பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, பிப்ரவரி 13

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

TOSHIBA Satellite A 300

இது பெரும்பாலும் எல்லோருக்கும் வாய்திருக்கும். நாம அருந்தும் காப்பி, டீ இல்லை தண்ணீர் இப்படி ஏதாவது ஒரு ஒன்னு  நமது டேபுள் டாப் இல்லாட்டி லேப் டாப் மீது சிந்துவதற்கு பல சமயங்களில் வாய்ப்புக்கள் உண்டாகிவிடும்.  சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் R V S  இன் தீராத விளையாட்டு பிள்ளை யில் ஒரு பதிவினை படித்துக்கொண்டிருந்தேன். காலை நேரம் கையில் சூடானா பில்டர் காப்பி.ஒரு வாய் குடித்துக்கொண்டே படிக்கும்போது விழுங்காமல் வாயில் வைத்திருந்த காப்பி வெடித்து சிதறி என் செல்லமான தோஷிபா சாட்டிலைட் மீது தெறித்து கொட்டி காலையில் அதற்க்கு பீ -பெர்ரி பில்டர் காப்பி அபிஷேகம் ! அந்த ஒரு வாய் காப்பி நஷ்டமானத்தில் பதட்டத்துடன் எழுந்து நாலைந்து கிளீனெக்ஸ் பேப்பர்களை உருவி தண்ணீரில் நனைத்து பிழிந்து சிதறிய காப்பி துளிகளை பல முறை துடைத்துவிட்டு, பேட்டரியை உருவிஎடுத்துவிட்டு வெளியில் கொண்டு வந்து, கிளாஸ் கிளீனர் வைத்து மீண்டும் ஸ்க்ரீன், கீ போர்ட் என துடைத்து விட்டு பிரஷ்ஷினால் கீ போர்ட் இடுக்குகளை கூட விடாமல் துடைத்து எடுக்க நேர்ந்தது. வழக்கம் போல லேப் டாப் பளிச்!!
மனிதர் என்ன எழுதினார்? திரைப்படங்களில் இடம் பெரும் நாட்டியங்களை குறித்து ஒரு ஜாலியான பதிவு அது.
/// அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான மனதில் உறுதி வேண்டும் /// 
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது. 

சரி, தவறுதலாக நம் லேப் டாப் மீது தண்ணீரோ இல்லை வேறு எதுவோ கொட்டிவிட்டால் என்ன பண்ணலாம்? வீடியோவை பாருங்க.
நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!







ட்விட்டரின் தாக்கம் வியக்க வைக்கிறது! 

இதன் மெல்லிய இசை இதமானது அனுபவியுங்க!!







46 comments:

எல் கே சொன்னது…

என்கிட்டே லேப் டாப்லாம் இல்லை. அனால் உபயோகமான பதிவு . நன்றி மாணிக்கம் அண்ணாச்சி

Unknown சொன்னது…

வந்தாச்சு..

Unknown சொன்னது…

நீங்க மட்டும் காபி குடிச்சா போதுமா?


சுகாசினியோட சாபமா இருக்குமா?

settaikkaran சொன்னது…

ஹிஹி! அந்த முதல் வீடியோவிலே வந்த பொண்ணு அசப்புலே சதா மாதிரியே இருந்துச்சா, ரெண்டு மூணுவாட்டி பார்த்தேன்.

எல் கே சொன்னது…

@சேட்டை

நான் அதை மறந்து போய்டேன் . ஞாபகப் படுத்திவிட்டீர்கள்

Unknown சொன்னது…

எதையுமே ப்ளான் பண்ணி செய்யணும் ப்ளான் பண்ணாம செய்தா இப்படிதான். ஒன்னுல படிங்க இல்லாட்டி குடிங்க.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

nice post....

ஜெய்லானி சொன்னது…

யார்யாரோ தண்ணி அடிக்கும் போது நம்ம லேப்டாப்பும் அடிச்சிட்டு போகட்டுமே பாஸ்..!!

அந்த மடையர்(ன்) அப்படின்னு ஒரு பதிவு போட்டீங்களே எங்கே பாஸ்

பொன் மாலை பொழுது சொன்னது…

// என்கிட்டே லேப் டாப்லாம் இல்லை. ///

-----------எல் கே சொன்னது

லேப் டாப் வைத்துக்கொளவது என்ன பெரிய வித்தையா எல். கே.?
இன்றைய நாளில் இது போன்ற சாதனங்கள் மிக சாதாரணம்.
வாங்குங்கள் ஒன்று. நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

// நீங்க மட்டும் காபி குடிச்சா போதுமா?

சுகாசினியோட சாபமா இருக்குமா?//

-----பாரத்... பாரதி... சொன்னது

அதுசரி, இதுக்கெல்லாம் கூட அந்த அக்கா சாபம் விடுவாங்களா என்னா பாரத்?
அப்டீன்னா மணி மாமா கிட்ட பேசி மன்னிப்பு வாங்க வேண்டியதுதான்!

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஹிஹி! அந்த முதல் வீடியோவிலே வந்த பொண்ணு அசப்புலே சதா மாதிரியே இருந்துச்சா, ரெண்டு மூணுவாட்டி பார்த்தேன்.//

-----------சேட்டைக்காரன் சொன்னது…

அதான் எனக்கு தெரியுமே ! நெறைய ஜொள்ளுங்க அலையிதுன்னு :))

பொன் மாலை பொழுது சொன்னது…

// @சேட்டை நான் அதை மறந்து போய்டேன் . ஞாபகப் படுத்திவிட்டீர்கள்//

எல் கே சொன்னது
இத்தோடா ,...... இதெல்லாம் ஒருத்தரு சொல்லனுமா உங்களுக்கு!

பொன் மாலை பொழுது சொன்னது…

// எதையுமே ப்ளான் பண்ணி செய்யணும் ப்ளான் பண்ணாம செய்தா இப்படிதான். ஒன்னுல படிங்க இல்லாட்டி குடிங்க.//

-------கே. ஆர்.விஜயன் சொன்னது

அதுல என்ன சுகம் கண்ணா? பேப்பர் ,புத்தகம் படிசிக்கிட்டடே காபி குடிகிறதில்லையா? அந்த சுகம் தான் வேற என்ன?

பொன் மாலை பொழுது சொன்னது…

// nice post....//
rk guru சொன்னது…

Thanks rk Guru.

பொன் மாலை பொழுது சொன்னது…

// யார்யாரோ தண்ணி அடிக்கும் போது நம்ம லேப்டாப்பும் அடிச்சிட்டு போகட்டுமே பாஸ்..!!

அந்த மடையர்(ன்) அப்படின்னு ஒரு பதிவு போட்டீங்களே எங்கே பாஸ் //

-----ஜெய்லானி சொன்னது
யார்யாரோ .....இதல ஒன்னும் உள்குத்து வேலை எல்லாம் இல்லையே ஜெய்லா ??
எனக்கு மட்டும் என்ன ஒர வஞ்சனையா? லேப் டாப் மண்டைய போட்டுதுன்னா பர்ஸ் காலியாயிடுமே ராஜா? !

அது // நாம் மடையர்கள் // அதில் ஒரு ஒரு பழைய டப்பா வீடியோ. பின்னர் ஏதோ வெறுப்பில் அதனை அகற்றி விட்டேன். அரசியல் பதிவுகள் வர வர கடுப்பை கிளப்புகின்றன.
வேண்டும் என்றால் மீண்டும் !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>அரசியல் பதிவுகள் வர வர கடுப்பை கிளப்புகின்றன.
வேண்டும் என்றால் மீண்டும் !


ungka உங்க ஸ்பெஷலே அதானே?

தக்குடு சொன்னது…

Ithu yellathukkum karanam namba 'Mannargudi minor' RVS thaan. so repair billai avarukku anuppi vaingo sir!..:)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அந்தப் புள்ளையும் தெப்பமா நனைஞ்சிருச்சேண்ணே....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அந்த சுகாசினி வீடியோ போடலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////////நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!//////////

ஹி..ஹி..... பாத்தாச்சு பாத்தாச்சு.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான உபயோகமான தகவல் நன்றி மக்கா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது//

ராத்திரி அடிச்ச மப்பு இறங்குரதுக்குள்ளே போயி சுகாசினி ஆட்டத்தை எதுக்கு ஓய் பார்த்தீர்...
ஒரு வாய் காப்பி நஷ்டமாயி போச்சுல்ல....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கம்பியூட்டரை எவனும் புடுங்கிட்டு போயிற பூடாதுன்னு மடியிலேயே வச்சிருந்தாலும் இப்பிடி நடக்கும்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!//

ஜொள்ளுங்க எசமான் ஜொள்ளுங்க....

சென்னை பித்தன் சொன்னது…

காணொளியைப் பலமுறை பார்க்க வேண்டியதுதான்! தலை முதல் கால் வரை பார்த்தால்தானே புரியும்!
மடிக் கணினி வைத்திருப்பவர்களுக்கு உபயோகமான பதிவு.நானும் LK யும் ஒண்ணு!

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

எனக்கு ரொம்ப உபயோகமான பதிவுங்கோ நன்றி

சுந்தரா சொன்னது…

பயனுள்ள பதிவுங்க :)

எங்க வீட்டு லேப்டாப் தீபாவளியோட முறுக்கு சாப்பிட்டு, அதோட மூணு பல்லு வேலை செய்யலை. அப்புறம் வாக்வம் கிளீனர் உபயத்தால, முறுக்கோட துணுக்குகளைத் திருப்பியெடுத்தபிறகுதான் பிரச்சனை சரியாச்சு :)

பொன் மாலை பொழுது சொன்னது…

// அரசியல் பதிவுகள் வர வர கடுப்பை கிளப்புகின்றன.
வேண்டும் என்றால் மீண்டும் !


ungka உங்க ஸ்பெஷலே அதானே?///.


சி.பி.செந்தில்குமார் சொன்னது…


ஐயோ செந்தில். அரசியல் பதிவுகளில் நான் வெறும்
ஜுஜுபி தான். என்னை விட அரசியல் எழுதுபவர்கள் இங்கு அநேகம்.
நான் எப்போதும் ஒரு கலவையாகவே எழுதுகிறேன்.
வருகைக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

// Ithu yellathukkum karanam namba 'Mannargudi minor' RVS thaan. so repair billai avarukku anuppi vaingo sir!..:)//


தக்குடு சொன்னது…

வாங்க தக்குடு. முதல் தடவையாய் நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. காப்பி, டீ, கூல் ட்ரிங்க்ஸ் ?
r v s கு இப்படி ஒரு பட்டப்பெயர் இருப்பதை தெரிவித்தமைக்கு நன்றி. // மன்னார்குடி மைனர்// சூப்பரான பெயர்!

இனிமேல் அவர் தொலைந்தார்.
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// அந்தப் புள்ளையும் தெப்பமா நனைஞ்சிருச்சேண்ணே....?
அந்த சுகாசினி வீடியோ போடலியா?//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஐயோ, ரொம்ப தான் கவலை? வேண்டாம் ஒடம்பு எலசிடும்.
இந்த கமெண்ட்ஸ் கே அந்த அக்க சாபமாம். இதில் அது வேறு வேண்டுமா?
இணைப்பு தந்தால் போச்சு.

பொன் மாலை பொழுது சொன்னது…

//அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது//

// ராத்திரி அடிச்ச மப்பு இறங்குரதுக்குள்ளே போயி சுகாசினி ஆட்டத்தை எதுக்கு ஓய் பார்த்தீர்...
ஒரு வாய் காப்பி நஷ்டமாயி போச்சுல்ல.//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ராத்திரி அடிச்சா மப்பு எல்லாம் காலை வரை இருக்காது கண்ணா..
இந்த மனோவுக்கு இது கூடவா தெரியில? ஹையோ ஹையோ.!!பச்ச குலந்ததா.

பொன் மாலை பொழுது சொன்னது…

// பகிர்வுக்கு நன்றி

எனக்கு ரொம்ப உபயோகமான பதிவுங்கோ நன்றி//

விக்கி உலகம் சொன்னது…
இந்த ஒலகத்துல என்னிய
புரிஞ்சிகிட்ட ஒரு ஆளு நீங்கதா விக்கி!
நன்றி ! :))))

பொன் மாலை பொழுது சொன்னது…

// காணொளியைப் பலமுறை பார்க்க வேண்டியதுதான்! தலை முதல் கால் வரை பார்த்தால்தானே புரியும்!
மடிக் கணினி வைத்திருப்பவர்களுக்கு உபயோகமான பதிவு.நானும் LK யும் ஒண்ணு!//

சென்னை பித்தன் சொன்னது
எல்லாம் இந்த பூனையும் பால குடிக்குமா ? கேசுதான் சார்.:)))
விரைவில் ஒன்று வாங்குவார்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// எங்க வீட்டு லேப்டாப் தீபாவளியோட முறுக்கு சாப்பிட்டு, அதோட மூணு பல்லு வேலை செய்யலை. அப்புறம் வாக்வம் கிளீனர் உபயத்தால, முறுக்கோட துணுக்குகளைத் திருப்பியெடுத்தபிறகுதான் பிரச்சனை சரியாச்சு ://

---சுந்தரா சொன்னது

இங்க எங்க வீட்ல தினமும் அதே கதைதான். மாலையில் தின்பதர்ற்கு இருக்கும் முறுக்குகளை என் புத்திர சிகாமணிகள் ரெண்டும் கணனிக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தின்னுதுகள். கீ போர்ட். மற்றும் மேஜைமேல், உட்காரும் இடம், கால் வைக்கும் இடங்கள் என்று ஒரே முறுக்கு துகள்கள்தான் . எனக்கு உட்கார்தால் எரிச்சலாய் வரும். என்ன செய்வது ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை துடைப்பமும் மவ்சும் கையும் மாக நான்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

லவர்ஸ்டேக்கு புது பதிவு போடலையா?

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல உபயோகமான குறிப்புகள்.

வேலன். சொன்னது…

இங்க எங்க வீட்ல தினமும் அதே கதைதான். மாலையில் தின்பதர்ற்கு இருக்கும் முறுக்குகளை என் புத்திர சிகாமணிகள் ரெண்டும் கணனிக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தின்னுதுகள். கீ போர்ட். மற்றும் மேஜைமேல், உட்காரும் இடம், கால் வைக்கும் இடங்கள் என்று ஒரே முறுக்கு துகள்கள்தான் . எனக்கு உட்கார்தால் எரிச்சலாய் வரும். என்ன செய்வது ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை துடைப்பமும் மவ்சும் கையும் மாக நான்//

சரி சரி...விடுங்க...பசங்கன்னா அப்படிதான்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

மாதேவி சொன்னது…

தண்ணியடித்த லேப்டாப் :) பயனுள்ள தகவல்.

மங்குனி அமைச்சர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மங்குனி அமைச்சர் சொன்னது…

லேப் டாப் எக்கேடு கேட்டு போனா நமக்கேன் .....அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு ????

vasan சொன்னது…

/// அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக் காண மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது.
Of course the JOKE deserve such a laugh.

எம் அப்துல் காதர் சொன்னது…

விக்கி உலகம் சொன்னது…

//இந்த ஒலகத்துல என்னிய
புரிஞ்சிகிட்ட ஒரு ஆளு நீங்கதா விக்கி!
நன்றி ! :)))) //

நானும் உங்கள நல்லாவே புரிஞ்சிகிட்டேண்ணே!!

********

//அந்தப் புள்ளையும் தெப்பமா நனைஞ்சிருச்சேண்ணே....? //

அப்புறம்---யாராச்சும் E V சரோஜா டான்ஸ பதிவு எழுதினா, உஷாரா காப்பிய குடிச்சிட்டு படிங்க அண்ணே! பிறகு திரும்ப இன்னொரு புள்ளைய (ஹி..ஹி) தெப்பமா நனைய வச்சு நீங்க ஃபிலிம் காட்டினா, நாங்க தாங்க மாட்டோம்ணே. அவ்வ்வ்வவ்..!!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்பரே....பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/1-tuesday-in-valaichcharamrahim-gazali.html

Asiya Omar சொன்னது…

உபயோகமான பகிர்வு.

டக்கால்டி சொன்னது…

ஹிஹி! அந்த முதல் வீடியோவிலே வந்த பொண்ணு அசப்புலே சதா மாதிரியே இருந்துச்சா, ரெண்டு மூணுவாட்டி பார்த்தேன்.

Repeatu

டக்கால்டி சொன்னது…

கிட்டி முட்டி கிட்டி முட்டி கிட்டி முட்டி....

இதனால பதினெட்டு பட்டிக்கும் சொல்லிகிறது என்னன்னா ... இனிமே காபி குடிக்கனும்னாலும் அடிக்கனும்னாலும் சாக்கிரதையா இருக்க சொல்லி நம்ம சுக்கு சொல்றாருங்கோ...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக