பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஆகஸ்ட் 11

மீண்டும் ஒரு வயித்தெரிச்சல் !






இந்த வளாகம் 156.14 ஏக்கரில் பறந்து விரிந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம்.
சமையல் காரர்கள் தொடக்கி ஷூ பாலிஷ் போடுபவர்கள் வரை மொத்தம் 167 தொழிலாளர்கள்.
ஐ. ஏ. எஸ். அந்தஸ்தில்  உள்ள அதிகாரிகள் மொத்தம் 32 பேர்.
படிகள் எல்லாம் சேர்த்து இவருக்கு ஒரு மாத சம்பளம் 110000 ரூபாய்.
இவர் மாளிகையில் உள்ளது 13 டெலிபோன்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இங்கிருந்து சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு பேச பட்டுள்ளது. 
இவரின் அலுவலகத்தில் உள்ள டெலிபோன்கள் எண்ணிக்கை 12.
ஸ்பெஷல் கார்கள் உண்டு.மாளிகைகுள்ளகாக ரவுண்ட் வர புதிதாக யமஹா பேட்டரி கார் வேறு 280000 ரூபாயில் வாங்கப்பட்டது.
விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயணம் வேறு உண்டு.
2004 ஆண்டில் இருந்து அரசு ஹெலிகாப்ப்டரில் 63 தடவைகளும்,அரசு விமானத்தில் எட்டு முறையும் பறந்துளார்.
இதற்கான செலவுகளை அரசு பொது துறைதான்  செய்கிறது.
2008 மார்ச்சில் அப்போலோ மருத்துவமனயில் பைபாஸ் சிகிச்சை. இதற்கான செலவு சுமார் எட்டு லட்ச ரூபாயாம்.
2009 மே மாதம் இதே மருத்துவமனையில் மூட்டுவலி க்கான அறுவை சிகிச்சைக்காக 12  லட்சத்துக்கு மேல் செலவானது.
பதவிக்கு வந்த 2004 நவம்பர் முதல் இன்று வரை அவரின் மருத்துவ செலவு சுமார் 25  லட்சத்து 19  ஆயிரத்து 147 ரூபாய்.
மாளிகை மற்றும் இவரின் அலுவலகங்கள் மூலம் உண்டான மின் கட்டண செலவு 2005  ஆண்டில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆனா அரசால் செலுத்தப்பட்ட  மின்கட்டணம் 76.26 லட்ச ரூபாய்.
இவரின் செயலகத்துக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக செலுத்தப்பட்ட மின் கட்டணம் 11.96 லட்ச ரூபாய்.
இதுதவிர வசிக்கும் மாளிகை மற்றும் அலுவலகங்களுக்கு வருடாந்தர மின் பராமரிப்பு பணிகள் ,சிறப்பு மின் பராமரிப்பு பழுது பார்ப்பு பணிகள் மூலமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 2  கோடியே 90  ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது.
மொத்தத்தில் இவரின் மாளிகைக்கு மின்கட்டண செலவே கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடியே 89 லட்சத்து 13 ஆயிரத்து 444 ரூபாயை வாரி இறைதுள்ளனர்.
இவர் ஓய்வு எடுபதற்காக ஊட்டியில் 58.70 ஏக்கரில் தனியாக ஒரு மாளிகை உள்ளது.
விருந்து நடைபெற பிரும்மாண்டமான ஹால்கள்,
17 விருந்தினர் அறைகள் அலங்கார பொருள்கள், பர்னிச்சர், ஆடம்பர சாதனங்கள் அணைத்து உண்டு.
ஒன்பது ஏக்கரில் ஒரு தோட்டமும் இங்குண்டு.
ஊட்டி மாளிகையினை பராமரிக்க ஒவ்வொரு வருடமும் தலா 80 லட்ச ரூபாய் செலவிடுகிறது நமது அரசு.
2010- 2011 ஆண்டுகளுக்கு மட்டும் மாளிகை மொத்த பராமரிப்பு செலவாக 4.81 கோடி ரூபாயும்
இவரின் அலுவலக பராமரிப்புக்கு என 1.56 கோடி ரூபாயும் தமிழக அரசால்  ஒதுக்கப்படுளது.
இந்த வகையில் 2007-2008 ஆம் ஆண்டு முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் மாளிகைக்கும் அலுவலகத்திற்கும் ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 23.69 கோடி ரூபாய் தமிழ மக்களின் வரிப்பணம் .

சரி, இதெல்லாம் எங்கே யாருக்காக இந்த அரசு செலவுகள் ?
இடம் சென்னை கிண்டி 'ராஜ் பவன்' தான் அது,
தமிழகத்தில் கவர்னராக பதவியேற்கும் வயோதிக 'தேசிய' கட்சி காரர்களுக்கும் அவர்களின் குடும்ப  பட்டாளங்களுக்கும்
தமிழக அரசால் செய்யப்படும் செலவுகள்தான் இவைகள்.
 இந்த செலவு வகைகளால் தமிழக மக்களுக்கு என ஒரு ரூபாய் அளவாவது 
 பலன் உண்டா? உண்டு என்றால் யாராவது சொல்லுங்கள் . 

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள்
யூனியன் பிரதேசங்கள் 8
ஆக மொத்தம் 36 ' கவர்னர்கள் ' அவர்களின் குடும்பங்கள் ஏக போகம்.
சராசரியாக ஒரு கவர்னர் மாளிகை அலுவலக பராமரிப்புக்காக ஆண்டுக்கு 20 கோடி என்று வைத்துக்கொண்டால்
ஒரு வருடத்துக்கு இந்தியா முழுக்க வாழும் கவர்னர்களுக்கு செலவாகும் தொகை சுமார் 720 கோடி ரூபாய்- வேண்டாம் 700 கோடி என்றே வைத்துக்கொண்டாலும் 
ஐந்து வருடங்களுக்கு குறைந்தது சுமார் 3500 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் .
மக்களாட்சி,ஜனநாயகம் என்று சொல்லி தலையில் மிளகாய் அரைக்கும் அணைத்து  ஜாதி மத அரசியல் வாதிகள் .
நாமும் நம் மக்களும் மகா மகா பாவப்பட்ட ஜென்மங்கள் சாமிகளா!!


ஜூனியர் விகடன் வார இதழில் படித்து வயிறு எரிந்து ..பின்னர் நீங்களும்....


9 comments:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்ன கொடுமை சார் இது...

இந்த ஒருத்தனுக்கு பண்ற ஒரு நாள் செலவ வச்சு மொத்த தமிழ் நாடும் ஒரு நாள் அடுப்பெரிக்கலாம் போலிருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

2008 மார்ச்சில் அப்போலோ மருத்துவமனயில் பைபாஸ் சிகிச்சை. இதற்கான செலவு சுமார் எட்டு லட்ச ரூபாயாம்.
2009 மே மாதம் இதே மருத்துவமனையில் மூட்டுவலி க்கான அறுவை சிகிச்சைக்காக 12 லட்சத்துக்கு மேல் செலவானது.
பதவிக்கு வந்த 2004 நவம்பர் முதல் இன்று வரை அவரின் மருத்துவ செலவு சுமார் 25 லட்சத்து 19 ஆயிரத்து 147 ரூபாய்.

//

ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!

ப.கந்தசாமி சொன்னது…

ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!! ஐயோ..!!ஐயோ..!! ஐயோ..!!

தெய்வசுகந்தி சொன்னது…

கொடுமைங்க!!!!!!!!!!!1

ஒசை சொன்னது…

கவர்னராக கூட ஏன் துடிக்கிறான்னு இப்ப புரியுது.

Gayathri சொன்னது…

அடக்கொடுமையே...யார்ட்ட பொய் சொல்லுறது??

பெயரில்லா சொன்னது…

Thambi
ithumattumillai innum evvalalo irukku. ithuellam "suthanthiram " namkku kodutha parisu. athil ithuvum onru.

jamaldeen சொன்னது…

ennatha solrathu.....

R.Gopi சொன்னது…

இப்படி எல்லாம் சொல்வீர்கள் என்று தான் என் கோபாலபுர வீட்டை மக்களுக்கு எழுதி தந்து விட்டேன்...

இப்படிக்கு :

கோபாலபுரத்தில் வசிக்கும் ஏழை முதலமைச்சர்....
(இப்போ என்ன செய்வீங்க.... இப்போ என்ன செய்வீங்க... சபாலங்கடி இப்போ என்ன செய்வீங்க!)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக