பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், பிப்ரவரி 15

அவகாடோவின் அருமையை பாருங்க!





மெக்ஸிகோ நாட்டை பிறப்பிடமாக கொண்டாலும் எல்லா இடங்களிலும் காணபடுகிறது. நம் தமிழ் நாட்டில் கூட மலை பிரதேசங்களில் விளைவதாக கூறுவார். இலங்கையில் இருந்தும் ஏற்று மதியாகிறதாம்.இப்போது சென்னையில் எல்லா பழக்கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் கிடைக்கிறது.இந்த பழத்தின் வடிவமும் அதன் இயற்பெயரும் சற்று சுவாரஸ்யமானதுதான். ஆனால் அது இப்போது வேண்டாமே! அதையும் இங்கே எழுதினால் மகளிர் அணியினர் என்னை மொத்தி விடுவார்கள் மொத்தி!! நேரில் இதனை பார்த்தவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை!!:)))


ஆரோக்கியமான இதயம் வேண்டுவோர் மேலே படியுங்கள். கும்மி அடிக்க வந்தவர்கள் எல்லாம் போங்கள்  பன்னிகுட்டியின் பக்கம். இதயநோயினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுவருவதாக அறிக்கைகள் மிரட்டுகின்றன. அது உண்மையும் கூட. வயதானவர்கள் என்று இல்லாமல் இப்போதெல்லாம் இளம் வயதினரும் இந்த சுழலில் சிக்கி தவிக்கும் அபாயம் முன்னை விட இப்போது மிக அதிகம். ஆயிரம் காரணங்கள், உணவு பழக்க வழக்கங்கள் சொல்லபட்டாலும் இன்றைய அதிவேக உலகில் இவைகள் இதன் பாதிப்பு என்னவோ அதிகம் தான்.இதயத்துக்கு இதமான, தீங்கு செய்யாத உணவு வகைகளை அறிந்து கொண்டு அவைகளை கடைபிடுப்பதும் அவசியமாகிப்போனது இன்று.
அவகாடோ பழம்: இதன் பெயர் இந்தியர்களுக்கு புதிதாக இருந்தாலும் இது இங்கும் விளைகிறது. சென்னையில் இதனை பட்டர் புரூட் (Butter Fruit) என்கின்றனர். முன்பெல்லாம் நம் ஊர் கடைகளில் இது போன்ற பழங்களை பார்க்க இயலாது.இன்று எல்ல இடங்களிலும் விற்கின்றனர். ஆரம்பத்தில் இந்த பழத்தில் கொழுப்பை உண்டாகும் காரணிகள் அதிகம் என்று கூறி இதனை ஒதுக்கி வைத்தனர். உடல் எடை வேண்டுவோர்கள் இதனை சேர்த்துக்கொண்டால் எடை கூடுகிறது என்பது அனுபவ உண்மைதான். நான் முன்னர் ஷார்ஜாவில் இருந்த பொது அங்கு சூப்பர் மார்கெட்டுகளில் இவைகளை பார்த்து "இது என்ன பழம் "வியந்ததுண்டு. பின்னர் அதன் சிறந்த பயன்களை அறிந்து கொண்டு பயன்படுத்தினேன்.



உண்மையில் அவகாடோ அதிக கொழுப்பை உடலுக்கு தருவது உண்மைதான். ஒரு சாதாரண அவகாடோ பழத்திலிருந்து சுமார் 30  கிராம் கொழுப்பு சத்து கிடைக்கிறதாம்.( குச்சி யான தேகம் உள்ளவர்கள் இனிமேல் அவகாடோ வாங்கி தின்று உடம்பை தேற்றலாம்) ஆனால் இந்த பழத்தில் கிடக்கும் கொழுப்பு மானோ சாச்சுரேட்டட் rich in monounsaturated fat  வகையை சார்ந்ந்தது .ஆனால் இந்த வகை கொழுப்புதான் நம் உடலில் சேரும் "கெட்டவகை "கொழுப்பை  LDL (bad) cholesterol குறைகிறதாம்.அதோடு "நல்ல வகை கொழுப்பின் "  raise HDL (good) cholesterol  அளவை அதிகரிக்கிறதாம். இதோடு இல்லாமல் அவகாடோ உடலில் பொட்டாசியத்தின் அளவையும் அதிகரிப்பதால் இந்த பழம் இதயத்துக்கு மிக நல்லது.மேலும் ஒரு பழத்திலிருந்து சுமார் 300  கலோரி எரி சக்தி கிடைப்பதால் இந்த பழம் சுலபமாக நம் தேவையினை பூர்த்தி செய்கிறது.  


நமக்கு அவகாடோ பழம் என்றால் அது மற்ற பழ வகைகளிப்போல இனிப்பும் மனமும் சுவையும் இருக்கும் என்று நினைக்காதீர்கள். இதனை பழக்க வைத்து சாப்பிடுவதே ஒரு வேடிக்கை. கடைகளில் கரும் பச்சை நிறத்தில் தடித்த தோலுடன் காணப்படும் இந்த பழம் பழுத்தவுடன் சற்று மிருதுவாக மாறும் அன்றி, நிறமோ, மனமோ இருக்காது. உள்ளே வெளிர் மஞ்சள் நிறத்தில் சதைபகுதி காணப்படும். அதனுள்ளே கடினமான உருண்டை வடிவில் ஒரு கொட்டை இருக்கும். அவ்வளவுதான். நாம் மாம்பழத்தை கிடை மட்டமாக கத்தியினால் சுற்றி வெட்டி பின்னர் சற்று சுழற்றி எடுத்தால் ஒரு குழிவான பகுதியும் ஒரு கொட்டை நடுவில் இருக்கும் பகுதியும் கிடைக்கும் அல்லவா? அதுபோலவே இந்த பழத்தையும் வெட்டி எடுத்து பயன் டுத்தலாம்.இதற்கென்று தனிப்பட்ட சுவை இல்லை எனவே நாம் விரும்பும் படி இதில் சுவைகளை சேர்த்துகொள்ளலாம். 

பெரும்பாலும் மற்ற நாடுகளில் இதனை அப்படியே சலாட் ஆக சாப்பிடுவதால் சமைக்க / வேக வைக்க வேண்டுவதில்லை. நான் எப்படி பயன் படுத்துவேன் என்றால் பழத்தின் உள் பகுதியில் இருக்கும் சதை கதுப்புகளை ஒரு சிறிய டீ ஸ்பூன் உதவியால் முற்றிலும் வழித்து எடுத்து விட்டு அவைகளை தட்டில் இடுவேன். அதன் மீது சிறிது மிளகுதூள்,சிறிது சீரகத்தூள் தூவினால் ரெடி. நான் உப்பு சேர்பதில்லை.அப்படியே எடுத்து சாபிட்டுவிட்டு சூடாக ஒரு டீ யை அடித்துவிட்டு காலையில் வேலைக்கு செல்வது வழக்கம்.


தேவையானால் சிறிது உப்பை தூவிக்கொள்ளலாம். இல்லையென்றால் தோலை சீவி விட்டு சிறு கியூப் துண்டுகளாக வெட்டி அப்படியே கூட சாப்பிடலாம். சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம். 

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல காலை நேர உணவாக கூட இதனை கொள்ளலாம். ஏனெனல் இதில் நார்ச்சத்தும் உள்ளதால் தான்.  மேலும் விபரம் அறிய நம்ம பன்னிகுட்டி இடம் கேளுங்கள். அது பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி விடும்!






53 comments:

Unknown சொன்னது…

வந்தாச்சு..

Unknown சொன்னது…

பயனுள்ள தகவல் நன்றி தலைவரே

Unknown சொன்னது…

அதையும் இங்கே எழுதினால் மகளிர் அணியினர் என்னை மொத்தி விடுவார்கள் மொத்தி!! நேரில் இதனை பார்த்தவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை!!:)))//

இதுக்கு நீங்க பேசாம எழுதிட்டே போயிருக்கலாம்.

Menaga Sathia சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சகோ!!

test சொன்னது…

மிளகுதூள் தூவியா சாப்பிடுறீங்க? புதுசா இருக்கே!
அப்படியே சதைப்பகுதியை எடுத்து, சுகர், பால், ஐஸ்கியூப் போட்டு, மிக்சில அடிச்சு ஜூஸா குடிச்சா சூப்பரா இருக்கும் பாஸ்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

தெரியாத தகவல். நன்றி..
வெட்டி வேயத்திருப்பது.. மாங்காய் போல இருக்கிறது..!!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

check

Unknown சொன்னது…

அவகாடோ பழம் பற்றி அறிந்துக்கொண்ட, அனுபவ ரீதியாக விஷயங்கள் அனைத்தும் சொல்லியிருக்கிறீர்கள்.

Unknown சொன்னது…

அது என்னங்க சார், பன்னிக்குட்டியாரை சன்னமாக ஓட்டியிருக்கீங்க. ஏதாவது பிப்ரவரி 14 பிரச்சனையா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>> மேலும் விபரம் அறிய நம்ம பன்னிகுட்டி இடம் கேளுங்கள். அது பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி விடும்!

அவர்கிட்டே முருங்கைக்காய்ன்னா கேட்கலாம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தமிழ்நாட்ல கிடக்குதா?

RVS சொன்னது…

பட்டர் ஃபுரூட் ஒரு தடவை வாங்கி சுவைத்துப் பார்த்தேன். பச்சுன்னு இருந்துது.. பயன் ஜாஸ்தி இருக்கே! நன்றி மாணிக்கம். ;-)

பொன் மாலை பொழுது சொன்னது…

வந்தாச்சு..
பாரத்... பாரதி... சொன்னது…

வருகைக்கு நன்றி பாரத்,

பொன் மாலை பொழுது சொன்னது…

விக்கி உலகம் சொன்னது…
பயனுள்ள தகவல் நன்றி தலைவரே


வருகைக்கு நன்றி தலிவரே!

பொன் மாலை பொழுது சொன்னது…

அதையும் இங்கே எழுதினால் மகளிர் அணியினர் என்னை மொத்தி விடுவார்கள் மொத்தி!! நேரில் இதனை பார்த்தவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை!!:)))//

இதுக்கு நீங்க பேசாம எழுதிட்டே போயிருக்கலாம்

கே. ஆர்.விஜயன் சொன்னது…

ஆனால் எஅன்க்கு சற்று சங்கடமாக இருந்தது தலைவா. அதான். அது வேறு ஒன்னும் இல்லை. அதன் இயற்பெயர் அதன் வடிவம்தான்......Scrotum போதுமா சாமீ. இனிமேல் தூக்கம் வரும் இல்லையா நாகர் கோயிலாரே!!

பொன் மாலை பொழுது சொன்னது…

S.Menaga சொன்னது…
பகிர்வுக்கு நன்றி சகோ!!

வருகைக்கும் நன்றி சகோ. என்ன முன்னை போல வருவதில்லை?

எம் அப்துல் காதர் சொன்னது…

நல்ல தகவல் தல!! இங்க சவுதியில் கிடைக்குதான்னு தேடி பார்க்கணும்!!

பொன் மாலை பொழுது சொன்னது…

மிளகுதூள் தூவியா சாப்பிடுறீங்க? புதுசா இருக்கே!
அப்படியே சதைப்பகுதியை எடுத்து, சுகர், பால், ஐஸ்கியூப் போட்டு, மிக்சில அடிச்சு ஜூஸா குடிச்சா சூப்பரா இருக்கும் பாஸ்

ஜீ சொன்னது...
ஆமாம், அப்படியும் அருந்தலாம். ஆனால் நான் சொனது ஒரு மருந்தாக, இதய கோளாறு உள்ளவர்களுக்கு.
வருகைக்கு நன்றி.
.

பொன் மாலை பொழுது சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது…
தெரியாத தகவல். நன்றி..
வெட்டி வேயத்திருப்பது.. மாங்காய் போல இருக்கிறது..!



ஆனால் மாங்காய் போல சுவையோ, மனமோ இருக்காது மாதவன்.
வருகைக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி மாப்ள யூர்கன்

பொன் மாலை பொழுது சொன்னது…

அது என்னங்க சார், பன்னிக்குட்டியாரை சன்னமாக ஓட்டியிருக்கீங்க. ஏதாவது பிப்ரவரி 14 பிரச்சனையா?


பாரத்... பாரதி... சொன்னது

இத்தோடா........பன்னிக்கும் எனக்கும் பிரவரி 14 பிரச்னையா?....ஏனய்யா இப்டி கொளுத்தி போடுறீங்க?
பன்னி எனக்கு நல்ல நண்பர், நிறைய உரிமையுடன் வாரிவிடுவேன். அது பன்னிக்கும் தெரியும்.
நான் பன்னியை இங்கு குறிபிட்டது சும்மனாச்சுக்கும் ஒரு நக்கல்தான். அந்த புள்ள முகம் கூட எனக்கு கவுண்டர்தான் ஞாபகபடுத்தும் ஆக்காங் .

பொன் மாலை பொழுது சொன்னது…

>>> மேலும் விபரம் அறிய நம்ம பன்னிகுட்டி இடம் கேளுங்கள். அது பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி விடும்!

அவர்கிட்டே முருங்கைக்காய்ன்னா கேட்கலாம்


சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அதான் இல்ல. பன்னி கிட்ட நெறையா சரக்கு கீது கண்ணு!

பொன் மாலை பொழுது சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது…
தமிழ்நாட்ல கிடக்குதா?

சென்னையில் "பட்டர் புரூட் " எல்லா இடங்களிலும் கிடைக்கிறதே சி.பி.

பொன் மாலை பொழுது சொன்னது…

பட்டர் ஃபுரூட் ஒரு தடவை வாங்கி சுவைத்துப் பார்த்தேன். பச்சுன்னு இருந்துது.. பயன் ஜாஸ்தி இருக்கே! நன்றி மாணிக்கம். ;-
RVS சொன்னது..

ஆஹா..... வாங்க மன்னையின் மைனரே!
அதுதான் சொன்னேனே. இதற்க்கு சுவையோ,மனமோ எதுவும் கிடையாது . சென்ற பதிவுக்கு வரவில்லையே ?

பொன் மாலை பொழுது சொன்னது…


நல்ல தகவல் தல!! இங்க சவுதியில் கிடைக்குதான்னு தேடி பார்க்கணும்!!
எம் அப்துல் காதர் சொன்னது.

நிச்சயம் அங்கு கிடைகிறது. சூப்பர் மார்கெட்டில் பழங்கள் உள்ள பகுதியில் பாருங்கள்.
வருகைக்கு நன்றி அப்துல்.

ராஜ நடராஜன் சொன்னது…

அட போங்க நீங்க!இவ்வளவு மெதுவாத்தான் சொல்றதா?கூட்டுறவு அங்காடிகள் போகும் போது இந்தப் பழம் ஒரு மொறை மொறைக்கும் பாருங்க.கூடவே அரபில PHD வாங்க தெரியாமல் அம்போன்னு விட்டுட்டு வந்துடுவேன்.

என்ன சொன்னீங்க?குண்டனுக்கெல்லாம் இது தேவையில்லைன்னு தானே!அப்ப பழத்தோட பழமா உட்கார்ந்துகிட்டு இருக்கட்டும்.

மதுரை சரவணன் சொன்னது…

thanks for sharing. vaalththukkal

Kanchana Radhakrishnan சொன்னது…

அவகாடாவில் இவ்வளவு மருத்துவ குணங்களா? பகிர்வுக்கு நன்றி.

Jana சொன்னது…

ஆம்..இலங்கையில் இது அதிகமாக உள்ளது. பிறப்பிடம் மெக்ஸிகொவா? இன்றுதான் தெரியும்.

GEETHA ACHAL சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த அவகோடா...மிகவும் அருமை...இங்கு FLoridaவில் avocoda Picking என்று இருக்கின்றது....அதனை பறிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் இன்னும் அந்த ஆசை நிறைவேறவேயில்லை...

பெயரில்லா சொன்னது…

அவகாடோ சாலட் மிகவும் பிரபலமானது ..மிகவும் ருசியாக இருக்கும்.
வெங்காயம் , தக்காளி , ஆலபீனோ (இங்கு கிடைக்கும் மிளகாய் ) , கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி நன்கு பழுத்த அவகாடோ சேர்த்து போர்க்-ஆல் மசித்து சிறிது உப்பு ,எலுமிச்சை சாறு கலந்து சாபிட்டால் 2 கிண்ணம் சாப்பிட்டாலும் பத்தாது ..(chipotle என்னும் mexican resturant இல் "gucamole " என்றால் famous ) இந்த சாலடை cornchips இல் தோய்த்து சாப்பிட்டால் ம்ம்ம்ம் .............)

டக்கால்டி சொன்னது…

உருப்படியான இடுகை...

MoonramKonam Magazine Group சொன்னது…

பயனுள்ள பதிவு

துளசி கோபால் சொன்னது…

பச்சைக்காயின் உள்பகுதியை எடுத்து கொஞ்சம் வருத்த காஞ்சமிளகாய், உப்பு, ஒரு ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து சட்னி அரைச்சால் அருமையா இருக்கு.

Unknown சொன்னது…

கடப்பக்கம் வந்துராதீங்க ஹி ஹி!!

எஸ்.கே சொன்னது…

இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை. நிறைய பலன்கள் உள்ளது!

settaikkaran சொன்னது…

இவ்வளவு நல்ல தகவல்களை, கோர்வையாகவும், இடையிடையே படங்களுடனும் சொல்ல எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது நண்பரே! பாராட்டுக்கள்! :-)

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கடைகள்ல பாத்துட்டு அப்படியே கடந்து வந்துடுவேன். இனிமே கொஞ்ச்ம் நின்னு பாத்து வாங்கணும் :-))

Unknown சொன்னது…

அவகோடா எனக்கு புதிய விசயம்.. சாப்பிட்டு பாத்திட வேண்டியதுதான்..

சுந்தரா சொன்னது…

ஜூஸா சாப்பிட்டதுண்டு, இனிமே சாலடும் செய்துபாத்துடவேண்டியதுதான்.

பகிர்வுக்கு நன்றிங்க.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முற்றிலும் புதிய தகவல். இதின் மணமே எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த பதிவை படிச்சப்புறம் சாப்பிடாம இருக்க முடியாது மருத்துவ பயன் இருக்கே நன்றி கக்கு மக்கா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதின் பெயரை பல பேரிடம் கேட்டு பார்த்து தெரியலைன்னு சொன்னாங்க....அவகாடோ...[அய்யோடா]

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அண்ணே இப்படி மாட்டி விட்டுட்டீங்களே.......? (ஆனா இந்தப் பழம் உண்மையிலேயே அற்புதமானது.....)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////கக்கு - மாணிக்கம் சொன்னது…
அது என்னங்க சார், பன்னிக்குட்டியாரை சன்னமாக ஓட்டியிருக்கீங்க. ஏதாவது பிப்ரவரி 14 பிரச்சனையா?


பாரத்... பாரதி... சொன்னது

இத்தோடா........பன்னிக்கும் எனக்கும் பிரவரி 14 பிரச்னையா?....ஏனய்யா இப்டி கொளுத்தி போடுறீங்க?
பன்னி எனக்கு நல்ல நண்பர், நிறைய உரிமையுடன் வாரிவிடுவேன். அது பன்னிக்கும் தெரியும்.
நான் பன்னியை இங்கு குறிபிட்டது சும்மனாச்சுக்கும் ஒரு நக்கல்தான். அந்த புள்ள முகம் கூட எனக்கு கவுண்டர்தான் ஞாபகபடுத்தும் ஆக்காங் ./////

ஹி....ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அதையும் இங்கே எழுதினால் மகளிர் அணியினர் என்னை மொத்தி விடுவார்கள் மொத்தி!! நேரில் இதனை பார்த்தவர்களுக்கு விளக்கம் தேவை இல்லை!!://////

அண்ணே, மேட்டர அப்பிடியே மெயில்ல தட்டி விடுங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்தப் பழத்தை உப்புச் சேர்க்காமல் சாப்பிடுவதே நல்லதுன்னு நெனைக்கிறேன்....!

தெய்வசுகந்தி சொன்னது…

உபயோகமான தகவல்ங்க!!!

குவைத் தமிழன் சொன்னது…

இலங்கையில இதன் பெயர் அளிப்பரைக்காய்

ஸாதிகா சொன்னது…

அவக்கோடா பற்றி அரிய தகவல்கள் .நன்றி!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காலை உணவாக பிரட்டில் த்டவி சாப்பிடுகிறார்கள்.

வடுவூர் குமார் சொன்னது…

கோயம்பேடுவில் கிலோ ரூ 70 க்கு கிடைக்குது. 2011 பதிவுக்கு கொஞ்சம் உயிர் கொடுத்தாச்சு.

Unknown சொன்னது…

அவகாடோ விதை கன்றுகள் எங்கு கிடைக்கும் நான் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் கிராமம்

Unknown சொன்னது…

அவகாடோ விதை கன்றுகள் எங்கு கிடைக்கும் நான் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் கிராமம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக