பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 2

செவுட்டில் விழுந்த அறை!



ராணுவத்தினர் பிச்சைகாரர்கள் இல்லை - இந்திய உச்ச நீதிமன்றம்.



இந்திய உச்ச நீதி மன்றம் விட்ட அறையில் மத்திய அரசு, 
குறிப்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் முகம் வீங்கிபோய் நிற்கிறது. 
ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களின் மறு வாழ்விற்காக அமைக்கப்பட்ட ஓய்வூதியம் விநியோகிக்கப்படும் அமைச்சக நடை முறைகளை மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தங்களின் பென்ஷன் பணத்திற்காக கேவலமாக அலைகழிக்க படுவதையும் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது குறிப்பிட தக்கது.

"மனிதர்கள் உயிர் வாழ தகுதியற்ற சியாச்சின் போன்ற பனி பிரதேசங்களில் பணி புரிபவர்கள், இத்தகைய கடுமையான வாழ்கை சூழலில் தங்களின் உடல் உறுப்புகளையும் இழந்தவர்கள் இப்படி பென்ஷன் பணத்திற்காக பிச்சைக்காரர்களை போல அலைய விடுவதா?"

"டெல்லி போன்ற மா நகரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்கள் கூட  நாள் ஒன்றுக்கு சுமார் ரூபாய் ஆயிரம் வரை தேற்றி விடுகின்றனர்.ஆனால் நாட்டுக்காக பாதுகாப்பு பணிகளில் உழைத்த , ஊனமுற்ற,பல இன்னல்களுக்கு ஆளான ராணுவ வீரர்களுக்கு கேவலம் வெறும் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியமாக வழங்குவதில் கூட ஒரு ஒழுங்கு முறை இல்லை. அவர்கள் தங்கள் பென்ஷன் பணத்திற்காக மோசமாக அலைகழிக்கபடுகிரார்கள்.அவர்கள் பிச்சைக்காரர்களை விடவும் கேவலமாக நடத்தபடுகின்றனர்."

ஒரு காயமடைத முன்னாள் ராணுவ அதிகாரி தனக்கு வரவேண்டிய பென்ஷன் கிடைப்பதில் இருந்த வழக்கு ஒன்றில் தான் நீதிபதிகள் திரு. மார்கண்டேயா 
மற்றும் ஏ .கே .பதானிக் ஆகிய இருவர் அடங்கிய பென்ச் தன் தீர்ப்பில் தான் இப்படி இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை கேள்வி கேட்டு சாடியுள்ளனர்.

அது சரி, இந்திய பாதுகாப்பு துறைக்குத்தான் சினிமாவில் ராணுவ அதிகாரியாக வேஷம் கட்டி நடித்திவிட்டதால் அந்த சினிமா காரனை பாராட்டவும், அவனுக்கு கௌரவ பட்டம் அளிக்கவும், மேல் கொண்டு அந்த நடிகனுக்கு 'கமாண்டோ ' பயிற்சி அளிக்கவுமே நேரம் போதவில்லை. இந்த கதியில் அவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் மீது என்ன அக்கறை வந்துவிடும்?
போகிற ப்போக்கை பார்த்தல் மோகன் லாலுக்கு ராணுவத்தில் தென் மண்டல ராணுவ தளபதியாக்கி விட்டுதான் நமது பாதுகாப்பு அமைச்சர் திருவாளர் A.K.ஆண்டனி ஜென்ம சாபல்யம் அடைவார் போலவே உள்ளது .வெறும் ஜால்ராவும்,வேற்று கோஷங்களும், ஏமாற்றுத்தனமான வெற்று அறிக்கைகளும் போதும் இவர்களுக்கு.

நமக்கு வாய்த்த எம்.பி, எம்.எல்.ஏ கள் மத்திய மாநில அமைச்சர்கள் எவர்க்கும் தம் துறை சார்ந்த அறிவு என்பதே கிடையாது என்றுதான் நடப்புக்கள் நமக்கு காட்டுகின்றன.ராஜீவ் மற்றும் சோனியா, அவர்களில் பிள்ளைகள் இவர்களை போற்றி பாடினாலே போதும் ராணுவ மந்திரி என்ன ராஷ்டிராபதி பவனிலும் கூட இடம் கிடக்கும்.
நமக்குத்தான் வெட்கம் என்பதே கிடையாதே !



21 comments:

வேலன். சொன்னது…

ம்ம்...சான்ஸே இல்லை..ஆட்டோவை அனுப்பிவிடவேண்டியதுதான்...வாழ்க் வளமுடன்,வேலன்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//ராஜீவ் மற்றும் சோனியா, அவர்களில் பிள்ளைகள் இவர்களை போற்றி பாடினாலே போதும் ராணுவ மந்திரி என்ன ராஷ்டிராபதி பவனிலும் கூட இடம் கிடக்கும். //

எத்தன முறை காரி துப்பினாலும் மூஞ்ச தொடச்சிட்டு பல்ல இளிச்சிகிட்டு முன்னால நிக்கற எச்ச பொறுக்கிகள்...

இந்தியாவையே நாசமாகிட்டானுங்க ...
//நமக்குத்தான் வெட்கம் என்பதே கிடையாதே !//
முதல்ல மக்களை சொல்லணும் .. பெரும்பாலான மக்களுக்கு வெட்கம் மட்டுமா இல்ல ??
சூடு சொரணை ஒற்றுமை தன்மானம் இதெல்லாம் கூடத்தான் இல்லை!!

இதெல்லாதையும்தான் என்னைக்கோ சூனியா ********* ல அடகு வச்சிட்டணுங்கள் ..

பொன் மாலை பொழுது சொன்னது…

வேலை மெனக்கெட்டு டெம்ப்ளேட்டை வேறு மாற்றி வைத்துள்ளேன் கண்ணை கட்டிகொண்டா ப்ளாக் பக்கம் வந்தீர்கள் மாப்பிளைகள் ரெண்டு பேரும்??!!
சுவற்றில் தான் முட்டிக்கொள்ள வேண்டும்.!!

Engineering சொன்னது…

//வேலை மெனக்கெட்டு டெம்ப்ளேட்டை வேறு மாற்றி வைத்துள்ளேன் கண்ணை கட்டிகொண்டா ப்ளாக் பக்கம் வந்தீர்கள் மாப்பிளைகள் ரெண்டு பேரும்??!!
சுவற்றில் தான் முட்டிக்கொள்ள வேண்டும்.!!//

முன்பு இருந்ததை காட்டிலும் இப்போதுள்ள template அருமை நண்பரே.....
நடத்துங்க... நடத்துங்க.........

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி சரவணரே!
நீங்கள் பதிவு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ?
மாட்டிக்கிட்டீங்களா ??!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

//
ராஜீவ் மற்றும் சோனியா, அவர்களில் பிள்ளைகள் இவர்களை போற்றி பாடினாலே போதும் ராணுவ மந்திரி என்ன ராஷ்டிராபதி பவனிலும் கூட இடம் கிடக்கும்.
//

என்னோட கண்ண உறுத்தின வரிகள் இவை.. ஆனா யூர்கன் கிழித்து வீசிவிட்டதால்.. என்ன சொல்வதென தெரியவில்லை..


ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கிவிட்டோம்.. ஆனா , காந்தி குடும்பத்திலிருந்து எப்போது சார் வாங்குவோம்?

www.thalaivan.com சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

தமிழ் உதயம் சொன்னது…

சமுக சிந்தனையுடன் ஒரு பதிவு. நன்றாக இருந்தது.

பொன் மாலை பொழுது சொன்னது…

//என்னோட கண்ண உறுத்தின வரிகள் இவை.. ஆனா யூர்கன் கிழித்து வீசிவிட்டதால்.. என்ன சொல்வதென தெரியவில்லை.//

பட்டபட்டியார் சொன்னது.

உங்களுகென்று நிறைய சான்ஸ் வரும் . மாப்ஸ் யூர்கனுடன் சேர்ந்துகொண்டு நீங்களும் கிழிக்கலாம்.
வருகைக்கு நன்றி தலீவா !!!

பொன் மாலை பொழுது சொன்னது…

// உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம் //

சேர்த்தல் போயிற்று, செர்ந்துவிடுகிறேன் தலைவா
நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//சமுக சிந்தனையுடன் ஒரு பதிவு. நன்றாக இருந்தது//

தமிழ் உதயம்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தொடர்ந்து வர வேண்டுகிறேன் நண்பரே.

பொன் மாலை பொழுது சொன்னது…

DrPKandaswamyPhD ஒரு கருத்துரை எழுதியுள்ளார்
-
"பென்சனர்களை கேவலமாக நடத்துவதைப்போன்ற கேவலம் வேறு ஒன்றும் இல்லை.
டெம்ப்ளேட் நன்றாக வந்திருக்கிறது."


என் அப்பாவும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்தவர்தான் சார்
தங்களின் வருகையும் கருத்துக்களும் எனக்கு ஆறுதல் அளிப்பவை
தங்களுக்கு நன்றி.

சசிகுமார் சொன்னது…

இதே போல் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் சரியாக உதவி தொகை போய் சேருவதில்லை.
நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சசி
தொடர்ந்த வாருங்கள்.

Ahamed irshad சொன்னது…

அதான் சரி...

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி அதிரை காரரே!
தொடர்ந்து வாருங்கள்.

pichaikaaran சொன்னது…

சும்மா நுனி புல் மேயாம, நல்லா எழுதி இருகீங்க... நன்றி தல..

பொன் மாலை பொழுது சொன்னது…

//சும்மா நுனி புல் மேயாம, நல்லா எழுதி இருகீங்க... நன்றி தல.//

பார்வையாளன் சொன்னது.


நுனிப்புல் மேயும் எவரும் ப்ளாக் எழுதி பெயர் வாங்க முடியாது நண்பரே.
ப்ளாகை விடுங்கள். நாம் ஈடுபடும் எந்த செயலிலும் முழு மனதுடன் செய்வதே
மன நிறைவையும் வெற்றியையும் தரும் என்பதை நமது முன்னோகள் சொல்லி சென்றுள்ளனர்.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே.

Jackiesekar சொன்னது…

இந்த செய்தியை படிச்ச போது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது... நன்றி கக்கு மாணிக்கம் பதிவிட்டமைக்கு...

பொன் மாலை பொழுது சொன்னது…

அட .....இத்தோடா .....யாரு???.....
ஆஹா ..நம்ம ஜாக்கிதான்...
நீங்கல்லாம் அடுத்தவுங்க பக்கம் வர்றதே அபூர்வம்.
அதிலும் இங்கே வந்து 'பின்னூட்டம் ' வேற எழுதியிருக்கீங்களா
அதான் நம்ப முடியல. ஆட்டம் க்ளோஸ் !!
இனிமே வரமாட்டீங்க. அத்தான் தெரியுமே.
சரி புத்து வூடு எப்டீகீது கண்ணு? நல்லா குளு குளு இன்னு கீதா??
Any how, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர் ஜாக்கி !

PalaniWorld சொன்னது…

உங்கள் வலைதளத்திற்கு முதல் முறையாக வந்து உள்ளேன் .வெகு அருமையான சிந்தனை உங்களுக்கு . என்ன இருந்தாலும் நம்மளால புலம்பமட்டும் தான் முடியும் .என்ன நான் சொல்றது சரிதானே .

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக