புதிய தேடி இயந்திரம் ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. ஒரு வேலை இது பலருக்கு தெரிந்திருக்கலாம்.
சர்ச்கோ என்ற பெயரில். தேடலின் கீழ் மருத்துவம் மற்றும் இலக்கியம் என்ற தலைப்புக்கள் உள்ளன.
விசை பலகை என்று குறிப்பிட்டு அருகில் ஒரு அம்புகுறி. அதை கிளிக் செய்ய அழகிய தமிழ் சாவி பலகை ............இல்லை.... இல்லை விசைபலகை திறக்கிறது. தமிழில் சொற்களை அமைக்க சுலபம்.
உடனடி நடப்பு செய்திகளுக்கு செய்திகீற்று உள்ளது.
கிரிகெட் ரசிகர்களுக்கு என்று தனியே ஒரு பகுதி.
தினசரி செய்திகளுக்கு
தினமணி, தினத்தந்தி மற்றும் தினமலர் இதழ்கள் இங்கு திறந்து கொள்ளும்
தமிழர்களின் விழாக்கள், பண்டிகைகள்.
தமிழ் - ஆங்கிலம் , ஆங்கிலம்- தமிழ் அகராதிகள் என்று பிரமாதமாக உள்ளது.
தமிழ் எழுத்துருகளை Fonts கூட இங்கிருந்து தரவிறக்கம் செய்ய ஒரு திறப்பும் உள்ளது.
சினிமா பகுதிக்கென்று ஒரு திறப்பு.
.
அரபியர்கள் முழுக்க முழுக்க தாங்களின் அரபு மொழிகளில் கணனியில் வேலை செய்கின்றனர்.
அவர்களுகென்றே மென்பொருள்களும், தேடு பொறிகளும் வந்து விட்டன ஆங்கில கலப்பின்றி.
அனாவசியமாக வண்ணங்களை வாரி கொட்டி கண்ணை உறுத்தாமல் தூய்மையான வெண்ணிற பின்னணியுடன்
வள்ளுவரின் வாட்டர் மார்க் உருவம் அழகாக வெளிப்பட சிறப்பாக உள்ளது.
இந்த சர்சிகோ ஒரு சீரிய முயற்சி. பாராட்டவேண்டும்
இது Beta வகையை சேர்ந்ததுதான் எனவே மேலும் நிறைய மேம்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம்.
மொத்தத்தில் நல்ல பயன் பாடு உள்ள தமிழ் தேடி இயந்திரம்.
இணைப்புக்கு கீழே கிளிக் செய்க:
சர்ச்கோ
விசை பலகை வந்தபின்
மாதவியை தேடியபோது.......
கண் வலி என்று தேடியபோது......
கருணா நிதி என்று தேடியபோது.......
ஜெயலலிதா என்று தேடியபோது...
(இதெல்லாம் சும்மா ஒரு விளம்பரம்தான்)
இதுக்காக யாரும் என்ன அடிக்க வராதீங்க புள்ளகளா!!
மாப்ள யூர்கன் நம்ம பேர கூகிள் லில் தேடி தேடி சலித்து போய்விட்டார்.
இந்த பொறியில் தேடிப்பார்க்கலாம் மாப்ள!!
28 comments:
நல்லதொரு அறிமுகம்.. நன்றி ...
மாப்ள யூர்கன் நம்ம பேர கூகிள் லில் தேடி தேடி சலித்து போய்விட்டார்.
இந்த பொறியில் தேடிப்பார்க்கலாம் மாப்ள!!
.. கண்டிப்ப்ப்பா !!!! மச்சி
என்னமோ போங்க நாமும் தமிழ் வாழ்க என்று தான் சொல்றோம் ஆனால் இன்னும் வாழ்ந்த பாடில்லை...
என்றும் நட்புடன்
குரு
சார் யார் அந்த ஜெயலிதா தப்பா டைப்பு பன்னிட்டிங்க போல
மாபல் யூர்கன், இதில் தேடினாலும் கிடைக்காது அய்யா !
//என்னமோ போங்க நாமும் தமிழ் வாழ்க என்று தான் சொல்றோம் ஆனால் இன்னும் வாழ்ந்த பாடில்லை...//
என்றும் நட்புடன் குரு
அப்படி யல்ல நண்பர் குறு அவர்களே. தமிழ் என்றும் வாழும் சிரஞ்சீவியான ஒன்று.
அதனை அழித்தொழிக்க இனி யாராலும் இயலாது .அதற்கு அவசியமும் இல்லை.
யார் வந்தாலும் ,ஆண்டாலும், போனாலும் தமிழ் என்றும் வாழும்.
நமக்கு மேலுள்ளவர்கள் இன்னமும் நிறைய செய்திருக்கலாம் ...என்ன செய்வது?
ஜனநாயகநாட்டில் இது ஒன்ற நிகழ்வுகள் சற்று தாமதமாக நிகழும்.
இன்டெர் நெட்டில் தமிழில் எழுதி தேடவேண்டும். அந்த காலம் விரைவில் வரும்.
UNESCO வின் பதிவின் படி செம்மொழி பட்டியலில் உள்ள
தமிழ்
சமஸ்கிரதம்
சைனீஸ்
ஹீப்ரு
இலத்தீன்
கிரேக்கம்
மொழிகளில் தமிழும், சைனீஸ் மற்றும் ஹீப்ரு மொழிகள் மட்டுமே இன்று வழக்கத்தில்
உள்ளன. தமிழ் பல கோடி மக்களின் மொழியாக பல நாடுகளில் உள்ளது.
பெயரில்லாத நண்பரே!!
அந்த பிழையை சரி செய்து விட்டேன்.
நன்றி
என் பெயரை போட்டு தேடினால் இது போல் வருகிறது
... குண்டுவெடிப்பு மட்டும் அல்ல. போர் அடுக்கடுக்காக எண்ணற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றது
சிரிப்பாய் தான் வருகிறது.என்பெயரை இட்டு தேடினேன் .உடம் உங்கள் பெயரும் கூட அல்லவா வருகிறது!
இலக்கியத்தின் கீழே தேடுங்கள்.
சாதாரணமா தேடுனதுக்கே இப்படி காட்டி என்னை மிரட்டுது இதில் இலக்கியத்தில் தேட போயி வாழும் வள்ளுவன் பெயர் வந்தால் நான் என்ன செய்யறது
இதெல்லாம் நாளடைவில் சரி செய்வார்கள் கண்ணா!
நாம் இதனை ஆதரிக்க வேண்டும்.
அதற்காகவே இந்த பதிவு. சரியா ?!
கண்டிப்பாக என் ஆதரவு அவர்களுக்கு உண்டு சும்மா நான் உங்களை களாய்யிதேன்
நல்லதொரு அறிமுகம்.. நன்றி ...
புச்சா இருக்கு...மெய்யாலுமே இந்த லிங்க இருக்கா சார்?...
தமிழை வாழவைக்க நாம் செய்கின்ற இந்த வலைப்பூவே போதுமானது.
- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com
Hi kakkoo,
Congrats!
Your story titled 'தேடி இயந்திரம் - தமிழில்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 29th June 2010 12:20:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/288289
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
---------------------------------------
பின்னூட்டமிட்டும், வாக்களித்தும் ஆதரித்த
அன்பர்கள் அணைவருக்கும் நன்றி.
கக்கு-மாணிக்கம்
நன்றி நண்பர் முத்து மற்றும் நண்பர் தமிழ் உதயம் உங்களை எங்கே காணவில்லை சிலநாட்களாக??
//புச்சா இருக்கு...மெய்யாலுமே இந்த லிங்க இருக்கா சார்?...//
-------------------பட்டாப்பட்டி.
லிங்க் கொடுத்துள்ளேன், ஸ்க்ரீன் ஷாட் வேறு இருகிறதே ஏன் சந்தேகம்?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெகதீஸ்வரன்
very useful...
thank u
Thanks Mr PAARVAIYAALAN
கக்கு - மாணிக்கம் சொன்னது…
நன்றி நண்பர் முத்து மற்றும் நண்பர் தமிழ் உதயம் உங்களை எங்கே காணவில்லை சிலநாட்களாக?? //////////////
இனி கரிக்கிட்டா வந்துடறேன்
நான் மாம்ஸ்-னு போட்டேன்..மாணிக்கம் சட்டநாதன் னு வந்தது...ஆமாம் அதுயாரு? டவுசரைதான் கேட்கனும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆஹா.... நம்ம மாப்ள வேலன் சாரா?
ரொம்ப நாள் கழித்து வந்ததால் அடையாளம் தெரியல.
வந்தவரைக்கும் நன்றி அய்யா !
நான் தான் லேட்டா, இது புதுசா இருக்கே. நல்லாயிருக்கு நண்பரே.
வருகைக்கு நன்றி சசி
தங்க அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பர் ஜெய்லானி.
ரொம்ப லிமிடட் உபயோகம்.
கருத்துரையிடுக