பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, மார்ச் 13

மாட்டி விட்டுட்டாங்க!தொடர் பதிவு எழுத என்னையும் கோத்து விட்டுட்டார் நம்ம ஊர் காரர். R .கோபி.  அவர் பெங்களூரில் வேலையாக இருந்தாலும் சொந்த ஊரான கும்பகோணத்தின் நினைவுகளை  எப்போதும் தன் பதிவுகளில் எழுதுபவர். நான்  தான் நாடோடியாக நாடுகளை சுற்றினாலும் கும்பகோணம் மட்டும் ஸ்பெஷல்தான் என்றும் எனக்கு. ஆனால் என் பெயர் வந்த விதத்துக்கும் குடந்தைக்கும் தொடர்பே இல்லை.நான் ஆரம்பத்தில் வலைப்பூவில் அறிமுகமான பொழுது சிலர் என் பெயர்காரணம் குறித்து வினவுவர். நம்ம மாப்ள யூர்கன் க்ருகியர் வேலை மெனக்கட்டு என் பெயரை பற்றி தெரிந்து கொள்ள கூகிளாண்டவர் உதவியை நாடி தலையை கலைத்துக்கொண்டு நின்ற கதைகளும் உண்டு. 

அது என்ன கக்கு-மாணிக்கம் ? என்று வினவியவர்கள் நிறைய.எனக்கு சுய புராணம் பாட மனமில்லாத காரணத்தால் அதிகம் அது பற்றி பேசியது இல்லை.அது அம்மா வைத்த செல்லமான பெயர். நான் வீட்டில் கடைக்குட்டி. முதலில் அக்காள், பிறகு மூன்று அண்ணன் மார்கள், கடைசியில் நான். காரைக்கால்,திருநள்ளார், பத்தகுடி அருகில் உள்ள செருமாவிலங்கை என்ற சிறிய கிராமம்.அதுதான் அம்மா பிறந்த ஊர்.அவர்கள் வீட்டில்தான் நானும் பிறந்தேன். நஞ்சையும், புஞ்சயுமாக நிலங்கள், வண்டிமாடுகள்,வேலையாட்கள் என்று அந்நாளைய மிராசுதார் குடும்பம். பெரிய முற்றம் நடுவில் வைத்து மூன்று பக்கங்களும் தாழ்வாரம், நீண்ட கூடம், நெல் கொட்டிவைக்கும் பத்தாயம், ஒருபக்கம் சமையல் அறை, மறுபக்கம் மேலும் சில அறைகள் மற்றும் ஹால், உயரமான திண்ணைகள் ,ஆலோடி என்று டிபிக்கல் கிராமத்து வீடு. நான் பிறந்திருந்த போது வீட்டில் ஐந்து ,ஆறு பசுக்கள் கன்று ஈன்று பால் தந்தனவென அம்மா சொல்லுவதுண்டு. எனவே எனக்கு பால் ராசிக்காரன் என்று வழக்கம் போல ஊரில் இருக்கும் கிழவிகள் எல்லாம் சேர்ந்து பட்டம் சூட்டிவிட்டார்கள்.வீட்டின் புறக்கடைகளில் மாட்டுத்தொழுவம் தெற்கு வடக்காக நீண்ட ,ஏதோ கோவில் மண்டபம் போல காணப்படும். மேல் விதானமும், தூண்களும் கருங்கல்லால் ஆனவை. பழைய, வர்ணம் போன மாட்டு வண்டிகள், சக்கரங்கள், நுகத்தடி, கலப்பைகள் , நெல் அளக்கும் பறை, ஒட்டையாய்  போன நீர் இறைக்கும் இரும்பு சால்,மரத்தால் ஆனா நெல் கொட்டிவைக்கும் பத்தாயம்  போன்றவைகள் அங்கு நிறைந்திருக்கும். நினைவு தெரிந்து, அம்மாவிடம் நான் கேட்டதுண்டு.

 //ஏனம்மா கோவில் மண்டபத்தில மாடுகளை கட்டிப்போட்டிருக்கு? //
// அது கோவில் மண்டபம் இல்லைடா, உன் தாத்தா மாணிக்கம் பிள்ளை கட்டிய மாட்டுத்தொழுவம்// 

தான் சிறுமியாக இருந்த போது அந்த கருங்கல் மாட்டு தொழுவம் கட்டப்பட்டதாக  செய்திகளை சொல்லுவாள். அந்நாட்களில் எருமைகளை பூட்டி அதன் மூலமே ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு கருங்கற்களை கொண்டு சென்றனர் என்ற செய்தியும் தெரியும்.மாணிக்கம் என்பது என் அம்மாவின் தந்தையார் பெயர். செருமாவிலங்கையின் படங்கள் என்னிடம் இல்லை. எனவே ஏதோ ஒரு வயலும் வரப்பும் படமாக போட்டுவைத்தேன்.இன்றும் கூட பிறந்த ஊர் ஞாபகத்தில் கூகிள் எர்த்தில் சுற்றி வருவதுண்டு. அங்கு சென்று " பின் " அடித்தும் வைத்துள்ளேன் . படத்தை பாருங்கள் தெரியும்.அந்த இடம்தான் நான் பிறந்த அம்மாவின் பூர்வீக வீடு இருந்த இடம் . இப்போது எல்லாமே பல கைகள் மாறி விட்டது. அந்த கிராமத்தை பற்றி ஒரு பதிவு எழுத நீண்ட நாளாக ஆசை. 
சரி கக்கு ?

கைகுழந்தையாய் நான் இருக்கும் போது என்ன கொடுத்தாலும் உடனே அதனை உமட்டி வெளியில் தள்ளிவிட்டுத்தான் அடங்குவேணாம். எதையும் இப்படி வாயிலிருந்து கக்கி விடுவதால் "கக்கும் பிள்ளை" என்ற காரணப்பெயர் வந்து பின்னாளில் கக்கு பிள்ளை என மருவியதுபோலும்.வீட்டில் கக்கு என்ற பெயர்தான் நிலைத்து. பள்ளியில் மட்டுமே மாணிக்கம். மற்ற எல்லா இடங்களிலும் உறவினர்கள், சொந்தங்கள், எல்லாரும் "கக்குபிள்ளை" என்றுதான் அழைத்தார்கள்.இன்றும் கூட பட்டீச்சுரம் கிராமத்துக்கு சென்றால் பார்க்கும் அனைவரும்  "கக்கு எப்ப வந்தய்யா?" என்றுதான் அன்பொழுக கேட்பார்கள்.பள்ளி நாட்களில் உடன் இருப்பவர்கள்  இந்த பெயரினை இஷ்டம்போல திரித்து வழக்கம் போல கிண்டல் அடித்து வெறுப்பேற்றும் சண்டைகளும் உண்டு. அம்மா வைத்த பெயரை விட மனசில்லாமல் பிளாக் தொடங்கிய போது அதனையும் சேர்த்து கக்கு-மாணிக்கம் என்று விளங்குகிறது. இன்றும் கூட சில நண்பர்கள் சாட்டிங் செய்யும்போதும், போனில் பேசும்போதும் ஒற்றையில் "கக்கு " என்று விளிக்கும் போது ஏதோ இரண்டுவயது சிறுவனைபோன்ற உணர்வு வரும். இந்த கிறுக்குத்தனம் இல்லாதவர்கள் யார்??
66 comments:

RVS சொன்னது…

கக்கற பிள்ளைதான் தக்கும் (தங்கும்) என்பார்கள்.. ;-)))
சுவாரஸ்யமாய் இருக்கிறது பெயர் விளக்கம். கக்கு... ;-))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கக்கு-மாணிக்கம் – பெயர்க்காரணம் சுவாரசியமாக இருந்தது! நீண்ட நாட்களுக்குப் பிறகு “பத்தாயம்” வார்த்தை படித்ததும் மனதுக்கு இதமாகவும் நன்றாகவும் இருந்தது நண்பரே!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி மன்னாற்குடியாரே!:))))

எல் கே சொன்னது…

பெயர்க் காரணம் நகைச்சுவையா இருக்கு.உங்க கிராமத்தை பத்தி சீக்கிரம் எழுதுங்க தலைவரே

Gopi Ramamoorthy சொன்னது…

பத்தாயம், ஆலோடி கேக்கவே நல்லா இருக்கு.

பெயர்க்காரணம் ஓரளவு நான் ஊகித்த மாதிரிதான்.

செருமாவிலங்கை - நல்ல பேரா இருக்கே. அதுக்குப் பேர்க்காரணம் சொல்லுங்களேன்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// “பத்தாயம்” வார்த்தை படித்ததும் மனதுக்கு இதமாகவும் நன்றாகவும் இருந்தது நண்பரே! //

...................வெங்கட் நாகராஜ் சொன்னது

இன்னமும் நிறைய இருக்கு, மொட்டை மாடுகள், நெல் கோட்டை, பறை, மல்லா கொட்டை......
இதெல்லாம் பின்னர் பார்க்கலாம்
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// பெயர்க் காரணம் நகைச்சுவையா இருக்கு.உங்க கிராமத்தை பத்தி சீக்கிரம் எழுதுங்க //
......எல் கே சொன்னது

எனக்கும் ஆசைதான் எல்.கே. விரைவில் எழுதுவேன்
வருகைக்கு நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// பத்தாயம், ஆலோடி கேக்கவே நல்லா இருக்கு.

பெயர்க்காரணம் ஓரளவு நான் ஊகித்த மாதிரிதான்.

செருமாவிலங்கை - நல்ல பேரா இருக்கே. அதுக்குப் பேர்க்காரணம் சொல்லுங்களேன்!//

..................Gopi Ramamoorthy

சரிதான், இதுவே ஒரு தொடர்பதிவாய் ஆயிடும் போல இருக்கே!
எனக்கும் ஆசைதான் பகிர்ந்துகொள்ள. விரைவில் கோபி.
வருகைக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan சொன்னது…

கிராமத்து பசுமையான நினைவுகளை திரும்பப் பெற்றேன்.
கல்தூண் மண்டபம், பத்தாயம், தாழ்வாரம், முற்றம், உயரமான திண்ணைகள் ,ஆலோடி
அனைத்தையும் கேட்க கேட்க.. .. நினைக்க நினைக்க இன்பமாக இருக்கிறது..

Nice post.. Thanks

செங்கோவி சொன்னது…

நானும் ரொம்ப நாளா(!) ஏன் உங்களுக்கு இந்தப் பேர்னு யோசிச்சேன்..இதனால தானா..நல்ல பகிர்வு கக்கு!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// கிராமத்து பசுமையான நினைவுகளை திரும்பப் பெற்றேன்.
கல்தூண் மண்டபம், பத்தாயம், தாழ்வாரம், முற்றம், உயரமான திண்ணைகள் ,ஆலோடி
அனைத்தையும் கேட்க கேட்க.. .. நினைக்க நினைக்க இன்பமாக இருக்கிறது.. //

.Madhavan Srinivasagopalan சொன்னது…

பழைய நினைவுகள் அனைவருக்குமே இப்படித்தான் மாதவன்.
வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//நானும் ரொம்ப நாளா(!) ஏன் உங்களுக்கு இந்தப் பேர்னு யோசிச்சேன்..இதனால தானா..நல்ல பகிர்வு கக்கு!//

வருகைக்கு நன்றி செங்கோவி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கக்கிகிட்டுதான் அலைஞ்சீராக்கும்......
இப்பமும் அந்த பழக்கம் இருப்பதா கேள்வி பட்டேனே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கக்கு'வுக்கு இன்னொரு பெயர் "குயில்"
அதுதான் கக்கு ஓவரா கூவுது ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அந்த இடம்தான் நான் பிறந்த அம்மாவின் பூர்வீக வீடு இருந்த இடம் . இப்போது எல்லாமே பல கைகள் மாறி விட்டது.//

கஷ்டமா இருக்குய்யா மனசுக்கு....

FOOD சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கக்கு - மாணிக்கம் சொன்னது…

//கக்கிகிட்டுதான் அலைஞ்சீராக்கும்......
இப்பமும் அந்த பழக்கம் இருப்பதா கேள்வி பட்டேனே....//

.........நாஞ்சில் மனோ.

இல்லை அதெல்லாம் இரண்டுவயதுக்குள் சரியாகிவிடும் மனோ. எப்படியா??
என் பெரிய பிள்ளை பிறந்து இதேபோல எங்களை பாடாய் படுத்தியதுதான்
மருந்து குடித்தால் அடுத்த சில நொடிகளில் "டபக்" எல்லாம் வெளியில் எடுத்துவிட்டுத்தான் அடங்குவான்.
அப்புறம் தானே சரியாகிவிட்டது.

பார்வையாளன் சொன்னது…

சற்றும் எதிர்பாராத , சுவையான பெயர் காரணம் . நன்றி கக்கு சார் . மன்னிக்வும் . நன்றிமாணிக்கம் சார்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// பெயர்காரணம் விளக்கம் அருமை. விரைவில் உங்கள் ஊரை பற்றியும் எழுதுங்கள். அவ்வளுடன் காத்திருக்கிறோம்.//
...........FOOD.
நீங்கள் எல்லாம் விரும்பினால் எழுதுகிறேன். வருகைக்கு நன்றி FOOD அவர்களே

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// சற்றும் எதிர்பாராத , சுவையான பெயர் காரணம் . நன்றி கக்கு சார் . மன்னிக்வும் . நன்றிமாணிக்கம் சார்..
.... பார்வையாளன் சொன்னது…

வருகைக்கு நன்றி பார்வையாளன் அவர்களே. அடுத்த சான்ஸ் உங்களுக்கும் இருக்கிறது.
நீங்களும் பெயர்காரணம் பதிவு எழுதுங்கள்.

ஆனந்தி.. சொன்னது…

அண்ணா...உங்கள் பெயர் காரணம் சுவாரஸ்யம்...நிறைய பேரு கக்கு ங்கிறதை சுக்கு னு படிக்கிறாங்கன்னு எனக்கு டவுட்டு இருக்குன்னா...அதை கொஞ்சம் தெளிவாய் சொல்லிருங்க....:)))

FOOD சொன்னது…

பெயர்காரணம் விளக்கம் அருமை. விரைவில் உங்கள் ஊரை பற்றியும் எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்
தமிழ் ஈட்டிக்கு பயந்து பிழை திருத்தினேன். நன்றி.
இன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.
http://unavuulagam.blogspot.com/2011/03/blog-post_13.html

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//அண்ணா...உங்கள் பெயர் காரணம் சுவாரஸ்யம்...நிறைய பேரு கக்கு ங்கிறதை சுக்கு னு படிக்கிறாங்கன்னு எனக்கு டவுட்டு இருக்குன்னா...அதை கொஞ்சம் தெளிவாய் சொல்லிருங்க....:)))//

.....................ஆனந்தி.
உண்மைதான் பலபேர் "சுக்கு" என்றுதான் குறிபிட்டார்கள். ஆனால் அது மிக சாதாரணம். பெயரில் என்ன இருக்கிறது? நம்மை அழகாக காட்டுவது நம் புத்தியும், எண்ணங்களும், செயல்களும் தானே!
வருகைக்கு நன்றி ஆனந்தி.

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், உங்களை உசுபேத்த இல்லை, இது உள் கூத்தும் இல்லை, உங்களின் ஊர் பற்றிய இயற்கை வரணனையுடன் இலயித்துப் போய் விட்டேன். அந்தக் காலப் பாரதிராஜா படம் போல எங்களைக் கிராமத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்.
உங்களின் பெயரின் பின்னால் உள்ள இரகசியத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள். பெயரை வைத்துக் கிண்டலடிப் போரைக் கண்டால் எனக்கும் கோபம் தான் வரும்.

//"கக்கு " என்று விளிக்கும் போது ஏதோ இரண்டுவயது சிறுவனைபோன்ற உணர்வு வரும். இந்த கிறுக்குத்தனம் இல்லாதவர்கள் யார்??//

என்ன ஒரு இலக்கிய நயம்.

rajatheking சொன்னது…

நன்றாக உள்ளது

rajatheking சொன்னது…

try to visit www.kingraja.co.nr

மாதேவி சொன்னது…

அழகிய கிராமத்து நினைவுகள். தொடருங்கள்...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//"கக்கு " என்று விளிக்கும் போது ஏதோ இரண்டுவயது சிறுவனைபோன்ற உணர்வு வரும். இந்த கிறுக்குத்தனம் இல்லாதவர்கள் யார்??//

//என்ன ஒரு இலக்கிய நயம்.//


....நிரூபன்,,


அய்யா சாமீ..................உங்ககிட்டே ஜாக்ரதையா இருக்கோணும். இல்லாட்டி வாரி உட்டுபுடுவீங்க! :))))
just kidding.
வருகைக்கு நன்றி. நிரூபன். அழகான இலங்கை தமிழ் பெயர்!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி rajatheking
வருகிறேன் உங்கள் பக்கமும்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// அழகிய கிராமத்து நினைவுகள். தொடருங்கள்...//

மாதேவி சொன்னது…

ஆமாம் எங்கே உங்களை காணோம் ?
நீகள் எல்லாம் விரும்பினால் நிச்சயம் எழுதுகிறேன்.வருகைக்கு நன்றி.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ஹலோ மச்சி ,, கக்கு என்பது உங்களுக்கு மட்டும் சொந்தம் என நினைத்து விடாதீர்கள். அது ஒரு பொது பெயர் கூட...

ரெண்டு பீருக்கு மேல அடிச்சா நான் - கக்கு
ஆப்-க்கு மேல போனா நீங்க - கக்கு
விஜய் காந்துக்கு புல் -க்கு மேல போனா - கக்கு
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லிமிட்

எப்பூடி ??

எல் கே சொன்னது…

//ரெண்டு பீருக்கு மேல அடிச்சா நான் - கக்கு
ஆப்-க்கு மேல போனா நீங்க - கக்கு
விஜய் காந்துக்கு புல் -க்கு மேல போனா - கக்கு
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லிமிட்//

எப்படிங்க இப்படி எல்லாம் ??

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ரெண்டு பீருக்கு மேல அடிச்சா நான் - கக்கு
ஆப்-க்கு மேல போனா நீங்க - கக்கு
விஜய் காந்துக்கு புல் -க்கு மேல போனா - கக்கு
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லிமிட்//

...................யூர்கன் க்ருகியர்.

மாப்ள , நீதான் காணாம பூட்டியே . இப்போ எங்கே இருந்து வந்த?

இப்டி நாற அடிக்கவா??

சேட்டைக்காரன் சொன்னது…

கும்பகோணத்துக்காரரா நீங்க? ஜனவரியிலே தான் போய் ஒரு நாளைக்கு பத்து கோவில் வீதம் ஒருவாரம் எல்லா சாமியையும் காக்கா புடிச்சிட்டு வந்தேன். :-)

கக்கு மாணிக்கம்- பெயர்க்காரணத்தை நல்லாவே சொல்லியிருக்கீங்க! :-)

பாரத்... பாரதி... சொன்னது…

// இன்றும் கூட சில நண்பர்கள் சாட்டிங் செய்யும்போதும், போனில் பேசும்போதும் ஒற்றையில் "கக்கு " என்று விளிக்கும் போது ஏதோ இரண்டுவயது சிறுவனைபோன்ற உணர்வு வரும். இந்த கிறுக்குத்தனம் இல்லாதவர்கள் யார்??//

உண்மைதான்.... மக்கு என்று பெயர் வாங்குவதை விட, கக்கு மோசமில்லை.

பாரத்... பாரதி... சொன்னது…

உங்களுக்கு வேறு பெயர் வைத்துக்கொண்டால் என்ன பெயர் வைத்துக்கொள்வீர்கள்?

பாரத்... பாரதி... சொன்னது…

//கைகுழந்தையாய் நான் இருக்கும் போது//

அப்படினா கைப்புள்ள தானே?

பாரத்... பாரதி... சொன்னது…

உங்களுக்கு கமலம் பாத கமலம் பாடல் பிடிக்குமா?
நம்ம தல இசையில் மோகமுள் பாடல் அது.

அந்த பாடலை கேட்கும் போது ஏற்படும் லயிப்பு உங்கள் இன்றைய பதிவில்..

வசந்தா நடேசன் சொன்னது…

நல்ல பெயர், நல்ல நினைவுகள்.. நன்றி.

மைதீன் சொன்னது…

பெயர் விளக்கத்தை நானே கேட்க்க வேண்டும் என்றிருந்தேன். அதற்க்கு அவசியமில்லாமல் போய் விட்டது. இருந்தாலும் ஒருமுறை படித்தால் உங்கள் பெயர் மனதில் தங்கி விடும் .நன்றி!

மைதீன் சொன்னது…

பெயர் விளக்கத்தை நானே கேட்க்க வேண்டும் என்றிருந்தேன். அதற்க்கு அவசியமில்லாமல் போய் விட்டது. இருந்தாலும் ஒருமுறை படித்தால் உங்கள் பெயர் மனதில் தங்கி விடும் .நன்றி!

கே. ஆர்.விஜயன் சொன்னது…

கைகுழந்தையாய் நான் இருக்கும் போது என்ன கொடுத்தாலும் உடனே அதனை உமட்டி வெளியில் தள்ளிவிட்டுத்தான் அடங்குவேணாம். எதையும் இப்படி வாயிலிருந்து கக்கி விடுவதால் "கக்கும் பிள்ளை" //

சாயிபாபா மாதிரி லிங்கம் ஏதாவது எடுப்பீங்களோ -னு நினைச்சேன்.

சென்னை பித்தன் சொன்னது…

நிச்சயமாக உங்கள் கிராமம் பற்றி எழுதத்தான் வேண்டும்,கக்கு!கோவில் மண்டபம் போல் மாட்டுத்தொழுவமா?பிரமிப்பு வருகிறது!
நல்ல நினைவுகள்!

revathi சொன்னது…

இப்போ அந்த பழக்கத்தை விட்டாச்சா கக்கு சார்....

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// கும்பகோணத்துக்காரரா நீங்க? ஜனவரியிலே தான் போய் ஒரு நாளைக்கு பத்து கோவில் வீதம் ஒருவாரம் எல்லா சாமியையும் காக்கா புடிச்சிட்டு வந்தேன். :-)//

---------------------சேட்டைக்காரன்.


பதிவர்களின் ப்ரோபைலை படிங்க சார். நான் மூடி வைக்கவில்லையே. அதில் ஓரளவு எல்லாமே சுருக்கமாக சொல்ல்யிருப்பேனே !!
வருகைக்கு நன்றி சேட்டை.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//உங்களுக்கு கமலம் பாத கமலம் பாடல் பிடிக்குமா?
நம்ம தல இசையில் மோகமுள் பாடல் அது.

அந்த பாடலை கேட்கும் போது ஏற்படும் லயிப்பு உங்கள் இன்றைய பதிவில்..//


--------------பாரத் -பாரதி.

உண்மையைச்சொன்னால் மோக முள் படம் தேவி பாலாவில் பார்த்து விட்டு வரும் பொது பயங்கர கடுப்புடந்தான் வந்தேன். இத்தனைக்கும் அந்த நாவல் என்னுடைய பேவரிட் .
தி.ஜா.ரா.வின் அதி தீவிர விசிறி நான். அவரும் கும்பகோண த்துக்காரர்தான். நம்ம மாஸ்ட்ரோ தான் என்றாலும் அந்த பாடல் என்னுடைய விருப்ப தொகுப்பில் கூட இடம் பெறவில்லை. காரணம் அந்த படம் ரொம்பவும் ஏமாற்றத்தை கொடுத்தது. நல்ல நாவல்கள் திரைப்படமாவது மகா பாவம் பாரத்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//நல்ல பெயர், நல்ல நினைவுகள்.. நன்றி.//


வசந்தா நடேசன் சொன்னது…


தங்களின் வருகைக்கு நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//பெயர் விளக்கத்தை நானே கேட்க்க வேண்டும் என்றிருந்தேன். அதற்க்கு அவசியமில்லாமல் போய் விட்டது. இருந்தாலும் ஒருமுறை படித்தால் உங்கள் பெயர் மனதில் தங்கி விடும் .நன்றி! //

------------------மைதீன்

உங்கள் பெயர் கூட அப்படித்தான். மைதீன் என்றால் கும்பகோணத்து காரர்களுக்கு ரொம்பவும் பிரபலம்தானே?!! :))))))

! சிவகுமார் ! சொன்னது…

பல நாள் மண்ட கொடச்சல்.. இப்பயாவது அர்த்தம் சொன்னீங்களே. நன்றி. நல்ல பதிவு.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//சாயிபாபா மாதிரி லிங்கம் ஏதாவது எடுப்பீங்களோ -னு நினைச்சேன்.//

kr.விஜயன்.

அப்படி லிங்கம் வாயிலிருந்து எடுத்திருந்தால் அப்பா என்னை கொன்னே போட்டிருப்பார். அவர் உண்மையான சீர் திருத்தக்காரர். ராமசாமி நாயக்கரின் இயக்கத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து நாலு பேருக்கு நல்லது செய்து வேற்றுமை கொண்டாடாமல் வாழ்ந்த ஒரு பள்ளி ஆசிரியர்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//நிச்சயமாக உங்கள் கிராமம் பற்றி எழுதத்தான் வேண்டும்,கக்கு!கோவில் மண்டபம் போல் மாட்டுத்தொழுவமா?பிரமிப்பு வருகிறது!//

-------------------சென்னை பித்தன்

படிக்கக நீங்க எல்லோரும் தயார் என்றால் எழுதத்தான் வேண்டும் . படித்து ஆகவேண்டும் என்ற த.எ . யாரை விட்டது.:)))))))
எழுதுகிறேன் நிச்சயமாக. வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// பல நாள் மண்ட கொடச்சல்.. இப்பயாவது அர்த்தம் சொன்னீங்களே. நன்றி. நல்ல பதிவு.//

சிவகுமார் ! சொன்னது…

சரி. இனிமேலாவது உங்க ஐக்கானை மாற்றுவீர்களா?? அதுதான் மண்டை குடைச்சல் போய்விட்டதே!
இன்னும் ஏன் தலையை பிய்த்துக்கொண்டு ....:))))))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்பாடா ரொம்பநாளு டவுட்டு இன்னிக்குத்தான் தீர்ந்தது.... இதுக்கு வழிபண்ண நண்பர் கோபிக்கு நன்றி......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லாவே உண்மைய கக்கிட்டீங்கண்ணே......

M.S.E.R.K. சொன்னது…

அப்பாடா...! இப்பத்தான் நிம்மதி. நான் உங்களை 'கக்கு' என்று விளிப்பதற்கு எங்கே கோபித்துக் கொள்ளுவீர்களோ என்று பயந்துக்கொண்டு இருந்தேன்.

வேலன். சொன்னது…

(பாரதி ராஜா ஸ்டைலில் இதை படிக்கவும்)என் இனிய கிராம மக்களே...உங்கள் செருமாவிளங்கை கிராமத்து குயில் ஒன்று இன்று பறந்து பட்டணம்சென்றுள்ளது.பட்டணம் சென்றாலும் பழசை மறக்காமல் பதிவிட்டுள்ளது. இனி இந்த குயிலின் இசையை வார்தைகளாக பதிவுகளில் படியுங்கள்.வாழ்க வளமுடன்.
வேலன்.

nellai ho chi minh சொன்னது…

நெல்லைஹோசிமின்
புதிய பதிவர் நான்.வாழ்த்த வாருங்கள்.

விக்கி உலகம் சொன்னது…

பெயர் காரணம் மற்றும் இடம் சுட்டி பொருள் விளக்கிய விதமும் அருமை தலைவரே!

வைகை சொன்னது…

மலரும் நினைவுகள் என்றுமே அலுப்பதில்லை....(சொல்வதற்கும் கூட..!)
ஆமா..நீங்க ஏன் யாரையும் கோர்த்துவிடல? பட்டாப்பட்டி.. மங்குனி..பன்னிகுட்டி... இவங்கெல்லாம் ஞாபகம் இல்லையா? ஹி ஹி..

சசிகுமார் சொன்னது…

பரவாயில்லை கக்கு என்று வைத்தார்களே, வாந்தி என்று கூப்பிட்டு இருந்தால் தற்போது உங்கள் பெயர் எப்படி இருக்கும் ஹா ஹா ஹா

ஆனந்தி.. சொன்னது…

/உண்மையைச்சொன்னால் மோக முள் படம் தேவி பாலாவில் பார்த்து விட்டு வரும் பொது பயங்கர கடுப்புடந்தான் வந்தேன். இத்தனைக்கும் அந்த நாவல் என்னுடைய பேவரிட் .
தி.ஜா.ரா.வின் அதி தீவிர விசிறி நான். அவரும் கும்பகோண த்துக்காரர்தான். நம்ம மாஸ்ட்ரோ தான் என்றாலும் அந்த பாடல் என்னுடைய விருப்ப தொகுப்பில் கூட இடம் பெறவில்லை. காரணம் அந்த படம் ரொம்பவும் ஏமாற்றத்தை கொடுத்தது. நல்ல நாவல்கள் திரைப்படமாவது மகா பாவம் பாரத். //

அண்ணா....மிக மிக சரி..இதை அப்படியே ஆமோதிக்கிறேன்...நானும் அந்த படம் (சி டி யில்) பார்த்து நொந்து இருக்கிறேன்..பாபு,யமுனா கதாபாத்திரங்களை இவளவு அழகாய் யாரும் சொதப்பி இருக்கவே முடியாது அந்த படத்தில்...பாபு கதாபாத்திரத்துக்கு வேற ஆளே கிடைக்கலையானு வெறுத்து போனேன் பார்த்து...அதே மாதிரி சுஜாதாவின் ப்ரியா படமும்...:)) எனக்கும் இந்த நாவல்களை தமிழ் இல் படமாய் எடுக்கும்போது ஒலக சொதப்பல் ஆக்கிடுராங்கனு வருத்தம் உண்டு...

ஆயிஷா சொன்னது…

சகோ, நானும் ஆரம்பத்தில் உங்கள் பெயரை
{கக்கு} கேக்கணும் என நினைத்தேன். கோபப்படுவீர்களோ என்று கேட்கவில்லை. கக்கு பெயரால் பதிவு எழுதி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

// ரெண்டு பீருக்கு மேல அடிச்சா நான் - கக்கு
ஆப்-க்கு மேல போனா நீங்க - கக்கு
விஜய்காந்துக்கு புல் -க்கு மேல போனா - கக்கு
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லிமிட்//

அண்ணே இந்த பாட்ட ராஜா சார் கிட்ட கொடுத்து ரைமிங்கா டியூன் போடச் சொன்னா நல்லா இருக்கும்ணே ஹி.. ஹி..!!

...................யூர்கன் க்ருகியர்.

// மாப்ள , நீதான் காணாம பூட்டியே . இப்போ எங்கே இருந்து வந்த? //

// இப்டி நாற அடிக்கவா?? //

ரெண்டு பேரும் அம்புட்டு தோஸ்தா?? நல்லா இருங்க கண்மணிகளா!! மனசில உள்ளத எல்லாம் 'கக்'கிட்டிங்க 'மாணிக்கம்' சார். அருமை!!

Jey சொன்னது…

அண்ணே, பெயர்க் காரணம் சூப்பரா சொல்லிருக்கீங்க. நான் பலநாளா கேக்கனும்னு நெனைச்ச விஷயம்...:)

Geetha6 சொன்னது…

super!!

நிலாமகள் சொன்னது…

//இந்த கிறுக்குத்தனம் இல்லாதவர்கள் யார்??//


வாஸ்த்தவம்தான். அப்படியிப்படி நெருங்கி விட்டீர்கள் (ஊரும் உறவும்) சகோ...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக