இந்த கன்றாவிகளுக்கு பயந்து தான் நான் டி.வி. பக்கமே போவதில்லை. காலையில் காப்பி குடிக்கும் போதும் ,மதியம் சாப்பிடும் நேரங்களில் மட்டும் சேனலை நியுசுக்கு மாற்றி கொஞ்சம் செய்திகளை பார்த்து/ கேட்டு விட்டு பின்னர் ஒதுங்கிவிடுவது என் இயல்பு. பசை போட்டு ஒட்டி வைத்து போல ரிமோட்டும் கையுமாய் அந்த பெட்டியின் முன்னாள் உட்கார்ந்து கொண்டு பழி கிடப்பது நம்பளால் ஆகாது சாமீ....அதுதான்.....தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நாப்பதாவது ஆண்டு விழா. தெரியாத்தனமா நேற்று சன் டி.வி. யில் பாத்து தொலைச்சேன்...
நண்பர்வேறு ஊரில் இல்லை .மாலை வேளைகளில் ஊர் சுற்ற கூட ஆள் இல்லை. சரிதான்,இதைத்தான் சற்று பார்ப்போமே என்று உட்கார்ந்தால் வழக்கம் போல ஒரே சொதப்பலாகவா இருக்கும்? இடையில் வழக்கமான விளம்பரங்கள், ரிகார்ட் டான்ஸ், ரிகார்ட் டான்ஸ், ரிகார்ட் டான்ஸ், ரிகார்ட் டான்ஸ், ரிகார்ட் டான்ஸ்....பொருகளையடா சாமிகளா!
இடையில் அவ்வப்போது வந்து மைக்கை பிடித்துக்கொண்டு இவர்கள் பண்ணிய அட்டூழியம். கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் சற்று ஆறுதல் தந்தார்கள். பழைய/ முன்னாள் சினிமா இயக்குனர்களை மேடைக்கு அழைத்து அவர்களை கௌரவித்தது சிறப்பு. ஆனாலும் அநியாயமாக அளவுக்கு மீறி இப்படியா சொதப்புவார்கள் மக பாவிகள்?!
ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கு கொள்வதென்றால் நம்மவர்களுக்கு புத்தியே புடுங்கிக்கொண்டு போய்விடும் போல. டிரஸ் சென்ஸ் என்பதே மருந்துக்கும் கிடையாது. வாலியும், விஸ்வநாதனும் வெள்ளை வேட்டி ஜிப்பா என்று பிரகாசித்தார்கள். மற்றும் முன்னாள் இயக்குனர்களும் மிக கண்ணியமாக காட்சியளித்தனர். ஆனால் நண்டு சிண்டுகள் எல்லாம்...பெண்கள் எல்லாம் வழக்கம்போல தலை விரி கோலமாய் ஒரே காட்டேரி கோலம்தான்.
நிகழ்ச்சியில் இறுதியில் தான் மகா மகா கொடுமைகள். பாரதி ராசாவுக்கு ஏன் இந்தவீண் வேலை?தன்னை விட மூத்த மற்றும் தன்னை விட இளைய இயக்குனர்கள் எல்லாம் எந்த வேஷமும் கட்டாமல் இயல்பாய் வந்தார்கள்.பார்பதற்கு இயல்பாய் கண்ணியமாய் இருந்தனர்.ஆனால், இவர் மட்டும் இன்னமும் தான் 1975 இல் இருப்பதாய் நினைத்துக்கொண்டு தலைக்கும் தன் தடித்த மீசைக்கும் "சாயம் " அடித்துக்கொண்டு வந்து மேடை ஏறியது. இதை தானே ஒத்துக்கொண்டாலும் அவர் அடித்த கூத்துக்கள் மகா கேவலம்.
அதுதான் போகட்டும் என்றால் இசைஞானியை மேடைக்கு வர வழைத்து இவர் அடித்த கூத்து சகிக்க வில்லை. இருவரும் சொதப்பினார்கள் என்பதே உண்மை. ஆயிரம் தான் இளைய ராஜா இவரின் இளமைக்கால நண்பர்களாய் இருக்கட்டும், இந்நாளில் இவர்கள் இருவரும் ஒரு பொது மேடையில் இப்படித்தான் பேசிகொள்வதா? இசைஞானியாவது சற்று நிதானித்து கண்ணியம் காத்தார். ஆனால் பாரதி ராசா அடித்த கூத்துக்கள் விரசத்தின் உச்சகட்டம். இசைஞானியை இவர் "அவன்" " இவன்" "போடா" "வாடா" என்று ஒருமையில் அழைத்தது எனக்கு பிரஷரை ஏற்றியது. ஒரு கட்டத்தில் இளையராஜா தங்களின் இளமைகால நிகழ்சிகளை சொல்லும் போது இவரை சதாய்க்க எண்ணி ஏதோ சொல்லப்போக உடனே நம்ம பாரதி ராசா அவரை " ஏய் " என்று அதட்டியது உச்ச கட்டம். அவையில் இதனை எவரும் ரசித்திருக்க மாட்டார்கள் மிஸ்டர் டைரடக்கர் பாரதி ராசா அவர்களே!
இவரின் நடவடிக்கைகள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்து.
என்னதான் தான் பெரிய டைரடக்கர் ஆக இருந்தாலும் ஒரு பொது நிகழ்ச்சியில், அதுவும் அனைவரும் விரும்பி பார்க்கும் சினிமா துறை சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் ஏன் இவ்வளவு கர்வமும், ஆணவமும் , திமிரும் வெளிப்பட இவர்கள் நடந்து கொள்கின்றனர்? நானும் அப்போது பாரதி ராஜா படங்கள் என்று விழுந்து அடித்துக்கொண்டு பார்த்து ரசித்தவன் தான். ஆனாலும் அவரிடம் அனுபவம் இருக்கும் அளவிற்கு பக்குவம், மெச்சூரிட்டி கண்ணியம் இல்லை. அவை அடக்கம் என்னவென்பதை ரஜினியிடமும் மணிரத்தினம் இவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் பாரதி ராசா அவர்களே!
தங்களை விட இசைஞானிக்குதான் அதிக வரவேற்பும், கரவொலியும், விசில் சப்தங்களும் விண்ணை பிளந்தன என்பதை இன்னமும் நீங்க நினைவில் வைக்கவேண்டும் அய்யா.
Please, visit this post too.
http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_27.html
http://thoppithoppi.blogspot.com/2010/12/amway.html
36 comments:
நானும் பார்த்தேன் .. பெரிய கொடுமை ... இளையராஜாவும் சம்மந்தமில்லாமல் பேசினாலும் நிதானம் காத்தார் :)
இதுக்குதான் நான் பார்க்கவே இல்லை அந்த நிகழ்ச்சிய
எனக்கு பாரதிராஜா கொடுமையைவிட அடுத்துவரும் நிகழ்ச்சியில் போட்டுக் காட்டிய கே.பி, ரஜினி நேர்காணலை ஒளிபரப்பாததுதான் செம கடுப்பு. புது வருடத்திற்காக அந்த நேர்காணலை சில நேரங்களில் வைத்திருக்கலாம், அப்ப என்ன ம....க்கு அடுத்து வருவதில போட்டு கட்டினாங்க? லூசு சண் டிவி.......
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதையும் நான் பார்ப்பதில்லை.
தல....
பாரதிராஜா ஒரு டகால்டினு உங்களுக்கு புரிய இம்புட்டு நாளாச்சா?
ராஜாவை விட மாட்டிங்கபோலிருக்கே ராஜா...நேற்று அனுபவி ராஜா அனுபவி இன்று பாரதி ராஜா இளைய ராஜா... என்னவோ போங்க எல்லாம் ராஜா மயமாகிவிட்டது...
வாழ்க வளமுடன்
வேலன்.
இன்று இசை ஞானி என்று அனைவராலும் ஆராதிக்கப்படும் இளையராஜாவை, சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ராசையாவாக பாரதிராஜா என்ற சின்னசாமி அறிவார். இருவருமே எதார்த்தமாக பேசிக்கொண்டார்களே தவிர போலித்தனமாக அல்ல...ஒருவேளை இருவருமே போலியாக பரஸ்பரம் சார் போட்டு அழைத்து கொண்டிருப்பார்களேயானால் அவர்களின் தூய நட்பு வெளியுலகத்திற்கு தெரியாமலே போயிருக்கும். இதில் ஓன்று தவறு இருப்பதாக தெரியவில்லை மாணிக்கம் அண்ணா.
// R.Gopi சொன்னது…
தல....
பாரதிராஜா ஒரு டகால்டினு உங்களுக்கு புரிய இம்புட்டு நாளாச்சா? //
உண்மைதான். நான் பெரும்பாலும் இதுபோன்ற சினிமா நிகழ்சிகளை பார்த்ததே இல்லை. முன்பெல்லாம் பொதிகையில் நடக்கும் நிகழ்சிகள் சற்று நன்றாக இருக்கும். தனியார் சேனல்கள் வந்தபின்னர் இவைகள் மீதிருந்த ஈர்ப்பு குறைத்து போனது. அபூர்வமாக் பார்க்க நேர்ந்தால் சுவற்றில் முட்டிக்கொள்ளவே வருகிறது.
எப்பூடி.. சொன்னது…
எனக்கு பாரதிராஜா கொடுமையைவிட அடுத்துவரும் நிகழ்ச்சியில் போட்டுக் காட்டிய கே.பி, ரஜினி நேர்காணலை ஒளிபரப்பாததுதான் செம கடுப்பு. புது வருடத்திற்காக அந்த நேர்காணலை சில நேரங்களில் வைத்திருக்கலாம், அப்ப என்ன ம....க்கு அடுத்து வருவதில போட்டு கட்டினாங்க? லூசு சண் டிவி.......
நீங்கள் அந்த ரஜினிகாந்த் பேட்டியை படிக்க நம்ம பிளாக் வாங்க...////
http://ragariz.blogspot.com/2010/12/balachandar-intervview-with-rajini.html
எனக்கும் பிடிக்கவில்லை இவரின் செயல்
pls visitசூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குனர் பாலச்சந்தர் எடுத்த பரபரப்பான பேட்டியின் வீடியோ உங்களுக்காக....
// ரஹீம் கஸாலி சொன்னது…
இன்று இசை ஞானி என்று அனைவராலும் ஆராதிக்கப்படும் இளையராஜாவை, சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ராசையாவாக பாரதிராஜா என்ற சின்னசாமி அறிவார். இருவருமே எதார்த்தமாக பேசிக்கொண்டார்களே தவிர போலித்தனமாக அல்ல...ஒருவேளை இருவருமே போலியாக பரஸ்பரம் சார் போட்டு அழைத்து கொண்டிருப்பார்களேயானால் அவர்களின் தூய நட்பு வெளியுலகத்திற்கு தெரியாமலே போயிருக்கும். இதில் ஓன்று தவறு இருப்பதாக தெரியவில்லை மாணிக்கம் அண்ணா //
பாரதிராஜா, இளையராஜா இவர்களின் நட்பு கூட்டணி பற்றி அன்றைய நாளில் நான் இருந்தே அறிவேன். மேடையில் இவர்கள் தங்களின் நட்பு, உரிமை என்று சிலாகித்து பேசட்டும் .ஆனால் இன்ற சூழலில் இளையராஜா என்பவர் அத்தனை தமிழர்களும் நேசிக்கும் ஒரு அற்புத மனிதராக உள்ளார். பிற மொழி பேசும் மக்களும் இவரின் இசைக்காக இவர்மீது மிக்க அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ஒரு பொது மேடையில் பேசும்போது இவைகளையும் மனதில் வைத்தல்லவா பேசவேண்டும். இவர்கள் தங்களின் வீட்டிற்குள்ளே எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். அதைகேட்க நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. அனால் ஒரு பொது மேடையில், கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிகளில் இவர்களை பார்துக்கொண்டிருகிரார்கள் என்ற உணர்வுடன் அல்லவா பேசவேண்டும்.அதுதானே மேடையில் கண்ணியம். இங்கே போலித்தனம் எங்கிருந்து வந்தது? அவர், இவர் என்று நண்பனை பிறர் முன்னிலையில் பேசினால் அது போலித்தனமா என்ன? எனகென்னவோ பாரதிராஜாவின் நடவடிக்கைகள் தான் ரொம்பவும் செயற்கையாக இருந்தமாதிரி உள்ளது. சரி விடுங்கள்.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
// ரஹீம் கஸாலி சொன்னது…
pls visitசூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குனர் பாலச்சந்தர் எடுத்த பரபரப்பான பேட்டியின் வீடியோ உங்களுக்காக///
நன்றி ரஹீம். நானும் அதனை இன்று காலையிலேயே பார்த்துவிட்டேன்.:))))))
என் வலைப்பக்கத்திற்கு இணைப்பிட்டமைக்கு நன்றி!
நான் இந்நிகழ்ச்சியை பார்க்கவில்லை.
பதிவை படித்ததிலிருந்து, பாரதி ராஜா தான் ஒரு சத்யஜித் ரே என்ற நினைப்பில்(Head Weight) இன்னமுமிருக்கிறாரோ?? என நினைக்க தூண்டியது.
சாதனையாளன் என்பவன் தினமும்(எப்போதும்) சாதிக்க வேண்டும்! - Sales Proverb.
நன்றியுடன்,
சாய் கோகுலகிருஷ்ணா!
ரொம்ப மொக்கையாக உள்ளது உங்கள் விமர்சனம். டிவி புடிக்கலென்னா போவவேண்டியதுதானே. முழுசா பாத்துட்டு அப்புறம் என்ன நோட்ட, நொள்ள சொல்லிக்கிட்டு. பாரதிராஜாவே தான் டை அடித்திருப்பதை மேடையில் ஒப்புக்கொண்டுவிட்டார். அப்புறம் என்ன வந்தது உங்களுக்கு சார்.? உங்களுக்கு இளையராஜா புடிக்கும்னா, அதுக்காக இவரை அசிங்கபடுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.ப்ளாக் எழுத விஷயம் இல்லன்ன்னா எதாவது நடிகையின் இடுப்பு வரைந்து பாகங்கள் குறிக்க வைத்திருக்கலாம். போங்க சார். போயி புள்ள குட்டிங்கள படிக்கவேக்கற வேலைய பாருங்க.
பகிர்வுக்கு நன்றி
// ரொம்ப மொக்கையாக உள்ளது உங்கள் விமர்சனம். டிவி புடிக்கலென்னா போவவேண்டியதுதானே//
///ப்ளாக் எழுத விஷயம் இல்லன்ன்னா எதாவது நடிகையின் இடுப்பு வரைந்து பாகங்கள் குறிக்க வைத்திருக்கலாம். போங்க சார். போயி புள்ள குட்டிங்கள படிக்கவேக்கற வேலைய பாருங்க//
....................Hari சொன்னது.
அய்யா Hari , உங்களுக்கு நான் பிளாக் எழுவதில் என்ன பிரச்சனை? என் விமர்சனம் பிடிக்க வில்லை என்றால்
போகலாமே .யார் உங்களை பின்னூட்டம் போடசொன்னது???????? இதேபோலத்தான் நானும் , பொதுவில் நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் விமர்சிக்க யாரும் உரிமை உள்ளது தெரியுமா?
வெறும் கோபத்தால்பயனில்லை.
நடிகைகளின் இடுப்பு அல்லது வேறு எதுவோ வரைத்து பார்த்து பாகங்கள் குறிக்கத்தான் உம்மைபோன்றவர்கள் இருக்க நான் வேறு எதற்கு சாமீ?
என் புள்ளை குட்டிகளை எல்லாம் படிக்கவைதுவிட்டேன். அதனால் தான் உண்மை போன்றவர்களுக்கு ப்ளாக் எழுத வந்தேன். சரியா?? :)))))))
அண்ணே கங்கை அமரனின் வயித்தெரிச்சலை சுட்டிக்காட்ட மறந்து விட்டீர்களே?
பகிர்வுக்கு நன்றி சார்
Dear Kakku,
விமர்சனத்தை தாங்க முடியாத ஒருத்தன் நல்ல கலைஞனாக இருக்க முடியாது. எனக்கும் இளையராஜா பிடிக்கும். அதுக்காக பாரதிராஜாவை மடையனாக சித்தரிப்பது it's low class mentality.இது போன்ற மொக்கை பகிர்வுகளுக்கு பின்னூட்டம் இட்டு என்னை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.
"என் புள்ளை குட்டிகளை எல்லாம் படிக்கவைதுவிட்டேன். அதனால் தான் உண்மை போன்றவர்களுக்கு ப்ளாக் எழுத வந்தேன். சரியா??"
எண்கள மாதிரி ஆளுங்களுக்காக ப்ளாக் எழுதரத்துக்குன்னே ஜென்மம் எடுத்திருக்கீங்க போலருக்கு. நீங்க பிளாக் எழுதரத்துக்கு பதிலா பேசாம துபாய்ல ஒட்டகம் மேய்க்கலாம். :-p
ஆமாம் நானும் அதை பார்த்து தொலைத்தேன்..இருவரும் விட்டுக்குள் பேச வேண்டிய விசயங்கள் ..பப்ளிக்கில் நாரடித்துக்கொண்டனர்..
பாரதிராஜா எந்த மேடையில் ஒழுங்காகப் பேசியிருக்கிறாரு கக்கு-மாணிக்கம்? அவர் சொதப்பல் சிங்கமாச்சே! இன்னுமா நம்பிட்டிருக்கீங்க?? :-))))
// எண்கள மாதிரி ஆளுங்களுக்காக ப்ளாக் எழுதரத்துக்குன்னே ஜென்மம் எடுத்திருக்கீங்க போலருக்கு. நீங்க பிளாக் எழுதரத்துக்கு பதிலா பேசாம துபாய்ல ஒட்டகம் மேய்க்கலாம். //
--------------Dubukku சொன்னது.
மிக்க நன்றி தலைவா. உண்மையை மிக எளிதாக ஒப்புகொண்டதற்கு. நான் ப்ளாக் எழுதி உம்மை போன்ற நபர்கள் படிப்பதை விட துபாயில் ஒட்டகம் மேய்ப்பது உயர்வானதுதான்:))))))
// விமர்சனத்தை தாங்க முடியாத ஒருத்தன் நல்ல கலைஞனாக இருக்க முடியாது. எனக்கும் இளையராஜா பிடிக்கும். அதுக்காக பாரதிராஜாவை மடையனாக சித்தரிப்பது it's low class mentality இது போன்ற மொக்கை பகிர்வுகளுக்கு பின்னூட்டம் இட்டு என்னை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை//
-------------Dubukku சொன்னது.
ஏனைய்யா, மேலே சொனது உண்மையானால் மூன்று முறை பின்னூட்டம் இட்டு தங்களின் மேலான கருத்துக்களை கூறியுள்ளிரே இதற்க்கு என்ன அர்த்தம் டுபுக்கு சார்? இதுதான் உங்க high class mentality யா கண்ணு?
:))))))
// ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ஆமாம் நானும் அதை பார்த்து தொலைத்தேன்..இருவரும் விட்டுக்குள் பேச வேண்டிய விசயங்கள் ..பப்ளிக்கில்
நாரடித்துக்கொண்டனர் //
கருத்துக்கு நன்றி சதீஷ்.
// சேட்டைக்காரன் சொன்னது…
பாரதிராஜா எந்த மேடையில் ஒழுங்காகப் பேசியிருக்கிறாரு கக்கு-மாணிக்கம்? அவர் சொதப்பல் சிங்கமாச்சே! இன்னுமா நம்பிட்டிருக்கீங்க?? :-)))) //
சேட்டக்கார அண்ணாத்தே,
நீங்க நம்ம பக்கமெல்லாம் வரவே மாட்டீக. வந்துட்டீக. வருகைக்கு நன்றி. ஜோடா,கலர் ,காப்பி ,டீ ஏதானும்
வேணுமா? :)))))
அதான் சொன்னேனே. நான் டி. வி. களில் இது போன்ற கூத்துகளை பார்த்து ரொம்ப நாலாயிறு. டி. வி. இருந்தாலும் அதில் படங்களை அபூர்வமாக பார்பதோடு சரி. மீதி நேரமெல்லாம் MP3 பாடல்கள்தான் ஓடும். என் பழக்கம் அப்படி.
அதனால்தான் இவர்களின் கூத்துக்கள் எல்லாம் எனக்கு புதுசாய் இருக்கு.
ஒரு சில வார்த்தைகளை பேசும்போது அவர்கள் கோபத்தில் பேசுகிறார்கள் என்றுகூட எண்ணத் தோன்றியது... நல்லவேளை இத்தகைய பேச்சின் காரணமாக அவர்களுக்குள் சண்டை வராமல் இருந்தது நல்ல விஷயம்தான்... நீங்கள் இயக்குனர் செல்வமணி பேசியதை கேட்டீர்களா... அவர் பேசிய கருத்துக்கள் பாடமாக அமைந்திருந்தன...
// philosophy prabhakaran சொன்னது…
ஒரு சில வார்த்தைகளை பேசும்போது அவர்கள் கோபத்தில் பேசுகிறார்கள் என்றுகூட எண்ணத் தோன்றியது... நல்லவேளை இத்தகைய பேச்சின் காரணமாக அவர்களுக்குள் சண்டை வராமல் இருந்தது நல்ல விஷயம்தான்... நீங்கள் இயக்குனர் செல்வமணி பேசியதை கேட்டீர்களா... அவர் பேசிய கருத்துக்கள் பாடமாக அமைந்திருந்தன..//
உண்மைதான் செல்வமணி பேசி இதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் அன்று அவர் பேச்சில் தெரிந்த ஒரு நிதானம், முதிர்ச்சி என்னை வியப்படைய வைத்தது.
ஒன்று புரிகிறது. சிறந்த டைரக்டர்கள் என்று பெயர் வாங்கியவர்கள் எல்லாருமே அறிவாளிகள் அல்ல என்பது அன்று தெரிந்தது. அறிவாளிகளாலும் சிறந்த இயக்குனர்களாக ஆக இயலாது. இவைகளை ஒருங்கே அமையப்பெறுவது மிக அபூர்வம். அப்படி இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் கூட இல்லை.ஆனால் பொதுவில் ஒரு சிறந்த பண்புள்ளவராக இருபது அவசியம்.
நானும் பாத்தேன்
நானும் ரஸீம் கருத்துக்களை ஒத்துக்குறேன்...அவர்கள் உரையாடலை ஏற்கனவே குமுதம்,விகடனில் போட்டுட்டாங்க....எல்லாரும் ரொம்ப அந்த லைவ்லி பேச்சை ரசிச்சாங்கனு தான் கேள்வி பட்டேன்...நமக்கு அவங்க பிரபலம்...ஆனால் அவங்க ரெண்டுபேரும் ரொம்ப intimated நண்பர்கள்...எந்த போலி தனமும் இல்லாமல் உரிமையோடு அவங்களுக்குள் பேசியது...இதெல்லாம் பார்க்கும்போது ரெண்டு நல்ல நண்பர்களின் சுகமான உரையாடலாய் தான் தோணியது...எந்த செயற்கையும் கலக்காத பேச்சு அந்த நிகழ்ச்சியில் அது தானே கக்கு சார்...
நானும் இளையராஜா சார் ன் தீவிர விசிறி...ஆனால் ராஜா சார் இவளவு கூச்சம் விலக்கி இவளவு ஜாலி ஆ கூட பேசுவாரானு வெகு ஆச்சர்ய பட்டேன்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் அக்ருதுக்கும் நன்றி ஆனந்தி .
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் THOPPITHOPPI.
உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக