பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், பிப்ரவரி 23

அம்மா எனும் ஒரு சொல்!

மறு பதிவாக இட தோன்றியது.இது என்னுடைய முதல் பதிவுதான் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகள் சகலமும் அரசியல்,சினிமா, டிவி சாபங்கள், பத்திரிக்கைகள் பாடாவதிகள்,  வியாபார விளம்பரங்கள், கலர் கலரான கவர்ச்சியான பொய்கள்,ஆடைகளின் பகட்டும், தங்க நகைகளின் ஆர்ப்பாட்டமும், விதவிதமான பெயர்களில் வியாபார தந்திர சுரண்டல்கள், ட்ராபிக் நெரிசல்கள்,புகையும் புழுதியுமான வெப்பக்காற்று,கோவில் திரு விழாக்கள், ஆன்மீக வியாபாரம், ரேஷன் கடை கூட்டங்கள், இலவச டிவி கள் ,குண்டு வெடிப்புக்கள், வீட்டு மனை விற்பனைகள்,பில்டர்களின் சுரண்டல்கள், எதிகட்சிகளின் சலசலப்பு, ஆளுபவர்களின் ஆர்பாட்டம்,தற்கொலைகள்,டிஜிடல் பேனர்கள், செயின் பறிப்பு, சுவர் ஓட்டை கொள்ளைகள் , பாலியலில் சிறு பிள்ளைகள் , ஆண்கள், பெண்கள் வயதினர், இளையோர் ,சிறுவர் சிறுமியர் எந்த வேறுபாடும் இல்லாமல் இடித்துக்கொண்டும் மிதித்துக்கொண்டும், காதுகளில், வாய்களில் செல்போன்கள், ஒருவரை ஒருவர் முந்தும் வேகத்தில் எல்லோரும் எங்கோ எதற்கோ ஓடிக்கொண்டிருக்க. எங்கே எதற்காக ஒடிகொண்டிறிக்கிறோம்?? இது போன்ற மனிதர்களும் நம்மிடம் உள்ளனர், நம்மால் இது முடியாவிட்டாலும் முடிந்தவர்களை அறிந்து அவர்களை பிறருக்கும் காட்டலாமே என்ற ஒரு சிறு ஆறுதல்


இவைகள் எல்லாம் வெறும் சாதாரண படங்களாக தோன்றலாம். ஆனால் இவைகளுக்குப்பின்னால் இயங்கும் ஒருதாயின் கருணையை பாருங்கள்.
டாக்டர் சஷிகலா தேவனபள்ளி, துபாயில் தன கணவருடன் வசித்துவருகிறார்.தனது மருத்துவமனையை நடத்திவருபவர். அவர் கூறுவதை கேட்போமா?


" அவர்களை முதன்முதலில் நான் பார்க்கநேர்ந்தது துபாயில் உள்ள இந்திய கன்சலேட் அலுவலகத்தில். ஒரு வேலை உணவு கூட இன்றி, தங்க இடமின்றி,கையில் பணமின்றி கூட்டமாய் ஒருமித்து காத்துக்கிடந்தனர். இந்திய கன்சலேட் அலுவலகத்திற்கு என் சொந்த வேலையாக சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு அலுவலர் என்னிடம் வினவியது "தாங்கள் தெலுங்கில் பேசுவீர்களா?" தலையாட்டினேன் . தெலுங்கு எனது தாய் மொழி . இதற்கு முன்னரே இங்கு அமீரகத்தில் அரசாங்கத்தின் பொது மன்னிப்பு முறை செயல் பட ஆரம்பித்து இருந்தது. போதிய ஆவணங்கள் இல்லாத, சட்டவிரோதமாக குடியேறி அல்லது விசா காலம் முடிந்து அல்லது உரிய இடத்திலிருந்து பலவித காரணங்களால் தப்பி வெளியேறி வேறு இடங்களில் கூலி வேலை செய்து பின்னர் " ரெய்டு " போன்ற அரசின் நடவடிக்கைகளினால் பிடிபட்டுவோர் இங்கு ஆயிரகணக்கில் உண்டுதான். இவ்வாறு பிடிபட்டவர்களை அமீரக அரசு அந்தந்த நாட்டின் கன்சலேட் அலுவலரிடம் ஒப்படைக்கின்றனர். அவர்களின் இருந்த நிலையை பார்த்தால் புரிகிறது".


"கூட்டத்தில் பாதிபேருக்கு மேல் நிற்கக்கூட திராணியற்ற நிலை.மிகவும் பலவீனமாக இருந்தனர். இவர்களின் உடனடித்தேவை வயிற்றுக்கு உணவும் தங்க இடமும்தான். என்னிடம் காட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து பிழைக்க துபாய் சென்ற படிப்பறிவற்ற அப்பாவிகள். உடனடியாக இருப்பிடம் திரும்பி அவர்களுக்கு உணவு சமைக்க ஆரம்பித்துவிட்டேன். பொது மன்னிப்பு சம்பிரதாயங்களுக்காக அவர்கள் அனைவரும் இங்குள்ள இந்தியன் உயர் நிலைப்பள்ளியின் வளாகத்தின் முன்னால் திரண்டு இருந்தனர். அவர்களிடம் கொண்டு சென்ற உணவு பொட்டலங்களை கொடுக்க ஆரம்பித்தேன். இது இப்படித்தான் ஆரம்பமானது. இன்றெல்லாம் ஒரு நாளைக்கு சுமார் 20 கிலோ அரிசியும், 5 கிலோ பருப்பு வகைகளும் இந்த 100 பேர்களுக்கு போதுமானதாக உள்ளது. சில நேரங்களில் பருப்பு வகைகளுடன் காய்கறி களையும் சேர்த்துக்கொள்வதுண்டு. சூர்யோதயத்திற்கு முன்னாலேய எழுந்து விடுவேன் . அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து, அவைகளை பார்சல்களாக கட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் வழக்கமாக கூடியிருக்கும் இடங்களான கராமா மற்றும் பர் துபாய் பார்க் போன்ற இடங்களுக்கு சென்று சாப்பிட கொடுக்கிறேன். அவர்களில் பலர் சிகிச்சைக்காக எங்கள் மருத்துவ மனயினை அணுகுகின்றனர் அவர்களும் உணவு பார்சல்களை பெற்றுசெல்கின்றனர். இரவு உணவிற்கான பார்சல்களை டாக்சியில் ஏற்றிக்கொண்டு சோனாபூர் என்ற இடத்தில் தங்கியுள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசெல்வேன்.ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு பார்சல்களை தந்துவிடுவேன். ஒன்று இரவு உணவிற்கும் மற்றது அடுத்த நாள் காலை வேலை உணவிற்குமாக இருக்கும்".


"இந்தபணி இரவு 9 மணி வரைக்கும் நீடிக்கிறது. இக்காரியங்களுக்கு என்னுடன் உதவியாக இருப்பவர்கள் என் மருத்துவ மனையில் உள்ள ஊழியர்களும், சில தன்னார்வ நண்பர்களும்.மற்றும் பொது மன்னிப்பு ஏற்பாடுகள் முடிந்து தாய் நாடு திரும்ப காத்திருப்பவர்களும் அடங்குவார்கள். இப்படி வந்தவர்கள் நிறையப்பேர் தினக்கூலிகளாக வேலை செய்து அந்தவருவாயை சேமிப்பாக கருதி செலவிடாமல் ஆனால் சாப்பாடு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கும் தேவையான உணவினை சமைத்து வழங்குகிறேன். ஆரம்பத்தில் தெலுங்கு மொழி பேசும் தொழிலாளர்கள் என்று ஆரம்பித்தேன் இன்று இந்தியர்கள் மட்டுமின்றி பங்களா தேஷ் நாட்டவர்கள் நேபாளிகள் என்று விரிவடைந்துள்ளது. இவர்களில் வயதான, உடல்நலம் மிகவும் குன்றிய மற்றும் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய உள்ளனர். நிறைய பேருக்கு கவனிக்கப்படாத நீண்ட நாள்பட்ட புண்களும் உள்ளன.இவர்கள் எல்லோரும் கட்டிட கட்டுமான துறைகளில் வேலை செய்த கூலிகள். ஒரு இளைஞருக்கு வேளையின்போது கான்கிரீட் இரும்பு கம்பி கண்ணில் சொருகியத்தால் வலது கண் பார்வை பறிபோயுள்ளது. இது போன்ற நீண்ட நெடிய பாதிப்புகளால் மனநிலை பாதித்து திரிபவர்களும் இருக்கின்றனர். எங்காவது நடை பாதையின் ஓரங்களில் உறங்கும் இவர்கள் பிறரிடம் மிகவும் கோபமாக நடந்துகொள்ளும் சுபாவம் வந்தவர்களாக இருக்கின்றனர். இங்கு இவர்களுக்கு இனி வேலைக்கும் வழி இல்லை. இனி சொந்த நாடு திரும்பும் எண்ணமே இல்லாமல் இருக்கும் இவர்கள் சிகிசைக்காக மருத்துவ மனை வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமும் உணவும் தந்து பராமரித்து வருகிறேன். இவர்கள் தங்கள் நாடு திரும்ப வேண்டி அவர்களுக்கு தேவையான Out pass மற்றும் விமான டிக்கெட்டும் "ஸ்பான்சர் " செய்பவர்களை தயார்செய்து அந்த ஸ்பான்சர் உதவியுடன் நாடு திரும்ப ஏற்பாடு செய்கிறேன்".


"சிலர் இங்கு மரணித்தும் விட அவர்களின் உடல்களை சொந்த நாட்டில் உள்ள அவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பும் வேலையும் நடைபெறுகிறது. வேலையின்றி, இருக்க இடமின்றி, உணவின்றி இவர்கள் துபாய் சோனாபூர் பகுதிகளில் அதிகம் உள்ளனர். கடுமையான குளிர் காலங்களில் இவர்கள் அட்டை பெட்டிகளை பிரித்து அவைகளை போர்வைகளாக போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் இவர்கள் எனது கார் சென்று அங்கு நின்ற வுடன் எழுந்து ஓடிவந்து காரை சூழ்ந்து கொள்வார்கள்.சிலர் உணவு பொட்டலங்களை பெற்றுக்கொள்வார்கள், சிலர் தங்கள் தாயகம் திரும்பும் நாள் எப்போது என அறிய முற்படுவார்கள். உரிய பாஸ்போர்ட் இல்லாமல் வேலைக்கு வைத்துக்கொண்ட கம்பெனிகளும் அபராதமாக பணம் கட்டவேண்டும் இங்கு. எனவே இதுபோன்ற கம்பெனி யை சார்த்த P R O போன்றவர்களிடம் இவர்கள் கணிசமான அபராத தொகை வேறு தர வேண்டும். தற்போது எங்களின் கடன்களும் அதிகமாகியுள்ளது.கிரெடிட் கார்ட் அதன் பில் தொகை, வாடகை,தண்ணீர், மின்சாரம் என எங்களின் கடன் சுமைகளும் அதிகரித்துவிட்டது. சில வேளைகளில் ஸ்பான்சர் செய்வதாக ஏற்றுக்கொண்டவர்கள் எதுவும் செய்வதில்லாமல் போகவே அது போன்ற நிலைமைகளிலும் நாங்களே அந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை".


"துபாய் தவிர அபுதாபி,ஷார்ஜா ,அஜ்மான் போன்ற பிற அமீரகங்களுக்கும் சென்று அங்குள்ள குடியுரிமை இல்லாத கைதிகளுக்கும் உணவு கொண்டு சென்று தருகிறேன். சென்ற 2002 ஆம் வருடம் துபாய் வந்தேன் . கராமா மெடிகல் சென்டரில் டாக்டராக பணி புரிந்தேன். பின்னர் செந்தமாக ஒரு மருத்துவ மனை தொடங்கினேன். இரண்டு பிள்ளைகள் ஒரு மகளும் இந்தியாவில் படித்துக்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் என் பிள்ளைகள் கூட இந்த என் வேலைகளை விரும்பியதில்லை. ஆனால் தற்போது தங்கள் தாய் என்ன செய்கிறாள் என்பதை புரிந்துகொண்டுவிட்டனர். என் கணவருக்கு கூட இத செயல்களில் இஷ்டமில்லைதான். எங்களின் சேமிப்பு அனைத்தும் செலவாகிபோய்விடுகிறது என்பதால். இது இனி இன்னமும் எத்தனை நாளைக்கு எவ்வளவு தூரம் தொடரும் என்று தெரியவில்லை. ஆனால் என்னால் முடிந்த வரையில் இந்த பணியினை தொடர்ந்து செயதுவருவேன்."


மேற்கண்ட தொகுப்பு 
Khaleej Times தினசரியில் சென்ற 2009 ஆண்டு,மே 12 ஆம் தேதி அன்று வெளியானது. அப்பத்திரிக்கை எடிட்டரிடமும் கட்டுரைஆசிரியரிடமும் அனுமதி பெற்று தமிழில் ( என்னால் முடிந்தவரை ) தர முயற்சித்துள்ளேன். அமீரக நண்பர்கள் இந்த செய்தியினை படித்திருக்கலாம். மற்ற தமிழ் அன்பர்களும் படிக்கவேண்டும் என்ற நினைத்து இதனையே  என் முதல் பதிவாக ஆக்கி அந்த தாயுள்ளம் கொண்ட டாக்டர் சஷிகலா தேவனபள்ளி அவர்களுக்கு சமர்பிக்கின்றேன்.

CREDITS TO

THE EDITOR KHALEEJ TIMES, DUBAI, U.A.E.
THE AUTHOR   JETHU ABRAHAM
MR.KIRANPRASAD   FOR PHOTOGRAPHY.
.

10 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மச்சி,,

மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை ஒரே பதிவில் சொல்லிவிட்டீர்கள்.
படிக்கும்போதே நமக்குள் ஓர் மாற்றம் நிகழ்வதை உணரமுடிகிறது..

தெரு முனையிலிருக்கும் பிஸ்சா முதல் திரை அரங்கில் வாங்கும் பெப்சி கோக் வரை ..இனிமே அநியாய விலைக்கு வாங்கும்போது கொஞ்சமாவது மனசாட்சி பிடுங்கி எடுக்கும் என்பது நிதர்சனம்.

பதிந்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நன்றி மாப்ஸ், வழக்கமாக நம்ம 'ஆட்டோ' தான் முதலாக வரும் . அதெல்லாம் அந்த காலம்.
ஆட்டோ பிறகுதான் வரும்.
கருத்துக்கு நன்றி(ஆனா ஒட்டு மட்டும் போடாதீங்க !??)

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//ஆனா ஒட்டு மட்டும் போடாதீங்க !??)//

தேடி பிடிச்சி வோட் போட்டுருக்கேன்..

நமிதா, அஜித், ரஜினி இந்த மாதிரி நாட்டுக்கு தேவையான விடயங்கள் பத்தி பதிவு போட்டுருந்தீங்கன்னா
"வோட்டு போடுங்க" ன்னு கேட்க வேண்டிய நிலைமையே வந்திருக்காது :(

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல பதிவு!!

அம்மா எனும் சொல் விலைமதிப்பில்லாதது.....

அண்ணாமலையான் சொன்னது…

மிக நல்ல பதிவு...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி மேனகா சத்யா .
தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு .அண்ணாமலையான் அவர்களே .

saravanans1976 சொன்னது…

ஒவ்வருவருக்கும் மறுபடி தாயை
பார்த்த மகிழ்ச்சி இருக்கும் ஒவ்வரு தினமும்....!

நன்றி கூற வேண்டும்......
இது போன்ற தாய் உள்ளங்களுக்கு ......

தகவலை பகிர்ந்ததுக்கு நன்றி.........

வேலன். சொன்னது…

அருமையான பதிவு மாம்ஸ்...ஆட்டோதான் முதலில் வரும். நேற்று ஏற்பட்ட ஆக்ஸிடென்டில்(அவரின வீட்டுக்கு எதிரேயே) அவர் மூட் அவுட்.எனக்கும் தான்.இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலி.தாமத்தத்திற்கு மன்னிக்கவும்.வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

saravanas 1976 தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !


வேலன் மாப்ஸ் , மிக்க வேதனையான செய்திதான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்ஸ்

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக