பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மே 17

அட்சய திருதியை - அற்புதங்கள் .



































வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்கி வீட்டில் வைத்துவிட்டால் போதுமாம்,பின்னர் தங்கம் அந்த வீட்டில் பல்கி பெருகி சேர்ந்துவிடுமாம். இதை கேட்கும்போதே கேணத்தனமாக தோன்றவில்லை?
திருமண வைபவம் , தீபாவளி, பொங்கல், வருட பிறப்பு போன்ற நாட்களில் பெரும்பாலும் தங்க நகைகள் வாங்கும் பழக்கம் தான் நம்மிடம் இதுவரை இருந்து வந்து. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, அரபு நாடுகளில் நல்ல வியாபாரம் செய்து நிறைய கிளைகளை பெற்றுள்ள அந்த நிறுவனம் கேரளாவிலும் ,சென்னையிலும் காலூன்றியது. மலையாளிகள் அல்லவா? கபடிற்கும், சூதுக்கும் பெயர்போனவர்கலாயிற்றே!

"அட்சய திருதியை " என்று ஒரு புது வியாபார யுக்தியை கொண்டுவந்து அந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல்கி பெருகும் என்று மீடியாக்களில் காசை கொட்டி வித விதமாக் விளம்பரபாடுத்த, வந்தது வினை உழைத்து சேமிக்கும் காசுக்கு. அந்த குறிப்பிட்ட நாள் வரும் முன்னரே கடைகளில் முன் கூட்டியே தங்கம் வாங்க பதிவு செய்துகொள்ளும் நிலை வரை வந்தது. தினசரி, வார இதழ்கள் எல்லாம் இந்த 'அட்சய திருதியை ' பற்றித்தான் விதவிதமாக கதை விட ஆரம்பித்துவிடும்.

இது போதாதா நம் பெண்மணிகளுக்கு. தங்க நகை விற்கும் கடைகளின் முன்னே தேர்த்திருவிழா தான். போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும் அளவு கடைகளில் பெண்கள் கூட்டம்.அதுவும் மெத்த படித்த,அறிவில் சிறந்த I. T. பெண்கள் தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வணிகர்களின் நோக்கமும் இதுவேதான். வீட்டில் இருக்கும் பெண்களோ கண்ட கழிசடை விளம்பரங்களை டி.வி யில் பார்த்துவிட்டு அவர்களும் "ஏதாவது" வாங்கிவிடவேண்டும் என்று நகை கடைகளை படையெடுக்க தங்கம் விற்பவர்களுக்கு தங்கள் "கல்லா" நிரம்பிய மகிழ்ச்சி. சொல்லி வைத்தார் போல சில தினங்களுக்கு முன்னரே தங்கத்தின் விலையில் வேறு ஏற்றம் இருக்கும். 

மலையாளிகளின் புத்தியில் பிறந்தது இந்த அட்சய திருதியை என்றால், நம்ம ஊர் அண்ணாச்சிகள் பல வருடங்களுக்கு முன்னரே "ஆடி கழிவு அதிரடி தள்ளுபடி" விற்பனையை ஆரம்பித்துவிட்டனர்.
பொத்தல் விழுந்தவைகள், இற்றுபோனவைகளை "தள்ளுபடி விலையில் " தலையில் கட்டி சென்னை T.நகர் மொத்தமும் வளைத்து போட்டு விட்டார்கள்.

வருடத்திற்கு ஒரு அட்சய திருதியை இனிமேல் பத்தாது. வரும் காலங்களில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று வந்து விடும் . பின்னர் சிலவருடங்கள் கழித்து மாதா மாதம் அம்மாவாசை, பௌர்ணமி, கிருத்திகை வருவது போல அட்சய திருதியையும் மாதா மாதம் வந்துவிடும் பாருங்கள்.

முற்போக்கு வாதிகளாக தங்களை காட்டிகொள்ளும் மீடியாக்கள் விளம்பர தந்திரங்களால் தங்கள் கல்லா நிரம்புவதை கண்கொண்டு பூரித்து போகின்றன. பெண்ணியம் பேசி தங்களை முற்போக்கு வாதிகளாக 
காட்டிகொள்ளும் அம்மணிகள் இந்த அட்சய திருதியை கூட்டத்தில் காணாமல் போய்விடுவார்கள்.கண்டுகொள்ளாதீர்கள்.

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் வெறும் தங்க ஆபரணம் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக சாதனங்கள் டி.வி. ஏ,சி .கிரைண்டர்,ஆட்டுக்கல் ,அம்மி ,பிளாஸ்டிக் டபபி முதல் விளக்குமாறு,செருப்பு என்று சகலமும் இதே நாளில் கூறு கட்டி விற்க ஆரம்பித்துவிட்டனர் 
அண்ணாச்சிகள்.

இதற்க்கு பெயர்தான் "இடுக்கில் கடுக்கன் கழட்டுவது "

தங்கம் வாங்குவது மிக நல்ல முதலீடுதான். ஆனால் அதனை சமயம் அறிந்து செய்யவேண்டும்.யாரோ சில பேராசை முதலாளிகள், சில MBA படித்த அல்லது C A படித்த மலையாள கயவர்கள், தங்கம் வாங்குவதையும் , கடவுள் நம்பிக்கை, மதம், அதிஷ்டம் இவைகளை ஒன்றாக சேர்த்து இட்டுகட்டி தயாரித்த இந்த 'அட்சய திருதியை " என்ற தில்லு முள்ளு வியாபார தந்திரத்தை கொண்டாடாதீர்கள்.



26 comments:

ப.கந்தசாமி சொன்னது…

அட்சய திருதயை பற்றி என் சின்ன வயசில், ஏன், என்னுடைய 60 வயசு வரையில் கேள்விப்பட்டதே இல்லை.

அதே மாதிரி என் சின்ன வயசில் ஆடித்தள்ளுபடி, ஆடாத தள்ளுபடியெல்லாமும் கேள்விப்பட்டதேயில்லை.

வியாபாரிகளின் விளம்பர யுக்திகளே தவிர இவைகள் வேறொன்றுமில்லை.

ஜனங்களிடையில் பணப்புழக்கம் அதிகமாகிவிட்டதால் அந்தப்பணத்தை தங்கள் கல்லாவிற்குள் கொண்டுவரும் ஜாலங்கள்தான் இவை.

ப.கந்தசாமி சொன்னது…

எப்படியோ இன்றைய பதிவிற்கு ஒரு சப்ஜெக்ட் கெடச்சுது :-)

நம்மளைப்பொருத்த வரையில் அது ஒரு பெரிய லாபமல்லவா?

வேலன். சொன்னது…

உங்களுக்கு தெரியுமா..? வியாழக்கிழமையில் அமாவாசை வந்தால் விஷேஷம். அன்று பிளாட்டினம் வாங்கினால் நமது வீட்டில் செல்வம் சேரும் ....இதுபோல் விளம்பரமும் இனிமேல் வரலாம்...யார்கண்டது? வாழ்க வளமுடன்,வேலன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

படிச்சா அறிவு வளருமுனு சொல்றாங்க..
ஆனா, படிச்சவனே இப்படி பண்றாங்களே?..

என் சார்..அட்சய திருதியை அன்று , கழிவறை போனால்..அந்த வருடத்திலேயே நிரம்பிவிடுமா?...

சசிகுமார் சொன்னது…

இந்த மக்கா எப்போதான் திருந்த போறாங்களோ ஒண்ணுமே புரியல , உங்கள் pugal மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்களை போன்ற வயதும் அனுபவமும் கொண்ட பெரியவர்கள்
இது போன்ற வியாபார பித்தலாட்டங்களை பற்றி நிறைய
எழுத வேண்டும் அய்யா !

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//எப்படியோ இன்றைய பதிவிற்கு ஒரு சப்ஜெக்ட் கெடச்சுது :-)

நம்மளைப்பொருத்த வரையில் அது ஒரு பெரிய லாபமல்லவா? //

டாக்டர் கே.பி. கந்தசுவாமி.

உண்மைதான். "எந்த கருமத்தை பற்றி எழுதுவது" என்று தலையை
சொரிந்து கொள்ளும் போது இது போன்ற ஏதாவது நடப்புக்கள் நிகழ்வுகள்
நடந்து கொண்டிருக்க, அவைகளே நமது இலக்காக ஆகிவிடுகின்றன,

அதுசரிதான் சார், பின்னூட்டம் இட வந்து "பூனைதோல் கம்பெனி "
என்ற ஒரு ஜாலியான பதிவை போட்ட உங்க சாமர்த்தியமும் ,சாதுர்யமும்
எங்களுக்கு வருமா சார்!

பொன் மாலை பொழுது சொன்னது…

இருப்பது எல்லாம் பத்தாது என்று இது வேறயா மாப்ள.

வியாழக்கிழமை அன்று அம்மாவாசை வந்தால் பிளாட்டினம் வாங்கி
வீட்டில் வைக்க வேண்டுமா?
முதலில் இந்த மீடியாகளை அடித்து உடைத்து நாசம் செய்தால் பாதி
பிரச்சினை தீர்ந்துவிடும். மீதம் உள்ளது பத்திரிக்கைகள் எல்லா பயலுவலையும் கும்மி எடுத்துவிட்டு பத்திரிகைகளே வேண்டாம் என்று
வரவேண்டும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

பட்டாப்பட்டி அண்ணாத்தே !
யாரு அறிவு வளர படிக்கிறாங்க? "கைநிறைய சம்பாதிக்கவேனும்"
இதுதானே எல்லோருக்கும் சொல்லப்படிருக்கு.


நீங்க அடுத்து கேட்ட கேள்விக்கு அடுத்த வருடம் தான் பதில் தெரியும்.
நம்மக்கு Trial நடந்தபின்னர் தான் ப்ராக்டிக்கல்

எதற்கும் யாராவது "வேதம்"படித்து கிழித்த அய்யர்களிடம்தான் கேட்கவேணும்..

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சசி.

Prasanna சொன்னது…

சாட்டை அடி :)

பொன் மாலை பொழுது சொன்னது…

அதெல்லாம் ஒன்றும் இல்லை.
நம்மவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி நண்பரே!

sweet சொன்னது…

huh

such a crazy article...

its not cheating...

if u like u can buy... they r not cheating....

okey nee enna business panra??

oru potti kadai vachu unnala manage panna mudiyuma?

okey-ya

i think u r maddd

bye

madhumidha
madhumidha1@yahoo.com

கால்கரி சிவா சொன்னது…

//சில MBA படித்த அல்லது C A படித்த மலையாள கயவர்கள், தங்கம் வாங்குவதையும் , கடவுள் நம்பிக்கை, மதம், அதிஷ்டம் இவைகளை ஒன்றாக சேர்த்து இட்டுகட்டி தயாரித்த இந்த 'அட்சய திருதியை " என்ற தில்லு மு//


ஏன் மலையாளிகளை மட்டும் சொல்கிறீர்கள். இந்த எம் பி ஏ என்ற திருட்டு தொழிலை கற்றுக் கொள்ள என்ன போட்டி. உலகின் நம்பர் ஒன் திருடர்கள் உருவாகும் இடம் ஹாவர்ட் பல்கலைகழகம் ஆமாங்க் நம்ம பான சீனா கூட அங்கே தான் படிச்சாரு. இந்தியாவில் ஐ ஐ எம் என்ற கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கும் கல்லூரிகள் இருக்கிறதே. இதில மலையாளிகளை மட்டும் குற்றம் சொல்வது சரியாகது

பொன் மாலை பொழுது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது சொன்னது…

Hi, Sweet. Are you a dame? if so, thats nice to speak to you honey,
This not a crazy article, I know what I am telling here.Thats why this post has been promoted here in tamilish.com
My readers are more sensible than you moronic. You uttered your foolish comments with a bias on the truth and the reality.
I know what and who you are. you know very well how to steel others money in the name 'bull shit' business with unselfconscious.That is the reason you don't like my post.
Go to my profile and understand what I can do.and what I am doing. I have been managing around 25 persons from various countries i.e. Indians, Pakistanis,Bangladesh and Sri Lankans with their huge support. You, and you commerce degree is a "zero" in front of them. We believe in our sincerity and our hard work and labour.
Don't call any one as 'mad' here after, because, sane never calls others as mad. O.K??
you are an insane. Keep your leg close my dear.
நான் சொல்லேர் உழவன். என்னிடம் உன் அகந்தை வேண்டாம்.
ஓகே- Take care.

பொன் மாலை பொழுது சொன்னது…

கல்காரி சிவா
நாம் இங்கு பேசுவது வெறும் 'அட்சய திருதியை ' பற்றியதே.
சுமார் 15 வருடங்களாக வளைகுடா நாடுகளில் வசிப்பவன். மலையாளிகளை நன்கு தெரிந்தவன்.
Joy Alukkas கடைகளில் தான் நானும் என் வீட்டிற்கு நகைகள் வாங்குவேன்.அவர்கள் தான் இந்த 'அட்சய திருதியை " என்ற தில்லு முள்ளு தனத்தை இங்கு சென்னைக்கும் கொண்டு வந்தவர்கள்.போட்டி என்றாலும்
திருடர்கள் எல்லோரும் ஒன்றுதானே ! அந்த வகையில் சென்னை வியாபாரிகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விட்டனர்.ஒன்றாக கூடி கும்மி அடிகின்றனர். சொல்ல வந்த செய்திக்காக, அவர்களின் பங்களிப்பு
அதில் இருப்பதால் மலையாளிகளை சொல்ல நேர்ந்தது.
அன்றி பானா. சீனா, ஹர்ட்வர்ட் மற்றும் ஐ. ஐ. எம்.C..A. & M.B.A.களவாணிகளை பற்றி எழுத நான் ஒருவன் மட்டும் போதாது நண்பரே.
வருகைக்கு நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@sweet சொன்னது…
huh
such a crazy article...
its not cheating...
if u like u can buy... they r not cheating....
//

வாம்மா மின்னல்..
என்னாது? இது சீடிங் இல்லயா..

ஹா..ஹா.. டமாசு பண்ணிக்கிட்டு..


சுக்கு சார்.. நீங்க எழுதுங்க சார்.. மக்கள் கொஞ்சம் சிந்திங்கனா யாரு சொன்னாலும், இது மாறி பன்னாடைக இப்படித்தான் கூவும்..

பெயரில்லா சொன்னது…

Hi Mr கக்கு - மாணிக்கம் , Please respond with kind words...Sweet was responded not nice, but you are senior and genius, you should teach her how will respond to the public tenderly.
LOVE IS KIND ....KIND IS LOVE...NOT HURT OTHERS
By
Raaj Dhanagopal
Singapore

பொன் மாலை பொழுது சொன்னது…

Mr.Raaj Dhanagopal.

I fully agree with you dear friend.
I hate to fight here with others.
I expect the same manner form others though my
posting is against their view.
I am ready to explain my views in a nice manner.
But, at the same time a stranger can not call another stranger as mad. If so, they will feel the pinch. Am I not right?

பெயரில்லா சொன்னது…

Mr கக்கு - மாணிக்கம்,

Thank you. I felt that responder can be reply to other responder like kidding….funny...but cannot be dislike... you are an Owner for this Blog and Title disclosed.... EVERY STEP SHOULD OTHERS TO FOLLOW NOT OTHERS IGNORE.

By
Raaj Dhanagopal
Singapore

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@Raaj Dhanagopal
Hi Mr கக்கு - மாணிக்கம் , Please respond with kind words...Sweet was responded not nice, but you are senior and genius, you should teach her how will respond to the public tenderly.
LOVE IS KIND ....KIND IS LOVE...NOT HURT OTHERS
//

பிரதர்.. முள்ள , முள்ளாலதான் எடுக்கமுடியும்..
மேலும், , அண்ணன் ரொம்ப பொறுமையா பதில் சொல்லியிருக்காரு..

அவருடைய பதிலில், எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை...

பொன் மாலை பொழுது சொன்னது…

ராஜ் தனகோபால் மற்றும் பட்டபட்டி
இருவருக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

ராஜ் தனகோபால் மற்றும் பட்டபட்டி
இருவருக்கும் நன்றி.
மேலும் மின்மினி, மதுமிதா, மற்றும் ஸ்வீட் எல்லாம் ஒருவர்தான் என்பது தெரியும்.
I just ignored it.

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்களின் விருதுக்கு நன்றி ஜெய்லானி அவர்களே.

111 சொன்னது…

சார், நான் அட்சய திரிதியைக்கு, ஒரு பவுன் வாங்கி பெட்டியில பூட்டி வச்சிருந்தேன், நீங்க நம்பமாட்டீங்க, கரெக்டா ஒருவருசம் கழிஞ்சி திரந்து பார்த்தா அது 5 பவுனா ஆயிருந்தது சார். நேங்க ஒருவாட்டி ட்ரை பன்னி பாருங்க சார், அதுக்கப்புறம் நல்லா எழுதுவீங்க.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக