மார்ச் மாதமும் வந்தாச்சு,கூடவே சட்டசபை தேர்தலும் வந்து அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஆசைகாட்டுதல், அடிமையாக்கல், அடக்கி வைத்தல், பதுங்கி பாய்தல், பல்லிளித்தல்,காலை வாறுதல், கழுத்தை அறுத்தல் என சகல அற்புத மனித குணங்களும் வெளியில் ஆடுகின்றன. இங்கு வலைத்தளமோ சொல்லவே வேண்டாம். சுனாமி வந்த ஜப்பானின் கடல் போலவே கலங்கிப்போய் உள்ளது.சற்று வேறு ஏதாவது பார்கலாம்.
இவைகளை எல்லாம் சற்று தள்ளி இருந்து வேடிக்கை பார்பவர்களுக்கு இந்த பதிவு. சார்லி சாப்ளின் பழைய படங்கள் என்றும் கண்டு ரசிக்கத்தக்கவை. அவரின் படங்கள் நிறைய D V D சேர்த்து வைத்துள்ளது. விடுமுறை நாட்களை "இவைகளை பாருங்கலடா " என்று என் புத்திர சிகாமணிகளிடம் சொன்னால் " அய்ய...............போங்கப்பா....." என்கிறார்கள். நமக்கோ அடக்கருமமே என்று பற்றிக்கொண்டு வரும். கிரிகெட்,போகோ,மூவிஸ் நவ், தமிழ் சினிமா காமெடி ஷோ இதுகளைத்தான் கட்டிக்கொண்டு கிடக்கிறார்கள். என்ன செய்வது? நாம் பிறப்பதற்கும் முன்னாள் வந்தவைகள் சார்லிசாப்ளின் படங்கள். அவைகளை நாம் பார்த்து மகிழ வில்லையா? இவர்களுக்கு ஏன் இந்த வேறு பாடு? சரி, அதை விடுவோம்.
இங்குள்ள ஒரு வீடியோ கிளிப் சார்லி சாப்ளின் படமான சிட்டி லைட்ஸ் - City Lights ஆகும். சிறிய பகுதிதான் கண்டுகளியுங்கள். மேலும் இதில் ஒரு புதிரும் உள்ளது. ஆமாம், பூ விற்கும் குருட்டு பெண்ணாக வரும் விர்ஜினியா செர்ரில் ஐ சாப்ளின் சந்திக்கும் பொது வரும் பின்னணி இசையினை நன்றாக கவனியுங்கள்.அதே இசையினை, டியூனை பயன்படுத்தி ஒரு பழைய தமிழ் திரைப்பாடல் உள்ளது. அந்த நாள் ரேடியோ சிலோன் கேட்டு வளர்ந்த இந்நாளைய கிழ வாலிபர்களுக்கு! நன்கு தெரிந்த பாடல் அது.
CITY LIGHTS
௦
௦
௦
௦
௦
௦
௦
௦
௦
௦
௦
௦
௦
௦
0
இதோ அந்த பழைய தமிழ் பாடல்.
Now singing DeepaMiriam for DoorDershan, Chennai.
DeepaMiriam உண்மையில் மிக அழகாகவே அந்த பாடலை பாடியிள்ளார்.
திரைப்படம் : ராஜீ என் கண்மணி
பாடியவர்: பால சரஸ்வதி
பிற தகவல்கள் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
29 comments:
சார்லி என்றுமே நாம் ரசிக்கக்கூடிய கலைஞன். வாழ்வில் எவ்வளவு துயரங்களை சந்தித்தாலும் பார்க்கும் அனைவரயும் மகிழ்ச்சியூட்டிய பெருமகன். பகிர்வுக்கு நன்றி மாணிக்கம். ;-)
இன்றைய பரபரப்பான பேசும் படங்களுக்கு நடுவிலும் இவர் படங்களை ரசிக்க முடியும்.
City Lights எனக்குப் பிடித்த அருமையான படம் பாஸ்! :-)
சாப்ளின் சாப்ளின்தான்!அந்த திரைப்படத்திலும் நாயகி பூ விற்கும் பெண்தான்!
அரே லக்கா ட்டோல் டக்கரா டை...
வருகைக்கு நன்றி மைனரே!
// இன்றைய பரபரப்பான பேசும் படங்களுக்கு நடுவிலும் இவர் படங்களை ரசிக்க முடியும்.//
உண்மைதான் ஸ்ரீ ராம். வருகைக்கு நன்றி .
// City Lights எனக்குப் பிடித்த அருமையான படம் பாஸ்! :-) //
சார்லி சாப்ப்ளினின் படங்களை DVD களாக ஆசை ஆசையாய் வாங்கி வைத்துள்ளது இங்கு.
வருகைக்கு நன்றி ஜீ.
// சாப்ளின் சாப்ளின்தான்!அந்த திரைப்படத்திலும் நாயகி பூ விற்கும் பெண்தான்!//
உங்களைபோன்றவர்கள் தான் அந்த தமிழ் படம் ராஜீ என் கண்மணி பற்றி சொல்லவேண்டும்
சென்னைகாதலரே! வருகைக்கு நன்றி.
// அரே லக்கா ட்டோல் டக்கரா டை...//
யூர்கன் க்ருகியர்.
என்னா மாப்ள, அங்கெ புனேயிலும் வெய்யில் ஜாஸ்தியா ஆயிடுச்சா கண்ணு?!
எனது ஆதர்ச நாயகர்களில் ஒருவர் சார்லீ சாப்ளின். அவர் நகைச்சுவையாகக் காட்சியமைத்தே பல அரிய பெரிய விஷயங்களை, அதுவும் வசனமில்லாமலேயே புரிய வைத்து விடுவார். அவரது படங்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், இங்கு நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ஒத்த மனோ பாவம், ரசனை உள்ளவர்களாக வந்து பின்னூட்டம் இடுவது மகிழ்ச்சியளிகிறது
சேட்டை, வருகைக்கு நன்றி.
சார்லி சாப்ளின் எனக்கும் ரொம்ப பிடிக்கும், இன்றைய சிறுசுகளுக்கு இதில் ரசிக்க ஒன்றுமே இல்லை என்பதற்கு காரணம் கருப்பு வெள்ளை என்பதால் தான். பழையது என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வெறுப்பை காட்டும் வழக்கம் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கும் வந்திருக்கும்
கமல் ஒரு ஹாலிவுட் மேட்டர காப்பி அடித்தா அடிச் சுவடு பலபேருக்கு தெரியாது.. கண்டு பிடிக்குறது கஷ்டம்..
கமழு தெரியாம / மறைக்க முடியாம காப்பி அடிச்ச ஒரே ஆளு.. சார்லி சாப்ளிந்தான்.. ஒரிஜினல் ஒரிஜினல்தான்.. மறக்க முடியுமா அந்த ஸ்டைல.. அந்த காமேடிய..
ஒரு லெஜன்ட்டை நினைவுபடுத்தியதற்கு நன்றி..
ஆபீஸ்க்கு வந்ததும், முதல் வேலையா, சார்லியோட வீடியோவைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்..
அந்தகாலத்திலேயே ..கலக்கியிருக்கார்..
வருகைக்கு நன்றி ஜீவன் சிவம்.
வருகைக்கு நன்றி Madhavan Srinivasagopalan
வருகைக்கு நன்றி வேடந்தாங்கல் -கருன்.
வருகைக்கு நன்றி FOOD.
என்ன நலமா?
வருகைக்கு நன்றி பட்டா பட்டி .
நான் ரொம்ப லேட்டு
தல சான்சே இல்ல...எவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சு இருக்கீங்க...கலக்கல்..
சாப்ளின் வீடியோ அருமை...
சுனாமி வந்த ஜப்பானின் கடல் போலவே கலங்கிப்போய் உள்ளது.சற்று வேறு ஏதாவது பார்கலாம்.
நன்றிங்க. வித்தியாசமாய், சுவாரஷ்யமாய் பதிவிட்டதற்கு.
சார்லி சாப்ளின் ஒரு சகாப்தம்
அருமையான பகிர்வு நன்றி
அருமை
பகிர்வுக்கு நன்றி தலைவரே........பேசும் படங்கள் வந்த பிறகும் தன்னுடைய பேசா படத்தை ரிலீஸ் செய்து ஜெயித்தவரை உலகம் மறக்க முடியுமா நன்றி!
தன சொந்த வாழ்வில் வெறும் வேதனைகளை மட்டுமே சுமந்து அடுத்தவரை தன் படங்கள் மூலம் இன்றும் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கும் மாமேதைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..........
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நண்பர்களே!
கருத்துரையிடுக