வருக அன்பர்களே !
ஆர்வக்கோளாரில் முதலில் எல்லோரும் ப்ளாக் ஆரம்பித்த பின்னர் செய்வது
பார்க்கும் அத்தனை பதிவுகளையும் படித்து பின்னர்
அவைகளுக்கு பின்னூட்டம் போட்டு Followers ஆக சேர்ந்து அழகு பார்ப்பது.
இங்கு வலைதளங்களில் காணப்படும் அத்தனை பதிவுகளும்
பார்க்க வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை.
மேலும் பெரும்பாலான பதிவுகளில் உருப்படியாக ஒன்றும் இல்லாமல்
வெறும் வெறித்தனமும், ஆர்ப்பாட்டங்களும்,கூர்மையான வார்த்தைகளும் மேலும்
கேவலமான விவரிப்புகளும் தான் இருக்கும் , அவைகளை எளிதில்
அடையாளம் கண்கொண்டு ஒதுக்கிவிடுங்கள்.
ஒரு படம் வெளியில் வந்தால், சொல்லிவைத்தாபோல் அத்தனை
"பிஸ்தா" பதிவர்களும் விமர்சனம் என்று இங்கு வந்து மாரடிப்பார்கள்.
அவைகள் முற்றிலும் புறக்கணிக்கலாம். தேவையானால் ஒன்று இரண்டு
விமர்சனங்களை படிப்பதோடு நின்று விடுங்கள்.அதுவும் நீங்கள் அந்த குறிப்பிட்ட
திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் இருந்தால் மட்டுமே. பின்னூட்டம்,ஓட்டு போடவேண்டாம் .
பெரிய சமுதாய சீர்திருந்த வாதிகளாக காட்டிகொண்டு இவர்கள் எழுதும் குப்பைகள் அனைத்தும் சண்டையும் சச்சரவையும் மட்டுமே கொண்டுவருகிறது என்பதால், இது போன்ற பதிவுகளையும் புறக்கணிக்கலாம். ஏனனில் இவர்கள் சீர்திருத்த வாதிகள் இல்லை ,வெறும் சண்ட பிரசண்டர்கள்.
பதிவு எழுதி சமுதாயத்தை மாற்ற முடியும் என்று தயவு செய்து நம்பாதீர்கள்.
இவர்கள் தாங்கள் சொல்லவந்த கருத்துக்களை எதிர்மறையாகவே சொல்லுவதால் பெருபாலும் இவர்களின் "பம்மாத்து ' எல்லாமே வேறு வெத்து வேட்டாகிவிடும் எனவே இவர்களையும் புறக்கணிக்கவேண்டும்.
உள்ளூர் சினிமாவே தெரியாத இவர்கள் தங்களை ' அறிவுஜீவிகளாக ' காட்டிகொள்ள ரொம்ப சிரமப்பட்டு வெளிநாட்டு திரை படங்களிகூட "ஆகா ,ஓகோ ' என்று அள்ளி விடுவார்கள். எல்லாம் வெறும் குப்பைகளாகவே இருக்கும். இவர்கள் பக்கமும் போய் ஆவது ஒன்றுமில்லை.
சிலர் "கதை எழுகிறேன் " "கவிதை எழுதுகிறேன் "என்ற அரிப்பின் காரணமாக் வெளியிடும் அறுவைகளை அடையாளும் கண்டு அவைகளை ஒதுக்குகுங்கள்.
இங்கு நிறைய எல்லாவகையான "புரட்சிகாரர்களும் " தம்பட்டம் அடிப்பார்கள்.. அத்தனையும் வீண் , வெறும் சப்தங்களாகவே இருப்பதால் இவர்களை க்கண்டால் ஓடிவிடலாம்.
எந்த வகையான மதம் ,சாதி பற்றிய பதிவுகளை நாடாதீர்கள். அவைகளை எல்லாம் உங்களை வலைபோல பிணைக்கும் இடமாகும்.
மற்றவர்கள் செய்வதையே நீங்களும் செயாதீர்கள். உதாரணமாக , நித்தியானந்த விவகாரங்கள் சூடாக வெளிவந்த போது அவைகள் டி.வி. களில் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தன அல்லவா? நம் முற்போக்கான பதிவர் சிங்கங்களும் ஒருவர் பாக்கி இல்லாமல் அதே வீடியோ காட்சிகளை தங்கள் தங்கள் தளங்களில் இட்டு, கூடவே அந்த டி.வி. மீடியாக்களை சாடி, "எவ்வாறு இவைகளை குடும்பாதருடன் இருக்கும் வீடுகளில் தொடர்ந்து காட்டினார்கள் ?" ஒரே வீராப்பு .இவர்களும் அதையே தான் ரிபீட் அடித்தார்கள் என்ற சுய அறிவு இல்லாமல். சில பதிவர்களே அதே சேதிகளை வேறு கோணங்களில் எழுதினார்கள்.
தமிழ் வலைபதிவு என்பது ஆண்களுக்கான இடம் மட்டும் அல்ல. நிறைய பெண்மணிகளும் வாசகர்களாக, பதிவர்களாக உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு எழுதுங்கள்.இது அணைவருக்கும் உரிமை உள்ள தளமானதால் எவரையும்
நீங்கள் சார்ந்திருத்தல் தேவை இல்லை.
படித்தாலும் பின்னூட்டம் போட்டுவிடாதீர்கள்.ஓட்டும் போடாதீர்கள்.
நீங்கள் ஓட்டு போடவும், பின்னூட்டம் போடவும் அல்லது
Followers ஆக சேரவும் நிறைய நாட்கள் எடுத்து கொள்ளவேண்டும்.
சிலர் தங்களை "பெரிய "எழுத்தாளர்களாக காட்டிக்கொண்டு தலையை சுற்றி ஒளி வட்டத்தோடு "உதார்" விட்டுக்கொண்டு சுற்றுவார்கள்.இவர்களைக்கண்டு வியக்காதீர்கள். இவர்கள் அத்தனை பேரும்
வெறும் போலிகளே! சொல் ஒன்றும் செயல் வேரும்மாய் இவர்கள் இருகின்றனர். தாராளமாக அலட்சியபடுத்தலாம்.
நிறைத்த கற்பனை வளமும், சிறந்த சொல்லாட்சியும், பிறரை ஈர்க்கும் வண்ணம் அமைத்த வெளிப்பாடும் உங்களை சிறந்த எழுத்தாளர்களாக ஆக்கும் அன்றி எவர் பின்னாலும் போய் அவர்களை பூஜிப்பது அல்ல.
மேற்சொன்ன 'பிரபல" பதிவர்கள் உங்கள் பக்கம் தலைவைத்துகூட படுக்க மாட்டார்கள்.
புதியவர்களுக்கும், பிற பதிவர்களுக்கும் பின்னூட்டம் இடுவதும் ,ஓட்டு போடுவதும் அல்லது Followers ஆக வருவதும் அவர்களுக்கு கௌரவ குறைவான அல்லது கீழான செயலாக கருதுபவர்களே !
இவர்கள் புதியவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.
தீண்டாமையை பின்பற்றுவார்கள் காரணம் அவர்களுக்கு தேவையான பின்னூட்டங்களும்,ஓட்டுக்களும் ,Followers களுமாக அவர்களுக்கு
காவடி தூக்கி முதுகு சொரிய ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது என்பதால்.
தீண்டாமையை பின்பற்றுவார்கள் காரணம் அவர்களுக்கு தேவையான பின்னூட்டங்களும்,ஓட்டுக்களும் ,Followers களுமாக அவர்களுக்கு
காவடி தூக்கி முதுகு சொரிய ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது என்பதால்.
வெற்று ஆர்ப்பாட்டமும், அதிகாரமும், குழு அரசியலும், அடாவடித்தனமும், பகைமையும், போர் குணமும் கொண்டு ஆடிய இவர்கள் இன்று அணைவரும், லாரியின் கீழே மாட்டிய பெப்சி, கொக்க கோலா தகர டப்பாக்களாக நசுங்கி போய் மதிப்பிழந்து கிடக்கின்றனர்.
Just ignore those notorious factors.
உங்கள் கவனம் திரும்ப வேண்டிய பகுதி கீழே:
உங்களுக்கு அதிகம் பலன் தரக்கூடியதும் உபயோகமானது ஆனா தளங்கள் இங்கு நிறைய உள்ளன .அவைகளில் நிறைய புதிய அறிய தொழில் நுட்பங்களை விவரிக்கும் பதிவுகள் ஏராளம் அங்கு அதிக கவனம் செலுத்துங்கள். நிறைய
தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னூட்டம் இடுவதும், ஓட்டு போடுவது, Followers ஆவதும் இங்கு மட்டுமே சிறப்பனாதாகும் .சந்தேகங்களை கேட்டு நிறைவு செய்வதும் இங்கு மிக எளிது. இந்த தொழில் நுட்ப பதிவுகளை இடும் அணைவரும் சிறப்பான முறையில் உங்கள் சந்தேகங்களை நீக்க உதவி செய்வது உறுதி.
எந்த பதிவுக்கு பின்னூட்டம் இடவேண்டும்,எந்த பதுவுக்கு ஓட்டும் போட வேண்டும், எந்த பதிவருக்கு Followers ஆக செல்லவேண்டும் என்பதில் கவனமாய் இருங்கள்.
ஆனாலும் நல்ல, பண்பாடு உள்ள, கண்ணியமான பதிவர்கள் நிறை இருப்பதால் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வதை அனுபவத்தில் உணரலாம்.
நான் இங்கு வந்து ஒருவருடமாகிறது. எல்லோரும் என் பக்கம் வரவேண்டும் என்று ஆளாய் பறப்பதில்லை, ஓட்டுக்கள் வேண்டும் என்று துடிப்பதில்லை, சில தேர்தெடுத்த பதிவர்கள் இடும் பதிவுகளும், பிற தொழில் நுட்ப பதிவர்களும் என் வட்டமாக இருப்பதால். அவரகள் பதிவு பிடித்திருந்தால் மற்றவற்றை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.இது என் சொந்த அனுபவமும் கூட.
நீங்கள் கொடுக்கும் செய்திகளில் மட்டுமே கவனமாய் இருங்கள். உங்களுக்கு தேவையானது தானாகவே உங்களை வந்து சேரும். யாரையும் அண்டி செல்லாதீர்கள் அங்கீகாரம் வேண்டி.
உங்கள் பதிவுகள் சிறப்பாய் இருக்கும் போது அவைகள் தானாகவே
உங்கள் பதிவுகள் சிறப்பாய் இருக்கும் போது அவைகள் தானாகவே
அங்கீகாரம் ஆகிவிடும். ஏனெனில் இங்கு அறிவில் சிறந்த, ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களும் ஏராளமாக உள்ளனர்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு.
என்று மட்டும் கொள்ளுங்கள்.
தமிழ் வலை பதிவர் உலகம் இனியாவது அன்பும், அழகும், அமைதியும் மற்றும் அறிவும் சேர்ந்து சிறப்படையட்டும்.
இவைகள் வெறும் ஆலோசனைகள் மட்டுமே.நீங்களாக நிறைய தெரிந்து கொள்வீர்கள்.
Be Strong and Bold.
Nothing can Disturb your peace of mind.
நெஞ்சில் உரமும் நேர்மை திறனுமே இங்கு தேவை.
வாழ்த்துக்கள்.
**********************************************************************************
73 comments:
உங்களின் ஆதங்கம் எனக்குப்புரிகிறது .
ஆதங்கம் மட்டும்மல்ல, நீண்ட நாள் ஆசையும் கூட
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்.
:)) ... ரைட்டு சுக்கு - மாணிக்.
மச்சி... ஐ லைக் யுவர் போஸ்ட் !
சூப்பர்ப்...
புதியவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய இடுகை வாழ்த்துக்கள்.....
good post.
சிறப்பான பதிவு மாணிக்கம். பொருத்தமான நேரத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
எளிய நடை - அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்,வேலன்.
//
சிலர் "கதை எழுகிறேன் " "கவிதை எழுதுகிறேன் "என்ற அரிப்பின் காரணமாக் வெளியிடும் அறுவைகளை அடையாளும் கண்டு அவைகளை ஒதுக்குகுங்கள். //
this point is unnecessary
கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாமல் எதார்த்தத்தை உடைத்திருக்கிறீர்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
மிக அருமையான ஆலோசனை.
என்ன எல்லோரும் பார்த்துவிட்டு உடனே செயலில் இறங்கிவிட்டார்கள் போலும்(பின்னூட்டம் அதிகம் வரவில்லையே அதைப் பற்றிக்குறிப்பிட்டேன்)
நல்ல சிந்தனை. எனது மகனும் மனைவியும் அளித்த ஆலோசனை இதுதான். "உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள், பார்ப்பவர்கள் பார்க்கட்டும், பிடித்திருந்தால் பின்னூட்டமிடுவார்கள். ஒட்டு போடவில்லை என்று வருந்தாதீர்கள்" என்றார்கள். அன்று முதல் நான் எழுதுவதை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.
நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Thekkikattan.
மாப்ள யூர்கன் வந்துவிட்டார்.
மாப்ள (எனக்கு) யூர்கனிடம் நிறைய கற்றுகொள்ளலாம் புதியவர்கள்.
நன்றி மாப்ஸ்.
நன்றி ப்ரியமுடன் வசந்த்.
நன்றி செல்வநாயகி
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
Dr.K.P.K சார்.
என்னுடய இன்னமொரு மாப்ஸ் வேலன்.
போட்டோ ஷாப் மற்றும் பலவிதமான
கம்பூட்டர் மென்பொருள்களின் பயன்பாடுகளை
"அள்ளி " விடும் அருமையான பதிவர்.
புதியவர்களுக்கு உதவி செய்ய ஓடிவரும்
பெரும் மனது கொண்டவர் இவர் .
நன்றி மாப்ஸ்.
கலக்கிபுட்டிங்க தலை..தொடருங்கள்.
// சிலர் "கதை எழுகிறேன் " "கவிதை எழுதுகிறேன் "என்ற அரிப்பின் காரணமாக் வெளியிடும் அறுவைகளை அடையாளும் கண்டு அவைகளை ஒதுக்குகுங்கள் //
// this is unnecessary //
--------------------------L. K சொன்னது.
மிஸ்டர் L.K. என்னுடைய பார்வையில், கணிப்பில் இவைகள் எழுதப்பட்டது.
ஒரு வேலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
இங்கு எழுதப்படும் அடுக்கு மொழி வசனங்களை "கவிதைகள்"
என்று விஷயம் உள்ளவர்கள் எற்றுகொள்வதில்லை.
மேலும் இவைகளை படித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.
பெரும்பாலும் இந்த வகை ஆக்கங்கள் "சுய பச்சாதாபத்தின் வெளிப்பாடுகள் "அன்றி
வெறு பெருசாக ஒன்றுமில்லை.
புதியவர்கள் நம்மை விட புத்திசாலிகள் என்று நம்புவதால் இந்த வரிகளை
சேர்த்துள்ளேன்
// இவைகள் வெறும் ஆலோசனைகள் மட்டுமே.நீங்களாக நிறைய தெரிந்து கொள்வீர்கள்//
என்ன ? சரிதானே நண்பரே! :)
உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாற்றங்களுக்க்ம் நன்றி L.K.
கலக்கிபுட்டிங்க தலை..தொடருங்கள்.
வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி ஜி.எஸ்.ஆர்.
sila visayangklai erupudiyathaaka illai ,iruppinum pala karuththukkal erupudiyathaakirathu. good post.
நல்லாத்தான் இருக்குது :))
வாழ்த்துகள் நண்பரே
//பின்னூட்டங்கள் அதிகம் இல்லை, ஓட்டுக்கள் விழவில்லை//
போன்ற விசனங்கள், கவலைகள் எனக்கில்லை.
எனக்கு "பிரமாதம்" என்று தோன்றியவைகள் வாங்கிய மொத்த ஓட்டுக்கள்
வெறும் 7 மட்டுமே. எனக்கு அதிகமாக வரும் பின்னூட்டங்கள் மொத்தம்
7 அல்லது 8 க்கு மேல் போகாது. எனவே இவைகளை பற்றி எனக்கு எவ்வித
வருத்தமும் இல்லை. நிறைய பின்னூட்டங்கள் வேண்டும், நிறைய ஓட்டுக்கள் வேண்டும் என்று
புதியவர்கள் அல்லாட வேண்டாம். இதைதான் நான் புதியவர்களுக்கு சொல்லியுள்ளேன்
"கூடி கும்மி அடிப்பது இங்கு இல்லை" எனக்கு "கும்மி அடிக்க " வெறு சில தளங்கள் உள்ளன :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அமைதி அப்பா
உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் ...
"பிஸ்தா " பிடித்து இருந்தது :)
தமிழ் வலைபதிவு என்பது ஆண்களுக்கான இடம் மட்டும் அல்ல. நிறைய பெண்மணிகளும் வாசகர்களாக, பதிவர்களாக உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு எழுதுங்கள்
பதிவர்களுக்கான கைடு என்று இந்த இடுகையை சொல்லலாம். நேர்மை மற்றும் அருமை.
அட்சர லட்சம் பெறுகின்ற கட்டுரை. பதிவுகளால் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு / பதிவைப் படிப்பவர்களுக்கு ஒரு சத விகிதமாவது பயன் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும் முழுப் பதிவும் நல்ல நோக்கத்துடன் இணையப் புதியவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விவரங்களுடன் உள்ளது. வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
M.S.R . கோபிநாத்.
//சில விஷயங்கள் உஎர்பு உடையதாக இலலை, இருபினும்
பல விஷயங்களில் ஏற்புடையதாகிறது//
--------மதுரை சரவணன் .
உண்மையில் நீங்கள் சொல்லிய கருத்துக்கள் பிடித்துள்ளன.
யாரோ எழுதிவிட்டார் என்று விலக்கவும் வேண்டாம்.
நமக்கு வேண்டியவர் எழுதிவிட்டார் என்று கொண்டாடவும் வேண்டாம்.
இதனை சொல்லவே அந்த திருக்குறள் வரிகளை வைத்தேன்.
எது வேண்டும் எது வேண்டாம் என்ற தெளிவு இருந்தாலே போதுமே !
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நிகழ்காலம் அவர்களே!
"பிஸ்தா" யாருக்குத்தான் பிடிக்காது ?!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பாஸ்கரன் சுப்ர மணியன் .
// பதிவர்களுக்கான கைடு என்று இந்த இடுகையை சொல்லலாம். நேர்மை மற்றும் அருமை ..
------ தமிழ் உதயம்
இந்த கோடை வெய்யிலுக்கு இந்த ஐஸ் சாரி............. நீங்க கடித்து சுவைக்கும் அந்த பழம்
நல்லாத்தான் இருக்கு!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தமிழ் உதயம்.
Hi kakkoo,
Congrats!
Your story titled 'புதிதாக வந்த மற்றும் கண்ணியமான பண்பான தமிழ் பதிவர்களுக்கு மட்டும்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th June 2010 06:07:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/269770
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வருகைதந்து,வாசித்து, பின்னூட்டமிட்டு, கருத்துக்களை பரிமாறிக்கொண்டு ,ஓட்டுக்களும்
இட்டு ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
கக்கு-மாணிக்கம் .
Welcome Sagittarian. I too a Sagittarian.
உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி.
Kggouthaman
பதிவுலகத்தில் Hits, பாலேவோர்ஸ், ஓட்டு போன்ற போதைகளில் விழுந்துவிடாமல் இருக்க உங்கள் கருத்துகள் அவசியமானதே. நன்றி.
"உங்கள் பதிவுகள் சிறப்பாய் இருக்கும் போது அவைகள் தானாகவே அங்கீகாரம் ஆகிவிடும்" சில நேரங்களில் சில நல்ல இடுகைகள் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறது. இது நான் அனுபவத்தில் கண்டது.
// சில நேரங்களில் சில நல்ல இடுகைகள் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறது. இது நான் அனுபவத்தில் கண்டது//
-----------விஜயன்
உண்மைதான் விஜயன், நிறைய தொழில் நுட்ப கட்டுரைகள் இந்த வகையில் கண்டுகொள்ளாமல்
போகும் அவலம் தான் இங்குள்ளது.
சில வேளைகளில் ஒரு கமென்ட் கூட இல்லாமல், ஓட்டும் இல்லாமல் "தேமே" என்று இருக்கும் நல்ல பதிவுகள்
ஏராளம்.இதற்க்கு காரணம் "எது வேண்டும் எது வேண்டாம் " என்ற பகுத்து நோக்கும் பார்வை வேண்டும்.
வெறுமனே சினிமா நடிகைகள் குறட்டை விடுவதையும், அவர்கள் வீட்டு நாய்க்குட்டிகளுக்கு ஜுரம் வந்து
மருத்துவமனை சென்றது பற்றிய பதிவுகள் அதிகம் ஓட்டுக்களும், அதிக பின்னூட்டங்களுடன் முன்னணிக்கு
வந்துவிடுவதும் வழக்கம்தான்.
இதற்க்கு காரணம் "பிரபல பதிவர்கள்"இங்கு குழுவாக கூத்தடிப்பதால் தான். இவைகள் மாறும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்லாருக்கு...
வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி சீனா .பானா.
நல்ல பதிவு.
என்னைப் போன்ற புதியவர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அதுசரி முதலில் உங்க பேர மாத்துங்க சாமீ!
படிக்கும் போது என்னையே சொல்லிகொவது போல
இருக்கு அதுதான் உண்மைஎன்றாலும்.
என்ன பாஸ்.. நாந்தான் லேட்டா?..
உண்மையான கருத்துக்கள்..
ஹிட்ஸ் வெச்சு , பட்ஸ்கூட வாங்கமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை...
என்னுடைய பார்வையில, பதிவு என்பது..ஒன்று புது விசயங்களை அறிந்துகொள்ளவும்.அல்லது..மனசை ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்தான் சார்..
இதில் வேற அடிச்சிக்கிட்டு அல்லோகலப்பட்டு..என்னத்த சாதிக்கப்போகிறார்கள்..
ராத்திரி ரெண்டு மணிக்கு கண்ணுல தூக்கத்துடன் போட்ட பதிவு.
காலைலேருந்து பாத்து பாத்து ....ஆஹா இன்னக்கி "ஞாயித்து கிழமே "ஞாபகம் வர,
"எல்லாம் ஊரு சுத்த பூடிசிக " அப்டீன்னு இருந்தா சாயந்தரம் காப்பி குடிக்கிற சமயத்ல
வந்தாரைய்யா நம்ம பட்டா!
//ஹிட்ஸ் வெச்சு , பட்ஸ்கூட வாங்கமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை..//
--...........-பட்டாப்பட்டி
பின்ன எதுக்கு இந்த வெட்டும் குத்தும் கொல வெறியும்?
யாருக்காக இதெல்லாம்?
தனிமனித வழிபாடா ?
சுயம் வணங்கும் கர்வமா?
மனிதம் அழித்து மனிதம் வாழுமா என்ன?
பின்ன எதுக்கு இந்த வெட்டும் குத்தும் கொல வெறியும்?
யாருக்காக இதெல்லாம்?
தனிமனித வழிபாடா ?
சுயம் வணங்கும் கர்வமா?
மனிதம் அழித்து மனிதம் வாழுமா என்ன?
//
எனக்கென்னமோ அவர்களின் ஆளுமையை நிலைநிறுத்தும் முயற்சிபோல தெரிகிறது..
எதுவாக இருந்தாலும் நமக்கென்று ஆகபோவது ஒன்றும்மில்லை.
ஆனால் அணைவருக்கும் பொதுவான ஒரு தளத்தில் இவர்கள் ஆடடம் போடுவது
என்பது ஏற்றுகொள்ள முடியாது அல்லவா? அதைத்தான் நாம் கேட்க வேண்டும்.
//என்னுடைய பார்வையில, பதிவு என்பது..ஒன்று புது விசயங்களை அறிந்துகொள்ளவும்.அல்லது..மனசை ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்தான் சார்..//
----பட்டா பட்டி
முற்றிலும் உண்மை. அதனால் தான் புதிதாக வருபவர்களை "அதிகம் தொழில் நுட்ப பதிவுகளில் கவனம் வைக்கும் படி"
என் பதிவில் வேண்டியுள்ளேன்
அமைதி அப்பா சொன்னது:
//நல்ல சிந்தனை. எனது மகனும் மனைவியும் அளித்த ஆலோசனை இதுதான். "உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள், பார்ப்பவர்கள் பார்க்கட்டும், பிடித்திருந்தால் பின்னூட்டமிடுவார்கள். ஒட்டு போடவில்லை என்று வருந்தாதீர்கள்" என்றார்கள்.//
நல்ல ஆலோசனை, நானும் கடைப்பிடிக்கிறேன்.
அண்ணே...கலக்கிட்டீங்க
இதை நான் எழுத காரணமே உங்க பதிவுதானைய்யா !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உங்களின் உண்மைக்கு என் வாக்குகள்!
வீனர்களின் வீனான தளங்களை தவிர்ப்போம்.
சந்தனக் கமழ் சாதி மதங்களை சாக்கடையாக்கும்
போலி சமயவதிகளின் தளங்களையும் புறக்கனிப்போம்!
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!!
I agree for your concern but this is not the fact. There are great writers bloggers are here whom we cant find in print media. few examples are: ayyanar, sidhaarth, Narsim, Lekha, Tamayandhi, Gayathri (palai Thina), Kalapana sekkizaar..
If your writing is good definitely co bloggers would appreciate your writing and will follow your blog.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
சகோ. சலீம் பாஷா.
Dear Raamji,
I request you to go through once again in to my posting here.
The same concept, what you are high lighting in your good comments have been emphasized
in my post here.I never said that there were no "great writers" in bloggers forum.
I simply highlighted the vested interest which dominating and spoiling the arena and unleashed their terror activities in the name of "the popular/ famous blogger" and again in the name of "freedom to express"
I simply offered a few suggestions to the new bloggers which they have to avoid those notorious.
I have been since last one year in the Tamil Blogs.The bloggers names which have been given here by you is completely unknown to me. Sorry.
//If your writing is good definitely co bloggers would appreciate your writing and will follow your blog.//
The above statement is true,but I never saw those "great writer's" name in any of the blogs comment box,
never saw a single face in any follower's box. but I have got a good numbers of followers and visitor in my blog.
This is the thing I explained to the new comers that the so called bloggers are practicing "untouchable" attitude
or groupism and requested them to keep away from them instead of going to their area and getting in to petty fightings.
Thank you for you comments.
cheer
Manickam
வணக்கம் நண்பரே,
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
இது அவ்வையார் வாக்கு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தமிழ் வலைய பதிவுலகில் உள்ளதை உள்ளபடியே சொன்ன உங்களோடு இணைவதில் ஆர்வம் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழார்வன்.
உங்களின் பாராட்டுகளுக்கு நான் தகுதியானவன் இலலை.
அப்படி ஒன்றும் செய்துவிடவும் இலலை.
நீங்கள் புதிய பதிவர் என்று அறிகிறேன்.
சேர்ந்தே பயணிக்கலாமே.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழரே.
கவர்ச்சியான ஒளியின் ஈர்ப்பால் நெருப்பின் அருகே செல்லும் குழந்தைக்கு அதில் மறைந்திருக்கும் சூடு பற்றி தெரியாது. நெருப்பு என்றால் ஒளியும் இருக்கும்; சூடும் இருக்கும் என்று குழந்தைக்கு முதலில் சொல்லி தருபவள் தாய் தானே. . .
அதுபோல இன்றைய தமிழ் வலைப் பக்கங்களின் நிலையை எடுத்து கூறியதோடு நில்லாமல் என்னைப் போன்றவர்களுக்கு, செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை என பட்டியலிட்ட செயலே நல்ல தகுதி உடையவர்களுக்கே வரும்.
நல்ல பதிவு நண்பரே. . .
வணக்கம் தோழரே!
வாசகர்களை மதித்து அவர்களின் கருத்துக்களையும் மதித்து ஓட்டு போடுவது, பின்னூட்டம் போடுவது
குறித்து ஆலோசனைகள் வழங்கியிருந்தீர்கள். அருமை. உங்களைப் போன்ற பதிவர்கள் வாசகர்களை மதிக்க வேண்டும். எல்லாம் தெரிந்த மேதாவி போல் வாசகர்களின் பின்னூட்டத்திற்கு கூட மதிப்பளிக்காமல் செருக்காக பேசும் பதிவர்களுக்கு உங்கள் கட்டுரை போய் சேர வேண்டும். எங்களின் வேலை பளுகளுக்கிடையே இன்று பதிவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று அறிந்து அதை பாராட்டி பின்னூட்டம் போட்டால் சில தலைக்கனம் கொண்டம் பதிவர்கள் அந்த பின்னூட்டத்தை மதிப்பதே இல்லை. ஆனால் ஓட்டும், கருத்தும் மட்டும் கேட்டு விடுகின்றனர். இப்பட்டிப்பட்ட பதிவர்களுக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு?
உங்களின் கட்டுரைக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள். நன்றி. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
gr8 jop sir............
வாருங்கள் நித்யா,
நானும் சென்றவருடம் தான் இங்கு வந்துசேர்ந்தேன்.
ஒன்றும் புரியாமல் எல்லாவற்றையும் போட்டு குழப்பி கொண்டிருக்கையில்
அழயாமலேயே என் தளத்திற்கு வந்து என்னை வரவேற்று வாழ்த்திய பதிவுலக அன்பு
நண்பர்கள்.திரு. "அதேகண்கள் "-டவுசர்பாண்டி, திரு ."தமிழ் நெஞ்சம்" டெக் ஷங்கர்,
திரு.ஸ்ரீ , திரு .தேவன் மாயம் மற்றும், கிராமத்துப்பையன்,கூல்கார்த்தி, சூர்யா கண்ணன், கோவி கண்ணன் போன்ற மூத்த பதிவர்கள் இந்த பட்டியலில் வருவர்.
பிறகு அறிமுகமாகிய வேலன், யூர்கன் க்ருகியர் போன்றவர்களிடம் நான் நிறைய தெரிந்து கொண்டேன்.
இவர்களை அன்றி பேலும் பல பதிவர்களின் தொடர்பும் ,நட்பும் கிடைத்தன.
இன்று நாங்கள் உற்ற நண்பர்களாகவே மாறிவிட்டோம்.
ஒவ்வொரு வாசக் பின்னூட்டத்திற்கும் கண்ணியமான முறையில் பதில் எழுத கற்று கொடுத்தவர்கள் டவுசர்பாண்டி மற்றும் வேலன் ஆவார்கள். இவர்களிடமிருந்தே நான் கற்றேன். அதுதான் நம் வாசகர்களுக்கு நாம் செய்யும் கௌரவம் ஆகும்.
நீங்கள் கூறியிருப்பதை போல சில "பிரபல பதிவர்கள் "அலட்சியமாக பதில் எதுவும் சொல்லாமல் இருப்பார்கள் என்று தெரியும். நேரமில்லாமல் இருந்தால் கூட, தாமதமானாலும் வாசகர்களுக்கு பதிஎழுதுவதே சிறப்பு.
குறிப்பிட்ட பதிவர்களுக்கென்று ஒரு "கூட்டம் " இருப்பதால் இவர்கள் வெளியிலிருந்து வரும் பிற வாசகர்களை அலட்சியமாக புறக்கணிப்பர். இதுபோன்ற குழு அமைப்புக்களே நிறைய உண்டாகி அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு.....ஏதேதோ ஆகிபோனதியும் அறிவீர்கள்.அல்லவா?
என்னுடைய பதிவில் நான் புதிவர்களுக்கு சொல்லுவதும் இதுதான். குழு சேராதீர்கள்.எந்த குழுவிடமும் மாட்டாதீர்கள்.சுயமாக இருங்கள்.பதிவர்களிடம் நட்புடன் இருப்பதுவேறு. ஒரு குழுவாக செயல் படுவது வேறு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும்
மிக்க நன்றி தமிழ்.
உண்மையில் இவைகள் போய் சேரவேண்டியது
எனக்கு வழிகாட்டிய அன்பு நண்பர்கள் திருவாளர்.டவுசர் பாண்டி,
யூர்கன்,வேலன் மற்றும் தமிழ் நெஞ்சம் மற்றும் இன்னா பிற அன்பு பதிவர்களுக்கே.
They are my Inspirations in blog making.
நித்யா அவர்களுக்கு எழுதிய என் பதிலை பாருங்கள்.
நன்றி.
welcome Thiru Mythees,
TanQ 4 u r comments Sir!
நல்ல பதிவு நண்பரே.
மலினமான பதிவுகளுக்கும், பதிவர்களுக்குமான ஆராதிப்புகளுக்குள் தொலைந்து போகின்ற நல்ல பதிவரின் முகவரிகள் பற்றியதான ஆதங்கங்களை உங்கள் பதிவுகளில் பார்க்கையில் ஒரு முறை தளவாடி பார்த்த சந்தோசம் எனக்கு. இந்த ஒருமித்த அலைவரிசைகள் கலக்கும் போது எழுத்தின் பாடுபொருள்களும் பன்முகத்தளத்தை சுமக்கும் என எதிர்பார்க்கலாம்.
// மலினமான பதிவுகளுக்கும், பதிவர்களுக்குமான ஆராதிப்புகளுக்குள் தொலைந்து போகின்ற நல்ல பதிவரின் முகவரிகள் பற்றியதான ஆதங்கங்களை உங்கள் பதிவுகளில் பார்க்கையில் ஒரு முறை தளவாடி பார்த்த சந்தோசம் எனக்கு.//
-----------------Muszhaaraff Muthunabeen
இது எல்லா இடங்களிலும் நடக்கும் அவலங்களின் தொடர்ச்சியே.
இதே வகையான சின்னத்தனங்களை நாம் தினசரி வாழ்கையில்
எல்லா இடங்களிலும் பார்க்கத்தான் நேரிடுகிறது.
அதுவே இங்கும் பரிணமித்துள்ளது.அவ்வளவே.
கையாலாகாதவர்களின் சதவிகிதம் நம் கூட்டத்தில் சற்று அதிகமே.
அவர்களுக்கு தங்களை வழிநடத்த ஒரு தலைமை வேண்டுமென
ஏங்க, விருப்பம் போல ஒரு தலைமையும் கிடைக்க ,அப்புறம்
என்ன சொல்லவேண்டுமா?
கூஜா தூக்கினால் பிழைக்கலாம் என்ற சித்தாந்தம் பலன் அளிக்க
தூக்குபவர்களின் மடங்கு அதிகமாகத்தானே ஆகும்.
ஆனால் இந்த கேவலம் படித்தவர்கள் நிறைந்த வலைதளத்தையும்
விட்டு வைக்க வில்லை. போலிகளும், பொய்யர்களும் ,திருடர்களும்
காலிகளும் இங்கு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளனர்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
sarguru saba.
சரியான நேரத்தில் சரியான ஆலோசனை.நன்றி.நன்பரே.
நண்பரே... நான் கொஞ்சம் Late...!
உண்மையை உலகுக்கு உரைத்திருக்கிறீர்கள்....!
வாழ்த்துக்கள்....!
தங்கள் கருத்துக்களை இப்போதுதான் வெளியிட்டுள்ளீர்கள்...
எனது bloogerஇல் "உங்கள் சுயவிவரம்"த்தில் *****"அலுவலக பணிச் சுமையிலிருந்து விடுபட வலையில் கால் பதித்தேன்... பெரும்பாலான கருத்துக்கள், கவி வரிகள், எனக்கு உடன்பட்டதாகவும், எனக்கு ஏற்புடையதாகவும் - சமூகச் சாடலும் - சமூக அக்கறையும் - மனிதமும் - மனிதநேயமும் - மனிதாபிமானமும் - இயற்கையாய் இருந்தால் என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன்....
எனக்கு பிடிக்காத கருத்துக்கள், முரண்பாடான கவிதைகள் இருந்தால் அன்று எனது கருத்துரைகள் இருக்காது...
ஏனெனில் என் கருத்தை யார்மீதும் திணிக்க விரும்புவதில்லை.....`*******
என்ற இந்த என் கருத்தினை ஆழப் பதித்துள்ளேன்... என் blogger இன்றும் காணலாம்....
நல்ல அறிவுரை... இதேற்கே ஓர் சபாஷ்....!
உண்மை.. நண்பா...
நல்ல இடுகை... நான் பெரும்பாலும் தங்கள் கருத்துக்களில் உடன்படுகிறேன்... நல்ல அறிவுரைகள்... வாழ்த்துக்கள்...
நட்புடன்......
காஞ்சி முரளி
வாருங்கள் காஞ்சி முரளி.
தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும்
ஆதரவிற்கும் நன்றி.
தொடருங்கள்.
இன்றைய யதார்த்த நிலையை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்!
வாருங்கள் Maximum India.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மையை நானும் ஏற்கிறேன் ஆனால் என்ன செய்வது இது தான் உலகம்.
எப்படின்னு தெரியல எதார்த்தமா நான் வளம் வரும்போது இந்த பதிவு என் கண்ணில் பட்டது. எதார்த்தமான வரிகள், எதார்த்தமான மனிதர். இந்த பதிவ போடும்போதே நீங்கள் ஒருவருடம் அனுபவம் வாய்ந்தவர்(சீனியர்) அப்படி இருந்தும் இந்த மாதிரி உங்களால் துணிந்து பதிவு எழுத முடிந்தது என்றால், என்ன சொல்ல.
நன்றி சார் உங்கள் மூலம் எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தது.
கருத்துரையிடுக