பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், பிப்ரவரி 9

சோப்பை தின்னும் சுந்தரி!

"அது நாந்தேன் !" டெம்பெஸ்ட் ஹன்டர் சன்.

பைத்தியங்கள் பல விதம். அதில் நிறைய பேர்கள் தமிழில் பதிவும் எழுதுகிறோம். யாரும் கம்பை எடுக்காதீர்கள் அடிக்க! இது ஒரு நக்கல் பதிவுதான்! ஆனால் வழக்கம் போல உண்மையான ஒன்று. அமரிக்காவில் ( வேறு எங்கே இது போன்றவைகள் நடக்கும் ??? ) ஒரு இளம் வயது பெண், 19 வயதாம். அந்த புள்ள சோப்பை தின்னுதாம். அது பேரு டெம்பெஸ்ட் ஹன்டர் சன். ஒரு வாரத்துக்கு சுமார் அஞ்சு பார் சோப்பும் சலவை தூளும் இந்த புள்ள தின்னுதாம்.

இது ஒரு மெண்டல் டிஸ் ஆர்டர் கேசு இல்லை. ஆனாக்க இது ஒரு வியாதியாம்.
 pica - is a medical disorder characterized by an appetite for substances largely non-nutritive(e.g.metalclaycoalsoilfeceschalkpens and pencilspaperbatteriesspoonstoothbrushessoapmucus, ash, gum, etc.) or an abnormal appetite for food ingredients (e.g. flour, raw potato, raw ricestarchice cubes, salt. Pica is more common in women and children.

இந்த pica வியாதி உள்ளவுங்க கண்டதையும் தின்னும் கேசு போல. உலோகம், நாணயம், சாக் பீசு, பேட்டரி செல் ( அடி ஆத்தீ) பல் தேய்க்கும் பிரஷ் என பட்டியல் நீள்கிறது. 

உடலில் ஏற்படும் மினரல்- தாது உப்புக்களின் பற்றாக்குறையினால் தான் இது போல கண்ணில் கண்டதையும் தின்னும் பழக்கம் வருமாம். நல்ல வேலையாக இவர் தின்னும் எல்லாமும் சீரணமாகி விடுவதால் பிழைத்தார்கள். 

தாய் மார்கள் அடிக்க வராதீர்கள்.    பெண்கள்....இல்லை ...இல்லை.
 நம் அம்மாக்கள், நாம் வயிற்றில் குழந்தையாய் இருக்கும் பொது திருட்டுத்தனமாக சாம்பலும், திரு நீரையும் தின்பார்களாம். புளிப்பாக மாங்காய், புளியங்காய் தின்ன அவர்களுக்கு தோன்றுவதும் இந்த தாது உப்புக்கள் உடலில் மிகவும் குறைவாய் இருபதனால்தானாம். 

// நான் குளியல் அறையில் அந்த பச்சை நிற பார் சோப்பின் நுரையினை தின்று ருசி பார்ப்பேன்.சிறிய அளவு சோப்பினை வாயில் இட்டு சுவைப்பேன். அதன் சுவையில் மயங்கி மேலும் தின்னுவேன்// 

// சோப்பை இட்டு சுத்தமாக்குவதை விட அதனை வாயில் இட்டு சுவைத்து தின்றால் எனக்கு கிடக்கும் அந்த பரிசுத்தமான உணர்வுக்கு இணை இல்லை //

இதெல்லாம் உடான்சு இல்லை. அந்த சோப்பு சுந்தரியே சொன்ன ஒப்புதல் வாகு மூலம். 

link: 

மருத்துவர்கள் அந்த சுந்தரிக்கு சிகிச்சை அளிகிறார்கலாம். என்ன சிகிச்சை?  Cognitive-behavioural therapy (CBT), சோப்பு இருக்கும் இடங்களான குளியல் அரை, மற்றும் துணிகள் சலவை செய்யும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கட்டுப்பாடு வேறு. தன் குடும்பத்தை விட்டு தொலைவில் தனியாக அந்த பெண் டெம் பெஸ்ட் ஹன்டர்சன் வசிக்கும் பொது இவ்வாறு சோப்பையும் சலவை தூளையும் தின்னும் பழக்கம் வந்துள்ளதாக மனோ வியாதி நிபுணர்கள் கூறுகின்றனர். 

இதெல்லாம் கண்டதையும் தின்னும் கேசுகளின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட சரக்குகள்!


வெளியூரில் , குடும்பத்தை பிரிந்து இருக்கும் நம்ம பதிவர்கள் யாரும் சோப்பும் சலவைதூளும் தின்னாதீர்கள். நாமெல்லாம் அவாறு தின்றால் "பிச்சிக்கும் ' அவ்வவளவுதான் டாய்லெட்டே கதியாக கிடக்க நேரிடும் ஆமாம். இது குறிப்பாக நம்ம பன்னிகுட்டி மற்றும் பட்டா பட்டி இவர்களுக்கு.



சரி, இவர்கள் அடிக்கும் கூத்தை பாருங்கள், சோப்பை தின்ன முயற்சி!



சரி, ஜாலியா ஒரு அருந்த பழசு பாடல். ஆனா டெம்போ இருக்கும் one more favorite from ABBA  





வெயிட், வெயிட் .  அந்த புள்ளயோட படங்கள் வந்தாச்சி. ஆமாம், சோப்பை துண்னே இந்தன குண்டாகீதே!!!?? ?

வெளங்கிடும் !

அடிப்பாவி !!!
ஐஸ் கிரீம துன்றது மேரிக்கி இப்டி துண்டறாலே !!! 

பக்த்ல கீறது அம்மாவாம்!
Courtesy  Mail Online
http://www.dailymail.co.uk/news/article-1354417/Tempestt-Henderson-19-consumes-bars-soap-week.html



42 comments:

THivya சொன்னது…

see more deatails for this news in tamil....

http://puthiyaulakam.com/2011/02/07/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/

எஸ்.கே சொன்னது…

இந்த மாதிரி பல்பு, இரும்பையெல்லாம் சாப்பிடுறவங்களை பார்த்திருக்கேன். அவங்களுக்கு நார்மலான சாப்பாடு சாப்பிட்டா செரிக்காதாமே!

Philosophy Prabhakaran சொன்னது…

இப்படி பதிவெழுதி அந்த பொண்ணுக்கு நல்லா சோப்பு போட்டிருக்கீங்க...

டக்கால்டி சொன்னது…

உடம்பு சுத்தமா இருந்து என்ன பிரயோஜனம் அந்த புள்ளைக்கு மனசு சுத்தமா இருந்தா போதும் என்கிற விஷயம் தெரியலையே....

வைகை சொன்னது…

வெளியூரில் , குடும்பத்தை பிரிந்து இருக்கும் நம்ம பதிவர்கள் யாரும் சோப்பும் சலவைதூளும் தின்னாதீர்கள். நாமெல்லாம் அவாறு தின்றால் "பிச்சிக்கும் ' அவ்வவளவுதான் டாய்லெட்டே கதியாக கிடக்க நேரிடும் ஆமாம். இது குறிப்பாக நம்ம பன்னிகுட்டி மற்றும் பட்டா பட்டி இவர்களுக்கு./////////

நல்லவேள நாங்கெல்லாம் இந்த லிஸ்ட்டுல இல்லை......இருந்தாலும் நம்ம பன்னி சோப்ப தின்னுட்டு அத பத்தி பதிவு எழுதினா?!! நல்லாயிருக்குமோ?

settaikkaran சொன்னது…

நம்ம ஊருலே பிளேடு, டியூப் லைட்டு, ஆணி, செங்கல்னு ஆம்பிளைங்க முழுங்கி சாதனை பண்ணுறாங்களே! அவனுகளுக்கும் இந்த PICA வியாதி இருக்குமோ?

Unknown சொன்னது…

இந்த ஊருல சாதரணமா வெளியில சாபிட்டாலே எல்லாம் ஆகும்.......இதுல இது வேறயா!!

Unknown சொன்னது…

சோப்ப தின்ற புள்ள குச்சி கணக்கா இருக்கும்னு நெனச்சா இது என்னா எல்லாம் ஜீரணம் பண்றதா கீதே யப்பா!!

சசிகுமார் சொன்னது…

நெனச்சி பார்க்கும் போதே குமட்டுது அண்ணே

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஹி.. ஹி..
வித்தியாசமான பொண்ணு...
------------------- பதிவு..

அருண் பிரசாத் சொன்னது…

கக்கு சாருக்கு ஒரு லோடு சோப்பு பார்சல்....

பெயரில்லா சொன்னது…

ஆஹா நல்ல மாற்றங்கள் டேம்ப்ளேட் நீட்டா இருக்கு..சோப்பு மேட்டர் எங்க கிடைக்குது உங்களுக்கு மட்டும்....ஆச்சர்யமான தகவல்

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

என்னத்த சொல்ல பயபுள்ளைய....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>பைத்தியங்கள் பல விதம். அதில் நிறைய பேர்கள் தமிழில் பதிவும் எழுதுகிறோம்.

ennaiththaanee sonningka.. hi hiஎன்னைத்தானே சொன்னீங்க.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டைட்டில்ல சுந்தரின்னு போட்டதும் வந்தது தப்புத்தான்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வெளங்கிருச்சு......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெளியூரில் , குடும்பத்தை பிரிந்து இருக்கும் நம்ம பதிவர்கள் யாரும் சோப்பும் சலவைதூளும் தின்னாதீர்கள். நாமெல்லாம் அவாறு தின்றால் "பிச்சிக்கும் ' அவ்வவளவுதான் டாய்லெட்டே கதியாக கிடக்க நேரிடும் ஆமாம். இது குறிப்பாக நம்ம பன்னிகுட்டி மற்றும் பட்டா பட்டி இவர்களுக்கு.///////////

என்னண்ணே இப்பிடி பச்ச புள்ளையாவே இருக்கீக, தனியா இருந்தா நாங்கள்லாம் சோப்பா திம்போம்...? நல்லா ரோசன பண்ணி பாருங்க.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////வெயிட், வெயிட் . அந்த புள்ளயோட படங்கள் வந்தாச்சி. ஆமாம், சோப்பை துண்னே இந்தன குண்டாகீதே!!!?? ?////////

இப்பிடியாவது ஏதாவது நல்ல படமா போடுவீங்கன்னு பாத்தா.........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அது நாந்தேன் !//////////

எப்பண்ணே ஆப்பரேசன் பண்ணீங்க......?

போளூர் தயாநிதி சொன்னது…

என்னத்த சொல்ல

RVS சொன்னது…

காலையில டிபனுக்கு ரெண்டு குண்டு பல்புன்னு வடிவேலு கிட்ட ஒருத்தர் சொல்லுவார்... அதுமாதிரி இருக்கே..
சோப்பு சாப்பிட்டு தண்ணி குடிச்சுட்டு வாய்க்குள்ள ரெண்டு கர்ச்சீப்பு போட்டுட்டு ஒரு ரவுண்ட் ஒடிவந்தா அதை தோச்சுடலாம் போலருக்கே..
எல்லோரையும் வெளுக்கவைத்த பதிவு.. ;-)

Jana சொன்னது…

:)

Unknown சொன்னது…

புற அழுக்கை சுத்தப்படுத்த நாம் சோப்பு போடுறோம், அவளுக்கு அகமும் அழுக்காக இருக்குமோ என்னவோ.ஆன அயிட்டம் சூப்பர். மேட்டர சொன்னேன்.

ஆயிஷா சொன்னது…

வித்தியாசமான பொண்ணு.

சென்னை பித்தன் சொன்னது…

எங்கே பிடிச்சீங்க சுவாரஸ்யமான செய்தி!சோப்புக்கு எத்தனை விதமான உபயோகம்!

புலிக்குட்டி சொன்னது…

அடிப்பாவி!!! இது வயிறா வண்ணான் தாழியா?

மோகன்ஜி சொன்னது…

சோப்பு தின்ன பாப்புவுக்கு வர்ற மாப்பு குளிக்கவே மாட்டான்.

வேலன். சொன்னது…

நம்ம் ஊர் சோப்பை பார்சல் அனுப்புங்கள். அப்புறம் அது சோப்பு திண்ணும் ஆசையையே மறந்துவிடும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

மாணவன் சொன்னது…

வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள் நன்றி

Unknown சொன்னது…

அது சுந்தரி சோப் தானே,,.,

Unknown சொன்னது…

இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்...

Asiya Omar சொன்னது…

லேசாக சோப்பு நுரை வாயில் பட்டாலே உவ்வே தான்,ஆனாலும் இது ரொம்ப அதிசயம் தான்.

ப.கந்தசாமி சொன்னது…

ஆஜர்.

Unknown சொன்னது…

நேற்று மடையர்கள் என்று ஒரு பதிவு வீடியோ பாடலுடன் போட்டீர்களே எங்கே காணவில்லை?
ஆட்டோ அனுப்பிட்டாங்களா?

ஜெய்லானி சொன்னது…

இங்கே(ஷார்ஜா) ரூபாய்க்கு ரெண்டு சோப் வருதே..!!அதோட வாசம் ஒன்னு ஆப்பிள் ,லெமன் , ஸ்டிராபெர்ரி , வாட்டர் மெலன் ,ஆர்ஞ்ச் இப்படி வந்துகினே இருக்கே நானும் எப்பவாவது முழுஷா முழுங்கிடனுமின்னு பார்த்தா முடியலை நைனா ...!!

ஹும் என்னால் முடியாததை அந்த மஹராசி செய்யுறா ..உங்களுக்கு ஏன் இந்த கெட்ட புத்தி :-))))))))))))))))))))))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க.....
நாம மணத்தி பார்த்து தேச்சு குளிப்பதோட சரி.
ஜெய்லானி மாதிரி குளிக்காமெல்லாம் இருக்க மாட்டேன்....

ஜெய்லானி சொன்னது…

//ஜெய்லானி மாதிரி குளிக்காமெல்லாம் இருக்க மாட்டேன்...//

எப்படியா கண்டு பிடிச்சே..!! அந்த அளவுக்கு வாசனையா இருப்பதை தண்ணீல போட்டு கரைக்க விரும்பல...!! :-))

பொன் மாலை பொழுது சொன்னது…

மூணு நாளா முழி பிதுங்கி போச்சி,மத்ததெல்லாம் ஒழுங்கா இருக்க இந்த ப்ளாகுக்கு என்ன வந்ததோ தெரியில, ஏதோ மந்திரம் , மாயம் விட்டது போல ஒன்னும் பண்ண முடியல. எதேச்சையாக இப்ப வந்து ட்ரை பண்ணினா.......ஆகா. எல்லாம் ஓ.கே . ஒருவழியா பிரச்சனை தீர்ந்து அது அது திறந்து கொண்டது. மறுபடியும் இது மாதிரி எப்ப ஆவுமே!

பின்னூட்டம் இட்டு, ஓட்டும்போட்ட மற்றும் வாசித்த அன்பர்களுகெல்லாம் மிக்க நன்றி.

சென்னை பித்தன் சொன்னது…

//மூணு நாளா முழி பிதுங்கி போச்சி,மத்ததெல்லாம் ஒழுங்கா இருக்க இந்த ப்ளாகுக்கு என்ன வந்ததோ தெரியில, ஏதோ மந்திரம் , மாயம் விட்டது போல ஒன்னும் பண்ண முடியல. எதேச்சையாக இப்ப வந்து ட்ரை பண்ணினா.......ஆகா. எல்லாம் ஓ.கே . ஒருவழியா பிரச்சனை தீர்ந்து அது அது திறந்து கொண்டது.//
இதே பிரச்சினைதான் எனக்கும் .இப்போதான் சரியாச்சு!

GEETHA ACHAL சொன்னது…

நல்ல பகிர்வு...

//அந்த புள்ளயோட படங்கள் வந்தாச்சி. ஆமாம், சோப்பை துண்னே இந்தன குண்டாகீதே!!!?? //பயங்கர சிரிப்பு...

Unknown சொன்னது…

சார். இந்த பதிவ படிச்சு பாருங்க...

http://qaruppan.blogspot.com/2011/02/blog-post_16.html

பெயரில்லா சொன்னது…

i saw this when i was in toilet and i lost my poopitite

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக