திரை கிழித்து தெரிந்த முகம்.
அது வேறு யார்? நம்ம அண்ணாத்தே ஜூலியன் அசாஞ்சே தான். ஆயிரம்தான் நாம் அமெரிக்க அரசாங்கத்தை மண்ணை வாரி தூற்றினாலும் அந்த நாட்டு மக்கள் என்னவோ நேர்மயானவர்கள்தான் போலும். இல்லையென்றால் தங்கள் நாட்டு அரசின் ஆணவ, அதிகார, திமிர்த்தனமான நாட்டாமைகளை , திருட்டுத்தனங்களை, திரை மறைவான தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் சந்தி சிரிக்க அடித்த விகிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே மீது இத்தனை மதிப்பும் கவ்ரவமும் தருவார்களா என்ன ?
அந் நாட்டு டைம்ஸ் (The New York Times) பத்திரிகையின் வாசகர்கள் ஜூலியன் அசான்ஜெயை இந்த வருடத்தின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்துள்ளனர். லண்டனில் அண்ணாத்தே ஜூலியன் பெயிலில் வெளி வந்துள்ளார்.
ஜூலியன், டைம்ஸ் வாசகர்களின் 382,020 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் வந்து இந்த வருடத்து சிறந்த மனிதர் என்ற மதிப்பை பெற்றுள்ளார். பெரீய்ய அண்ணாத்தே அதிபர் பாராக் ஒபாமா 27,478 வோட்டுகளே பெற்று ஆறாவது இடத்தில் இருந்தார்.
இந்த கூத்துக்களுக்கு இடையில் இன்னொரு கொசுறாக ஒரு செய்தியும் உண்டு. விகிலீக்ஸ் நிறுவனத்துக்கு தன்னால் முடிந்த அளவு அமெரிக்க அரசின் மொள்ளமாரி தனங்களை போட்டு கொடுத்த அமெரிக்க கப்பல் படை யை சேர்ந்த பிராட்லி மானிங் (US Marine Bradley Manning) என்ற புண்ணியவானை கைது பண்ணி சிறையில் வைத்து விட்டார்கள். இவர் சுமார் 25000 ரகசிய கேபுல்களை விகிலீக்ஸ் வெளியிட கொடுத்துள்ளாராம் பாவம்.
மேலே உள்ள படம் லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் நீதி மன்றத்தின் முன்னால் ஜூலியனின் ஆதரவாளர்களின் போராட்டம்.
ஜூலியன் கைதானதர்க்கும் அவர் தண்டிக்கபடுவதர்க்கும் அமெரிக்கர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் மத்தியில் பெரும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.தங்கள் அரசாங்கத்தின் இருண்ட ,பல ரகசியங்களை வெளியிட்டதில் அவர்கள் அரசின்மீதேதான் கோபத்தில் உள்ளனர். தொட்டதற்கெல்லாம் மனித உரிமைகள், சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்று சவடால் அடித்தே உலகின் பல இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய தங்கள் அரசின் அராஜகப்போக்கை அவர்கள் நக்கல் அடித்தே இவ்வாறு ஜூலியனை இந்த வருட சிறந்த மனிதராக தேர்ந்தேடுத்துள்ளனராம்.
ஜூலியன் மீது அழுத்தமில்லாத குற்றங்களை சுமத்தி அவரை கைது செய்தது தவறு என்றே வாதிடுகிறார்கள். இந்த கலாட்டாக்களில் மிகவும் நொந்து நூடில்ஸ் ஆனது அமெரிக்காவின் உளவு அமைப்பான C I A மற்றும் ராணுவ தலைமையான பெண்டகனுமே ! இவ்வுலகில் யாராலும் தங்கள் ரகசிய நடவடிக்கைகளை அறிய முடியாது என்ற ஆணவத்தில் ஆடிய ஆட்டம் எல்லாம் இப்படி சிரிப்பாய் சிரிக்கும் என்று அவர்களால் ஜீரணிக்க இயலவில்லையாம்.
இந்த விளையாட்டுகளில் வாசகர்கள் அடித்த லூட்டியும் சற்றும் சளைத்தது அல்ல. ஜூலியன் கைது ஆன பாலியல் வழக்கு பற்றிய செய்தியில் ஒரு வாசகர் இப்படித்தான் கமென்ட் அடித்துள்ளார்.
// "Sue the condom manufacturer, it is responsible for the leak, for which WikiLeaks is in trouble," writes Sreedharan from Nigeria.//
Courtesy Times of India.
15 comments:
புதிய தகல்வல்களுக்கு நன்றி, ஒபமா அண்ணாத்தைக்கு 6 ஆவது இடமின்னா நம்ம ஒசாமா பின்லேடனுக்கு எத்தனையாவது இடமண்ணே :-)
அதெல்லாம் சரி நம்ம ஜூலியன் அசாஞ்சே எதுக்கு சிவப்பு பாக் ரவுண்டில மூக்கில விரல வச்சுகிட்டு நிக்கிறாரு?
// அதெல்லாம் சரி நம்ம ஜூலியன் அசாஞ்சே எதுக்கு சிவப்பு பாக் ரவுண்டில மூக்கில விரல வச்சுகிட்டு நிக்கிறாரு //
-----------------------எப்பூடி சொன்னது.
ஒரு வேலை சிறையிலிருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.
வடைய தின்னுங்க சாமிகளா. ஓட்டைய எண்ணாதீங்க கண்ணுகளா ! :)))
ஓகே ஓகே :-))
சாந்தி சிரிக்க அடித்த ???? What is this :-)
Thanks Balaji - திருத்தி விட்டேன் ராஜா.
நல்ல தகவல் .
பகிர்வுக்கு நன்றி .
பகிர்வுக்கு நன்றி
அதுக்கு தான் சொல்றது
தொப்பி போடுங்க (condom) , தொப்பி போடுங்க
என்னா அறிவாளியா இருந்து என்ன பயன் கடைசில எதுல புடிச்சானுங்க பாருங்க.
அமெரிக்கா - ஆடிய ஆட்டம் என்ன .....
//ஜூலியன், டைம்ஸ் வாசகர்களின் 382,020 வாக்குகளை பெற்று முதல் இடத்தில் வந்து இந்த வருடத்து சிறந்த மனிதர் என்ற மதிப்பை பெற்றுள்ளார்//
Super!!! :-)
தலைப்ப பார்த்து ஏதோ நம்ம ஊரு குப்பையை கிளரீங்கன்னு பார்த்தேன். உண்மையில் பாராட்ட பட வேண்டியவர் தான் ஜூலியன்
நல்ல பதிவு.. ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு எழுத்துப் பிழை, சந்திப் பிழை , சாரியை பிழை வந்திருக்கும். குற்றம் சொல்லியே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..!
நீங்கள் சொல்வது போல் அமெரிக்கர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை நிருபித்துக் கொண்டெயிருக்கிறாகள்,இதையே நம்ம நாட்டில் நினைத்து பாருங்கள், லட்ச கண்ககில் உழல் செய்தவனை தலித் என்று பாகுபாடு படுத்தி (இத்தனைக்கும் எந்த தலித்திற்கும் ஒரு மண்ணையும் அந்த நாய் செய்யவில்லை )அவனை ஆதரிக்கும் மடையர் கூட்டம் இங்கே இருக்கிறது,,
எங்கேபோய் முட்டிகொள்வது ?
ஜூலியன் ஒரு உலக ஹீரொ அவரின் சேவை தொடர வேண்டுவோம்,,அவ்ரின் பிரட்ச்சனை தீர்ந்த பாடில்லை ,பெயில் மறுக்கப்பட்டிருக்கிறது
செய்தி இங்கே
http://is.gd/iMg41
எனது ஓட்டு இந்த அஞ்சாநெஞ்சனுக்கே.
அஞ்சா நெஞ்சன் னு பார்த்துட்டு எங்க ஊரு விஷயமொனு வந்தேன்...ஜூலியன் நும் கலக்கல் பார்ட்டி தான்...அவங்க அம்மா நேத்து சொன்னதை கவனிச்சிங்களா கக்கு?....ஆஸ்ட்ரேலியா பிரதமர் அமெரிக்காவின் ஒபேரா (fame of opera show) க்கு கொடுக்கும் முக்கியம் அசாஞ்சே கு கொடுக்கலன்னு....நம்ம ஊரா இருந்தால் என்னைக்கோ என்கவுன்ட்டர் இல் போட்டு தள்ளிருப்பாங்க இவரை...:)) i think he is safe there..:)))
ஜூலியன் பற்றி சுவாரஸ்யமான பதிவு !
ஜூலியன் ஒரு உலக ஹீரொ அவரின் சேவை தொடரவேண்டுவோம் எனது ஓட்டு இந்த அஞ்சாநெஞ்சனுக்கே.
கருத்துரையிடுக