பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், டிசம்பர் 23

பாரம்பரியமிக்க காங்கிரஸ் !

கல்லறை வரை இவர்கள்  பாவம் தொடரும்.


முப்பத்தி ஒரு வயது ரோஹித் சேகர் தொடுத்த புகாரின் பேரில் டெல்லி உயர் நீதி மன்றம் தடாலடியாக ஒரு நிபந்தனையை முன்னால் ஆந்திர பிரதேச கவர்னரும் , அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான தலைவர்களுள் ஒருவரான என்.டி. திவாரி ( அவர்தான் செக்ஸ் புகாரில் பதவி இழந்த மன்மத கிழவர் ) அவர் D N A சோதனைக்கு தன்னை ஆட்படுதிக்கொள்ளவேண்டும் என்று கேட்டுள்ளது.

ரோஹித் சேகர் கொடுத்த புகாரில் N D திவாரிதான் தன் அப்பா என்றும் ஆனால் இதை அவர் மறுக்கிறார் என்று புகார் அளித்துள்ளார்.

85 வயதான இந்த முன்னால் ஆந்திர கவர்னர் தன்னை D N A சோதனைக்கு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுவினை தள்ளுபடி செய்த நீதிபதி,
திவாரி இந்த சோதனைக்கு உட்படுவது இன்றியமையாதது.ஒரு குழந்தைக்கு தன் உயிரியல் தந்தை யார் என்று தெரிந்து கொள்ள முழு உரிமை உள்ளது."...It is not in the interest of the child to be declared a bastard," the court said.

ரோஹித் சேகருக்கு இப்போது முப்பத்தி  ஒரு வயது என்றால், நம் மன்மத "குஞ்சு " திவாரி அவரின் ஐம்பத்தி நாலாம் வயதுகளிலேயே ஆட்டம் போட்டவர்தான் போலும். இந்த மனிதரைத்தான் இந்திராவும் பின்னர் ராசீவ் காண்டியும் , சோனியாவும் ரொம்பவும் கொண்டாடினார்கள். 

நாட்டை மட்டுமா இந்த காங்கிரஸ் பெருச்சாளிகள் சுரண்டினார்கள்?  ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்தவருடம் சோனியா, திவாரிக்கு பத்ம பூஷன் விருது கொடுத்தாலும் இங்கே செல்லுபடியாகும். வழக்கம்  போல மற்ற எல்லா ஊழல் புகார்களுடன் இதுவும் J P C / C B I விசாரணை என்று முடங்கி விடும்.

பல்லு உள்ளவன் பகோடா தின்னட்டும். ஆனால் தாங்கள் தான் இந்த தேசத்தை ரட்சிக்க வந்த தேவ தூதர்கள் என்று தங்கள் தாங்களே பில்ட் அப்ப செய்து கொண்டு இன்னமும் எத்தனை  நாளைக்குத்தான் இந்த கும்பல் இந்த நாட்டை குட்டிச்வராக்கும்?  பொதுவாழ்வில் உள்ளவர்கள் குறைந்த பட்சமாவது தங்களின் பொது ஜன இமேஜ் ஐ நல்ல கண்ணியமான 
 முறையில் வைத்துகொள்ள வேண்டாமா? இவர்கள் தான் மகாத்துமா காந்தியின் சீடர்கள் என்று ப்ளக்ஸ் போர்டில் காந்தி படத்துக்கு கீழே இந்த சாக்கடை மனிதர்களையும் சற்றும் வெட்கம் இன்றி தங்களின் அழகு படத்தை போட்டுகொள்வார்கள். நடக்க முடியாத பழைய காங்கிரஸ் கார்களுக்கு எல்லாம் அரசின் பதவியில் இருந்துகொண்டே உயிர்விட கொல்லை ஆசை. அத்தனை கிழடுகளும் இந்தியாமுழுக்க கவர்னர்கள். 

காங்கிரஸ் காரர்கள் கல்லறை சென்றாலும் அவர்கள் செய்த, செய்யும் அநியாயங்கள் தொடரும் போலும். இப்பொது ரோஹித் சேகர் தொடுத்த புகாரில் இந்த காமந்தகனின் இன்னொரு " மூஞ்சியும் " நாட்டுக்கு தெரியலாம்.
வந்தே மாதரம்! காங்கிரஸ் ஜிந்தாபாத்து!! 


N D திவாரியின் கணக்கற்ற காம லீலைகள் பற்றி கிண்டல் அடித்து வெளிவந்துள்ள வீடியோ. 
17 comments:

அருண் பிரசாத் சொன்னது…

என்னத்த சொல்ல

எல் கே சொன்னது…

ஒரிஜினல் காங்கிரஸ் அல்ல இது. இப்ப இருப்பது இந்திரா காங்கிரஸ் தான்

எப்பூடி.. சொன்னது…

அண்ணே கேக்கிறன் எண்டு கோவிச்சுகாதீங்க, எல்லோருமே காங்கிரசை திட்டுறாங்க !!!! அப்ப யாரு காங்கிரசுக்கு சரியான மாற்றீடு என்று தெரிஞ்சு கொள்ளலாமா? சத்தியமா இது சந்தேகம் மட்டும்தான், அப்புறம் காங்கிரசுக்கு செம்பு தூக்கிறதா நினைக்க வேண்டாம்.

எப்பூடி.. சொன்னது…

அதேபோல தி.மு.க வையும் திட்டுறாங்க!!!! அவங்களுக்கு யாரிண்ணே மாற்றீடு ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

ethirvinai சொன்னது…

தொடர்ந்து காங்கிரசுக்கு எதிராக எழுதி வருகிறீர்கள்.அவை யாவும் உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும்.ஆனால் இதை தாண்டிய காலித்தனங்களை செய்த பிஜேபியை ஒருமுறை கூட
விமர்சிக்கவில்லையே? எது உங்களை தடுக்கிறது?இதற்க்கு நீங்கள் வெளிப்படையாக பிஜேபிக்கு கூஜா தூக்கலாமே?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அருண் பிரசாத்
எல் கே
எப்பூடி.
நண்டு @நொரண்டு -ஈரோடு
வந்து பின்னூட்ட மிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ethirvinai சொன்னது…
தொடர்ந்து காங்கிரசுக்கு எதிராக எழுதி வருகிறீர்கள்.அவை யாவும் உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும்.ஆனால் இதை தாண்டிய காலித்தனங்களை செய்த பிஜேபியை ஒருமுறை கூட
விமர்சிக்கவில்லையே? எது உங்களை தடுக்கிறது?இதற்க்கு நீங்கள் வெளிப்படையாக பிஜேபிக்கு கூஜா தூக்கலாமே? //

உங்களைபோன்ற ஒருவரின் எதிர்வினையத்தான் இங்கு எதிர்பார்த்தேன்.
சற்று பொறுங்கள் என் விளக்கத்தை ஒரு பதிவாக இடுகிறேன்.
பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.

ethirvinai சொன்னது…

ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி!

vasan சொன்னது…

நேரு குடும்ப‌த்தின் க‌ட்சிகார‌ர்க‌ளிட‌மிருந்து வேறு என்ன‌ மாதிரியாவ‌ன‌ர்க‌ளை எதிர்பார்க்க‌ முடியும்
அன்பு சுக்கு மாணிக்க‌ம்

ANKITHA VARMA சொன்னது…

பழையன கழிதலும் புதியன் புகுதலும் உலகு. ஆனால் பழைய ஊழல் மற(றை)ந்து புதிய ஊழல் வருவதே இந்தியா. மாற்றீடு என்று ஒன்று நமக்கு தரப்பட்டதே இல்லை. இது தான் இந்திய மக்களாட்சி முறை

வேலன். சொன்னது…

ம்...என்னத்தை சொல்வது.பல்லு இருக்கின்றவன் பகோடா சாப்பிடுகின்றான்..இல்லாதவர்கள் போண்டா சாப்பிடலாமே...?
வாழ்க வளமுடன்.
வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

vasan
ANKITHA வர்மா
வேலன். மாப்ஸ்
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஆனந்தி.. சொன்னது…

இது காங்கிரசில் மட்டும் னு இல்லை...பாலியல் தொடர்புகள் நம்ம தமிழக கட்சியில் இருக்காதுன்னு நினைக்கிறிங்களா..அரிதாரம் பூசும் நடிகைகளை கவர்ச்சி தொண்டனாய் அங்கீகரிக்கும் எந்த கட்சியும் மட்டம் தான்...அவர்கள் தலைமையும் அப்பழுக்கு இல்லாமல் இருப்பாங்கனு தோணலை...:)) என்ன இந்த பெருசு கொஞ்சம் மாட்டிக்கிட்டாரு..நம்ம ஊரு கட்சி தலைவர்கள் மாதிரி சூட்சுமம் பத்தலை..:))) ஆனால் இதை எல்லாம் நாம் பார்த்துட்டு இருப்பதை தவிர வேற எந்த வழியும் இல்லை...வேணும்னால் நாமும் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்...:))

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// இது காங்கிரசில் மட்டும் னு இல்லை...பாலியல் தொடர்புகள் நம்ம தமிழக கட்சியில் இருக்காதுன்னு நினைக்கிறிங்களா..அரிதாரம் பூசும் நடிகைகளை கவர்ச்சி தொண்டனாய் அங்கீகரிக்கும் எந்த கட்சியும் மட்டம் தான்..//

------------------ஆனந்தி சொன்னது.


ஆனந்தி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இது காங்கிரசில் மட்டுமே உள்ளது என்று நான் சொல்லவரவில்லை.
அணைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ளவர்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆண் ,பெண் பாகுபாடு இல்லாத திரையுலக வாழ்கைபோன்ற ஒரு நிலையை அங்கு காணலாம். ஆண் பெண் அணைவரும் பால் இன உணர்வை பகிர்ந்து கொள்ளும், தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிகொள்ளும் ஒரு இடமாகவும் ,காரணமாகவும் அரசியல் கட்சிகள் செயல் படுவது சாதாரண நடைமுறை. இந்த விஷயத்தில் "கொடுக்கல் வாங்கல்" மிகச்சாதாரணம் .எந்த ஒரு கட்சியும் இதற்கு விதி விதிவிலக்கல்ல. இவைகளை நான் இருபது முப்பது வருடங்களுக்கு முன்னரே கண்கூடாக அறியவந்தபோது திகைத்துத்தான் போனேன். இன்றய நாளில் இது மிக மிக அல்ப விஷயம்.

நான் சொல்லவந்தது ஒருமாநில கவர்னர்,வயதில் மூத்தவர், பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் முக்கியமான தலைவர். முழு இந்தியா மக்களாலும் அறியப்பட்டவர். அவர் கூட இது போன்ற "மசாஜ்" விஷயங்களில் ஈடுபட்டு அவைகள் எல்லா ஊடகங்களிலும் சிரிப்பாய் சிரிப்பதோடு இல்லாமல், முப்பதோரு வயது ஆண் மகன் ஒருவர் இவரைத்தான் "தன்னுடைய உயிரியல் தந்தை " என்று நிரூபிக்க கோர்ட் போவதும் .கோர்ட் இந்த கிழவரை மருத்துவ ரீதியில் நிரூபிக்க சொல்வதும் ......

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//ஒரிஜினல் காங்கிரஸ் அல்ல இது. இப்ப இருப்பது இந்திரா காங்கிரஸ் தான்//

இதுதான் உண்மை ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஒரிஜினல் காங்கிரஸ் காந்தியோடு முடிந்து விட்டது. இப்போது இருப்பது ஒரு சாதாரண அரசியல் கட்சி!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக