பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜூலை 27

சைனாக்கார சனியன் -அஜினோமோட்டோ






நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள வேதியியல் குணங்களே நம் உடலுக்கு நன்மையையும் தீமையையும் தருகின்றன.
தற்போது பரவலாக காணப்படும், பேசப்படும் உடல் உபாதைகளில் சிறுநீரக கற்கள் என்பது அதிக பிரபலமாகியுள்ளது.

நம் உடலுக்கு தேவையான சக்தியையும் மற்றும் வளர்ச்சி, திசுக்களை புதுப்பித்தல் போன்ற தேவைகளுக்கு நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான காரணிகள் இரத்தத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு உண்டாகும் கழிவுகள் முறையாக அதற்கென்று அமைந்துள்ள உறுப்புகள் மூலம் அகற்றபடுகிறது.இரத்தத்தில் மீதம் உள்ள கழிவுகள் சிறு நீரகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு பின்னர் தூய்மையான இரத்தம் மீண்டும் உடலுக்கு கிடைக்க வழி செய்வது சிறுநீரகம்.

இவ்வாறு சிறு நீரகங்களில் ரத்தம் தூய்மையாக்கும் பணி நிகழும் போது சில வகை உணவால் உண்டாகும் கழிவுகள் அதன் உப்புக்கள் சிறுநீரக உட்புறங்களில் சிறுக சிறுக படிந்து நாளடைவில் இந்த படிவுகள் கற்களாக உருமாறிவிடும். இந்த உப்பு படிகங்களே சிறுநீரக கற்களாகும்.இவைகள் சிறுநீரக உட்புறத்தில் உள்ள குழிவான பகுதிகளில் அமர்ந்துவிடும் அப்போது வலி ஆரம்பிக்கும். அல்லது அங்கிருந்து சிறுநீருடன் நகர்ந்து குறுகிய சிறுநீர் குழாயை அடைந்து அங்கேதடைபட்டு நின்று விடுவதால் 
சிறுநீர் குழாயில் அழற்ச்சி ஏற்பட்டு பயங்கரமாக வலிக்க ஆரம்பிக்கும்.

வலி என்றால் பிராணன் போகும் வலியுண்டாகும். கூறிய உணர்வுடன் வயிற்றின் அடிபாகத்தில் சற்று நடு பகுதியில் உணரமுடியும். அடிவயிறு முழுதும் கூட சிலருக்கு வலி இருக்கும்.தலை சுற்றல், வாந்தி எடுக்கும் உணர்வு போன்றவைகளும் இருக்கும். கற்கள் சிறுநீர் குழாய்களில் தங்கிவிடுவதால் தசை சுவர்களில் உராய்ந்து ரத்தமும் கூட சிறுநீருடன் வெளியேறும் மேலும் இந்த நிலையில் கிருமிகள் தொற்றி காய்ச்சலும் கூட உண்டாகும்.

// சரி சரி, அறுக்காத, இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் அஜினோமொட்டவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? //

அய்யா சாமிகளா அதைத்தான் சொல்ல வந்தேன். சிறுநீரக கற்கள் பல வகைகள் உள்ளன.

1 கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் 
2 கால்சியம் பாஸ்பேட் கற்கள்
3 யூரிக் அமில கற்கள்
4 ஸ்ட்ருவிட் கற்கள்
5 சிஸ்டைன் கற்கள்

இவைகளுக்கான காரணங்களும் அதன் உணவு வகைகளும் வேறு வேறானவை. ஒவ்வொரு வகை கல்லின் தன்மைக்கு மருத்துவ முறைகளும் வேறு வேறானவை. நாம் உட்கொள்ளும் சோடியம், இதன் அளவானது குறிப்பிட்ட வரையறைக்குள் இருபது நலம். கற்கள் ஓர் முறை வந்து அவதி பட்டவரோ, அல்லது முன் கூட்டி எச்சரிகையுடன் உள்ளவரோ சில உணவு வகைகளை தவிர்த்தல் அல்லது குறைந்த அளவில் எப்போதாவது எடுத்துக்கொண்டால் நலம் பயக்கும். கீழே குறிப்பிட்டுள்ள ரசாயன உப்புக்கள் உடலில் சேருவதும் சிறு நீரக கற்கள் உண்டாக காரணமாகும்.

ஆடம்பரமான ஏ.சி.  மாலில் தள்ளு வண்டிகளில் தேவையான பாக்கெட்டுகளை அள்ளி போட்டுகொண்டு,ஐஸ் க்ரீமை நக்கிக்கிகொண்டோ,சாக்லேட்டை கடித்துகொண்டோ வந்து கவுண்டரில் கிரிடெட் அட்டையை கொடுத்து "இழுத்துவிட்டு " லாவகமாக காரை நோக்கி தள்ளுவண்டியை நாம் கொண்டு செல்வோம். அதெல்லாம் சரிதான். ஷெல்பிலிருந்து உணவு பாகெட்டுக்களை எடுக்கும் போது வெறும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை மட்டும் பார்க்காமல் கீழே கண்ட உப்புக்கள் அந்த உணவு பொருளில் அடங்கி யுள்ளனவா என்றும் கவனிப்பது நலம்.




( இதெல்லாம் யார் போடுகிறார்கள்? - நம்ம ஊர் சட்டப்படி இவைகளை போட்டாகவேண்டும் சாமி! )


  • Monosodium glutamate (MSG)

  • Sodium bicarbonate, the chemical name for baking soda

  • Baking powder, which contains sodium bicarbonate and other chemicals

  • Disodium phosphate

  • Sodium alginate

  • Sodium nitrate or nitrite

  • Monosodium Glutamate (MSG) - இதுதான் இன்று பிரபலமாகி விட்ட அஜினோமோட்டோ. ஜப்பான், சைனா , கொரியாவில் இதனை உணவில் சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் அது ஐரோப்பாவில் பரவி பின்னர் "உலகமயமாக்கல்" வழியாக நம்ம ஊருக்கும் வந்தாகிவிட்டது. துரித உணவு கடைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதோடு நில்லாமல் நம்ம ஊர் சமையல் வகைகளிலும், சாம்பார், ரசம் போன்றவற்றிலும்  பயன்படுத்தச்சொல்லி விளம்பரங்கள் வேறு.
    இறக்குமதி செய்து அல்லது தயாரித்து விற்பவர்களுக்கு தங்களின் தயாரிப்பு விலை போகவேண்டும் அவ்வளவுதான். விளம்பர செலவெல்லாம் அவர்களுக்கு ஜுஜுபி. காணும் அனைத்தையும் நம்பவோ, விலைக்கு வாங்கவோ அவசியம் இல்லை அல்லது ஓசியில் கொடுத்தால் கூட வாங்காமல் விடுவதே மரியாதை.  நாம் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தும் பாரம்பரிய , இயற்கையான மசாலா மற்றும் மணம் கூட்டும் பொருட்கள் இருக்க இந்த "சைனா சனியனை " ஏன் விலை கொடுத்து வாங்கி தின்று விட்டு பின்னர் அடி வயிற்றை பிடித்துக்கொண்டு டாக்டரிடம் ஓடவேண்டும்?
    இவைகள் அதிகமாக நம் உடலில் சேருவது பலவகை சிறுநீரக கற்கள் உண்டாக கட்டியும் கூறுவது நிச்சயம். கேக் போன்ற பேக்கரி  தயாரிப்புகளையும்,  பிஸ்கட் களையும் அளவோடு சாப்பிடவேண்டும். "என் பிள்ளை கேட்டான்,என் பெண் கேட்டாள், என் வைப் ஆசைப்பட்டாள் " என்று டம்பமாக இவைகளை வாங்கி தின்னுவதால் நமது பர்சுக்கும் பின்னர் உடல் நலத்திற்கும் கேடுதான். அதுசரி, சிறுநீரக கல் வராமல் இருக்க எளிய வழி என்ன? நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.குடியுங்க குடியுங்க குடிசிகிட்டே இருங்க ! தற்காலத்தில் குளிர் சாதனம் அதிகம் பயன்பாட்டில் இருப்பதால் தாகம் எடுக்கும் உணர்வே குறைந்து போய் அதனால் தண்ணீர் குடிக்கும் அளவும் குறைந்துவிடும். நாளடைவில் உபாதைகள் ஆரம்பிக்கு. எனவே நிறைய தண்ணீர் குடிப்பதே சிறந்த வழி.
    'கெட்டபசங்களுக்கு' மீண்டும் ஒரு நல்ல சேதி. 
    பீர் மற்றும் ஒயின் அருந்துவது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்குமாம். 
    அப்டி போடு !அதான் எங்களுக்கு வேணும்!!
    பீர் மற்றும் ஒயின் தான் சொல்லபடுகிறதே அல்லாமல் விஸ்கி, பிராண்டி,ரம் போன்ற "காட்டமான " விஷயங்களை ஓரம் கட்டி வைப்பது நம் உடம்புக்கும், பர்சுக்கும், வண்டிக்கும் கூட நல்லது. :)



    13 comments:

    Jey சொன்னது…

    //பீர் மற்றும் ஒயின் அருந்துவது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்குமாம்.///


    இது மேட்டரு...:)

    Jey சொன்னது…

    தல நம்ம ரெண்டு பேருக்கும் 63-வது follower- ஆ வதிருக்குறவங்க ஒரே ஆளு.. தற்செயலா பாத்தேன்:)

    Menaga Sathia சொன்னது…

    அதுமட்டுமில்லை சைனாக்காரங்க இதை அதிகமா பயன்படுத்துவதால் தான் அவர்கள் மிக குள்ளமாக இருக்கின்றனர் என்று ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்..நானும் இந்த செய்தியை படித்ததிலிருந்து சைனாகாரங்களை கவனிக்கிறேன் குள்ளமாகதான் இருக்கிறாங்க ஒருத்தர் கூட உயரமா நான் பார்த்ததில்லை...

    வேலன். சொன்னது…

    அஜினோமோட்டோ ஹோல்சேல் டீலர் சென்னையில் தான் உள்ளார். ஆட்டோ அனுப்பபோறார் பார்த்துக்குங்க...
    தரமான உபயோகமான கட்டுரை...
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    Karthick Chidambaram சொன்னது…

    //பீர் மற்றும் ஒயின் அருந்துவது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்குமாம்.///

    True ? ???

    Jey சொன்னது…

    Karthick Chidambaram சொன்னது…
    //பீர் மற்றும் ஒயின் அருந்துவது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்குமாம்.///

    True ? ???///

    2 பாட்டில் பீர் அடிச்சா , சிருநீரகத்த ஒரு அலசி அலசி யூரின் வழியா இறக்கிரும்னு, என்னோட டாக்டர் ஃபிரண்ட் கூட சொன்னான். மேட்டரு, ”குடி” லிஸ்ட்ல இருக்குறதாலே இந்த அட்வைஸ் அஃபீஸியலா சொல்லப்படுரது இல்லையாம்..

    Admin சொன்னது…

    நல்ல இடுகை. அவசியமான தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்

    ஜெய்லானி சொன்னது…

    //பீர் மற்றும் ஒயின் அருந்துவது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்குமாம்//

    இதில நல்லவிஷயம் 1 சதவீதம் இருந்தா கெட்டது 99 சதவீதம் இருக்கே..!!

    அஜினமோட்டேவை பத்தி நானும் ஒரு பதி போட்டிருந்தேன் அது சொந்த அனுபவம். இன்னும் விழிப்புணர்ச்சி வளரனும் மக்களுக்கு

    முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

    என்ன பாஸ்.. பயமாயிருக்கு..

    எதைதான் சாப்பிடுவது..
    விடுங்க..

    நீங்க சொன்னமாறி, பீர் அடிச்சு உடம்பை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்

    பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

    நல்லா சொல்லியிருக்கீங்க தல! இது பற்றி நானும் ஒரு கட்டுரை வெச்சிருக்கேன், ரொம்ப முன்னாடி நண்பர்களுக்காக எழுதுனது, சிக்கிரமே போட்ருவோம்.

    முத்து சொன்னது…

    பிராண்டி,ரம் போன்ற "காட்டமான " விஷயங்களை ஓரம் கட்டி வைப்பது நம் உடம்புக்கும், பர்சுக்கும், வண்டிக்கும் கூட நல்லது. :)

    அப்போ என் பொழப்பு எப்படி தள்றது

    virutcham சொன்னது…

    Very useful info.

    Pls see this as well. http://kidzmagzine.com/?p=388. This has a series of communication to and fro between Nissin Foods and a boy regarding MSG and other harmful substances in Noodles, Top Ramen.

    The final response from Nissin tells what a manufacturer
    actually expects from a consumer

    Ravikutty சொன்னது…

    நணபரே..இந்த அஜினமோட்டோ இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட பொருள் தெரியுமா? இதை சைனாகாரன் உணவகத்திலெயே பயன் படுத்த முடியாது.
    இந்தியாவில்தான் இந்த கருமத்தை ரேடியோவில் விளம்பரம் செய்து விக்கிறாங்க..

    தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

    கருத்துரையிடுக