டெல்லி உயர் நீதி மன்றத்தின் அவலக்குரல் இது.
// சர்வ தேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் இந்தியர்களின் வழக்குகளுக்கு அதில் சம்பந்தப்பட்ட பிற நாடுகள் கூட நமக்கு உதவ தயாரில்லை.இந்த நிலை மிகவும் வருத்தத்திற்கு உரியது என்று புலம்பியுள்ளது.இந்தியா வலிமையற்ற ,சக்தியற்ற நாடாகவே பார்க்கப்படுகிறது,அப்படியே நடத்தபடுகிறது. இதனாலேயே இந்தியாவின் தேவைகளையும் விருப்பங்களையும் பிறநாடுகள் மதிப்பதில்லை அலட்சியபடுத்துகின்றன.இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ந்தாலும் கூட இந்தியா ஒரு மென்மையான பலமற்ற நாடாகவே பிற நாடுகளால் கருதப்படுகிறது.அப்படியே நடத்தப்படுகிறது.இந்தியாவின் எந்த ஒருகோரிக்கைகளையும் பிற நாட்டு அரசுகள் மதிப்பதில்லை //
இவ்வாறு வருத்தபடுபவர் ஒரு குப்பனோ சுப்பனோ இல்லை. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி திரு.S.N. Dhingra.
நரேஷ் குமார் ஜெயின் என்ற துபாயில் வசிக்கும் இநதிய தொழில் நபர் மீது பலவேறு பொருளாதார குற்றவியல் வழக்குகள். வேறு என்ன ? ஹவாலா பண பரிமாற்றம் தான்.இந்த நபர்மீது ஐரோப்பா மற்றும் ஆசியநாடுகளில் பல பொருளாதார குற்றவியல் வழக்குகள் உள்ளன.டெல்லி போலீஸ் இந்த நபரை கைதுசெய்து பின்னர் ஆள் துபாயிலிருந்து தப்பி வெளிநாடு சென்றுவிட்டார். பிறகு சட்டத்திற்கு முரணாக நேபாளத்திலிருந்து இந்தியா வந்துள்ளார். இவர்மீது உள்ள வழக்கு விபரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளிடம் வேண்டிபெற முயற்சிக்கும் போது அந்த நாடுகள் இந்தியாவின் கோரிக்கைகளை மதிபதில்லை .இந்த நபரின் வழக்கு விசாரணையின் போது மேலும் கால அவகாசம் தங்களுக்கு வேண்டும் என அரசுத்தரப்பில் கேட்க ,அதன் காரணத்தை அறிந்த நீதிபதி இவாறு கூறியுள்ளார்.
பிற நாடுகளை விடுங்கள், நம்மை சுற்றியுள்ள எந்த நாடாவது இந்தியாவை ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை என்பதற்கு நீண்ட காலமாக நிகழும் நிகழ்சிகளே சான்றாக உள்ளன. மிக சமீபத்தில் இநதிய பாகிஸ்தான் பேச்சுவார்தயின்போது இநதிய தரப்பினர் செய்த குளறுபடியினால் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரின் ஆணவமான, நாகரீகமற்ற, கேவலமான விமர்சனங்களை கேட்க நேர்ந்தது.சீனாவும் நேபாளமும் இந்தியர்களுக்கு எதிராக மாறி பல வருடங்கள் ஆகிறது. நேபாளத்தில் இந்திய எதிர்ப்பு கம்யுனிஸ்ட்கள் கை ஓங்கியுள்ளது.பங்களாதேஷின் நிலைமையோ மகா கேவலம். அண்டி நின்று அணைத்து உதவிகளும் பெற்றுக்கொண்டு இந்திய எதிர்ப்பு தீவிர வாதிகளுக்கு புகளிடமளிக்கும்.சிறி லங்காவின் ஆணவ ஆட்டத்தை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். இதுவரை எத்தனை தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் ராணுவத்தால் பலியாகி யுள்ளனர்? கேட்க நாதியுண்டா? தமிழக முதல்வரும் பிரதமரும் இந்த 2010 இல் கடிதங்களை பரிமாறி கொள்வார்களாம் !
காஷ்மீரில் ஊடுருவலா ? .......ஓடு ..........நம்பர் :10,ஜான்பாத் , புது டெல்லி.
மும்பையில் குண்டு வெடிப்பா ?.....ஓடு ....நம்பர் :10,ஜான்பாத் , புது டெல்லி
குஜராதில கலவரமா ?..................ஓடு ......நம்பர் :10,ஜான்பாத் , புது டெல்லி.
மாவோயிஸ்ட்கள் தாகினார்களா? ...ஓடு ....நம்பர் :10,ஜான்பாத் , புது டெல்லி.
வங்காளத்தில ரயில் விபத்தா?......ஓடு ......நம்பர் :10,ஜான்பாத் , புது டெல்லி.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டர்களா?..ஓடு ..நம்பர் :10,ஜான்பாத்,புது டெல்லி.
இவர்கள் ஓடி ஓடி ஓடி என்ன சாதித்தார்கள் என்று யாராவது சொல்லுங்களேன்!
// இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாம்.//
//இந்தியா வல்லரசாம் //
வரும் காலங்களில் யாராவது இப்படி முழங்கினால் என்ன செய்யலாம் என்றும் ரூம் போட்டுதான் யோசிக்க வேண்டும்.
இதற்கு வெள்ளையனே இருந்திருக்கலாம் . // இந்தியர்களும் மனிதர்கள் //என்ற சற்று மரியாதையாவது கிடைத்திருக்கும்
4 comments:
//இதுக்கு என்ன அர்த்தம் ? //
அல்லோ . காங்கிரசுக்கு ஓட்டு போட்டவன்கிட்ட கேட்கவேண்டிய கேள்வியை எங்கள பார்த்து கேட்டா என்ன பதில் சொல்றதாம்?
பிளாக்கில் வாங்குவாங்கு என்று ஆட்சியை வாங்குகின்றாரா.....ஒடு....நெ.10..ஜான்பாத் ரோடு. புதுதில்லி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றிணே.. அடுத்த பேய் படத்துக்கு ஆள் தேடிக்கிட்டு இருந்தேன்.. அழகா சில போட்டோக்களை பப்ளிஸ் பண்ணியிருக்கீங்க..
இதுக நல்லா நடிக்குமானே?....
மின்னலைப்பிடித்து பாடல் சூப்பர் அண்ணே...
கருத்துரையிடுக