பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், டிசம்பர் 7

வீடியோ 2 எம் .பி . 3 மாற்றம்


You Tube போன்ற வீடியோ வசதி உள்ள தளங்களில் நாம் வீடியோக்களை காணும் போது அவைகளில் உள்ள அந்த இசையை அல்லது பாட்டை நாம் விரும்பலாம் அவைகள் MP3 கோப்புகளாக கிடைத்தால் மகிழ்வோம் அல்லவா.உதாரணமாக You Tube இல் நமக்கு பிடித்த பாடல் காட்சிகளை கண்டுகளிக்கிறோம் அதே வீடியோ இசை வடிவில், MP3 கோப்புகளாக கிடைத்தால் ?!

இதற்காக தனியாக எந்த ஒரு மென் பொருளும் நமது கணனியில் வைத்துக்கொள்ள வேண்டாம். ஆன் லைனில் அவைகளை MP3 கோப்புகளாக மாற்றி பின்னர் நம் கணனியில் அவைகளை சேமித்துக்கொள்ளலாம்.
முதலில் நீகள் விரும்பும் பாடல்கள், இசை உள்ள You Tube பக்கத்தை திறந்து கொள்ளுங்கள், அட்ரஸ் பாரில் உள்ள URL ஐ காபி செய்து கொண்டு பின்னர் இந்த  இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்.அங்கு கீழ் கண்டவாறு விண்டோவ்ஸ் திறந்திருக்கும்.

Enter the URL of the video you want to convert to MP3 

என்ற தலைப்பின் கீழே உள்ள கர்சரை வைத்து காபி செய்த URL ஐ இங்கு பேஸ்ட் செய்திடுங்கள்.

சாதாரண மற்றும் உயர்ந்த தரம் என்று இரண்டு ஆப்ஷன்ஸ் உண்டு .( கவனிக்க , உயர்தரம் என்றால் நேரமும் அதிகமாகிறது ஆனால் கோப்பின் அளவு மாறுவதில்லை. உண்மையில் இதில் ஒன்றும் மாற்றங்களை நான் உணரவில்லை . இரன்றும் ஒரேமாதிரிதான் உள்ளன. )  வேண்டியதை தேர்வு செய்து கன்வர்ட் என்ற பட்டனை தட்டுங்கள். அவ்வளவுதான்,




சில நிமிடங்களில் நீங்கள் விரும்பிய அந்த வீடியோ ஒலி வடிவ MP3 ஆக மாறி விடும் . பின்னர் அதனை வழக்கம் போல தரவிறக்கம் செய்து சேமித்து கேட்டு மகிழுங்கள்.


10 comments:

எல் கே சொன்னது…

மிகத் தேவையான ஒன்று.. நன்றி

வேலன். சொன்னது…

அட ...மாம்ஸ்ம் தொழில்நுட்ப பதிவிற்கு வந்துட்டார்..(பாவம்...அரசியல்வாதிகள் பிழைத்துபோகட்டும் என விட்டுவிட்டார்போல இருக்கு)
அருமையான பதிவு...
வாழ்க வளமுடன்.
வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி நண்பர் L.K .
நன்றி நண்பர் பார்வையாளன்

பொன் மாலை பொழுது சொன்னது…

// அட ...மாம்ஸ்ம் தொழில்நுட்ப பதிவிற்கு வந்துட்டார்....//

------------வேலன் சொன்னது.

மாப்ள நாங்களும் போடுவோம்மில்ல!!

FARHAN சொன்னது…

சூப்பர்

Unknown சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவுங்க..

ப.கந்தசாமி சொன்னது…

youtube downloader என்று ஒரு மென்பொருள் நான் உபயோகிக்கிறேன். அது முதலில் நமக்கு வேண்டிய பாடலை MP4 வடிவில் தரவிறக்கம் செய்து நமது கம்ப்யூட்டரில் எங்கு வேண்டுமோ அங்கு சேமிக்கிறது. பிறகு எப்போது வேண்டுமானாலும் அந்தப் பாடலை MP3 format க்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றத்திற்கு இன்டர்நெட் இணைப்பு வேண்டியதில்லை.

Unknown சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பயனுள்ள பதிவு

NaSo சொன்னது…

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சார்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக