பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜனவரி 31

உனக்கு விருதுகள் பட்டங்கள் தேவை இல்லை.



இன்றுள்ள சூழலில் யார் யாரே மிகப்பெரிய விருதுகள் எல்லாம் "வாங்குகிறார்கள்" நம்ம அரசியல் வாதிகள் சற்று செல்வாக்கானால் இருக்கவே இருக்கிறது மலிவான, சுயமரியாதை அற்ற சுய நிதி பாடாவதி பல்கலைகழகங்கள்.  இவர்கள் அவர்களை அழைத்து பிரும்மாண்டமாக விழஎடுத்து அந்த அரசியல் வியாதிக்கு டாக்டரு பட்டம் தலையில் கட்டிவிடுவார்கள்.அப்புறம் என்ன? ஊரில் இருக்கும் சுவரில் எல்லாம் அந்த அரசியல் வியாதியின் பெயருடன் புதிதாய் வாங்கிய டாகுடறு பட்டமும் கொட்டை எழுத்துக்களில் கண்ணைப்பறிக்கும்.


இப்போது சினிமாவில் நடித்து முளைவிடாத குஞ்சி குளுவான்கள் எல்லாம் கௌரவ டாகுடறு பட்டம் பெற தொடங்கி விட்டன. ஏதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை அல்லது மத பிரசாரம் செய்யும் நிறுவனங்களை அணுகினால் போதும். வேலை இன்னமும் ஈசி. இப்போது எல்லாருக்கும் தங்கள் அழகு மூஞ்சியை ஊரில் உள்ள சந்து பொந்துகள்,மூத்திரம் நாறும் மூளை முடுக்குகள் என்று எல்லா இடங்களிலும் பொருத்தி தங்களை மக்களின்
நாயகனாக காட்ட பெரும் முயற்சி.

ஆனால் எத்தனையோ கலைஞர்கள்,விற்பன்னர்கள், ஜாம்பவான்கள் இதுபோன்ற வெத்து வேட்டு ஆர்பாட்டங்கள் எதுவும் இல்லமால் அல்ப "டாகுடறு" பட்டங்களுக்கு ஆசைபடாமல் வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் நம் மனங்களில் அமரராக வாழ்ந்து கொண்டிருகிறார்கள்!

இந்த கன்றாவிகளை கிண்டல் அடித்துதான் நாமும் நம் வலையுலக நண்பர்களுக்கெல்லாம் பாகு பாடு இன்றி நம்


 "UNIVERSITY OF DUBAAKOORS "  


ஏற்படுத்தி அனைவருக்கும் கௌரவ டாக்குடரு பட்டம் பெற வைத்தோம்.


அது கிடக்கட்டும்,

நாகேஷ் கூட கௌரவ டாக்குடரு பட்டம் வாங்கவில்லை.
நாகேஷை தமிழர்களால் மறக்க முடியுமா? அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வாழும் உண்மையான ஒரு கலைஞன் அல்லவா? நகைசுவை மட்டுமின்றி குணசித்திர வேடங்களிலும் தனக்கென நிகர் இல்லாத ஒரு இடத்தை ஏற்படுத்தி உண்மையான மதிப்புடன் பெருமையுடன் வாழ்ந்து மறைத்த மனிதன். இன்று யார் யாரே விருது  தர யார் யாரோ வாங்குகிறார்கள். ஆனால் மக்கள் மனதில் இவர்களுக்கு என்ன இடம் இருந்தது ? இருக்கிறது??


நாகேஷ் போன்ற ஒரு அற்புத கலைஞனுக்கு விருதுகளும் பட்டங்களும் அவன் அணிந்த செருப்பின் மீது படரும் மெல்லிய தூசுப்படலம்.அவனுக்கு அவைகள் தேவையும்மில்லை. அவன் மக்கள் மனதில் என்றும் வாழ்பவன். அவன்தான் உண்மையான கலைஞன்.






இன்று நாகேஷ் அவர்கள் அமரரான நாள். ஜனவரி 31 / 2009


57 comments:

எஸ்.கே சொன்னது…

//அவன் மக்கள் மனதில் என்றும் வாழ்பவன். அவன்தான் உண்மையான கலைஞன்.//

நிச்சயமாக நாகேஷ் மக்களின் மனதில் வாழ்பவர்! அவருக்கு அஞ்சலிகள்!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் நிலைத்திருப்பவர் நாகேஷ் அவர்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி எஸ்.கே.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி வெறும்ப, நீங்கள் இன்னமும் பெயரை மாற்றவில்லை?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காலத்தால் அழியாத நவரச நடிகர் நாகேஷ்....
அவருக்கு என் அஞ்சலி........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நாகேஷ் போன்ற ஒரு அற்புத கலைஞனுக்கு விருதுகளும் பட்டங்களும் அவன் அணிந்த செருப்பின் மீது படரும் மெல்லிய தூசுப்படலம்.அவனுக்கு அவைகள் தேவையும்மில்லை. அவன் மக்கள் மனதில் என்றும் வாழ்பவன். அவன்தான் உண்மையான கலைஞன்.//
பொருத்தமான அற்புதமான வார்த்தை.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அவர் மாபெரும் காவிய "நாயகன்"
எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இல்லையா.....

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நாகேஷ் அவர்களை பற்றிய அருமையான நினைவுகள். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் விட்டது சரிதான். இன்று யார்யாருக்கோ கொடுக்கும்போதே தெரியவில்லையா அந்த பட்டத்தின் மரியாதை. அதை நாகேஷுக்கு வேறு கொடுத்து அவரை அசிங்க படுத்த வேண்டுமா?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

அவருக்கு எதற்கு பட்டங்களெல்லாம்? அவரே ஒருப் பல்கலைக்கழகம் !
அவரின் ' உலகம் இவளவுத்தான் ' என்ற படத்தை பார்த்து இருக்கிறீர்களா? இல்லைஎன்றால் இங்கே சென்றுப் பார்க்கவும். http://www.tamilflix.net/2011/01/28/ulagam-ivalavuthan-tamil-movie-watch-online/
நன்றியும் வாழ்த்துக்களும் நண்பா.

Jana சொன்னது…

மனங்களைவென்ற மக்களின் மனங்களின் ஒருபகுதியில் சிம்மாசனம்போட்டு வாழ்ந்த ஒரு மகா கலைஞனுக்கு விருதகள் தேவையில்லை. இவர்பெயரில் விருது வழங்கினால் இனி வாங்கப்போவருக்கு அது கௌரவாக இருக்கும்.

ஜெய்லானி சொன்னது…

நான் பொதுவா..அரசியல் பத்தி பதிவு போடுவதில்லை...ஆனால் இதுக்காகவே ஒன்னு எழுதி இருக்கேன் ..போடலாமா வேனாமா மனம் இந்த சிந்தனையிலேயே ஓடிகிட்டு இருக்கு :-(((

RVS சொன்னது…

பாலையாவுக்கு கதை சொல்லும் நாகேஷும்....
சிவனிடம் கேள்வி கேட்கும் தருமி நாகேஷும்....
சர்வர் சுந்தரம் நாகேஷும்....
எப்போதும் எல்லோரும் நெஞ்சிலும் இருப்பார்!!
;-) ;-)

வைகை சொன்னது…

நாகேசுக்கு விருதுகள் தேவையில்லை! எம்ஜியாருக்கு தேசிய விருது கொடுத்தபோதே அதன் மதிப்பு தெரிந்துவிட்டது! இவர் மக்களின் கலைஞன்!

பொன் மாலை பொழுது சொன்னது…

//அவர் மாபெரும் காவிய "நாயகன்"
எந்த மாற்றுக் கருத்தும் இல்லை இல்லையா..//

MANO நாஞ்சில் மனோ சொன்னது

யாரவது விளையாட்டாக கூட சொல்லமாட்டார்கள். சொன்னால் கும்மி எடுத்துவிடுவார்கள் என்று தெரியும்!:))

பொன் மாலை பொழுது சொன்னது…

//நாகேஷ் அவர்களை பற்றிய அருமையான நினைவுகள். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் விட்டது சரிதான். இன்று யார்யாருக்கோ கொடுக்கும்போதே தெரியவில்லையா அந்த பட்டத்தின் மரியாதை. அதை நாகேஷுக்கு வேறு கொடுத்து அவரை அசிங்க படுத்த வேண்டுமா?//

ரஹீம் கஸாலி சொன்னது…

உண்மையில் இதில் எனக்கு சந்தோஷமே. நாகேஷுக்கு யாரும் இனி பட்டம் தர வேண்டியதில்லை.

பொன் மாலை பொழுது சொன்னது…

// அவருக்கு எதற்கு பட்டங்களெல்லாம்? அவரே ஒருப் பல்கலைக்கழகம் !//
M.S.E.R.K. சொன்னது…

அதுசார், என்ன உங்களை ரொம்ப நாளாக காணோம்?
உலகம் இவ்வளவுதான் நான் பார்த்த படம் தான். நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

. // இவர்பெயரில் விருது வழங்கினால் இனி வாங்கப்போவருக்கு அது கௌரவாக இருக்கும்.//

Jana சொன்னது…

உண்மைதான் ஜனா. வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//நான் பொதுவா..அரசியல் பத்தி பதிவு போடுவதில்லை...ஆனால் இதுக்காகவே ஒன்னு எழுதி இருக்கேன் ..போடலாமா வேனாமா மனம் இந்த சிந்தனையிலேயே ஓடிகிட்டு இருக்கு :-(((//

ஜெய்லானி சொன்னது…

என்ன தலைவா இப்பவெல்லாம் நம்ம பக்கமே வருவதில்லை?
அதுசரி ,நீங்க பாடும் பாடல், உங்க குரல் வளம் நல்லாதானே இருக்கு? பின் ஏன் கவனம் செலுத்தவில்லை?
பதிவ எழுதினா அதனை வெளியிட என்னதயக்கம் ? சீக்கிரம் ஆகட்டும் .நன்றி ஜெய்லா.

பொன் மாலை பொழுது சொன்னது…

//பாலையாவுக்கு கதை சொல்லும் நாகேஷும்....
சிவனிடம் கேள்வி கேட்கும் தருமி நாகேஷும்....
சர்வர் சுந்தரம் நாகேஷும்....
எப்போதும் எல்லோரும் நெஞ்சிலும் இருப்பார்!!//

RVS சொன்னது…

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமையே R V S . நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

//நாகேசுக்கு விருதுகள் தேவையில்லை! எம்ஜியாருக்கு தேசிய விருது கொடுத்தபோதே அதன் மதிப்பு தெரிந்துவிட்டது! இவர் மக்களின் கலைஞன்!//

வைகை சொன்னது…

உண்மைதான். எம்.ஜி.ஆருக்கு அப்போது அந்த விருது அறிவிக்கப்பட்டது முழுக்க முழுக்க இந்திரா காந்தியின் அரசியல். தி.மு.க. வை உடைக்க திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றார் அவர்.
நன்றி வருகைக்கு.

எப்பூடி.. சொன்னது…

தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலை விட யாராவது ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார்களா என்றால் எந்தவித தயக்கமும் இல்லாத என்னுடைய பதில் நாகேஷ். நாகேஷ் பற்றிய பதிவிற்கு நன்றி.

எப்பூடி.. சொன்னது…

விருதுகளை விடுங்கண்ணே; கண்ணதாசன் , சிவாஜி கணேஷன், எம்.எஸ்.வி சார் எல்லாம் விருது வாங்கினாங்களா?

மாதேவி சொன்னது…

அநேகர் மனங்களில் நிறைந்திருக்கும் நடிகர்.

எல் கே சொன்னது…

விருது கொடுக்கப்படாததால் அவருக்கு கேவலம் இல்லை. அந்த விருதுகளுக்குத்தான் கேவலம். எனது அஞ்சலிகள்

vanathy சொன்னது…

மிகச் சிறந்த நடிகர். இப்ப குடுக்கப்படும் விருதுகள் எல்லாம் அரசியல் கலந்திருக்கும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலை விட யாராவது ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார்களா என்றால் எந்தவித தயக்கமும் இல்லாத என்னுடைய பதில் நாகேஷ்.//

எப்பூடி.. சொன்னது…

அப்படி போடுராஜா!
என்னுடைய எண்ணமும் இதுதான். நாகேஷ் இவர்கள் இருவரையும் மிஞ்சி நடித்தவர் என்பது என் கருத்து.

நமது ஊடகங்கள் பத்திரிக்கைகள் அனைத்தும் ஆட்டு மந்தை கூட்டங்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. யாராவது ஒருவர் சிவாஜியை அல்லது கமலைப்பற்றி ஆஹா.... ஓஹோ.... என்று எழுதிவிட்டால் போதும். பின்னால் வரும் அத்தனை ஆடுகளும் அதனையே செய்கின்றன. செய்துகொண்டுதான் உள்ளன. சொந்த புத்தியற்ற ஆடுகள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

மீண்டும் வந்ததற்கு நன்றி எஸ்.கே. அவருக்கு விருது கிடைக்காததில் எனக்கு மகிழ்ச்சியே! அதனால்தான் அந்த தலைப்பு இட்டேன் :))

பொன் மாலை பொழுது சொன்னது…

// அநேகர் மனங்களில் நிறைந்திருக்கும் நடிகர்.//

மாதேவி சொன்னது…

அதனால்தான் அவருக்கு விருதுகள் வேண்டுவதில்லை.நன்றி மாதேவி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// மிகச் சிறந்த நடிகர். இப்ப குடுக்கப்படும் விருதுகள் எல்லாம் அரசியல் கலந்திருக்கும்.//

vanathy சொன்னது…

இப்போது கொடுக்கப்படும் விருதுகளை மக்களே விரும்புவதில்லை. வாங்குபவரின் / கொடுப்பவரின் லட்சனம் அப்படி.
வருகைக்கு நன்றி வானதி.

எல் கே சொன்னது…

//மீண்டும் வந்ததற்கு நன்றி எஸ்.கே. அவருக்கு விருது கிடைக்காததில் எனக்கு மகிழ்ச்சியே! அதனால்தான் அந்த தலைப்பு இட்டேன்//

அண்ணே என் பேரு எல் கே :) இப்பதான் கமென்ட் போடறேன்

எஸ்.கே சொன்னது…

எல்.கே சார் நிறைய இடத்தில் உங்களைன்னு நினைச்சு என்னை கார்த்திக்னு சொல்வாங்க:-)

Unknown சொன்னது…

//நாகேஷ் போன்ற ஒரு அற்புத கலைஞனுக்கு விருதுகளும் பட்டங்களும் அவன் அணிந்த செருப்பின் மீது படரும் மெல்லிய தூசுப்படலம்.அவனுக்கு அவைகள் தேவையும்மில்லை. அவன் மக்கள் மனதில் என்றும் வாழ்பவன். அவன்தான் உண்மையான கலைஞன்//

உண்மை பாஸ்! அருமையான ஒரு நடிகர்!

பொன் மாலை பொழுது சொன்னது…

எல் கே சொன்னது…
//மீண்டும் வந்ததற்கு நன்றி எஸ்.கே. அவருக்கு விருது கிடைக்காததில் எனக்கு மகிழ்ச்சியே! அதனால்தான் அந்த தலைப்பு இட்டேன்//

அண்ணே என் பேரு எல் கே :) இப்பதான் கமென்ட் போடறேன்
31 ஜனவரி, 2011 6:44 pm
எஸ்.கே சொன்னது…
எல்.கே சார் நிறைய இடத்தில் உங்களைன்னு நினைச்சு என்னை கார்த்திக்னு சொல்வாங்க:-)
31 ஜனவரி, 2011 6:45 pm

எப்பா சாமிகளா.....ஊருல கோடி கோடியா வித விதமா பேரு இருக்கே? நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஸ்கூல் மாஸ்டர் மாதரி இனிஷியலை போட்டுகொண்டு என்ன மேரி கத்துக்குட்டிகள தலைய சுத்த வுடுறீங்க கண்ணுகளா??
சீக்கிரம் ரெண்டு பேரும் கொஞ்சம் வித்யாசமா பேர மாதி வெச்சு இந்த கொழப்பத்த தீது வைங்க .புண்ணியமா போகும். :))))))))

பொன் மாலை பொழுது சொன்னது…

//நாகேஷ் போன்ற ஒரு அற்புத கலைஞனுக்கு விருதுகளும் பட்டங்களும் அவன் அணிந்த செருப்பின் மீது படரும் மெல்லிய தூசுப்படலம்.அவனுக்கு அவைகள் தேவையும்மில்லை. அவன் மக்கள் மனதில் என்றும் வாழ்பவன். அவன்தான் உண்மையான கலைஞன்//

உண்மை பாஸ்! அருமையான ஒரு நடிகர்.
ஜீ... சொன்னது…

நன்றி ஜீ

எம் அப்துல் காதர் சொன்னது…

நாகேஷை ஞாபகம் வைத்து போட்டப் பதிவு அருமை அண்ணே!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி சொன்னது…

// நான் பொதுவா..அரசியல் பத்தி பதிவு போடுவதில்லை...ஆனால் இதுக்காகவே ஒன்னு எழுதி இருக்கேன் ..போடலாமா வேனாமா மனம் இந்த சிந்தனையிலேயே ஓடிகிட்டு இருக்கு :-((( //

எப்படியும் அடுத்த அமரர் தினத்துக்குள் போட்டுடுவீங்கள்ள ஹி..ஹி.. ??

settaikkaran சொன்னது…

//நகைசுவை மட்டுமின்றி குணசித்திர வேடங்களிலும் தனக்கென நிகர் இல்லாத ஒரு இடத்தை ஏற்படுத்தி உண்மையான மதிப்புடன் பெருமையுடன் வாழ்ந்து மறைத்த மனிதன்.//

அதே! "நீர்க்குமிழி"யை மறக்க முடியுமா? "எதிர்நீச்சல்" மாதுவை மறக்க முடியுமா? "இரு கோடுகள்" படத்தில் ஒரு பாட்டில் பாரதியை உயிர்பித்திருந்தாரே?

settaikkaran சொன்னது…

//நாகேஷ் போன்ற ஒரு அற்புத கலைஞனுக்கு விருதுகளும் பட்டங்களும் அவன் அணிந்த செருப்பின் மீது படரும் மெல்லிய தூசுப்படலம்.//

சத்தியம்! சத்தியம்! தலைமுறைகளைக் கடந்து மனதில் தங்கிவிட்ட மாபெரும் கலைஞன் அவன்.

settaikkaran சொன்னது…

//அவனுக்கு அவைகள் தேவையும்மில்லை. அவன் மக்கள் மனதில் என்றும் வாழ்பவன். அவன்தான் உண்மையான கலைஞன்.//

நாகேஷ் விட்டுச்சென்ற வெற்றிடம் வெற்றிடமாகவே இருக்கிறது: இனியும் இருக்கும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// நாகேஷை ஞாபகம் வைத்து போட்டப் பதிவு அருமை அண்ணே //

எம் அப்துல் காதர் சொன்னது…

வருகைக்கு நன்றி அப்துல்.

பொன் மாலை பொழுது சொன்னது…

/கக்கு - மாணிக்கம் சொன்னது…
// அதே! "நீர்க்குமிழி"யை மறக்க முடியுமா? "எதிர்நீச்சல்" மாதுவை மறக்க முடியுமா? "இரு கோடுகள்" படத்தில் ஒரு பாட்டில் பாரதியை உயிர்பித்திருந்தாரே?//

சேட்டைக்காரன் சொன்னது…

நாகேஷின் முத்திரை படங்கள் நிறைய உண்டு சேட்டை,
நீர்க்குமிழி,
மேஜர் சந்திர காந்த்,
எதிர்நீச்சல்,
காதலிக்க நேரமில்லை,
அன்பேவா,
அதேகண்கள்,
சர்வர் சுந்தரம்,
அனுபவி ராஜா அனுபவி,
திருவிளையாடல்,
உத்தரவின்றி உள்ளேவா,
அபூர்வ ராகங்கள் என இன்னும் வரும்.
வருகைக்கு நன்றி .

பெயரில்லா சொன்னது…

உண்மை தான்

டக்கால்டி சொன்னது…

Arputha kalaignanukku (Naan solrathu antha kalaignar illeengo!!!) Nalla Ninaivu meettal...

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி கந்தசாமி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// Arputha kalaignanukku (Naan solrathu antha kalaignar illeengo!!!) Nalla Ninaivu meettal..//

டக்கால்டி சொன்னது…

அய்யா டகாலு, எனக்கொரு ஐடியா !!........என்னாவா?.......இனிமே இப்படி செய்தா என்னா? வலைதளங்களில் இசை விற்பன்னர்கள் அல்லது நடிகர் நடிகைகள் பற்றி அல்லது மொத்தமாக கலை துறையில் யாராக இருந்தாலும் அவர்களை "கலைஞர் " என்று அடை மொழியோடு எழுத்தும் வழக்கம் வரவேண்டும். எப்படி இது?? உண்மையில் அவர்கள் எல்லாரும் கலைஞர்கள் தானே??
கலைஞர் விஜய காந்த், கலைஞர் கமல் ஹாசன், கலைஞர் ரஜினி, கலைஞ்சி தமன்னா, கலைஞ்சி மனோரமா, கலைஞ்சி கே.ஆர். விஜயா, கலைஞ்சி ஜெயலிதா,கலைஞ்சி அனுஷ்கா, கலைஞ்சி குசுபு, கலைஞ்சிநமீதா,
கலைஞர் விமல், கலைஞர் சூர்யா, எப்படி??

டக்கால்டி சொன்னது…

டக்கால்டி சொன்னது…

அய்யா டகாலு, எனக்கொரு ஐடியா !!........என்னாவா?.......

எதோ நான் சின்னதா ஒரு பொட்டிக்கடை நடத்திட்டு வரேன்.. அதுக்கு ஆட்டோவை அனுப்ப வச்சிடாதீங்க...

ஆஹ் அது நான் இல்லீங்க...அது நான் இல்லீங்க....

பத்மஹரி சொன்னது…

நகைச்சுவைக்கு இலக்கணம் வகுத்த ஒரு கலைஞன் நாகேஷ் அவர்கள். நீங்கள் சொல்வதுபோல இந்த பாடாவதி பல்கலைக்கழகங்களும், அரசும் அவரைக் கௌரவிக்கவில்லையென்றால் என்ன நண்பரே, நம் மனதில் நீங்கா இடம்பெற்றவர் நாகேஷ். அதுதான் மிக உயரிய விருது! நல்ல பதிவு நன்றி!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com

பொன் மாலை பொழுது சொன்னது…

// எதோ நான் சின்னதா ஒரு பொட்டிக்கடை நடத்திட்டு வரேன்.. அதுக்கு ஆட்டோவை அனுப்ப வச்சிடாதீங்க...//

டக்கால்டி சொன்னது ..

அட இது என்னைய்யா அக்குறும்பாவுள்ள இருக்கு. கரகம் ஆடுபவரை கரகாட்ட கலைஞர் என்றுதானே சொல்கிறோம்,சிலம்பம் ஆடுபவர்களை சிலம்பாட்ட கலைஞர் அப்டீன்னுதானே சொல்றோம்? நடனம் அடுபவரை நடன கலைஞர் னுதானே எழுதுகிறோம்? அதுபோல எல்லா கலை வித்தகர்களையும் கலைஞர் அப்டீன்னு சொன்னா என்னா தப்பு? அதுக்கு கூட ஆட்டோ வருமா என்னா?

பொன் மாலை பொழுது சொன்னது…

//நகைச்சுவைக்கு இலக்கணம் வகுத்த ஒரு கலைஞன் நாகேஷ் அவர்கள். நீங்கள் சொல்வதுபோல இந்த பாடாவதி பல்கலைக்கழகங்களும், அரசும் அவரைக் கௌரவிக்கவில்லையென்றால் என்ன நண்பரே, நம் மனதில் நீங்கா இடம்பெற்றவர் நாகேஷ். அதுதான் மிக உயரிய விருது! நல்ல பதிவு நன்றி!//


பத்மஹரி சொன்னது…

ஆஹா....வாராது போல் வந்த மாமணியே. பத்மஹரி. என் மன ஆதங்கத்தை சரியாக புரிந்து கொண்டீர்கள்.
வருகைக்கு நன்றி.

சசிகுமார் சொன்னது…

நாகேஷ் சார் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் திருவிளையாடலில் 1000 பொற்காசுகள் காமெடி இப்பொழுது நினைத்தாலும் எண்ணை அறியாமல் சிரிப்பு தான் வரும்.

பெயரில்லா சொன்னது…

திருவிளையாடல்,ஒன்றே போதும் இவர் நகைச்சுவை பெரரசன் என்பதற்கு

பொன் மாலை பொழுது சொன்னது…

//நாகேஷ் சார் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் திருவிளையாடலில் 1000 பொற்காசுகள் காமெடி இப்பொழுது நினைத்தாலும் எண்ணை அறியாமல் சிரிப்பு தான் வரும்.//

சசிகுமார் சொன்னது…

வருகைக்கு நன்றி சசி.

பொன் மாலை பொழுது சொன்னது…

திருவிளையாடல்,ஒன்றே போதும் இவர் நகைச்சுவை பெரரசன் என்பதற்கு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஆனாலும் அதோடு இல்லாமல் நேரம் கிடைத்தால் பாலச்சந்தரின் அனுபவி ராஜ அனுபவி படம் பாருங்க சதீஷ்.
இரட்டை வேடத்தில் நம்ம நாகேஷ் பின்னி எடுத்திருப்பார்.

ஆயிஷா சொன்னது…

எல்லோர் மனங்களில் நிறைந்திருக்கும் நடிகர்.மிகச் சிறந்த நடிகர்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// எல்லோர் மனங்களில் நிறைந்திருக்கும் நடிகர்.மிகச் சிறந்த நடிகர்.//

ஆயிஷா சொன்னது…

அமாம் ஆயிஷா. வருகைக்கு நன்றி.

Jaleela Kamal சொன்னது…

நாகேஷ் இன்னும் அவர் நகைச்சுவை நடிப்பை யாராலும் மறக்க முடியாது.
( பாலாஜிக்கு பேய் கதை சொல்லும் போது சரியான சிரிப்பு வரும்)

டக்கால்டி சொன்னது…

எல்லா கலை வித்தகர்களையும் கலைஞர் அப்டீன்னு சொன்னா என்னா தப்பு?//

தப்பு இல்ல நாலு பேருக்கு நல்லது நடக்குதுனா எதுவுமே தப்பில்ல...ஆகமொத்தம் ஏதோ ஒரு திட்டத்துல இருக்கீங்க...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக