பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூலை 18

கெட்ட பசங்களுக்கு மட்டும் !


மறுபடியும் சொல்றேன் 

கெட்ட பசங்களுக்கு மட்டும் !

நல்ல புள்ளங்க இந்த பதிவ படிக்காதீங்க.படிச்சிட்டு என்ன திட்டாதீங்க !


பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா?  பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. 

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை வேளச்சேரி மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.
இது இல்லாமையா ???


1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைகிறது. உண்மை 

பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.

1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் 
பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 
இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)

பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம், செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.
6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.
7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.

2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.

மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன  This is from Beer Net Publication, April 2001 Biological Institute.
9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)

லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.
****************************************
எனக்கு அந்த வாடையே ஆகாது சாமிகளா! (மாப்ள யூர்கன் - வாய பொத்திக்கிட்டு இருக்கணும்)


என்ன மக்காஸ், ரொம்ப குஷியா ?? சரி சரி அளவோட இருந்தா தான் இதெல்லாம். இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்.

ஓட்ட குத்துங்க புள்ளங்களா!!  மிஸ்டர் "நொந்த குமார் "  நமக்கு ஓட்டே போடறதில்ல.

35 comments:

பெயரில்லா சொன்னது…

தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு

http://bit.ly/bJHGXf

Jey சொன்னது…

இந்த பதிவ காட்டியே, நாம பீர் அடிக்கிரத ஞாயப்படுத்திரலாம் போலயே. நல்ல தகவல்கள்.

Jey சொன்னது…

எல்லாமே, ஒரு கிங்பிஷர் அருந்திட்டு எழுதினதுதானே...?.

ஜூனியர் தருமி சொன்னது…

நல்லா ஏதோ ஓசி பார்ட்டிக்கு போயிட்டு வந்து எழுதுன மாதிரி ஒரே போதையா இருக்கு....நான் என்ன சொல்ல வரேன்னா ......ம்ம்ம்ம்ம்....வ்வ்வ்வாவ்வாக் (நாங்க எல்லாம் ராவா குடிப்போம்....).

//மிஸ்டர் "நொந்த குமார் " நமக்கு ஓட்டே போடறதில்ல.//

அண்ணே, "பிரபல பதிவர்" களோட ஓட்டோ, பின்னூட்டமோ நீங்க எதிர்பார்க்கக்கூடாது. அவங்க சப்ப மேட்டர எழுதுனாலும் சூப்பருன்னு சொன்னாதான் உங்களுக்கு ஓட்டு விழும். அரசியல் கத்துக்கங்கண்ணே....

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// எல்லாமே, ஒரு கிங்பிஷர் அருந்திட்டு எழுதினதுதானே...?. //
-------------------Jey சொன்னது.

அய்ய !.... இத எழுத அத்த வேற அடிக்கணுமா?
இல்லன்னு சொன்னா நம்பவா போறீங்க !
இல்ல. இல்ல.இல்ல....................போதுமா?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//மிஸ்டர் "நொந்த குமார் " நமக்கு ஓட்டே போடறதில்ல.//

அது,அவரை சும்மா கலாட்டா பண்ண எழுதினது.
வேறு ஒன்றுமில்லை.
--

ஜெய்லானி சொன்னது…

தலீவா பீர் முக்கியமில்ல சைடிஷும் பின்ன கூட கம்பெனி குடுக்கிர ஆளும்தான் முக்கியம் .இன்னே நா சொல்றது பிரியுதா..

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஜெய்லானி சொன்னது…
// தலீவா பீர் முக்கியமில்ல சைடிஷும் பின்ன கூட கம்பெனி குடுக்கிர ஆளும்தான் முக்கியம் .இன்னே நா சொல்றது பிரியுதா..//பின்ன ...உங்களைமேரிக்கி அனுபவஸ்தறு சொன்னாக்க கேட்டுகனும்மில்ல. நீங்க சொன்னது சர்தான் ஆண்ணாதே!!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//எனக்கு அந்த வாடையே ஆகாது சாமிகளா! (மாப்ள யூர்கன் - வாய பொத்திக்கிட்டு இருக்கணும்)/
//


உங்களுக்கு பீர் வாடையே ஆகாதுன்னு எனக்கும் தெரியும் கருப்பு தங்கத்துக்கும் தெரியும்..

அதனாலதான் விஸ்கி, வோட்கா, பிராண்டி, ரம் இப்படியாப்பட்ட வாடையை பிடித்துகொண்டு அலைகிறீர்கள் .

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஐயோ ..மாப்ள....இப்டி சேம் சைடு கோல் போடவா நேரம் பாத்துகிட்டு இருந்தீரு?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்ள நாங்க இப்ப திருந்திட்டம்ல !
நிசம்மா தான் கண்ணு . அந்த பக்கமே போறதில்ல.

Jey சொன்னது…

//ஜெய்லானி சொன்னது…
தலீவா பீர் முக்கியமில்ல சைடிஷும் பின்ன கூட கம்பெனி குடுக்கிர ஆளும்தான் முக்கியம் .இன்னே நா சொல்றது பிரியுதா..//

நீ எங்கயோ போய்ட்டியா ஜெய்லானி...., ஒருவேலை, என்னோட பேர்ல இருக்குர முதல் எழுத்டு, உன் பேர்லையும் இருக்குரதால, உனக்கும் அறிவு அதிகமாயிருச்சோ. என்னமோ போய்யா, கலக்குர நீ....

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அப்பா ..கண்ணுங்களா ..

Jey, ....ஜெய்லானி..!..........நா..... கை புள்ள மேரிக்கி ....என்ன கெடுத்து புடாதீங்க ஆமா.

--

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// நான் என்ன சொல்ல வரேன்னா ......ம்ம்ம்ம்ம்....வ்வ்வ்வாவ்வாக் (நாங்க எல்லாம் ராவா குடிப்போம்....//
...................ஜூனியர் தருமி சொன்னது.


நா இப்பத்தான் பாத்தேன் .
சின்னப்புள்ள தனமாவுள்ள இருக்கு?

பின்ன ? ........பீருல தண்ணி வுட்டு கலக்கியா அடிப்பாங்க?

நம்ம பேர கெடுக்கறதுக்குன்னு இதுங்கல்லாம் கிளம்ம்பி இருக்குதுங்களா??
--

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Hi kakkoo,

Congrats!

Your story titled 'கெட்ட பசங்களுக்கு மட்டும் !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th July 2010 08:07:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/305070

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
_______________________________________________


வாசித்து,வாக்களித்து, பின்னூட்டமிட்ட நண்பர்கள் அணைவருக்கும்
நன்றிகள்.

கக்கு-மாணிக்கம்

பட்டாபட்டி.. சொன்னது…

தெய்வமே...

நீங்க ...நல்லா இருக்கனும் சாமீஈஈஈஈஈஈஈஈஈ...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

பட்டாபட்டி.. சொன்னது…

//தெய்வமே... நீங்க ...நல்லா இருக்கனும் சாமீஈஈஈஈஈஈஈஈஈ //


ஆமா ..இதல ஒன்னும் கொறச்சல் இல்ல.மொதோ ஆளாவருவீங்கன்னு வடைய வச்சிக்கிட்டு உக்காந்திருந்தா....
வட இவ்வளவு நாழியா இருக்குமா தலீவா??

பட்டாபட்டி.. சொன்னது…

ஆமா ..இதல ஒன்னும் கொறச்சல் இல்ல.மொதோ ஆளாவருவீங்கன்னு வடைய வச்சிக்கிட்டு உக்காந்திருந்தா....
வட இவ்வளவு நாழியா இருக்குமா தலீவா??
//

ஆணி அதிகமாயிடுச்சு பாஸ்..
இப்பத்தான் மூச்சு விட நேரம் கிடைத்தது..

இனிமேல் ரெகுலரா வருவேன்...
..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

moththathula neenga sarakkadikkanim.adhaanee.adinkayya,

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாருங்க ஈரோட்டு காரரே !! செந்தில் குமார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

cs சொன்னது…

ellam ore kudikaarangala iruppeenga pola irukku

Karthick Chidambaram சொன்னது…

தத்துவாமா இருக்கே ... அடுத்த பதிவு தண்ணி அடிப்பதில் உள்ள 10 நன்மைகளா ?

பட்டாபட்டி.. சொன்னது…

இந்த பீர்..பீர்னு சொல்றீங்களே..
இதை சரக்கடிக்கும் முன் குடிப்பது நல்லதா?.. இல்ல சரக்கடித்தபின் குடிப்பது நல்லதா?..

கொஞ்சம் சொல்லிபோடுங்க பாஸு....

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//ellam ore kudikaarangala iruppeenga pola irukku. //
-----------------cs சொன்னது


அண்ணாத்த CS அவர்களே வருக .
இப்படி எங்கள மட்டும் தனியா பிரிச்சி வெச்சி
பேசலாமா ? நாமெல்லாம் ஒரே இனம் தானே!
(தமிழ் இனத்தைச்சொன்னேன்)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//தத்துவாமா இருக்கே ... அடுத்த பதிவு தண்ணி அடிப்பதில் உள்ள 10 நன்மைகளா ? //

-----------------------Karthick Chidambaram சொன்னது

வாருங்கள் KarthickChidambaram அவர்களே

தத்துவமெல்லாம் நமகெதர்க்கு?
நமக்கு நிதர்சனமே போதும்.

நீங்கள் விரும்பினால் அப்படியும் ஒரு பதிவை
எழுத தயார்தான்.

உங்கள் வலைத்தளம் பிரமாதம்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// இந்த பீர்..பீர்னு சொல்றீங்களே..
இதை சரக்கடிக்கும் முன் குடிப்பது நல்லதா?.. இல்ல சரக்கடித்தபின் குடிப்பது நல்லதா?..

கொஞ்சம் சொல்லிபோடுங்க பாஸு..//

----------------------------பட்டபட்டி சொனது.


எல்லாம் பச்ச கொயந்தங்கதான்.
கைப்புள்ள கணக்காதான் இருக்கீங்க.
அது இன்னா "சரக்கு "?
அத்தே மொதல்ல இன்னான்னு சொல்லிகினாதான் பீரு அப்டீன்னா இன்னா ன்னு நா சொல்லுவேன்..

Geetha6 சொன்னது…

http://widgia.com/blood-alcohol-content-calculator/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+widgia/Lsug+(Widgets)&utm_content=Yahoo!+Mail

Blood Alcohol Content Calculator
get this widget and embed in this post(suitable)

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தொப்பை வந்தது தான் மிச்சம்.பீருக்கும் தொப்பைக்கும் ஏதாவது ஆராய்ச்சி இருந்தா போடுங்கய்யா

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// Blood Alcohol Content Calculator
get this widget and embed in this post(suitable) //

----------Geetha6 சொன்னது

சகோதரி Geetha6 தந்த ஆலோசனையின் படி அந்த Widget வைத்தாகிவிட்டது
வருகைக்கும் தங்களின் அன்பான ஆலோசனைக்கும் அனைவரின் சார்பிலும்
நன்றிகளை கூறுகிறேன்.

ஆயிரம் தான் ஆனாலும் நம் பெண்கள் எங்கும் எப்போதும் தாய்மை உணர்வுடன்தான்
வாழ்வார்கள். தலை வணங்குகிறோம் நாங்கள்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// தொப்பை வந்தது தான் மிச்சம்.பீருக்கும் தொப்பைக்கும் ஏதாவது ஆராய்ச்சி இருந்தா போடுங்கய்யா //

------------------------ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது
மொழு மொழு வென இருக்கும் உங்கள் முகத்தைப்பார்த்தாலே புரிகிறது உங்களுக்கும்
தொப்பை (உபயம் பீர் ) இருக்கும் என்று. :) just kidding .

உடல் உழைப்பும் வேண்டும் தலைவா! இல்லையா?... உடல் பயிற்ச்சியாவது வேண்டும்
சோம்பல் பட்டால் "பத்துமாத பந்தம் " தான். புரிந்தால் சரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே!

Engineering சொன்னது…

பீர் சாப்பிட்டா கெட்ட பசங்களா....
அதெல்லாம் cool drinks....ல சேர்துட்டாங்கனு சொன்னாங்களே....

சாப்பாட்டுகே நாங்க பீர்...அ தான் தண்ணியா குடிசுகுவோம்....

Engineering சொன்னது…

யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க. . .
நான் போய் சாப்ட்டு வந்தரேன்....

Venu சொன்னது…

என்னது பீர் குடிக்கிறவங்க கெட்ட பசங்களா?
பீரும், ஃபேண்டா மாதிரி ஒரு கூல்டிரிங்க்ஸ் தான்
பாஸ்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாங்க இஞ்சினீர் அய்யா.
நா அப்டி சொல்லுவேனா தங்கம்?
இங்கதான் ஏதாவது நல்ல விஷயம் சொன்னாக்கூட உடனே பத்திகிதே !
அதான் ......'கெட்ட பசங்க" அப்டீன்னு ஒரு .....பாவ்லா....

ஆமா ....??? இத்தன நாளா எங்க போயிருந்தீங்க ??

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாங்க வேணு.

"பீரு குடிக்கிரவுங்க எல்லாரும் நல்ல புள்ளங்க "
அப்டீன்னு ஒரு கதைய விட்டா போச்சு.!~

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக