பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, நவம்பர் 6

ஆணைக்கு அல்வா வாங்கியவர் !


சந்திரலேகா படத்தில் சர்கஸ் மேனேஜர் ஆணைக்கு அல்வா வாங்கிய கணக்கை சொல்ல , கணக்கெழுதும் டி. ஏ . மதுரம் கிண்டலடிப்பாரே அவர்தான் இவர். கொத்த மங்கலம் சுப்பு. 


இப்போது உள்ள இளைய தலை முறைகளுக்கு இவரைதெரிய நியாயமில்லை. இவர்போன்றவர்களின் சாதனைகளை பேசுபவர்கள் , இங்கு இணையத்தில் மற்ற ஊடகங்களிலும் மிகக்குறைவே. இன்றய அணைத்து ஊடகங்களில் "ஆஹா" "ஓஹோ "என  கண்ணும்,காதும், ஏன் ? மனமும் அயர்ந்து போகும் அளவிற்கு நேற்று மழையில் முளைத்த காளான்களுக்கு  எல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்து செய்யும் செயற்கையான விளம்பரங்களில் இது போன்ற உண்மையான ,நேர்மையான உழைப்பாளிகளின் சேவைகள் புறந்தள்ள பட்டு நம்மவர்களுக்கு தெரியாமல் போய்க்கொண்டுள்ள கேவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 


சுப்பு என்ற சுப்பிரமணியம்.மகாலிங்க அய்யர் கங்கம்மால் தம்பதியினருக்கு பிறந்தவர்.நவம்பர் மாதம் பத்தாம் நாள்.  பட்டுக்கோட்டை அருகில்  உள்ள சிற்றூரில் பிறந்தவர்.சிறுவயதில் தாயை இழந்ததால் தம் அத்தையிடம் வளர்ந்தார். எட்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். இளமையில் வறுமை இவரை அந்த வயதில் வேலை தேட வைத்தது. ஒரு மர வியாபாரம் செய்யும் கடையில் கணக்கராக சேர்ந்தார். பின்னர் தன் அத்தை மகளை திருமணம்  முடித்துக்கொண்டு கொத்தமங்கலம் ஊரில் வாழ்கை நடத்தினார். ஆனாலும் இவரது கவனம் எல்லாம் வேறு பக்கம். தமிழ், நாடகம், நடிப்பு, பாட்டு, கதை, கவிதைகள் என பறந்து விரிந்து நின்றது. 1930  ஆண்டில், அப்போது தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் மெட்ராசு (சென்னைதான்)  வந்தார் ,ஜெமினி ஸ்டுடியோவில் சேர்ந்தார். அங்கு வேலைக்கு  சேர்வது ஒன்றும் அந்த நாளில் சாதாரண செயல் இல்லை. திறமை,திறமை,திறமை மட்டும்தான் கணக்கில் கொள்வார்களாம். 


அதிபர் எஸ் .எஸ் .வாசனும் பல முகம் கொண்ட இவரின் திறமைகளை தெரிந்து கொண்டு,நல்ல சந்தர்பங்களை தர, இவரும் ஜொலிக்கத்தொடங்கினார். அடிப்படையில் ஒரு கவிஞராக இருந்து, கதை,திரைகதை,இயக்கம், பாட்டு,நடிப்பு ,நகைசுவை காட்சிகள் என அனைத்திலும் வியாபித்து சிறப்புடன் திகழ்ந்தார்.ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த அணைத்து திரைப்படங்களிலும் இவரது பங்களிப்பு இருந்தது இதனால்தான். நிறைய படங்களில் நகைசுவை காட்சிகளில் நடித்தவர். அந்நாளைய ஜாம்பவான்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். மேரிலன்ட் கே. சுப்பிரமணியம் ( நடன மணி. பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை) தயாரித்த ஸ்ரீ கதை, பக்தசீதா, சூர்ய புத்ரி, அநாதை பெண்,கட்ச தேவ யானி போன்ற படங்களில் வேலை செய்துள்ளார். திரு நீல கண்டர்,மதன காமராஜன்,கண்ணம்மா என் காதலி, நந்தனார் ,சக்ரதாரி,மிஸ் .மாலினி, தாசி அபரஞ்சி,சந்த்ரலேகா,அபூர்வ சகோதரர்கள்,சம்சாரம், மூன்று பிள்ளைகள், அவ்வையார்,வஞ்சிக்கோட்டை வாலிபன்,இரும்புத்திரை,வள்ளியின் செல்வன்,மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற ஜெமினியின் தயாரிப்புகளிலும் பணியாற்றியவர்.பாவ மன்னிப்பு, படித்த மனைவி போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார்.தமிழ் அன்றி பிற இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் இவரின் பங்களிப்பு உண்டு. ஜெமினி ஸ்டுடியோவில் எஸ். எஸ். வாசனுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் வைத்து போற்றப்பட்டவர்.

ஆர். கே . நாராயணன் எழுதிய நாவலான மிஸ்டர் சம்பத் இந்தியில் ஜெமினி தயாரிப்பாக வந்தது. அதில் மிஸ்டர் சம்பத் ஆக நடித்துள்ளார். அதே படம் தான் தமிழில் மிஸ்.மாலினி யாக தயாரிக்கப்பட்டது.அதில் சம்பத்தாக நடித்துள்ளார்.வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்தியில் ராஜ திலக் என சுனில் தத் ,வைஜயந்தி மாலா, பத்மினி போன்ற இந்தி திரையுலக தாரகைகள் நடித்து வெளிவந்தது.

 கண்ணம்மா என் காதலி, அவ்வையார் போன்ற படங்களின் இயக்குனரும் இவரே. அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் பானுமதியின் "லட்டு லட்டு வேணுமா " பாடல் காட்சிகளில் படைவீரரான இவரிடம்தான் பாடுவார்.அவ்வையார் படத்தி வரும் அந்த கட்டுப்பெட்டி கணவன்-அடங்காபிடாரி மனைவி காட்சிகளில் நடித்தவர்கள்  இவரும் இவரின்துணைவியான  நடிகை சுந்தரி பாயும். (அவ்வையார் படம் பார்க்க தவறாதீர்கள். இப்போது DVD கள் கிடைப்பதால் பழைய படங்களை நிம்மதியாக  பார்க்கலாம்.நம்  நாட்டு திரைபடங்களை பற்றி ஒன்றும் அறியாமல் ஹாலந்த், ஹங்கேரி,பிரேசில். செக் படங்கள் என விமர்சனம் எழுதும் புண்ணியவான்கள் கவனிக்க.)

சினிமா என்றில்லாமல் தமிழில் இவர் ஆனந்த விகடனில் எழுதிய நாவல்கள் அணைத்தும் அந்த கால கண்ணாடிகலாகவே விளங்குகின்றன. கலைமணி என்ற பெயரில் இவர் எழுதியவைகள்: 
நாடகமே உலகம் , பஞ்சாமிர்தம், மஞ்சு விரட்டு ( நாடகங்களின் தொகுப்பு சென்னை வானொலியில் தொடராக வந்தது)
காந்தி மகான் கதை என்று தமிழில் நாட்டுப்புற / கிராமிய பாடல் வடிவில் தந்தார்.மொழி பற்றாளரும் கூட.

தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதூர் சிங்காரம்,பொன்னி வனத்து பூங்குயில்,பாரதியார் கதை, மிஸ் .ராதா, பந்த நல்லூர் பாமா,என்று நிறைய எழுதினார். வில்லுபாட்டு கலையிலும் இவர் திறமையானவர். தில்லானா மோகனாம்பாள் படத்தின் கதைக்காக இவர் தமிழ் நாட்டு அரசின் திரைபட விருதினைபெற்றார்.அதே நாவலுக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதினையும் பெற்றவர்.இவரின் ராவ் பகதூர் சிங்காரம் நாவல்தான் விளையாட்டு பிள்ளை என்ற பெயரில் சிதைத்து எடுக்கப்பட்டு தோல்வி கண்டது.


ஜெமினியின் பழைய தயாரிப்புகளில் வந்த அணைத்து படங்களிலும் இவரின் நகைசுவை காட்சிகள் மிக பிரமாதமாய் இருக்கும். ஒரு வித வெகுளித்தனமும் , அதனுடன் நக்கலும் , நையாண்டியும் கலந்து சிரிக்க வைப்பது இவரது பாணி.படங்களின் இவர் பேசும் வசனமும் அந்த நாட்களில் வழக்கில் இருந்த வார்த்தைகளில் அமைந்து கேட்பதற்கே சுகமாய் இருக்கும். 

இவரின் ஆக்கங்களில் நிரம்பி காணப்படுவது நகைசுவையும் ,நையாண்டியும் ,கிண்டலுமே. மேலும் அந்த கால கட்டங்களில் தமிழ் நாட்டில் கிராமங்கள்,  நிலவிய பழக்க வழக்கங்கள், பேச்சு, மனித சுபாவம், உணவு, உடை, அலங்காரம், விழாக்கள் , வாழ்கை நடை முறைகள் என சகலத்தையும் கண் முன்னே நிறுத்தி நம்மை திகைக்க வைப்பார். விகடனில் வெளிவந்த இவர் நாவல்களுக்கு மனதைகொல்லை கொள்ளும் விதமாக படங்கள் எழுதி நம்மை மகிழ்வித்தவர் கோபுலு அவர்கள். விகடனில் வந்த தொகுத்து பயின்டிங் செய்யப்பட்ட இவரின் நாவல்களை கோபுலு வின்  படங்களுடன் மீண்டும் மீண்டும் படித்து அனுபவிப்பது சுகமானது. 



இவர் சிறந்த போட்டோ கிராபர் கூட! அதில் சகல நுணுக்கங்களையும் அறிந்தவர்.
பேசும் படம் இதழில் இவர் தன் சுய சரிதையை " பாரு பாரு பயாஸ்கோப்பு பாரு " என்ற தலைப்பில் எழுதி வரும் போது 1974 ஆம் ஆண்டு அமரர் ஆனார். இவரின் திரைபடங்களை கண்டு மகிழ்வதோடு இவரின் நாவல்களை படிப்பது என்பது எவருக்கும் முற்றிலும் அது ஒரு புது அனுபவமாக இருக்கும். எதிர்வரும் நவம்பர் பத்தாம் தேதி இவரின் பிறந்த நாள் நூற்றாண்டுவிழா சென்னையில் நடக்க இருக்கிறது. அது சரி, நாமும் தான் பிறந்த நாள் கொண்டாடிகொள்கிறோம்!! நமக்குத்தான் 20 ஓட்டுக்கள் விழுந்து நாம் "எழுதிய " கவிதைகளும்,கதைகளும், படமும், வீடியோவும் முன்னுக்கு வந்தாலே " பார்த்தாயா எனக்கு எவ்வளவு கூட்டம் உள்ளது ?" என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்வோமே சுயப்பெருமை தாங்காமல்!


23 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

கொததமங்கலம் சுப்பு பற்றிய தகவல்கள் வியக்க வைத்தது... மேலும் கிளாசிக் கலைஞர்கள் பற்றி எழுதும் எண்ணம் இருந்தால் MKT அல்லது P.U.Chinnappa பற்றி எழுதுங்கள்...

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

பல்கலை வித்தகர் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கிறது. தொடருங்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அறிந்திராத அரிய தகவல்கள்..

வேலன். சொன்னது…

தில்லானா மோனம்பாள்படம் வெளிவந்து 25 வருடங்கள் கழித்துதான நான பிறந்ததாக சொன்னார்கள்.நீங்கள் குறிப்பிட்ட மற்ற படங்கள் எல்லாம நான் பிறப்பிதற்கு முன்னலே வந்த படங்களோ...!
அரிய தகவல்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

RVS சொன்னது…

//நம் நாட்டு திரைபடங்களை பற்றி ஒன்றும் அறியாமல் ஹாலந்த், ஹங்கேரி,பிரேசில். செக் படங்கள் என விமர்சனம் எழுதும் புண்ணியவான்கள் கவனிக்க//
இது பாய்ன்ட். நான் கூட நினைப்பதுண்டு. வலையில் அயல் சினிமா பற்றி எழுதினால் அவர்கள் தான் சினிமாஜீவி என்று நினைப்பு.
அற்புதமான தகவல்கள் கக்கு. தில்லானா மோகனாம்பாள் நாவல் ஒன்று போதும் அவர் புகழ் பாட...

Madhavan Srinivasagopalan சொன்னது…

"தில்லானா மோகனாம்பாள் ", master piece.

எஸ்.கே சொன்னது…

பல புதிய தகவல்கள்! நன்றி சார்!

Gayathri சொன்னது…

niraya ariya thagavalgal..rombha nandri

மனோ சாமிநாதன் சொன்னது…

மிகவும் வித்தியாசமான பதிவு. எங்களைப்போன்றவர்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருக்கும் 'கொத்தமங்கலம் சுப்பு' பற்றி அரிய தகவல்களை எழுதியிருக்கிறீர்கள்! விகடனில் வெணி வந்த 'தில்லானா மோகனாம்பாள்' தொடருக்கு கோபுலு அத்தனை அழகாக வரைந்திருப்பார்.
இனிய பாராட்டுக்கள்!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சத்திய சோதனை!

Sundar சொன்னது…

Pretty nostalgic Thank you Great pleasure going back to the past after reading this article

Unknown சொன்னது…

அருமையான பதிவு நண்பரே.

நன்றி

சசிகுமார் சொன்னது…

//பார்த்தாயா எனக்கு எவ்வளவு கூட்டம் உள்ளது ?" என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்வோமே சுயப்பெருமை தாங்காமல்!//

Nice

kumar சொன்னது…

பட்டுக்கோட்டை எப்போ தனி மாவட்டம் ஆச்சு பாஸ்?

பொன் மாலை பொழுது சொன்னது…

// பட்டுக்கோட்டை எப்போ தனி மாவட்டம் ஆச்சு பாஸ் //
-----------------------Bahseer Said
தவறை திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!

எப்பூடி.. சொன்னது…

//நேற்று மழையில் முளைத்த காளான்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்து //

எஸ்.எ. சி கிட்ட போட்டுக்குடுக்கிறன் :-)

//அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் பானுமதியின் "லட்டு லட்டு வேணுமா " பாடல் காட்சிகளில் //

அபூர்வ சகோதரர்கள் என்று கமல் படத்துக்கு முன்னரும் ஒரு படம் வெளிவந்ததா?

இவரைப்பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன், அவ்வையார் படம் பொதிகையில் பார்த்தமாதிரி ஞாபகம், இருந்தாலும் எதுவும் நினைவில்லை. முடிந்தால் பார்க்கிறேன்.

அப்புறம்

//நம் நாட்டு திரைபடங்களை பற்றி ஒன்றும் அறியாமல் ஹாலந்த், ஹங்கேரி,பிரேசில். செக் படங்கள் என விமர்சனம் எழுதும் புண்ணியவான்கள் கவனிக்க.//

இது சூப்பரு.........

எப்பூடி.. சொன்னது…

//ஹாலந்த், ஹங்கேரி,பிரேசில். செக் படங்கள் என விமர்சனம் எழுதும் புண்ணியவான்கள்//

செக் படங்கள்

அண்ணே அது 'செக்'படங்களா? இல்ல அதோட கடைசி எழுத்தை தவற விட்டிட்டீங்களா?:-)

பொன் மாலை பொழுது சொன்னது…

// அபூர்வ சகோதரர்கள் என்று கமல் படத்துக்கு முன்னரும் ஒரு படம் வெளிவந்ததா? //

//அண்ணே அது 'செக்'படங்களா? இல்ல அதோட கடைசி எழுத்தை தவற விட்டிட்டீங்களா?//

--------------------எப்பூடி சொன்னது.

எம்.கே .ராதா என்ற ஒரு நடிகர் இருவேடங்களில் ,பானுமதி போன்றோர்கள் நடித்து அந்த பழைய அபூர்வ சகோதரர்கள்.
அதே ஜெமினியின் கதையை மீண்டும் எழுபதுகளில் எம்.ஜி. ஆர். ஜெயலலிதா , அசோகன் போன்ற கூட்டத்துடன் நீரும் நெருப்பும் என்று எடுத்தார்கள். கமலின் அபூர்வ சகோதரர்கள் பெயரில் மட்டும்தான் ஒன்று . கதை , மற்ற மசாலாக்கள் வேறு.

நான் செக் என்று குறிப்பிட்டது செகேஷ்லோவேகியா என்ற ஐரோப்பாவில் ஒரு நாடு. அதனை சுருக்கமாக செக் என்று குறிப்பிடுவார்கள். இப்போது அந்நாட்டிற்கு என்ன பெயர் என்று நீங்கள்தான் சொல்லுங்களேன் .:)))))

பொன் மாலை பொழுது சொன்னது…

// எஸ்.எ. சி கிட்ட போட்டுக்குடுக்கிறன் :-)

எஸ். ஏ. சந்திர சேகர் என்ன? யார் எல்லாம் அந்த டாகுடறு பட்டத்தை சிபாரிசு செய்தார்களோ அவர்களே வந்தாலும் சிரிப்பாய் சிரிக்க அடித்துவிடலாம்.

priyamudanprabu சொன்னது…

NICE POST

எப்பூடி.. சொன்னது…

//இப்போது அந்நாட்டிற்கு என்ன பெயர் என்று நீங்கள்தான் சொல்லுங்களேன் .:))))) //

இப்ப அது ரெண்டு நாடு; ஒன்னு செச் றீ பப்ளிக் (Czech Republic) , மற்றையது சிலோவாக்கியா (Slovakia) :-))))))))

Unknown சொன்னது…

நல்லா இருக்கு உங்க பார்வை! நிறையப் புது விஷயங்களை sorry புதுசா விஷயங்களைதெரிஞ்சு கொள்ள முடியுது உங்க பதிவில...வாழ்த்துக்கள்! :)

pichaikaaran சொன்னது…

பழைய விஷ்யங்களை சொன்னது புதுசா இருந்தது...

நன்றி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக