பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூன் 2

குல்பி ஐசும் - சொறி நாய் கூட்டங்களும்!

வழக்கம் போல இரவு பத்து அல்லது பத்தரை மணிக்கு மேல் தெரு அடங்கி விடும் .நான் வெளியில் வந்து அமர்ந்துவிடுவேன். காற்று குளிர்ந்து வீச,காதுகளில் ஐ -பாட், பிளாஸ்டிக் சேரில் சாய்ந்து அமர்ந்துகொண்டு காற்றையும் பாட்டையும் அனுபவிக்க.என் பிள்ளைகளில் ஒன்று "பாம்பு பிடித்த குரங்காக" கையில் செல் போனை வைத்துக்கொண்டு SMS அனுப்பிக்கொண்டிருக்கும் தன்னையொத்த கிறுக்குகளுக்கு.

தூரத்தில் குல்பி ஐஸ் விற்கும் வண்டி வரும் போது பிள்ளை வீட்டினுள் சென்று காசை கொண்டுவந்துவிடும்.
ஐஸ் காரன் ஒவ்வொரு வீடாக முடித்துக்கொண்டு எங்களிடம் வருவான்.தெலுங்கில் செல்போனில் யாருடனோ பேசியபடி.தானாக இரண்டு குல்பிகளை எடுத்து மூங்கில் பட்டையை அதில் சொருகி தந்துவிட்டு காசை வாங்கிகொண்டு மணியை ஆட்டிக்கொண்டு நகர்வான்.

குளிரில் நிறைந்த பாலின் செழுமையும்,சர்க்கரை இனிப்பும், ஏலக்காய் மனமும் அந்த நேரத்தில் சுகமாய் இருக்கும்.இதுதான் தினமும் நடக்கும். இன்று இரவு வேறொன்றும் நடந்தது. ஐஸ் க்ரீம் காரன் நகர்ந்தவுடன் தெருவின் கடைசியிலிருந்து ஒரே நாய்களின் சப்தம் காதை துளைத்தது. ஐந்து அல்லது ஆறு நாய்கள் இருக்கும், ஒன்றுகொன்று கடித்து குதறிகொண்டு ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக்கொண்டு ஒரே க்ரூபாக ஓடி வந்து கொண்டிருந்தன.கிட்டே நெருங்க நெருங்க அவைகளின் சப்தம் தாள வில்லை. எங்களைகடந்து அந்த தெரு நாய்கள் ஓடும்போது சட சட வென அவைகள் மீது செங்கற்கள் விழ அடிபட்ட நாய்கள் திசைகொன்றாக ஓடி தொலைந்தன .

சில வீடுகள் தள்ளி வீடு கட்டும் வேலை நடப்பதால் வாசலில் நிறைய உடைந்த செங்கற்கள் குவிந்து கிடக்கும்.
நாய்களின் குறைக்கும் சப்தம் தாளாமல் அந்த வீட்டுக்காரர் தான் செங்கற்களால் அடித்து அந்த தெரு நாய்களை 
விரட்டினார்.குல்பி ஐஸை சுவைத்தபடி என் பிள்ளை கேட்டான்
" ஏன்ப்பா இந்த நாய்கள் இவ்வளவு furious ஆ சண்டை போடிகின்றன? "
" நாய்கள் அதுவும் தெரு நாய்கள் அப்படித்தான்" - நான்.

எனக்கு ஏனோ "பிஸ்த்தா "பதிவர்கள் போடும் சண்டைகள்தான் நினைவுக்கு வந்தது.சிரித்துக்கொண்டேன் .
வெறி பிடித்த சொறிநாய்கள் . அடித்து விரட்ட வேண்டும் இவைகளை .
                                                             


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^17 comments:

மசக்கவுண்டன் சொன்னது…

உவமை மிகப்பொருத்தம்.

மசக்கவுண்டன் சொன்னது…

டெம்ப்ளேட் சூப்பர்.

smart சொன்னது…

புரியபடல. வாதியும் பிரதிவாதியும் நாய் என்கிறீர்களா? விளக்குங்கள்

வேலன். சொன்னது…

பிள்ளைகளில் ஒன்று "பாம்பு பிடித்த குரங்காக" கையில் செல் போனை வைத்துக்கொண்டு SMS அனுப்பிக்கொண்டிருக்கும் தன்னையொத்த கிறுக்குகளுக்கு.//

அருமையான உதாரணம் ...சாட்டையடி வரிகள்.வாழ்க வளமுடன்,வேலன்.

சசிகுமார் சொன்னது…

பதிவுலகில் சண்டையா தீர்த்துவைக்க நம்ம தள கட்டதொரைய கூப்பிடலாமா சார் .நல்ல பதிவு சார் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Hi kakkoo,

Congrats!

Your story titled 'குல்பி ஐசும் சொறி நாய் கூட்டங்களும்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd June 2010 03:14:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/266461

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

************************************************

ஓட்டு அளித்த உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள்.
நாமாவது நல்ல மனிதர்களாக இருப்போம்.

வணக்கம்
கக்கு - மாணிக்கம்

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சண்டையிடும் ***** மீது கல்லெறிந்து ஆட்டையை கலைத்தால் நாள பின்ன சண்ட போட்ட அனைத்தும் கூடி குலாவி உங்கள கடிக்க வரும் பரவாலையா?
பீ கேர் புல்!


தமிழ்மணம், தமிளிஷ் தளங்களை ஓபன் பண்ணினாலே குரைக்கும் சத்தம் கேட்கிறது ..
கருமம் !! கருமம் !!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

"மச்சக்கவுண்டன் " - என்ன பெயர் இது?
மச்சக்கவுண்டர் என்றால் நல்லாதானே இருக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
மாப்ஸ்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மிஸ்டர் ஸ்மார்ட்,

வாதி, பிரதிவாதி பற்றிய கவலைகள் எனக்கு இல்லை.
மொத்தத்தில் இந்தஇடத்தில இப்படியொரு கேவலமான
செயல் பாடுகள், அருவருப்பான, அசிங்கமான வெளிப்பாடுகளில்
படித்த பண்பாடுள்ள,நாகரீகமான எவரும் ஈடுபட மாட்டார்கள்.
யார் குற்றவாளி, யார் நிரபராதி இவைகளை எல்லாம் விட்டு
யோசியுங்கள். நடக்கும் நிகழ்வுகள் அதற்கு எதிவினைகள் ,
என்று மிகவும் கீழ்தரமானதாக போய்கொண்டிருப்பதை அறிவீர்கள்.
இவர்கள் எல்லாம் படித்தவர்களா?
இரண்டு பேருக்குள் அல்லது இரண்டு குழுக்களுக்குள் கருத்து வேற்றுமை என்றால்
சம்பந்தப்பட்டவர்கள் அதனை தங்களின் சுய மரியாதை கருதி வேறு எவரின் தலையீடு இல்லாமல் தீர்துகொண்டிருக்கலாம்.அதை விட்டு , எல்லோருக்கும் பொதுவான ஒரு தளத்தில் இந்த குழுக்கள் மிக கேவலமாக நாகரீகமற்ற முறையில் பதிவிட்டு தங்களின் வன்மங்களை காட்ட இது இடமல்ல.
"இல்லை நாங்கள் இப்படித்தான் இருப்போம், நீர் யார் எங்களை பற்றி பதிவு இட " என்று சொல்லிவிட்டாலும் என்விளக்கம் இதுவேதான்.
"உங்களுக்கு சண்டைபோட்டுதான் ஆகவேண்டும் என்றால் அதற்கு இந்த தளம் இடமல்ல
வேறு எங்காவது ஒரு போது இடம் பார்த்து தேதி, நேரம் குறித்து, யாருடைய தலைமையிலாவது
இந்த கண்ட்ராவிகளை வைத்துக்கொள்ளுங்கள் "
என்றுதான் சொல்லப்படும். வலைமனை ஆனாலும் அதற்கேன்றும் வரைமுறைகள் இருபது எல்லோருக்கும் தெரியும்தானே. அளவைமீறினால் அத்தனைக்கும் கேடுவந்துவிடும்.

பதிவர்கள் என்றால் என்ன தலயில் கிரீடமா வைத்துள்ளது?
அல்லது இரண்டு கொம்புகள்தான் முளைதுவிட்டதா?

நமக்கென்று கிடைத்துள்ள இந்த தளத்தை ஆககமுறையில் பயன்படுத்துவதை விட்டு இது என்ன
இப்படி வெறிபிடித்த நாய்களை விட கேவலமாய் ..................

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் சசி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// சண்டையிடும் ***** மீது கல்லெறிந்து ஆட்டையை கலைத்தால் நாள பின்ன சண்ட போட்ட அனைத்தும் கூடி குலாவி உங்கள கடிக்க வரும் பரவாலையா? பீ கேர் புல்! //

யூர்கன்.


இதையும் நான் புரிதுதான் வைத்துள்ளேன் மாப்ள.
நான் இங்கு எழுதுவதால் ஒன்றும் தலைகீழ் மாற்றங்கள் வரபோவதில்லை.
எதையும் மாற்றும் பொருட்டும் நான் இங்கு ப்ளாக் எழுதவில்லை.
என்னை பொறுத்தவரை இது ஒரு 'பகிர்தல்" மட்டுமே. நமகென்று உள்ள
நண்பர்களிடம் நாம் நம்மை பகின்ர்து கொள்கிறோம்.Thats all.

இது ஒரு பொது இடம். எவருக்கும் சொந்தமல்ல, எல்லோருக்கும் உரிமை உள்ள இடத்தில்
நாம் அடுத்தவர் உரிமையை மதித்து நடந்தால் இந்த கேவலங்கள் இல்லை.

இதைவிட்டு நான் பெரிய "டுபுக்கு" "என்னை மாதிரி யார் எழுதுவார் "
போன்ற சின்னத்தனங்கள் எனிடம் இல்லை.

யாருக்காகவும் ஜால்ரா அடித்து 'சொம்புதூக்க ' எனக்கு அவசியம் இல்லை.


சண்ட போட்ட அனைத்தும் கூடி குலாவி கடிக்க வரும் பட்சத்தில் எனக்கு வேலை சுலபம்
அத்தனை களையும் அள்ளி வேனில் ஏற்ற !

மேலும் இவர்களின் ஆபாச அர்ச்சனைகளால் ஒன்றும் செய்ய இயலாது.
அவைகளுக்கு பயந்தவனும் அல்ல.தஞ்சாவூர் காரனுக்கும் பேசத்தெரியும் மாப்ஸ்.
அவர்கள் பத்து என்றல் நான் நாற்பது என்பேன்.


இவர்கள் பண்ணுவது வெறும் விளையாட்டு அல்ல மாப்ள. இது Cyber terrorism

Cyber Crime branch இவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று
அறிகிறேன்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//சண்ட போட்ட அனைத்தும் கூடி குலாவி கடிக்க வரும் பட்சத்தில் எனக்கு வேலை சுலபம்
அத்தனை களையும் அள்ளி வேனில் ஏற்ற !//


நினைத்து நினைத்து சிரிக்க வைத்தன உங்கள் வரிகள்.

Siva சொன்னது…

"தஞ்சாவூர் காரனுக்கும் பேசத்தெரியும் "
இந்த இடம் கொஞ்சம் இடிக்குதே?

பெயரில்லா சொன்னது…

இடுகையின் லிங்கை அனுப்பியமைக்கு மிக்க நற்றி அண்ணே...மிகச்சரியான உவமையுடன் இந்தப் பதிவை எழுதியிருக்கிறீர்கள்.இதை வலையுலகில் இருக்கும் பிஸ்தா பதிவர்கள் உணர்ந்து கொண்டால் சரி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

உண்மையில் நான் எழுதியது இந்த " வலையுலக Terrorist " களுக்காக அல்ல.
புதியவர்களும், கண்ணியமான பதிவர்களும் மட்டுமே படித்தால் போதும்
என்ற எண்ணத்தில் தான்.

இந்த "Terrorist " களை நான் அடையாளம் கண்டுகொண்டதால் மற்றவர்களுக்கும்
சொல்லும் எண்ணத்தால் இந்த பதிவு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

"தஞ்சாவூர் காரனுக்கும் பேசத்தெரியும் "
இந்த இடம் கொஞ்சம் இடிக்குதே?
-------சிவா

தெரியும் சிவா, நீங்கள் வலையுலகத்திற்கு புதிதாக வந்தவரா என்ன?

இந்த "பிஸ்தா" பதிவர்கள் விடும் "பீலா" வும் இப்படித்தானிருக்கும். அவர்கள் இங்கு காட்டும் வீரமும் , ஹீரோயிசமும் , ஆண்மைதனமும்
மகா வேடிக்கையாக இருக்கும். பதிவிற்கு எதிர் வினைகள் வந்தால் அவைகள் என்ன கதியில் இருக்கும் என்று நான் அறிவேன்.
மிக மோசமான நான்காம் தற ரேஞ்சில்தான் எழுதுவார்கள்.

அதற்காகவே நானும் இந்த "தஞ்சாவூர் பீலாவை " போட்டு வைத்தேன் Deliberately.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக