பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், செப்டம்பர் 8

மானம் கெட்டவர்கள் மகாராஜாவிற்கு சமம். உண்மைதான்.




ஒன்று மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. அது எப்படி இந்த சினிமா காரர்களுக்கு குறிப்பாக "கதாநாயகர்களுக்கும்" அல்லது " கதா நாயகிகளுக்கும் " திடீரென்று ஒரு பவிஷு வந்துவிடுகிறது? சினிமா பார்த்தோமா ரசித்தோமா வந்தோமா என்று இருந்திருந்தால் நம் தமிழ் நாடு இவ்வளவு கேவலமாகி போயிருக்காது.ஏதோ சினிமா நாயர்களும்,நாயகிகளுமே இவர்களை ரட்சிக்க வந்த தேவர்கள் போல எண்ணி ரசிகர் மன்றங்கள் ஆரம்பிப்பதும், அவர்களின் படம் வெளியாகும் அன்று அதை படாடோபமாக கொண்டாடி தங்களின் அழகு திரு உருவங்களையும் போட்டு வீதியின் இரு மருங்கிலும் போஸ்டர்கள் ஒட்டிக்கொள்வதும், கட்டவுட் வைத்து அதற்கு மாலை மரியாதைகள் செய்து பால் அபிஷேகம் செய்வதும் தியேட்டரில் படம் ஆரம்பித்து அவர்கள் வரும் முதல் காட்சிகளில் கற்பூரம் ஏற்றி ஆராதிப்பதும் சில்லறை காசுகளாலும் பூக்களாலும் அர்சிப்பதும்......

இவர்களுக்கு வெட்க கேடாக தோன்றவே தோன்றாதா? இது வெட்க கேடானது, அநாகரீகமானது என்று யாரும் இவர்களுக்கு சொல்வதே இல்லையா? இப்படி கொண்டாடப்படுபவர்களுக்கு என்று தனியாக ஒரு தகுதியும் திறமையும் கிடையாது என்பது இவர்களுக்கு புரியாதா? எம்ஜியார், சிவாஜி என்று ஆரம்பித்து இன்று இந்த கேலிக்கூத்தின் விஸ்வரூபம் நாட்டையே ஆட்டிப்படைக்கும் அரசியலிலும் ஆட்சி செய்வதை நாம் எப்படி அனுமதிக்கிறோம் என்பதே புரியவில்லை. இந்த கேவலத்தை நாட்டில் ஆரம்பித்து வைத்த பெருமை இந்த காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளையே சேரும்

.மற்ற எல்லா துறைகளிலும் அடிப்படையாக ஒரு குறைந்த அளவு தகுதி நிர்ணயித்த இந்த சமுதாயம் அரசியலில் வருபவர்களுக்கும் சினிமாவில் வருபவர்களுக்கும் என்று ஒரு குறைந்த அளவு தகுதியை முன்னிறுத்த முனயாததால் தான் இன்று ஒன்றன் பின் ஒன்றாக விசயகாந்த்ர்களும் விஜய் போன்றவர்களும் அரசியலில் ஆட்டம் போடா நிற்கின்றனர். "இது ஜனநாயக நாடு யாரும் எதையும் செய்யலாம் " என்ற அந்த தான் தோன்றி தனமே மூலகாரணமாகிறது. இவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள்? ஒரு படம் "விடலைகளின்" புண்ணியத்தால் பரபரப்பாக ஓடிவிட்டால் அடுத்த சில நாட்களில் அந்த முட்டாள் பையன்கள் “ ஒரு பெரிய ரட்சகனாக மாறி தமிழ் நாட்டின் முதல் அமைச்சராகவும் அல்லது தற்போது உள்ள சூழல் போல டெல்லியில் எம்பி அல்லது விட்டால் பிரதமர் ஏன் ஜனாதிபதியாக கூட வருவார்கள்
நமக்குத்தான் வெட்கம் சூடு. சொரணை என்று எதுவும் இல்லையே! மானம் அற்ற இனம் நம் தமிழ் இனம்தான். வரிந்து கட்டிகொண்டு என்னிடம் சண்டையிட்டு பயனில்லை. சுய கவுரவம் உள்ள எந்த ஒரு பிறவியும் இப்படி கோமாளிகளுக்கு கூட்டம் போட்டு அடி வருடாது.
மானம் கெட்டவர்கள் மகாராஜாவிற்கு சமம். உண்மைதான்.
எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள் அல்லவா??????????

12 comments:

வேலன். சொன்னது…

மானம் கெட்டவர்கள் மகாராஜாவிற்கு சமம் - டைட்டில் அருமை. கருத்துக்கள் அருமை...ஏன் இவ்வளவு கோபம்..?

வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown சொன்னது…

sariyaka soneerkal

Raja சொன்னது…

வருஷத்துக்கு 4 அயன்பாக்ஸ், 5 தையல் மிஷின்.. இப்படி நாலு வருஷத்துக்கு தொடர்ந்து குடுத்துட்டா, இவனுங்களுக்கு உடனே முதலமைச்சர் கனவு வந்துடும்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மச்சி... இவனுங்கள என்ன பண்ணலாம்?
நீங்களே ஒரு தீர்ப்பையும் சொல்லுங்க !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மிக அருமையான இடுகை .
இது போன்ற உணர்வுகள் வரவேற்ககூடியது மேலும் காலத்தின் கட்டாயமும் கூட ..
நாம் தமிழர் கூடி இனி ஒரு விதி செய்வோம் !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சார் தலைப்பு ஏகப்பொருத்தம் ....

Menaga Sathia சொன்னது…

சரியா சொன்னீங்க,தலைப்பும் பொருத்தமாக இருக்கு.

க.பார்த்திபன் சொன்னது…

இது போன்ற நிகழ்வுகள் இப்பொழுது மட்டுமா நிகழ்கின்றது.ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆட்டை பாப்பதற்காக
வண்டி கட்டிக்கொண்டு பார்த்தார்களாம்.
இப்பொழுது கட் அவுட்டிற்கு
பால் மட்டுமா ஊற்றுகிறார்கள் கூடவே
பீர் ஊற்றுகிறார்கள்.
இப்படித்தான் ஒரு முறை புதுப்படம் வெளியாகும் போது அண்ணன் தம்பி இருவரில் அண்ணன் ஒரு கதாநாயகனின் கட் அவுட்டிற்கு பால் ஊற்ற தம்பி இன்னொரு கதாநாயகனின் கட் அவுட்டிற்கு பீர் ஊற்றிக்கொண்டிருக்க அப்பொழுது அந்த வழியாக வந்த அந்த இருவரின் பக்கத்துவீட்டுக்காரன் அந்த இருவரையும் பார்த்து கட் அவுட்டிற்கு
பாலும் பீரும் ஊற்றுவது சரி உங்களை
பெத்த ஆத்தாலுக்கு யாரு கஞ்சி ஊத்துவது என்று முடிவு பன்னுங்கடா
என்று சொல்லிவிட்டு சென்றானாம்.
ஆனாலும் அந்த இருவரும் தங்கள் பணியிலே கண்ணும் கருத்துமாக இருந்தார்களாம்.
இது ஒரு கற்பனை தான் ஆனாலும் ஏனோ மனம் இது போன்ற நிகழ்வுகளை வெறுக்கத்தானே செய்கின்றது.

நன்றி. வாழ்த்துக்கள்.
க.பார்த்திபன் சிங்கப்பூர்.

அலாவுத்தீன் சொன்னது…

மலயாளிகள் மட்டும் இது போன்ற கிருக்குத்தனங்கள் ஏன் செய்வதில்லை என்பதை துபாயில் வசிக்கும் தாங்கள் சிறிது ஆராய்ந்து எழுதுங்களேன்.

டவுசர் பாண்டி சொன்னது…

//நமக்குத்தான் வெட்கம் சூடு. சொரணை என்று எதுவும் இல்லையே!//

தலீவா !! அண்ணாத்தே !!மேட்டர் செரி தாம்பா!! இன்னா தான் இருந்தாலும் !!

இந்த விஜையி, சரத்து குமாரு , ரோசா விஜிசாந்தி அப்பால , ஒரே படத்துல டானா வேஷம் கட்டி இப்போ MP , ஆயி பூட்டாரே !! நம்ப ரித்திஷ் இது மேரி ஆளுங்களுக்கு ,

இன்னு ஒரு லூசுங்கோ கூட்டம் கீதுபா !! அதுனால தான் இந்த மேரி "அல்சா மேரி, குல்சா பார்ட்டிங்கோ "அல்லாம் அரசியலு கனவு காணுதுங்கோ !! கைமா பசண்கோ !!

நீ கோவப் பட்டதும் நாயம் தான் வாஜாரே !! ஆனா , ஒன்னு நம்ப குஜிலி ரம்பா பொண்ணு தான் எந்த எலீச்சன்ளையும் , உண்ணும் நிக்கல, சல்பேட்டா !!

அது காண்டி நின்னாக்கா, அட MLA இல்லன்னாக் கூட பரவாயில்ல , ஒரு CM ஆக்கிட முடியாது ? அதுக்கு இந்த டவுசரு கேரண்டி பா !! ஹி , ஹி, ஹி , அக்காங் !!

டவுசர் பாண்டி சொன்னது…

//மலயாளிகள் மட்டும் இது போன்ற கிருக்குத்தனங்கள் ஏன் செய்வதில்லை என்பதை துபாயில் வசிக்கும் தாங்கள் சிறிது ஆராய்ந்து எழுதுங்களேன்.//-அலாவுத்தீன் கூறியது.

அஹா , இந்த சின்ன மேட்டருக்கு போய், எங்க வாஜார் , ஆராய்ச்சி பண்ணி வேற சொல்லனுமா ?

இந்த டவுசர் இன்னாத்துக்கு
தான் கிரான் பா !! செரி இப்போ மேட்டருக்கு வரேன் ,

இன்னாது மலையாளிங்கோ மட்டும் செய்யறது இல்லியா ? யாரு வாஜார், சொன்னது இது மேரி , கீரதுளியே கலீஜி ஆளுங்கோ தாம்பா !! இல்லன்னா ,

இங்க வேல ஆவாத இருந்த பொண்ணு பாவம் , அட இந்த ஷகீலா பொண்ணு தாம்பா ,அந்த நல்ல மேரி பொண்ண , " ? " கீஞ்ச மட்ட மேரி ஆக்கிட்டானுன்களே !!

அதுக்கு ரசிகருங்கோ கூட்டம் இன்னா மேரி இருந்துது தெரிமா ? அத்த பாத்து பெரி பெரி இஸ்டாருங்கோ , அல்லாம் பேந்து பூட்டானுங்கோ பா !! அந்த மேரி பெல்லாக்கா பசண்கோ !!

அது காண்டி இல்ல , நம்ப நாடே வேற சிரிக்கிறா மேரி , மோகன் லாலுக்கு ராணுவத்துலியே , இன்னாவோ போஸ்டிங்கு வேற குத்தங்கோ !!

இதான் கலி காலம் இன்னு சொல்றது , தெர்தா ? இப்ப சொல்லு ? அக்காங் !!

பொன் மாலை பொழுது சொன்னது…

நண்பர்கள்
திரு.வேலன்,
திரு .சேகர்
,திரு ராஜா ,
மாப்ள.யூர்கன் க்ருகியர், திருமதி.மேனகாசத்யா,
திரு.பார்த்திபன்,
திரு.அலாவதீன்
மற்றும் நம்ம "தலீவர் "டவுசர்| அணைவருக்கும் என் நன்றிகளை தெரிவிவித்துக்கொள்கின்றேன். வருகை தந்து என் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டீர்கள்.
சிங்கையிலிருந்து திரு. பார்த்திபனின் யதார்த்தமும், திரு அலாவுதீனின் ஐயமும்,டவுசரின் விளக்கங்களும் மேலும் இது குறித்து ஒரு பதிவினை எழுத தூண்டியுள்ளது. விரைவில் வெளியிடுகிறேன். வருகை தந்த அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.

கக்கு - மாணிக்கம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக