பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், அக்டோபர் 5

நிச்சயம் உருப்பட இல்லை.!!







இன்று மாலையில் டைம்ஸ் ஆப் இந்திய பத்திரிக்கையில் படித்த போது "இப்படியும் சில கிறுக்கர்களா " என்ற எண்ணம் தான் வந்தது. என்னவென்றுதான் பாருங்களேன்.

// நாங்கள் தான் இந்தியாவிற்கு எதிராக தீவிர வாதிகளை, பயிற்சி அளித்து அனுப்பி  வைக்கிறோம் //

----------பாகிஸ்தானின் முன்னால் ராணுவ ஆட்சியின் தலைவர் பர்வேஷ் முஷரப்பு.

தற்போது பாகிஸ்தானில் உள்ள ஆட்சியாளர்களின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து கொண்டு, பதவியில் இருந்தபோது சுரண்டிய செல்வ வளங்களை வேற்று நாட்டு வங்கிகளில் முதலீடு  செய்து விட்டு இன்று  நாடு கடந்து லண்டனில் வசித்துவரும் முன்னால் ராணுவ ஆட்சி அதிபர் முஷரப்பு, ஜெர்மனி  நாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது இவாறு ஒத்துக்கொண்டார்.

ஏன் உங்கள் நாடு, தீவிர வாதிகளை பயிற்றுவித்து இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்திற்கு அனுப்புகிறீர்கள்? என்று அவர்கள் வினவியபோதுதான் அண்ணார் பெருந்தகை முஷரப்பு இவாறு கூறியுள்ளார்.

// நவாஷ் ஷெரீப், காஷ்மீர் விஷயத்தை கண்டுகொள்ளவே இல்லை.அதனால்தான் மொத்த உலகின் கவனமும் காஷ்மீர் பக்கம் திரும்ப இயலவில்லை. இந்தியாவும் காஷ்மீர் பற்றி உலக நாடுகளின் சபையில் விவாதிக்க தயார் இல்லை. உலகின் கவனத்தை எங்கள் பக்கம் ஈர்க்கவும், காஷ்மீர் பிரச்சனை பற்றி ஏனைய நாடுகள் தெரிந்து கொள்ளவும் நாங்கள் கார்கில் பகுதியில் ஊடுருவி,இந்தியாவுடன் 1999 ஆம் ஆண்டில் போரும் தொடுத்தோம்!

எந்த ஒரு நாட்டிற்கும் அதன் தேசிய நலன்கள் மீது அக்கறை கொள்ள உரிமையுண்டு!


காஷ்மீர் பற்றி பிற உலக நாடுகளின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது. எங்களுக்கு உதவுவதை விட்டு எல்லா நாடுகளும் எங்களை குறைகூறுவது என்ன ஞாயம்? 

மேற்குலக நாடுகள், குறிப்பாக அமெரிக்காவும் மற்றும் ஜெர்மனியும் எங்களுக்கு உதவ வேண்டும். இந்த விஷயத்தில் ஜெர்மனி எங்களுக்கு என்ன செய்து விட்டது?

மேலை நாடுகள் எங்களை மட்டுமே குற்றம் சொல்கின்றன. ஆனால் இந்தியாவை 
எந்த நாடும் " ஏன் நீங்கள் அணு ஆயுதம் வைத்துள்ளீர்கள் " என்று கேட்பதே இல்லை. இது என்ன ஞாயம்?

1971 ஆம் வருடம் இந்திய ராணுவம் தான் கிழக்கு பாகிஸ்தானை எங்களிடமிருந்து பிரித்தது பிரித்தது. ஆனால் எந்த நாடுகளும் அது பற்றி இந்தியாவை கேள்வி கேட்பதில்லையே?

எல்லா நாடுகளும் இந்தியாவுடன் மிக முக்கியமான முன்னேற்றகரமான உறவுகளை தொடர்கின்றீகள் ஆனால் பாகிஸ்தானை மட்டும் ஒரு "காலிப்பயல் நாடாகவே " கருதுகின்றீர்கள் ஏன் இந்த பாரபட்சம்?  

// "Everybody is interested in strategic deals with India,
 but Pakistan is always seen as the rogue State," //

சரி, இதுதான் போகட்டும், மேலே படியுங்கள்.

// ஆப்கானிஸ்தானில் வெற்றி கொள்ளாமல் திருப்ப செல்வது என்பது அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளின் மிக மோசமான தவறாகும்.//

// தீவிர வாதம் என்பது பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியா, காஷ்மீர், ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கூடத்தான் உள்ளது என்று நான் நம்புகிறேன்.//

*********************************

அட முட்டாளே முஷரப்பு ...........உன் புத்தியல் உள்ளதுதானே வார்த்தையில் வரும். ஒசாமா பின்லாடனுடன் உனக்குள்ள கள்ள உறவுதான் எல்லா நாடுகளுக்கும் தெரியுமே! மீண்டும் பாகிஸ்தான் சென்று ஒசாமாவுடன் சேர்ந்து ஒரு அணு ஆயுத பயங்கர வாதத்தை ஆரம்பிக்க போவதும் தெரியும்.

நீ என்ன விதைதாயோ அதனையே அறுவடை செய்ய போகிறாய். தொட்டதற்கெல்லாம் இந்திய நாட்டின் மீது பகையும் துவேஷமும் கொண்டு நீங்கள் ஆடிய ஆட்டம் பலன் தான் இன்று அப்பாவி பாகிஸ்தான் மக்கள் அனுபவித்துக்கொண்டுள்ளனர் .
பட்டான் களின், தாலிபான்களின் ஆட்டம் ஒரு பக்கம்,பஞ்சாப் தாலிபான்கள் மறு பக்கம், வெள்ளப்பெருக்கால் லட்சோப லட்சம் மக்கள் , உடைமைகள், விளைநிலம் பாதிக்கப்பட்டு அது ஒரு பக்கம்.எந்த ஒரு அந்நிய முதலீடும் அங்கு வர வில்லை. பண வீக்கம் வறுமை  அங்கு தாண்டவமாடுகிறது. கையில் கப்பரை ஏத்தி மேலை நாடுகளில் திரியும் உங்கள் நாட்டு அரசு, மனிதாபிமான முறையில் நாங்கள் நீட்டிய உதவிகரங்களையும் மறுத்தளிதீர்கள். அந்த நாடு I M F உதவியால் மட்டுமே இன்று உயிருடன் உள்ளது. இந்த கதியில் இவர்களுக்கு ஏன் இந்தியாவின் மீது இத்தனை துவேஷம்? நிச்சயம் உருப்பட இல்லை.!!





அதான் எங்களுக்கு தெரியுமே! 







5 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அருமை ..

சின்னபாரதி சொன்னது…

தகவல் பறிமாற்றத்திற்கு நன்றி ! வாழ்த்துக்கள்...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

பாகிஸ்தானை மட்டும் ஒரு "காலிப்பயல் நாடாகவே " கருதுகின்றீர்கள் ஏன் இந்த பாரபட்சம்?

----------------------

நுணலும் தன் வாயால்....:)

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

பாகிஸ்தான் மக்களை இந்தியர் யாரும் வெறுப்பதில்லை...

அதன் ரவுடித்தனமான ஆட்சியைத்தானே?.. என அனைவருக்கும் தெரியுமே முஷாரப்...ஐயா

மோகன்ஜி சொன்னது…

முகேஷ் பாடிக் கேட்ட உடனே மெய்மறந்து விட்டேன்.. உங்க முஷாரபை பார்க்காமல்..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக