பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூலை 4

வேலனுக்கு விருது !

யாரோடும் வேற்றுமை இல்லை, எவரோடும் சண்டை இல்லை,எவரையும் தாழ்த்தி எழுதியதில்லை,
யாருடனும் மோதலும் இல்லை.தனக்கு தெரிந்தவைகளை எல்லாம் பிறக்கும் அறியத்தந்து ,
எந்த ஐயப்பாடும் இருந்தால் அவைகளை உடனே போக்கி உதவி செய்து உண்மையிலேலே எந்த 
"பதிவர்" பந்தா இல்லாமல் இயல்புடன், மனித நேயத்துடன் மற்றவரை மதித்து அழகான பிறருக்கு 
பயன் தரும் வகையில் பிரமாதமான போட்டோ ஷாப் பயன்பாடுகள் மட்டும் இன்றி பிற கணணி 
நுட்பங்களையும் எளிதாக சொல்லி பதிவுகளை வெளியிடும்  அன்பு நண்பர் (மாப்ள) வேலன் அவர்களுக்கு 
இந்த வைரம் பதித்த சிறந்த பதிவர் விருதினை அளிக்கின்றேன்.

மாப்ள, நீங்கள் வந்து விருதினை எடுத்துச்சென்று உங்கள் தளத்தில் வைத்துக்கொள்ளலாம். நன்றி !.
11 comments:

பெயரில்லா சொன்னது…

மிகச்சரியான செயல்.

வாழ்த்துக்கள்:

விருதை பெறுபவருக்கும், விருது அளிப்பவருக்கும்.

'வா'வன்னாக்களும் 'வி'னாக்களும் போன்ற இன்னபிற விவஸ்தையற்ற வேஸ்டுகளும் அடுத்தவரை திட்டி சர்ச்சைக்குரிய பதிவாகவே போட்டு கல்லாகட்டி, அப்படியும் மனநிறைவின்றி பின்னூட்டத்தில் பலபெயர்களில் வந்து வசைபாடி மகிழ்வதையே தத்தம் பொழைப்பாக நடத்துவோருக்கு மத்தியில், வேலன்ஜி இவ்விருதுக்கு முற்றிலும் தகுதி படைத்தவர். இவர் அனைத்து பதிவர்களுக்கும் நல்ல முன்னுதாரணம்.

DrPKandaswamyPhD சொன்னது…

விருது கொடுத்தா இப்படிப்பட்ட ஆளுக்கு இந்த மாதிரி விருது கொடுக்கணும். உண்மையிலேயே நல்ல ஆளு.

எனக்கும் குடுத்திருக்கீங்களே, கக்கு, "கும்மியடிப்போர் சங்க மெம்பர்ஷிப்" விருது. சரி தகுதிக்கு தகுந்தா மாதிரிதான் விருதும் வரும்போல :)-

பட்டாபட்டி.. சொன்னது…

வாழ்த்துக்கள் வேலன்...

வேலன். சொன்னது…

உங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி...இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப்போகின்றேன் என தெரியவில்லை. உங்கள் அன்பிற்கு மீண்டும் தலைவணக்கி விருதினை பெற்றுக்கொள்கின்றேன். நன்றி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

K'நிதிக்கு விருது தராததை வன்மையாய் கண்டிக்கிறேன் ...

ஜெய்லானி சொன்னது…

விருது கொடுத்தவருக்கும் , அதை பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்..உங்க பதிவுகள் என் ரீடரில் வர ஏதாவது பண்ணுங்களேன் பிரதர். ஃபோலோயரா இருந்தும் இம்சை. வரமாட்டேங்குதே..!!

Engineering சொன்னது…

வாழ்த்துக்கள் வேலன்... ஜி...!
விருது கொடுத்த கக்கு அவர்களுக்கு நன்றி....

உதயம் சொன்னது…

வாழ்த்துக்கள் , வேலன்

முத்து சொன்னது…

தகுதியான ஒருவருக்கு மரியாதையான விருது வாழ்த்துக்கள் வேலன் சார்

தமிழார்வன் சொன்னது…

//தனக்கு தெரிந்தவைகளை எல்லாம் பிறக்கும் அறியத்தந்து , எந்த ஐயப்பாடும் இருந்தால் அவைகளை உடனே போக்கி உதவி செய்து உண்மையிலேலே எந்த "பதிவர்" பந்தா இல்லாமல் இயல்புடன், மனித நேயத்துடன் மற்றவரை மதிப்பவர்//

இக்கருத்துக்கு உடன் படுகிறேன். நண்பர் வேலனின் வலைப்பூவில் ஐயப்பாடு கேட்கும் நண்பர்களுக்கு எளிய முறையில் விளக்கம் தருவது இவரது சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பர் வேலன் அவர்களே...

விருது கொடுத்த நட்பிற்கினிய நண்பர் கக்கு.மாணிக்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
தமிழார்வன்.

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துக்கள் வேலன் சார் , உங்கள் படைப்புகளுக்கு எத்தனை விருது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக