பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், டிசம்பர் 22

ஒலியும் ஒளியும்-3





அவர்கள் திரையுலக ஜாம்பவான்கள். 
 தங்களின் தொழிலின் மீது எத்தனை 
கவனமும், அக்கறையும், நம்பிக்கையும் கொண்டிருந்தனர் என்று இந்த காட்சியை பார்த்தால் புரியம். சகலமும் ரெடிமேடாய் போய்விட்ட இன்றைய காலத்தில் இவர்கள் அளவிற்கு அர்பணிப்பும்,உழைப்பையும் சிரமத்தையும் இப்போது உள்ளவர்களால் சிந்திக்கவே இயலாது. நாட்டிய பேரொளி பத்மினி மின்னல் ஒளியாக பாய்ந்து ஆட, அவருக்கு சற்றும் சளைக்காமல் எம்.ஜி. ஆரும் ஈடு கொடுத்து நடனம் ஆடும் இந்த காட்சி மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்றது.  அதை இப்போது பார்த்தாலும் வியப்பைத்தான் தருகிறது.





இந்த பூனையும் பாலை குடிக்குமா என்ற தோற்றத்தில் வரும் எம்.ஜி.ஆர். பின்னர் டுயட் காட்சிகளில் பின்னி எடுத்துவிடுவார் என்பதற்கு இந்த பாடலும் ஒரு எடுத்துக்காட்டு. இவர்களின் உடை அலங்காரம், கை கெடிகாரம், டீ ஷர்ட் மற்றும் புடவை அணியும் அழகு, காதணிகள் என்று கவனித்தால் ரசமாய் தான் இருக்கும்.கத்தி கண்ணழகி தேவிகாவுடன் எம்.ஜி.ஆர். -ஆனந்த ஜோதி.






சச்சு கதாநாயகியாக நடித்த வீரத்திருமகன். இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் எவ்வாறு இருக்கலாம் என்று திரைப்பட துறையில் உள்ளவர்கள் மட்டுமே விளக்க முடியும். நடுவில் உள்ள பெரிய தாமரை, அதன்மேல் இளவரசி, சுற்றிலும் அகன்ற தாமரை இலைகள் , அதன் மேல் அவளின் தோழிகள்.ஒரு பெரிய நீர் நிலையில், குளமோ, ஏரியோ. இந்த அமைப்பு மெதுவாக சுற்றி வருகிறது.காதல் வயப்பட்ட இளவரசியை தோழிகள் கிண்டல் பண்ண, பாடல் தொடர்கிறது.
சுசீலா, ஈஸ்வரி இருவரும் இணைந்து நிறைய பாடியுள்ளார்கள். இந்த பாடலும் பார்க்கவும்,கேட்கவும் இனிமையானது.என்ன காரணமோ பாடல் முழுமையாக இல்லை. திடீரென்று நின்றுவிடும்.






கீழ் கண்ட பக்கம் சென்று அவசியம் படிக்கவும்.



6 comments:

RVS சொன்னது…

எம்.ஜி.ஆர் பரதநாட்டியம் சூப்பர். ;-)

Admin சொன்னது…

நல்லாருக்கு...

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருதுக்கம் நன்றி RVS

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருதுக்கம் நன்றி அன்பர் சந்துரு.

மாணவன் சொன்னது…

அருமை சார், இதுபோன்ற இன்னும் பழைய பாடல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

பகிர்வுக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மாணவன் அவர்களே!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக