதேன்? சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்?நம்மிடம் கொஞ்சமாவது நேர்மை உணர்வும், நியாயமும் இறக்கிறதா முதலில் யோசிப்போம்.

வித்தியாசமான சிந்தனை!

GEETHA ACHAL சொன்னது…

அனைவரும் கண்டிப்பாக இதனை பற்றி சிந்திக்க வேண்டும்...நல்ல Timely பகிர்வு...

Chitra சொன்னது…

எல்லா இடத்திலும் அடுத்தவர்களை பின்னுக்குத்தள்ளிவிட்டு "தான் " மட்டுமே முந்திப்போக வேண்டும் என்ற புத்தி நமக்கு இருக்கும் வரை ஊழலும் முறைகேடுகளும் மலிந்துதான் கிடக்கும். நம்மைபோன்றவர்களே நம்மை ஆள,அரசியல் செய்ய வருகிறார்கள்.


.....சுளீர்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமையானஅவசியமான மெசேஜ், நீங்க எழுதுன பதிவுகள்ல ஒன் ஆஃப் தி டாப்..........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்........!

ramesh சொன்னது…

Neega solluruthu sari thanka

doubts

//கேவலம், இன்னமும் தெரு ஓரங்களில் மலம் கழிப்பதையும், எச்சில் துப்புவதயுமே ,குப்பைகள் கொட்டுவதையும், சிறுநீர் கழிப்பதயுமே நம்மால் நிறுத்த முடியவில்லை//

Ithulam thappu than.
But avasarama urin ponnum suthi oru kilo meter ku toilet yethum illa athu kooda namma kuthama.

Enka oorla Kattana kalipidum kattunaka.
Anna atha open panna ministerku time illa.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக