பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், அக்டோபர் 7

இரட்டை குண்டு வெடிப்பு கராச்சி - பாகிஸ்தான்


//கராச்சியில் உள்ள பிரபலமான அப்துல்லா காஷி தர்காவில் தொழுகை மற்றும் உணவு பரிமாறும் நேரத்தில் அதிக கூட்டம் இருக்கும் போது இஸ்லாமிய பயங்கர வாதிகளின் வெடிகுண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஜாம் தாரிக் என்பவர் தெரிவித்துள்ளார்.நிறைய பெண்களும் குழந்தைகளும் இதில் மாண்டுள்ளனர். எலெக்ட்ரானிக் முறையில் இயங்கும் அதன் பிரதான வாசலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 





பாகிஸ்தானில் கடந்த வருடங்களில் ஒவ்வொரு வார வெள்ளிகிழமைகளில், தொழுகை நேரத்தின் போது குண்டுகள் வெடித்து 
மசூதி மற்றும் தர்காகளின் உள்ளே இருப்பவர்கள் கூண்டோடு செத்து மடிவதும் ஆயிரக்கணக்கானோர் காயமுறுவதும் வழக்கமாகி போய்விட்டது. சுன்னி இனத்தார்கள் ஷியா பிரிவினரை தாக்குவதும், ஷியா இனத்தவர்கள் சுன்னி வகுப்பினரை தாக்குவதும் வாடிக்கையானது. தொழுகை நேரங்கள் மட்டுமின்றி ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால் மறு பிரிவினர் அவர்களை தாக்குவதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. //

பயங்கர வாதிகளை பயற்சி கொடுத்து, காஷ்மீரிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் தாக்கி வன்முறையை வளர்த்த பாகிஸ்தானை அதே வண்மம் திரும்ப தாக்க ஆரம்பித்துள்ளது. அந்நாட்டின் முன்னால் ராணுவ சர்வாதிகாரி முஷரப்பு அளித்த ஒப்புதல் வாக்குமூலமான "பயங்கர வாதிகளை தயார் செய்து நாங்கள் தான் இந்தியாவிற்கு அனுப்புகிறோம் " என்ற அறிவிப்பு இவைகளை நிரூபிக்கிறது. இதன் மூலம் காஷ்மீரை இந்தியாவிடமிருந்து துண்டித்து பாகிஸ்தானுடன் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு தீவிரமாக உள்ளது. 

யாராக இருந்தாலும் வெறுப்பும் வன்முறை மற்றும் அராஜகம் மூலம் எதையும் அடைய நினைத்தாலும் அவைகள் உருமாறி அதே வலிமையுடம் திரும்ப தாக்கி, உண்டாகியவர்கலையே அழித்துவிடும் என்பதே உண்மை. அதுதான் இப்போது பாகிஸ்தானில் நடந்து கொண்டுள்ளது.வழிபாட்டு தளங்களான மசூதிகளும், மதராசாக்களும் இப்படி இன்னமும் வன்முறைகளை ஊக்கிவித்து பயங்கர வாதிகளை உற்பத்தி செய்யும் இடங்களாக மாறியதால்;இன்று அதே இடங்களை தாக்கி;அவர்கள் வளர்த்த மத வெறி தீயில் அந்த மக்கள் மடிகின்றனர். மத தீவிர பற்றாளர்கள்  இதனை புரிந்து கொள்ளுதல்வேண்டும்.

மத அடிபடையில் ஒரு நாடு பிளவுண்டால் என்ன நடக்கும் என்று பாகிஸ்தான் காட்டுகிறது. இஸ்லாம் என்பது,  வேறு இஸ்லாம் அல்லாத எதனையும் ஏற்றுக்கொள்ளாது, நிராகரித்து அவைகளை அழிக்கும் என்ற அம்மத போதகர்களின் எண்ணப்படி ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்திகொண்ட பாகிஸ்தானில் இந்த கதி என்றால் "மத சார்பற்ற" பிற நாடுகள் இப்போது பாடம் படிக்க வேண்டிய நேரம் இது. 

ஆனால், இங்கு நம் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மைதான்.அதனாலேயே இந்துக்களும் பாதுக்காப்பாக வாழ்கின்றனர், கிருஸ்தவர்களும் பாதுகாப்பாக இருகின்றனர்.முலீம்களும் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.

முலீம்கள் பெருவாரியான ஒரு நாட்டில்; சிறுபான்மை இந்துகள் பாதுகாப்பாக இல்லை, கிருஸ்துவர்கள் பாதுகாப்பாக இல்லை; பெரும்பான்மை முலீம்களும் பாதுகாப்பாக வாழ வழி இல்லை.

'இஸ்லாம் அமைதியை போதிக்கும் மதம் " கேட்பதற்கு நன்றாக உள்ளது.


அப்பாவி பெண்களையும் அறியா குழந்தைகளையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்க மத வழி பாட்டு தளங்கள் இப்படி மிருகத்தனமாக இவர்களுக்கு பயன்படுவது அழிவின் ஆரம்பமே அன்றி வேறென்ன?
அந்த நாடு தன் தற்கால நிலையை எண்ணி தன்னிடமுள்ள மத பயங்கர வாத ஆதரிப்பு போக்கினை கைவிட்டு தன் மக்களுக்கு 
ஆக்க பூர்வமான வேலைகளை ஆரம்பிக்க இனி அங்கு யாரும் இல்லை என்பது கவலை அளிக்கும் விஷயம்.
ஒரு பாகிஸ்தான் பத்திரிக்கை நம் நாட்டின்  நாட்டின் வளர்ச்சியை  பற்றி எப்படி எழுதுகிறது என்று கீழ் கண்ட இணைப்பில் சென்று பாருங்கள்.


அவசியம் மேல் கண்ட கட்டுரையின், இதன் பின்னூட்டங்களையும் படிக்கவும். மாறுபட்ட பார்வைகள் !!


1 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

சிறப்பான பதிவு

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக