இது ஆரம்பம் மட்டுமே,இனிமேல் தான் எல்லா கூத்தும் இருக்கு.
தன் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, ஹசாரே அறிவித்துள்ளார். கடந்த 42 ஆண்டுகளாக இந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றனர். இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு ஏன் தயங்குகிறது? இந்த மசோதா கொண்டுவர அமைக்கப்பட்ட குழுவில் மத்தியமைச்சர் சரத் பவார் இருக்கிறார். இக்குழுவில் ஊழல் அமைச்சர்களுக்கு இடம் எதற்கு? அப்படி இருந்தால் அக்குழு முடிவே எடுக்காது. பவார் இருக்கும் வரை அக்குழு செயல்படுவதில் அர்த்தமே இருக்காது. பவார் என்னை சந்திக்க விரும்பினாலும் சந்திக்க மாட்டேன். நான் உண்ணாவிரதம் இருந்து இறப்பேன். மக்கள் குழு ஆலோசனை இல்லாமல், இந்த மசோதா ஊழலை ஒழிக்கும் கருவியாக இருக்காது. என் மேடையில் அரசியல்வாதிகள் யாரையும் அமர அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு ஹசாரே கூறினார். ஹசாரேயின் இந்த காட்டமான விமர்சனத்தை தொடர்ந்து லஞ்ச ஊழல் குறித்து ஆராயும் அமைச்சர் குழுவில் இருந்து சரத்பவார் நேற்று இரவு ராஜினாமா செய்தார். இதனிடையே ஹசாரே கோபத்தை குறைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
சொல்லிவைத்தார்போல தமிழக ஊழல் திலகங்களின் ஊடகங்களில் எதிலும் இந்த செய்திகள் வருவதே இல்லை. நானும் மூன்று நாட்களாக கவனிக்கிறேன். நம்ம ஊரு தாத்தா டி.வி. ஆத்தா டி.வி. மம்மி டி.வி. அய்யா டி.வி. உத்தமர்கள் டி.வி. உயர்ந்தவர்கள் டி.வி. கூத்தாடிகள் டி.வி.மாமன் டி.வி. மச்சான் டி.வி. புருஷன் டி.வி. பொஞ்சாதி டி.வி. தம்பி டி.வி. அண்ணன் டி.வி. என எந்த ஊடகங்களிலும் இந்த நிகழ்வினைப்பற்றி ஒரு வரி செய்தியும் இல்லை. இதுபோன்ற செய்திகளை மக்களிடமிருந்து மறைக்க மட்டும் இவர்கள் எல்லோரிடமும் எழுதப்படாத அனுசரணையான ஒப்பந்தம் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.வெறும் சினிமா கூத்தாடிகளின் வழக்கமான கேவலங்கள், அவரவர் கட்சிகளின் பம்மாத்து சாதனைகள், எதிரிகளின் அசிங்கமான அரை கூவல்கள் என வழக்கம்போல தேர்தல் வியாபாரங்கள் செய்வதால் அன்னா ஹசாரே பற்றி இவர்கள் வாயை திறப்பதே இல்லை.வடக்கத்திய ஊடகங்கள் ஒன்றும் உத்தமர்கள் இல்லை. அவர்களும் தென்னிந்திய ,தமிழக செய்திகளை அதிகம் கண்டுகொள்ளமாட்டார்கள்.2 G ஸ்பெக்ட்ரம் ஊழலில் பணத்தின் மதிப்பு பன்மடங்கு எனவே அந்த விஷயத்தை காய்ச்சி எடுத்தார்கள். நல்ல வேலையாக தமிழ் ப்லாகர்களும் இதனை பற்றி எழுத தலைப்பட்டது பாராட்டப்பட வேண்டும்.ஆனால் அன்னா ஹசாரே யின் இந்த உண்ணாவிரத போராட்டத்தை எல்லா வடகத்திய ஊடகங்களும் சிறப்பாகவே செய்கின்றன.இந்த மசோதா கொண்டுவர அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற அமைச்சர்களின் பட்டியளைக்கண்டால் சிரிப்புத்தான் வரும்.
சரத் பவார், சிதம்பரம்,வீரப்ப மொய்லி, ஏ.கே. ஆண்டனி,கபில் சிபல்,அழகிரி.
ஹசாரேயின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதே. இந்த லோக்பால் கமிட்டியில் இடம் பெரும் உறுபினர்களில் 50% பொதுமக்கள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். சரிதானே. இந்திய மக்களின் சார்பாக இடம்பெறுபவர்கள் மீதம் உள்ள 50% அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உறுபினர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் காங்கிரஸ் இந்த கோரிக்கையை ஏற்றுகொள்ள தயாரில்லை.
ஹசாரே போட்ட போடில் ஊழல் சக்ரவர்த்தி ( நம்ம ஊர் காரர்களையும் மிஞ்சியவர்) சரத் பவார் இந்த கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியே ஓட்டிவிட்டார். கபில்சிபல் இன்னமும் இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று பூசி மெழுகுகிறார். உண்மையில் இந்த மசோதா லோக்சபாவில் 1969 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரசும், ஏன் பி.ஜே.பி. யும் கூட இதனை சீண்டவே இல்லை. இந்த 42 வருடங்களில் செய்யாததை இப்போது செய்ய இன்னமும் காலம் வேண்டுமாம் இவர்களுக்கு.
ஹசாரேயும் விடுவதாய் இல்லை. இன்று மூன்றாவது நாளாக உண்ணா விரதம் தொடர்கிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவும் அபரிமிதமாக கிடைப்பதை கண்டு மன்னுமோகனும் அன்டோனியோ சோனியா கான்டியும் மிரண்டுபோய்தான் உள்ளனர். உண்ணாவிரதத்தை கை விடும் படி ஹசாரே யை வேண்டி கடிதம் எழுதிய பிரதமரை வறுத்து எடுத்துவிட்டார் ஹசாரே தன் பதில் கடிதத்தில். //உங்கள் அமைப்பில் துளியும் மக்களுக்கு நம்பிக்கை// இல்லை என வாரி விட்டுள்ளார். பல பிரபலங்களும் இவரின் இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்து வருவது சிறப்பு. இந்திநடிகர் அமீர் கான்,போலிஸ் அதிகாரியாக இருந்து ஆளும் வர்க்கத்துக்கு தண்ணி காட்டிய கிரண் பேடி போன்றவர்கள் ஆதரவு தருகின்றனர். இளம் வயதினர், பெண்கள்
மிக அதிக அளவில் இவருக்கு பக்க பலமாக இருப்பது பெருமையானது. கைகளில் ஒளிரும் மெழுகு வர்த்தியும் இந்திய தேசியக்கொடியும் ஏந்தி இவர்கள் உண்ணாவிரத இடத்தை சூழ்ந்துள்ளது வித்யாசமான ஒரு மாற்றம் இங்கு வரப்போவதை சொல்லாமல் சொல்கின்றன.
மிக அதிக அளவில் இவருக்கு பக்க பலமாக இருப்பது பெருமையானது. கைகளில் ஒளிரும் மெழுகு வர்த்தியும் இந்திய தேசியக்கொடியும் ஏந்தி இவர்கள் உண்ணாவிரத இடத்தை சூழ்ந்துள்ளது வித்யாசமான ஒரு மாற்றம் இங்கு வரப்போவதை சொல்லாமல் சொல்கின்றன.
இவருக்கு பெருகி வரும் ஆதரவைகண்டு அதனை அரசியலாக்கி ஆதாயம் காணும் எவரும் இவரை நெருங்க இயலவில்லை. உமா பாரதி இவரை சந்திக்க வந்து அவரை சூழ்ந்து கேரோ செய்து திருப்பி அனுப்பியது அங்கு சூழ்ந்துள்ள கூட்டம். டிவிடரிலும்,முக நூலிலும், பஸ்ஸிலும் இந்த இயக்கம் பற்றின சூடான செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. இந்த சந்தர்பத்தை சரியாக பயன் படுத்தவேண்டும் நண்பர்களே.
தைரியமாக முடிவெடுக்கும் படி இவர் மண்ணு மோகன் சிங்கிற்கு வலியுறுத்துவது என்பதில் உள்ள வலிமை,அழுத்தத்தை உணர ஆரம்பியுங்கள்.
35 comments:
ஊழலற்ற நடைமுறைகளுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாகட்டும்..
//இந்த சந்தர்பத்தை சரியாக பயன் படுத்தவேண்டும் நண்பர்களே// ஆம் தோழா .
நானும் மூன்று நாட்களாக கவனிக்கிறேன். வெறும் சினிமா கூத்தாடிகளின் வழக்கமான கேவலங்கள், அவரவர் கட்சிகளின் பம்மாத்து சாதனைகள், எதிரிகளின் அசிங்கமான அரை கூவல்கள் என வழக்கம்போல தேர்தல் வியாபாரங்கள் செய்வதால் அன்னா ஹசாரே பற்றி இவர்கள் வாயை திறப்பதே இல்லை. ......நானும் பார்த்துட்டே தான் இருக்கேன் ....இது வரை எந்த செய்தியும் வரல .......
பகிர்வுக்கு நன்றி தலைவரே
ஊழலற்ற இந்தியாவை உருவாக்கா. அரசியல் பேய்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் வாங்கித்தர.. ஹசாரே ஒரு நவகால காந்தியாக எனக்குத் தெரிகிறார். பேதங்கள் மறந்து அவர் பின்னே அணி திரள்வதே இன்றைய நமது கடமையாக இருக்க முடியும் .
அரசியல் பதிவு....
பகிர்வுக்கு நன்றி..
நாகரீமான மற்றும் ஊழலற்ற அரசியல் அது அந்தக்காலம்...
இனி அது திரும்பாது..
இதை உங்களிடம் இருந்து நேற்றே எதிர்பார்த்தேன் தல. பூர்த்தி பண்ணிட்டீங்க. அட்டகாசம் மாணிக்கம். இது போல பதிவுகள் தான் உங்கள் வலைப்பூவின் சிறப்பம்சமே! வாழ்த்துக்கள். ;-)
நானும் மூன்று நாட்களாக கவனிக்கிறேன். வெறும் சினிமா கூத்தாடிகளின் வழக்கமான கேவலங்கள், அவரவர் கட்சிகளின் பம்மாத்து சாதனைகள், எதிரிகளின் அசிங்கமான அரை கூவல்கள் என வழக்கம்போல தேர்தல் வியாபாரங்கள் செய்வதால் அன்னா ஹசாரே பற்றி இவர்கள் வாயை திறப்பதே இல்லை. ......நானும் பார்த்துட்டே தான் இருக்கேன் ....இது வரை எந்த செய்தியும் வரல ......>>>>>>>எப்படி பாலா பேசுவாங்க.. இங்க தமிழன் சன் டிவியில வடிவேல் பேசுறத வாய பொளந்து பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு... மானாட மயிலாட நிகழ்ச்சியில எவ எப்ப குனிவா எப்ப எது தெரியும் பாக்குற தமிழன் கிட்ட போய் அன்னா ஹாசாரே ஊழல எதிர்ப்பு போன்ற ஆபாசத்த பேசாதீங்க... இந்த இனத்தில் பிறந்தற்காக நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.
தைரியமாக முடிவெடுக்கும் படி இவர் மண்ணு மோகன் சிங்கிற்கு வலியுறுத்துவது என்பதில் உள்ள வலிமை,அழுத்தத்தை உணர ஆரம்பியுங்கள்.
...true.
//சொல்லிவைத்தார்போல தமிழக ஊழல் திலகங்களின் ஊடகங்களில் எதிலும் இந்த செய்திகள் வருவதே இல்லை. நானும் மூன்று நாட்களாக கவனிக்கிறேன். நம்ம ஊரு தாத்தா டி.வி. ஆத்தா டி.வி. மம்மி டி.வி. அய்யா டி.வி. உத்தமர்கள் டி.வி. உயர்ந்தவர்கள் டி.வி. கூத்தாடிகள் டி.வி. என எந்த ஊடகங்களிலும் இந்த நிகழ்வினைப்பற்றி ஒரு வரி செய்தியும் இல்லை.//
கள்ளனும் கள்ளனும் ஒன்றுதானே... எப்பிடி செய்தி போடுவான்..?
//அவர்களும் தென்னிந்திய ,தமிழக செய்திகளை அதிகம் கண்டுகொள்ளமாட்டார்கள்.//
அண்ணாவுக்கே இந்த கதிதானே இங்கே.
//சொல்லிவைத்தார்போல தமிழக ஊழல் திலகங்களின் ஊடகங்களில் எதிலும் இந்த செய்திகள் வருவதே இல்லை//
கொக்க கோலா விக்கறவன் கிட்ட இளநீர் கடை எங்க இருக்குன்னு கேட்டா எப்படி சொல்வான்..
//ஹசாரேயும் விடுவதாய் இல்லை. இன்று மூன்றாவது நாளாக உண்ணா விரதம் தொடர்கிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவும் அபரிமிதமாக கிடைப்பதை கண்டு மன்னுமோகனும் அன்டோனியோ சோனியா கான்டியும் மிரண்டுபோய்தான் உள்ளனர்.//
மன்னுமோகன் இல்லை மக்கா மண்ணுமோகன் சொப்ளாங்கி தலையன் தலையாட்டி பொம்மை....
//இவருக்கு பெருகி வரும் ஆதரவைகண்டு அதனை அரசியலாக்கி ஆதாயம் காணும் எவரும் இவரை நெருங்க இயலவில்லை. உமா பாரதி இவரை சந்திக்க வந்து அவரை சூழ்ந்து கேரோ செய்து திருப்பி அனுப்பியது அங்கு சூழ்ந்துள்ள கூட்டம். டிவிடரிலும்,முக நூலிலும், பஸ்ஸிலும் இந்த இயக்கம் பற்றின சூடான செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. இந்த சந்தர்பத்தை சரியாக பயன் படுத்தவேண்டும் நண்பர்களே.//
சரியாக சொன்னீர்கள் கக்கு.... இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஊழலை ஒழிப்போம்...சுவிஸ் பேங்கில் இருக்கும் எழுவது சதவீத பணமும் காங்கிரஸ்காரன் ஊழல் செய்து பதுக்கி வச்சிருக்கான்...
//விக்கி உலகம் சொன்னது…
பகிர்வுக்கு நன்றி தலைவரே//
கொய்யால தக்காளி, பதிவை படிக்கமாலையே நன்றியா பிச்சிபுடுவேன் பிச்சி....
இந்த பெரிய மனிதனுக்கு நம் ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.
உண்மைலே இன்று காலைதான் இந்த செய்தியே எனக்கு தெரிந்தது! நல்ல ஆரம்பம்... முடிவு நம் கைகளில்!
நாமும் நமது ஆதரவினை ஏதானும் ஒரு முறையில் தெரிவிக்க வேண்டும், i am ashamed, how northies media and people support them, but no one in chennai giving any support
இந்த சந்தர்பத்தை சரியாக பயன் படுத்தவேண்டும் நண்பர்களே.இந்த பெரிய மனிதனுக்கு நம் ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.
நல்லதொரு ஆரம்பமான இது அனைவரின் ஆதரவையும் பெற்று நல்லதொரு திருப்பத்தைத் தர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவோம்.
இன்று மூன்றாவது நாளாக உண்ணா விரதம் தொடர்கிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவும் அபரிமிதமாக கிடைப்பதை கண்டு மன்னுமோகனும் அன்டோனியோ சோனியா கான்டியும் மிரண்டுபோய்தான் உள்ளனர்.//
வணக்கம் சகோ,
இதே சரப் பவார் தானே இப்போது ஐசிசி கிறிக்கட் கட்டுப்பாட்டு மையத்திலும் இருக்கிறார்.
உண்ணாவிரதம் இருக்கும் நபரின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்குமா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,
உண்ணாவிரதம் இருக்கும் அன்பரின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதே என் விருப்பமும்.
மத்திய அரசினைச் சார்ந்து/ டில்லிப் பக்கம் உள்ள தெரியாத பல விடயங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்ட திருப்தி.
ஊழலற்ற வளமான நாடு உருவாக வேண்டும் எனப்தே எனது தான் எல்லோர் விருப்பமும்.
நல்ல தொடக்கம்
ஊழலில் வளரும் மீடியாக்களிடம் ஊழல் தொடர்பான செய்திகளை எதிர்பார்க்க முடியாது தானே சகோதரம்?
all the North indians are voted for congress, We the tamiwl peoples thrown the congress from the power before 1971, so ask the north Indians to do like that. Did Nithsh and Nardeara Modi and Navin patnaik and shivraj Chowngan are fraud.
//We, all supporting Anna Hazare. But this country will be clean only when the public become less corrupt. We deserve the leaders we get.//
இளம் வயதினர், பெண்கள்
மிக அதிக அளவில் இவருக்கு பக்க பலமாக இருப்பது பெருமையானது. கைகளில் ஒளிரும் மெழுகு வர்த்தியும் இந்திய தேசியக்கொடியும் ஏந்தி இவர்கள் உண்ணாவிரத இடத்தை சூழ்ந்துள்ளது வித்யாசமான ஒரு மாற்றம் இங்கு வரப்போவதை சொல்லாமல் சொல்கின்றன.
சிறந்த பதிவு... இதில் ஓடி ஒளிந்துகொண்ட நம் பிரபலங்களின் கோழைத்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
வித்தியாசத்திற்கு வித்திடும் ஆரம்பம்.
எல்லா மக்களுமே நல்லதொரு மாற்றத்தைதான் எதிர்பார்க்கிரார்கள் என்பதை உணர முடியும், மடியில் கனம் இருக்கும் அரசியல்வாதிகள் வழியில் பயப்படத்தானே வேண்டும்?
ஊழல் ஜெயிக்குமா?உண்ணாவிரதம் ஜெயிக்குமா?
//இவருக்கு பெருகி வரும் ஆதரவைகண்டு அதனை அரசியலாக்கி ஆதாயம் காணும் எவரும் இவரை நெருங்க இயலவில்லை. உமா பாரதி இவரை சந்திக்க வந்து அவரை சூழ்ந்து கேரோ செய்து திருப்பி அனுப்பியது அங்கு சூழ்ந்துள்ள கூட்டம். டிவிடரிலும்,முக நூலிலும், பஸ்ஸிலும் இந்த இயக்கம் பற்றின சூடான செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. இந்த சந்தர்பத்தை சரியாக பயன் படுத்தவேண்டும் நண்பர்களே//
இது ஒரு மக்கள் இயக்கமாக,விஸ்வரூபம் எடுக்க வேண்டும்.
மிகச் சிறப்பான பதிவுக்குப் பாராட்டுகள்!
பலவிடங்களிலும் இதைப்பற்றிய பேச்சினை கேட்க முடிகிறது இதுவே பாதி வெற்றி அடைந்ததிற்கு சமம்.
ஒரு மௌனப்புரட்சி ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொருவரும் கைகளில் தீபமொன்றை ஏந்துவோம்! ஊழலை, செயல்திறனற்ற அரசு இயந்திரத்தை, நேர்மையில்லாத அரசியல்வாதிகளை இனிமேலும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக நிற்போம்.
புதிய வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்!
இவர் இன்னொரு காந்தி. எல்லோரும் இவர் பின்னால் அணி திரளுவோம்!
இன்னொரு விஷயம். மசோதா கொண்டுவர அமைக்கப்பட்ட குழுவில் இருக்கும் இன்னொருவர் அழகிரி! இது தான் இந்த குழுவின் லட்சணம்!
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.
இன்று மாலை ௫ மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்
வருகைதந்து அணைத்து நண்பர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துரையிடுக