பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜனவரி 20

மத்திய காங்கிரஸ் அரசே உடனே பதவி விலகு!




இந்திய தலைநகர் புது டெல்லியில் ரோடு ஓரத்தில் குளிரில் வாழும் குழந்தைகள்.

கருப்புப் பண விவகார வழக்கில் நேற்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம். நாட்டையே கொள்ளையடித்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை திருடியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக கேட்டுள்ளது. இந்தப் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டேயாக வேண்டும் என்றும் கண்டித்துள்ளது.

ஆனால் இதற்கு நேர் மாறாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்து நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அமைச்சரவை மாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

  // உச்சநீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் கருப்புப் பணத்தை உடனடியாக மீட்டுக் கொண்டு வர நம்மிடம் எந்தத் தீர்வும் இல்லை //  

என்று கூறிவிட்டார்.

கருப்புப் பணம் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்குத் தெரிவிப்போம். அதேசமயம், இதை பகிரங்கமாக அனைவருக்கும் தெரியப்படுத்த முடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.என்று அவர் கூறியுள்ளார்.


சுப்ரீம் கோர்ட்டார் இந்த விஷயத்தில் விடாமல் தொடர்ந்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், முடிந்தால் ஆணையே பிறப்பிக்க வேண்டும். சொலிசிட்டர் ஜெனரல் சொல்வது போல சிக்கல் என்ன வந்துவிடுமோ? தெரியவில்லை!! கூட்டணி பிரச்சினையோ? கொள்ளையர்களை பாதுகாப்பது என்று இந்த பிரதமர் முடிவேசெய்துவிட்டாரா? எல்லா ஊழல் பேர்வழிகளையும் அரவணைத்து செல்வதும், அவர்கள் மீதான விசாரணையை கண்துடைப்பிற்காக நடத்துவதும் நல்ல பிரதமருக்கான செய்கை அல்ல. வருங்காலத்திலே அவர் குற்றவாளி கூண்டிலே நிறுத்தப்பட நேரிடலாம். எங்கே போனார்கள் ஊழலை ஒழிப்பேன் என்று தம்பட்டம் அடித்த சோனியாவும் ராகுலும் ? ஏன் இவர்கள் வாய் மூடி மௌனம் காக்கிறார்கள்??

கிடைத்த தகவல்களைகூட இவர்கள் வெளியிட மறுக்கும்போது இவர்களா இந்த நாட்டை காப்பாற்ற போகின்றனர்? தேச துரோகிகள் என்று தானே இவர்களை சொல்ல வேண்டும் !! மன்னிக்கவே முடியாத குற்றங்களை இந்த காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து செய்து வருகின்றது. எல்லா மட்டத்திலும் ஊழல்கள் மலிந்து வருகின்றன. கூட்டணி கட்சிகளால்தான் பிரச்சினைகள் என்று தப்பிக்க பார்கின்றது. கூட்டணி கொள்ளையர்கள் இவர்கள். ஒப்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாய் நாட்டை சுரண்டுகின்றனர். நாட்டை ஆளும் கட்சியே நாட்டை சுரண்டுகின்றது என்பது ஏற்றுகொள்ளவே முடியாது. அதன் தாக்கம் இந்த காங்கிரஸ் இந்த நாட்டிலிருந்து துடைத்து ஒழிக்கப்படக்கூடும்.! எதிர்க்கட்சி என்கிற மாதிரியான அந்தஸ்தை கூட அது இழக்கக்கூடிய சூழ்நிலை விரைவில் வரும். அந்த தொடக்கம் பீகாரில் ஆரம்பித்து இந்திய நாடு முழுமைக்கும் பரவும்.


இந்திய உச்ச நீதி மன்றத்தின் ஆணையின் படி நாட்டின் பொருளாதாரத்தை திருடியவர்கள் யாராக இருந்தாலும் இப்படிப்பட்டவர்களின் பெயர்களை உடனே பகிரங்க மாக வெளியிட வேண்டும் இல்லையேல் இந்த அரசு பதவி விலக  வேண்டும். இனியும் இவர்கள் இந்தநாட்டை ஆள எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று நாம் அனைவரும் நமது கண்டனங்கள் இவர்களுக்கு தெரிவிப்போம் வாருங்கள். அணைத்து பதிவர்களும் வலையுலக நண்பர்களும் இது குறித்து இந்திய அரசுக்கு நமது மறுப்பையும் கண்டனகளையும் தெரிவிப்போம்.





சற்றும் வெட்கமில்லாமல், பிரதமர் பதவியில் இருக்கும் இவரை மகா பொருளாதார மேதை என்று வேறு காவடிதூக்கிக்கொண்டுஅடிவருடிக்கொண்டு நாமும் இருக்கிறோம்.


மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசே உடனே பதவி விலகட்டும்!









13 comments:

எல் கே சொன்னது…

எங்க இதுக்கெல்லாம் அசந்துருவாரா சிங் ? கண்டனம் தெரிவிச்சா நமக்கு ஒரு பதிவுக் கிடைக்கும் அவ்வளவுதான். வேற ஒன்னும் நடக்காது என்பது கசப்பான ஆனால் உண்மையான விஷயம்

சக்தி கல்வி மையம் சொன்னது…

முதல் கண்டனம் என்னுடையது..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html

சென்னை பித்தன் சொன்னது…

//இனியும் இவர்கள் இந்தநாட்டை ஆள எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று நாம் அனைவரும் நமது கண்டனங்கள் இவர்களுக்கு தெரிவிப்போம் //
நான் இதை வழி மொழிகிறேன்.முதலில் என் கண்டனங்கள்!

Jana சொன்னது…

அண்மையில் உலகப்படம் ஒன்றை பார்த்தேன் அதில் இந்தியாவுக்கு கறுப்பு வர்ணம் கொடுத்திருந்தார்கள். அட...எவ்வளவு பொருத்தம்..என்றது மனது. இந்தியாவையும், இந்தியர்களையும் இனி கடவுள்தான் காப்பத்தவேண்டும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//எங்க இதுக்கெல்லாம் அசந்துருவாரா சிங் ? கண்டனம் தெரிவிச்சா நமக்கு ஒரு பதிவுக் கிடைக்கும் அவ்வளவுதான். வேற ஒன்னும் நடக்காது என்பது கசப்பான ஆனால் உண்மையான விஷயம்//
----------எல். கே . சொன்னது.


உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளையே நிராகரிக்கும் இவர்கள் இதற்கெலாம் அசரமாட்டார்கள் என்று தெரியும் ஆனால் நாமும் வாய் மூடி, மௌனமாக வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா? நம்முடைய உணர்வுகளை நியாயமான முறையில் தெரிவிப்பது தவறு ஒன்றுமில்லை.

வருகைதந்த நண்பர்கள்
எல் கே
sakthistudycentre-கருன்
சென்னை பித்தன்
Jana
தங்கள் கண்டனங்களையும் அவரவர்கள் தங்களின் வலைபக்கத்தில் பதிவில் இடுமாறு வேண்டுகிறேன்.
அணைவருக்கும் நன்றி.

எஸ்.கே சொன்னது…

கண்டனங்கள் மட்டும்தான் நம்மால் தெரிவிக்க முடியும்! என்ன செய்ய! அவர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//பதிவர்களும் வலையுலக நண்பர்களும் இது குறித்து இந்திய அரசுக்கு நமது மறுப்பையும் கண்டனகளையும் தெரிவிப்போம்.//

எனது கண்டனங்கள்..

நாம என்ன தான் கண்டனம் தெரிவித்தாளும் அவுங்களுக்கு சூடு சொரனை இருந்தாவங்க பதிலே சொல்ல மாட்டாங்க...

Unknown சொன்னது…

இது வரை பல முறை உச்ச நீதி மன்றமும் கண்டித்து விட்டது, ஏதற்கு அசராமல் இருக்கிறது மத்திய அரசு, நல்ல அரசை கொடுக்க முடியாவிட்டால் விலகி விடுவதுதானே தர்மம்.

Unknown சொன்னது…

பிகாரில் நிதிஷ் குமார்,மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி,குஜராத்தில் மோடி போல் மத்தியிலும் ஒருவர் கண்டிப்பாக வருவார். நல்லவர்களுக்கு நாட்டில் குறைவில்லை, அரசியலில் வேண்டுமானால் தட்டுப்பாடு இருக்கலாம் எனவே நேர்மையானவரை இனங்கண்டு ஆதரியுங்கள். முடிந்தவரை பதிவர்களும் நேர்மையானவர்களை அடையாளம் காட்டுவோம்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

மாணிக்கம்!

என்ன இது? ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறீர்கள்!

வறுமையே வெளியேறு என்று எமெர்ஜென்சி நாட்களில் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்கள் கூவி வறுமையை ஒழித்து விட்ட மாதிரி, காங்கிரசே பதவி விலகு என்று பதிவு எழுதி இறக்கிவிட முடிமா என்ன!

நாம் தான் இவர்களை இறக்கிவிட வேண்டும்! அவர்களாக இறங்கி விடுவார்களா என்ன!!

இலவசங்களில் ஏமாந்துவிடாமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மாற்றம் என்பது, ஒருதரம் தேர்தலில்வாக்களித்து விட்டு அப்புறம் ஐந்தாண்டுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில் மட்டும் வருவதில்லை, தேர்ந்தெடுத்தவர்கள் தவறு செய்யாமல் இருக்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். சுதந்திரம், உரிமைகள் என்பவை சோம்பேறிகளுக்கும், இலவசங்களுக்கு ஏங்குபவர்களுக்கு எப்போதும் எட்டாக்கனிதான் என்பதைக் கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது, அதைத் தொடர்ந்து செய்வோம்.

Philosophy Prabhakaran சொன்னது…

அரசியல் பற்றி அதிகம் தெரியாததால் நாங்கள் அரசியலைப் பற்றி எழுதுவதில்லை... எனினும் என்றென்றும் உங்களுக்கு எங்களது ஆதரவு உண்டு... உங்கள் சேவை தொடரட்டும்...

ஸ்ரீராம். சொன்னது…

உச்ச நீதிமன்றத்தினாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை...நாம் கண்டனம் சொல்லி என்ன ஆகப் போகிறது? கண்டனம்தான்...தப்புதான்..இவர்களை என்ன செய்ய முடியும்? வோட்டுப் போடும் போது மட்டும்தான் மக்கள் இவர்களுக்குத் தேவை..அப்போது கொட்ரொச்சி...இப்போ இன்னும் பலர்...சி பி ஐ இவர்கள் கையில்..இனியவன் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள் என்கிறார்...மன்மோகனைக் கூட அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தோம்.. குருமூர்த்தி கட்டுரை படித்தீர்களோ...

ஆத்திரக்காரன் சொன்னது…

அய்யா,
எத்தனை கொடுமைகள் செய்து எத்தனை பேரைக் கொன்று, எத்தனை கோடிகள் செலவழித்து, எத்தனை பித்தலாட்டம் செய்து இந்தப் பதவியினைப் பிடித்திருக்கிறார்கள். கடவுள் என்ற ஒருவர் வந்து கேட்டாலும் இந்தப் பதவி வெறியர்கள் விலக மாட்டார்கள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக