பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, டிசம்பர் 26

அனுபவி ராஜா அனுபவி

அனுபவி ராஜா அனுபவி.... அறுபதுகளில் வெளிவந்த கே. பாலச்சந்தரின் முழுநீள காமெடி படம். அப்போது நான் சின்ன பையனாக இருந்தாலும் பின்னாளில், வேலைக்கு சென்றபின் எண்பதுகளில், சென்னை டி. நகர் கிருஷ்ணவேனியில் நண்பர்களுடன் பார்த்து ரசித்தப்படம் . இரண்டாம் ஆட்டம் பார்த்துக்கொண்டே புதுவருடம் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டது நினைவுக்கு வந்தது. . தரமான விரசமில்லாத நகைசுவை காட்சிகள் நிறைந்த படம். நாகேஷ் இரு வேடங்களில் வந்து அசத்துவார். கூடவே முத்துராமன், சுந்தர்ராஜன்,முத்து லட்சுமி, மனோரமா ,ராஜஸ்ரீ,ஜெயபாரதி (முதல் படம்) என்று கலக்குவார்கள். முடிந்தால் பார்த்து ரசியுங்கள். தமிழில் வட்டார வழக்கின் பெருமை பேசும் படம். 
அனுபவி ராஜா அனுபவி 
இந்த இரண்டு வாலிபர்களுக்கும் பட்டம் விட நூல் கிடைக்கவில்லையென்று எங்கிருந்து நூல் எடுகிறார்கள் பாருங்கள். முத்து குளிக்க வாரீகளா !!!!விடா கண்டன் கொடாக்கண்டன் .......வேறுயாரு ? நம்ம கவுண்டரும் செந்திலும்தான் 
13 comments:

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// எம் அப்துல் காதர் சொன்னது…
உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். //

நான் காலையிலேயே தங்கள் தளத்தில் அதனை கண்டுகொண்டேன். பின்னூட்டமும் இட்டுள்ளேன்.
மிக்க நன்றி அப்துல்.

எப்பூடி.. சொன்னது…

நான் அனுபவிராஜா அனுபவி பார்த்ததில்லை, சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன், சென்றவாரம் அவர்கள் திரைப்படம் பார்த்தேன் கே.பிக்கு நிகர் கே.பிதான்

அவர்கள் வாலிபர்களா? இல்லை வாலிபிச்சிகளா? :-)

எப்பூடி.. சொன்னது…

இப்போதுதான் உங்க வீடியோ வேலை செய்கிறது, அவர்கள் வாலிபர்கள்தான் :-)

எப்பூடி.. சொன்னது…

//வேலைக்கு சென்றபின் எண்பதுகளில்//


எண்பதுகளில் வேலைக்கா? ஐயா இதுவரை 'அண்ணே' என்று தங்களை அழைத்ததற்கு மன்னித்து விடுங்கள், இனிமேல் 'ஐயா' என்று வயதுக்கும் மரியாதை தரும் விதமாக அழைக்கிறேன் :-)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// //வேலைக்கு சென்றபின் எண்பதுகளில்//


எண்பதுகளில் வேலைக்கா? ஐயா இதுவரை 'அண்ணே' என்று தங்களை அழைத்ததற்கு மன்னித்து விடுங்கள், இனிமேல் 'ஐயா' என்று வயதுக்கும் மரியாதை தரும் விதமாக அழைக்கிறேன் :) //

என்னை பெயர் சொல்லி அழைப்பதையே நான் விரும்புவேன். வயதாவது உடலுக்குத்தானே அன்றி மனதுக்கு அல்லவே. அய்யா என்று சொல்லி என்னை கிழவனாக மாற்றாதீர்கள்.

எல் கே சொன்னது…

பார்த்த ஞாபகம் இருக்கு. பகிர்வுக்கு நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// எல் கே சொன்னது…
பார்த்த ஞாபகம் இருக்கு. //

மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கலாம் எ. கே.
வருகைக்கு நன்றி

எப்பூடி.. சொன்னது…

//வயதாவது உடலுக்குத்தானே அன்றி மனதுக்கு அல்லவே. அய்யா என்று சொல்லி என்னை கிழவனாக மாற்றாதீர்கள். //

சரிண்ணா :-)

RVS சொன்னது…

பாலச்சந்தர் படங்களின் ரசிக வெறியன் நான். நல்ல பகிர்வு மாணிக்கம். நன்றி. ;-)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// RVS சொன்னது…
பாலச்சந்தர் படங்களின் ரசிக வெறியன் நான். நல்ல பகிர்வு மாணிக்கம். நன்றி. ;-) //

இங்கு மட்டும் என்னவாம்?
நன்றி R V S

வேலன். சொன்னது…

நீங்கள் சாதாரணமாக படத்தை பற்றி போட்டாலும் அதிலும் அரசியல் உள்குத்து இருக்கின்றதே. அனுபவி ராஜா அனுபவி -யாரையோ சொலவதுபோல் உள்ளதே.யாரும் இதை கவனிக்கவில்லையா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

/// வேலன். சொன்னது…
நீங்கள் சாதாரணமாக படத்தை பற்றி போட்டாலும் அதிலும் அரசியல் உள்குத்து இருக்கின்றதே. அனுபவி ராஜா அனுபவி -யாரையோ சொலவதுபோல் உள்ளதே.யாரும் இதை கவனிக்கவில்லையா?///


மாப்பள ....நீர் ஒன்னாம் நம்பர் கிரிமினல் மைண்டட் அய்யா:))) எனக்கு இது தோணவே இல்லை.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக