பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மே 7

தவிடு தின்னும் ராஜாவுக்கு ........???????



நேற்று மதியம் நண்பர் வேலன் (Photo Shop) அவர்களுடன் போனில் பேசிக்கொடிருந்தேன்.அவர்கள் பகுதியில் தினமும் காலை வேளைகளில் மின் வெட்டு அமலில் இருப்பதால் உள்ள சிரமங்களை சொல்ல, நான் சும்மா கேட்டுகொள்ளாமல்,ரொம்ப பெருமையுடன், "சென்னையில் எங்கள் பகுதியில் மின் வெட்டு இல்லை " என்று பீற்றிக்கொள்ள,( நாக்கில் சனியன் உட்கார்ந்திருப்பதை அறியாமல் ) மாலை ஆறு மணி வாக்கில் எங்கள் பகுதி அவிந்து போனது. இனி வீட்டில் இருந்தால் அதோகதிதான் என்று நினைத்து,நண்பருடன் வெளியில் செல்லலாம் என்று வண்டியில் கிளம்பினால் , போன வழி எல்லாம், சைதை, கிண்டி, வேளச்சேரி என தென் சென்னையின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.சரி விஷயம் என்ன?













மின்சாரம் திருடப்படுவதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை இங்கு.வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிப்பது  ஒரு பெரிய குற்றமாக கருதப்படும் போது கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதை எவரும் பெரிய குற்றமாக கருதுவதில்லை. நம் மனப்பான்மை அப்படி ஆக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழ் நாடு மின்சார வாரிய கண்காணிப்பு துறையை யாரும் சாதாரணமாக நினைக்க வேண்டியதில்லை. வெறும் 200  உழியர்களை மட்டும் வைத்துக்கொண்டு இதுவரை சுமார் ரூபாய்  48.12 கோடி மதிப்புள்ள மிசார திருட்டுகளை கண்டுபிடித்து அதனை வசூலிப்பதாக செய்திகள்.இது சென்ற 2009 ஆம் ஆண்டுக்கான விபரம் மட்டுமே. 

T.N.E.B.  மின் திருட்டு கண்காணிப்பு துறை (Vigilance cell for anti theft)  சென்ற ஏப்ரல் 2009 முதல் நடப்பு மார்ச் 2010  வரை சுமார் 1,49,767 மின் இணைப்புகளை சோதித்து அவற்றில் மிசார திருட்டில் ஈடுபட்ட 6,230  மின் இணைப்புகளை கண்டறிந்துள்ளனர்.இது சென்ற 2099 ஆம் ஆண்டைவிட சுமார் 49.79  சதவீதம் கூடுதல் திருட்டு நடந்துள்ளது.

சென்ற 2008  ஆம் ஆண்டில் மின்சார கலவானிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ருபாய் 17.49 கோடியாகுமாம். வருடா வருடம் அரசு ஊதியமும் , பஞ்சப்படியும், கிராசுவிட்டியும் , மற்ற பிற கருமங்களும், விலைவாசியும் எல்லாம் உயர்வதுபோல மின்சார கலவின் விகிதமும்  மேல ஏறிக்கொண்டுதான் போகிறது நல்ல முன்னேற்றம்தான்.

மின்சார  துறையின் விளக்கப்படி தென்தமிழ் நாட்டில் ( வேறு எங்கு?மதுரையில்தான் ) உள்ள ஒரு தொழில் அதிபரிடமிருந்து சென்ற 2009  ஆண்டிற்காக மின்சார கலவிற்காக ருபாய் 9. 91 கோடி வசூல் செய்ய பட்டதாம்.
இந்த புண்ணியவான் இதே குற்றத்திற்காக பல முறை தண்டிக்கபட்டவராம்.








இலவச மிசாரம் பெரும் 'விவசாயிகளோ ' இன்னமும் ஒரு படி மேலே. அவர்கள் உறிஞ்சி எடுக்கும் மின்சார சக்திக்கு அளவே கிடையாதாம். உண்மைதான் . அவர்களின் பயன்பாட்டிற்கு 'மீட்டார்' பொருத்தப்பட வில்லையாம். ஆற்றில் வரும் தண்ணீர், அப்ப குடி அம்மா குடி கதைதான்.
குறுநில விவசாயிகள் மீட்டர் இல்லாமல் வரும் மின்சக்க்தியை கொண்டு தண்ணீரை பிறருக்கு விற்று கல்லா கட்டுவது உண்மை. சில மாதங்களுக்கு முன்னாள் நான் ஜெயம் கொண்டான் பகுதிக்கு செல்ல நேர்ந்த போது அங்குள்ள விவசாயிகள் செய்யும் செயல்களையும் அதனால் அவர்கள் பெரும் வருமானத்தையும் நேரில் கண்டேன். இலவச மின்சாரத்தினை பணம் பண்ணும் தொழிலாக மாற்றிகொண்டவர்கள் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளை சேர்ந்த "ஏழை விவசாய பெருங்குடி மக்களே" மிசார கலவை கண்காணிக்கும் குழு இதுவரை 329 இலவச மின்சார களவு களை கண்டறிந்துள்ளதாம்.

அடுத்து சகலமும் தங்களுக்கே என்ற கொடி பிடிக்கும் கொள்ளையர்கள்.கட்சி வேறுபாடின்றி, ஜாதி வேறுபாடின்றி, மதவேறுபாடின்றி , வகுப்பு வேறுபாடின்றி அணைத்து அரசியல், ஜாதி, மத,இன கொள்கை பிடிப்பாளர்கள் செய்வது இந்த மின்சார  கலவுதான்.தங்கள் சார்ந்த கூட்டமா, மகாநாடா, மறியல் போராட்டமா, பொதுகூட்டமா? போடு கொக்கியை, வண்ண வண்ண விளக்குகள், கட்அவுட் , சீரியல் செட் ஜோடனைகள், மேடை அலங்காரங்கள், வீதியின் இருபக்கமும் வரிசையாக குழல் விளக்குகள்.

எவரும் முறைப்படி, விதிப்படி அனுமதிபெற்று மிசாரம் பெறுவதில்லை. "கொக்கியைபோடு"
இந்த வேலைகளை திறம்பட செய்வதற்கு எல்லா கட்சிகளிலும் ஆட்கள் நிறைய இருப்பார்கள்.
எம்ஜிஆர் இலவச மின்சாரமாக 100  யூனிட் கொடுத்தால் , கருணாநிதி 400 யூனிட் இலவசமாக தருவார். அந்தம்மா ஜெயலிதா வந்தால் 400 ஐ 800 யூனிட்டாக மாற்றி இலவசமாக தருவார். மீண்டும் அய்யா பெரியவர் வருவார் சகல மின்சாரமும் இலவசம் என 'அரசாணை' வந்துவிடும்.


இந்த பாவத்திற்கு கடைசியில் ஆளாகி,மாதா மாதம் தவறாமல் மின்கட்டணம் செலுத்தி ஜீவனம் செய்யும் அப்பாவி மக்களின் தலைகளில் "மின் வெட்டு" " மின் கட்டண உயர்வு " என்ற அறிக்கைகளின் வடிவத்தில் வந்து விழுகிறது.



தண்ணீருக்கே தாளம் போடும் தமிழ்நாட்டில் எப்படி இலவச மின்சாரம் சாத்தியமாகிறது? இயற்கை வளமான தண்ணீரையே பகிர்ந்து கொள்ள மறுக்கும் ஒருமை பாட்டுக்கு பெயர்போன கர்நாடகா, கேரளா, ஆந்தரா  மாநிலங்களுக்கு நடுவே. செயற்கையாக மனித முயற்சியில் உண்டாக்கபடும் மின் சக்தியை மட்டும் எப்படி இலவசமாக தருவதற்கு திட்டம் போட்டனர்?
இலவசம் என்பதை மாற்றி சற்று சல்லிசான சலுகை விலையில் மேல்கண்டவ்ர்களுக்கு வழங்கி இருக்கலாம். ஆனால் அபோது மட்டும் 'வாழும் ' என்று யாரும் கேரண்டி சொல்ல முடியாதுதான்.'
இந்த பாதக செயலை தமிழ் நாட்டில் ஆரம்பித்துவைத்தது எம் ஜி ஆரா , கருணாநிதியா நினைவில்லை.

நெய்வேலி, கல்பாக்கம், தூத்துக்குடி ,வட சென்னை ,கூடங்குளம், என்று தமிழ் நாட்டில் உண்டாகும் மிசாரம் மட்டும் அண்டை மாநிலங்களுக்கு செல்லாம். ஆனால் அண்டை மாநிலங்கள் எதுவும் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டார்கள்.நீர் வளங்கள் எல்லாம் அவர்கள் "நாட்டை" சேர்ந்ததாம். 

இதை சொல்லப்போனால், 'ஐயோ இந்திய இறையாண்மைக்கு கேடுவந்து  விட்டதே, இந்திய ஒருமைப்பாட்டில் ஓட்டை போட்டுவிட்டார்களே ' என்று ஒரு ஓநாய் கூட்டம் ஊளையிடும். மக்களாட்சி, ஜனநாயகம் என்ற போளித்தனங்களில் நிறைந்த  கொள்ளைகார கூட்டங்கள் இங்கு வாழ்வாங்கு வாழ்கின்றன.

நாமும் "நமக்கென்ன வந்து " என்ற மன நிலையில் இருப்பதால் இந்த நிலை மேலும் தொடரும் இன்னமும் மோசமாகும்.


சரி, தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்??
தவிடு தின்னும் ராஜாவுக்கு ........????????
























முறம் பிடிப்பவனே மந்திரி!

நான் நம்மை நம் ஜனங்களை சொன்னேன். வேறுயாராவது உங்களுக்கு நினைவு வந்தால் அதற்கு நான் ஆல் அல்ல. 






25 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

பதிவே ஷாக் அடிக்குது ...போங்க :)

அரசாங்கம் இலவசம் என்று தரும் எல்லாவற்றிகும் பின்னாலும் இது போன்ற அப்பாவிகளின் புலம்பல்கள் இருக்கும். இலவசம் இலவசம் என்று எதற்கெடுத்தாலும் சொல்லி பெரும்பாலான மக்களை பிச்சைக்காரர்கள் ஆகியதுதான் மிச்சம். இதில் தி.மு.க விற்கு பெரும்பங்கு உண்டு.

சசிகுமார் சொன்னது…

நண்பரே எங்கள் ஊரில் எல்லாம் தினமும் 3 மணி நேரம் மின்சாரம் இல்லை. என்னத்த பண்ணி தொலைக்கிறது. இந்த மு.க. எப்படி ஓட்டு சேர்க்கலாமென்று பார்க்கிறானே தவிர வேற ஒன்றும் கிழிக்க முடியவில்லை . அவன் குடும்ப சண்டையை தீர்ப்பதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்குது. இதுல நடுவுல வேற சினிமாவுக்கு கதை எழுதனும். எவன்டா உன்ன கதை எழுதனும் கேட்டது. பேசாமல் ஒண்ணு செய் பதவியை ராஜினாமா பண்ணிட்டு போய் கதையாவது எழுது கவிதையாவது எழுது யாரு உன்ன கேட்க்க போறாங்க.

Engineering சொன்னது…

இப்பிடி எல்லாம் மின்சாரத்துல மட்டும் இவ்வளோ "......" கோடி திருட்டு நடந்தா மீதி துறைல எவளோ கோடி நடக்கும்... அப்புறம் எங்கே இந்தியா முன்னேறும் .... எப்பிடி "வல்லரசு" நாடாகும்...........

பொன் மாலை பொழுது சொன்னது…

// பதிவே ஷாக் அடிக்குது ...போங்க :) //
யூர்கன்

வெறுப்பு ஏத்தாத மாப்ள. இந்த பதிவ போட்டப்ப இரண்டு முறை "மின் வெட்டு 'அமலாக்கியது உண்மை.

பொன் மாலை பொழுது சொன்னது…

சசி நம்ம பாட்சா ஒன்னும் அங்க பலிக்காது.
எதனை கோடி ஆனாலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி அவர்கள்
மீண்டும் அரசு அமைப்பார்கள்.அதற்கான வலிமை அவர்களிடம்
அபரிமிதமாகவே உள்ளது நண்பரே !

பொன் மாலை பொழுது சொன்னது…

சக்திவேல், உண்மையில் நீங்கள் இதனை நம்புகிறீர்களா?
'இந்தியா வளரசு ஆகும்"

வெங்காயம். அதற்கான எந்த ஒரு தகுதியும் நமிடம் இல்லை.
மக்கள் தொகையை தவிர. எல்லாம் ஒரு பம்மாத்து வேலைதான்.
எல்லை தாண்டி மிக சாதரணமாக உள்ளே வந்து அடித்து எரித்துவிட்டு போகின்றனர் தீவிரவாதிகள்.

நம்ம சிவகங்கை செட்டியார் அறிக்கை மேல் அறிக்கை விட்டுகொண்டு
போய்விடுவார்.
எல்லாரும் பணம் பண்ண வழிதான் இந்த வெற்று கோஷங்கள்.

வேலன். சொன்னது…

யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்.பதிவிற்காக காலையில் 4 மணிக்கே எழுந்து 6 மணிக்குள் பதிவிட வேண்டியிருக்கின்றது..என்னத்தை சொல்ல...தூக்கம் போனதுதான் மிச்சம்..மின்சார சேமிப்புக்காகவே மீண்டும் ஒரு பதிவை பதிவிடுகின்றேன்...தங்கள் பதிவு அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

..// யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் //
வேலன்

இப்ப சந்தோஷம் தானே மாப்ஸ்.நாங்க பவர் கட்டு ஆனாலும்
வுடமாட்டமுள்ள!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அண்ணே.. கொஞ்சம் டைம் கொடுங்க..திரும்பி வாரேன்..( படியளக்கும் பகவான் , அர்ஜெண்ட் மீட்டிங் கூப்பிடறாரு..)

பொன் மாலை பொழுது சொன்னது…

அண்ணாத்த பட்டா பட்டியாரே,
பொறுமையா வாங்க.
அதிலும் அவர் 'படி அளக்கும் பகவானாயிற்றே' !

ப.கந்தசாமி சொன்னது…

திருடறவங்களை உடுங்க, இந்த மாதம் என் வீட்டில் மீட்டர் ஓடவில்லை. பில் கட்டவேண்டும். இல்லாவிட்டால் பியூஸைப் புடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள். பில் கட்டப்போனால் கொடுமை.
கடந்த 12 மாதத்தின் அதிக பட்ச ரீடிங்கை எடுத்து அதன் பிரகாரம் இந்த இரன்டு மாதம், போன இரண்டு மாதம், அதற்கு முந்தின இரண்டு மாதம் ஆக மூன்று பில்களுக்குமாக மொத்தம் நாலாயிரம் ரூபாய் பில் கட்டுங்கள் என்கிறார்கள். மீட்டர் இவர்களுடையது. அது ஓடாவிட்டால் தண்டம் அழுவது பொதுஜனம். இந்தக்கொடுமையை யாரிடம் சொல்வது?

ப.கந்தசாமி சொன்னது…

பட்டாபட்டி, "படி அளக்கும் பெருமாள்" என்பதுதான் சரியான சொல் வழக்கு.

ப.கந்தசாமி சொன்னது…

கக்கு-மாணிக்கம்,
ஏன் comment moderation போடவில்லை? இன்னும் யாரும் வம்புக்கு வரவில்லை போலிருக்கிறது.

பொன் மாலை பொழுது சொன்னது…

கே.பி. சார், உங்க நிலை பரிதாபம். இது போல அவ்வப்போது எல்லோருக்கும் நடப்பதுண்டுதான்.
அப்பாவி போது ஜனம் என்றால் அவர்களுக்கு வேலை மிக எளிது. அவர்கள் சொன்ன பணத்தை
அழுது தொலைக்க வேண்டும். ஆனால் கோடி கணக்கில் மின்திருட்டை கண்டும் காணாமலும் இருந்துவிட்டு கடைசியில் நம் தலையில் கைவைபார்கள்.
அது சரி கோவையில் Consumer protection council போன்ற ஏதாவது அமைப்புக்கள் இருக்கும். அவர்களிடம் முறையிடலாம். சற்று அலைச்சல்தான். ஆனால் இப்பொது உள்ள நடை முறைகளில்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமை போன்ற வற்றில் நீதி மன்றங்கள் நிறைய நல்ல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. முயற்சி செய்தாக வேண்டும் நாம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஏன் comment moderation போடவில்லை? இன்னும் யாரும் வம்புக்கு வரவில்லை போலிருக்கிறது.//

K.P. கந்தசுவாமி

உண்மைதான். இன்னமும் யாரும் சண்டைக்கு வரவில்லை.
பதிவு எழுதும் ஒவ்வொரு முறையும் நான் அதிகம் யோசிப்பது
தனி மனித தாக்குதலை எவ்வாறு ஒதுக்கி எழுதவது என்பது.
இங்கு நாம் வருவதும் சந்தித்து பேசுவதும் மனதிற்கு மகிழ்ச்சியை தரவேண்டும்.
புதிய செய்திகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்பது மட்டுமே அன்றி எவருடனும்
சண்டை போட்டு கேவலமாக நம்மை வெளிபடுத்தி ஆகபோவது ஒன்றுமில்லை.

சிலர் அப்படி செய்கிறார்கள் என்று நாமும் அவைகளை பின்பற்ற வேண்டிய அவசியம்
இல்லை.

"கற்றது கை மண்ணளவு "

இது புத்தியில் இருந்தால் யாரிடமும் சண்டை போட்ட வேண்டிய நிலை இல்லை.
ஆயினும் வேறு வழி இல்லை என்றால் போட்டே ஆக வேண்டும் .இல்லையென்றால்
தலையில் உட்காருவார்கள். தெரிந்ததுதானே !

மரா சொன்னது…

மெய்யாலுமே தேவையான பதிவுதான்.ஆனால் பழைய வாத்தியார் பாட்டுதேன் நினைவுக்கு வருது.என்னத்த செய்ய?

ஜெய்லானி சொன்னது…

இதுக்கு பயந்தே வெயில் காலத்தில் ஊருக்கு லீவில் வர பயமா இருக்கு. என்னத்த சொல்ல !!. உண்மையிலேயே ஊரில் உள்ளவங்க பொருமைசாலிங்க!!

ஓட்டுக்கு காசு வாங்கு போது யாருக்கும் இந்த எண்ணம் ஏன் வரமாட்டேங்குது தல

பொன் மாலை பொழுது சொன்னது…

//பழைய வாத்தியார் பாட்டுதேன் நினைவுக்கு வருது.என்னத்த செய்ய? //
மயில் ராவணன்

என்ன சார், இன்னமும் எம்.ஜி. ஆர். பாடல்கள்தானா நமக்கு மனம் மயங்கி கிடக்க?
அந்த வசியதிலிருந்து வெளியே வந்து நம்முடைய நிஜ உலகை பார்க வேணும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மீண்டும் வாருங்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//இதுக்கு பயந்தே வெயில் காலத்தில் ஊருக்கு லீவில் வர பயமா இருக்கு. என்னத்த சொல்ல !!. உண்மையிலேயே ஊரில் உள்ளவங்க பொருமைசாலிங்க //

ஜெய்லானி

என்ன நம்ம வீட்டு பக்கம் வருவதே அபூர்வமாய் இருக்கு?

உங்க அச்சம் நியாயமானதுதான் ஜெயிலா.
இதனாலேயே நான் என் விடுமுறை காலத்தை டிசம்பர், ஜனவரி மாதங்களில்
மட்டும் வைத்துக்கொள்வேன்.
ஆனால் இம்முறை சற்று நீண்டுபோவிட்டது. மார்ச் டு செப்டம்பர் மாதங்கள் இங்குவர
பொருத்தமில்லாத காலங்களாகும் என்னை பொறுத்தவரை.


சரி. ஓட்டுக்கு காசு கொடுப்பதே இந்த எண்ணம் அப்போது வர கூடாது
என்பதற்காகத்தானே!
வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அரசியல்வாதிகதான் அப்படித்தானு நினைச்சா, இப்ப மக்களே மாறிட்டு வராங்கண்ணே..

எங்கும் இலவசம்.. எதிலும் இலவசம்..

நாளைக்கு குழந்தையும் இலவசமுனு சொல்லவானுக போல..

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு...
படிச்சவங்க எவனாவது சோலார் பவரை யூஸ் பண்ணி..
வீடு.. விவசாயம் எல்லாவற்றிக்கும் பயன்படுவது போல.. ஏதாவது கண்டுபிடிச்சாதான் உண்டு(கண்டிப்பா கண்டுபிடிப்பாங்க சார்...இல்லாட்டி நானே பண்ணினாலும் பண்ணுவேன்..ஹா.ஹா)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

//
இது புத்தியில் இருந்தால் யாரிடமும் சண்டை போட்ட வேண்டிய நிலை இல்லை.
ஆயினும் வேறு வழி இல்லை என்றால் போட்டே ஆக வேண்டும்
//

இது எனக்கு சொன்னதா சார்?..எனக்கும் வேற வழியில்ல சார்..இப்படி பண்ண என்னை போல சிலபேர் இருக்கனும்.. இல்லாட்டி..தலையில் உட்காருவார்கள்.ஹா.ஹா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

Dr.P.Kandaswamy சொன்னது…

பட்டாபட்டி, "படி அளக்கும் பெருமாள்" என்பதுதான் சரியான சொல் வழக்கு.
//

சரி அய்யா.. திருத்திக்கொண்டேன்..

எனக்கு தெரிந்து(அறிந்து) கொள்ள கேட்கிறேன்..தவறாக நினைக்க வேண்டாம்...

“படியளக்கும்...(அ) படி அளக்கும்”
ஏன் இந்த வார்த்தைகளை பிரித்து எழுதவேண்டும்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

@கக்கு - மாணிக்கம் சொன்னது…

நீங்க துபாய்ல இருக்கீங்களா.. இல்ல விடுமுறைக்கு சென்னை வந்திருக்கிறீர்களா?..

பொன் மாலை பொழுது சொன்னது…

பட்டா பட்டியாரே தற்போது சென்னையில் தான் வந்து மாட்டிக்கொண்டேன்.
தாங்கள் வெளியூரில் இருப்பதாக யூகம் மெயிலில் பேசலாம் அல்லவா?
பொட்டிய திறந்த பாருங்க!!

பொன் மாலை பொழுது சொன்னது…

அண்ணாத்தே பட்டாபட்டியாரே
அதனாலதான் சில நேரங்கள்ல உங்க ப்ளாகுல நா பின்னூட்டம் எதுவும் போடாம ஓட்டு மட்டும் போட்டுட்டு திரும்பிடுவேன் ஒரே ரத்த களரியா இருக்கும், வெட்டும் குத்தும் நடக்கும்.எனக்கு ஒன்னு மட்டும் ஏன் புரியில
இங்க வந்து ஏன் எல்லாரும் Terror ஆகிவிடுகின்ட்றனர் !?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக