நகரின் உள்ளே நாம் நுழையும் போதே கண்களின் வழியாகாக ஆச்சரியகுறி தலைக்குள் நுழைந்து வியப்பை தந்து கண்களை விறிய வைத்துவிடும்.
பசுமையாண மரங்கள் அடர்ந்த காட்டினுள் வந்த உணர்வு உண்டாகும். வித வித நிறங்களில் வடிவங்களில் சிரிக்கும் மலர் தோட்டங்கள்,நீர் ஊற்றுகள்,
சாலைகளின் இருபுறங்களிலும் மரங்களின் நிழல்,மரகதபச்சை கம்பள புல் தரைகள். வின்னை தொடும் உயர்ந்த கட்டிடங்கள்,பல வித நிறம் காட்டும் கண்ணாடி ஆடை அனிந்த வித விதமான மாளிகைகள்.சறுக்கிசெல்லும் பாலங்கள்.அப்போதுதான் யாரோ துடைத்துவிட்டு சென்ற உணர்வைத்தரும்
தூய்மை………………………… போதும், இனி நீங்களே பாருங்கள்.
14 comments:
இன்னா !! வாஜாரே !! சொம்மா தூள் கேளப்பிட்ட போ !! அட அட , இன்னா மேரி கீது பா !!இந்த ஊரு , பில்டிங்க்கு அல்லாம் அட்டைல செஞ்சி வெச்சா மேரி , கீது ? வல்சி வளச்சி
மாடலு மாடலா கட்டி வெச்சிக்கீரங்கோ, ஆமா , இன்னா கேமரால புட்ச்சது இது சொம்மா ,அவ்ளோ தூளா கீது , அப்டியே நேர்ல பாக்கறா மேரி கீது , நைனா !!
Please do not publish/post these hifi photos only. Please post tamilars/indians bachelors staying 10 people in room, 10 persons sharing 1 toilet, 1 bathroom.
also post 2 or 3 married families sharing 1 kitchen, 1 bathroom.
That is the real service to the Tamil society.
By seeing these hifi photos only lot of Tamil youth came to dubai abbudhabi and spoil their life.
டான்க்சு "டவுசரு" . ஆமா , நீயீ இன்னாமோ சொல்லிகின ,இத்த மாத்து அத்த மாத்து ன்னு. நா இன்னாத்த கண்டன் தலீவா ? பிஸிகொத்து பிள்ளகா பையன். வெரசா அல்லாத்தையும் மாத்திக்குடு நைனா.
Dear Mr.Ramji.Yahoo.
Thanks for your visit.
I have been living in the U A E since 1996 onwards at various emirates like Sharjah,Abu Dhabi and Dubai too.I know the plight of the bachelors status very well.It does not meant that I tried to hide the other side of this land. This is happen in every where in the Globe.
I have been provided a bachelor status bath attached individual room by my company. If you are all ready to nod your head for anything at the beginning,then the same would be available at the end too. first of all one must have gut not to accept any thing that is lower his expectation or status.
Avaricious are everywhere my dear friend.
Any how Thanks again.
//பசுமையாண மரங்கள் அடர்ந்த காட்டினுள் வந்த உணர்வு உண்டாகும். வித வித நிறங்களில் வடிவங்களில் சிரிக்கும் மலர் தோட்டங்கள்,நீர் ஊற்றுகள்,//
உண்மைதான்.பணி விஷயமாக காரில் துபாயிலிருந்து அபுதாபிக்கு அடிக்கடி வரும்போது நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும்,ந்டுவிலும் மரங்கள் அடர்ந்து பசுமையாக குளிர்ச்சியாக பயணக்களைப்பே தெரியாது. பாலைவனநாட்டில் இருப்பதுபோலவே தெரியாத வண்ணம் பராமரிப்பதை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.
நம்நாட்டு சாலைகள் அந்த நேரத்தில்
நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாது.
ஒரு நூலிழையில் இங்கு போவதை தவறவிட்டேன்,அதனால் பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை.படங்கள் அருமை.
படங்களை விட Header படம் தான் தூள்கிளப்புது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் திரு.துபாய் ராஜா .
// நம்நாட்டு சாலைகள் அந்த நேரத்தில்
நினைவிற்கு வருவது தவிர்க்க முடியா //
நமக்குத்தான் சாலைகளின் இரு புறங்களிலும் சினிமா ,அரசியல் , அனாமதேய பிறந்தால் ,இறந்தநாள் சுவரொட்டிகள், மூத்திரம் ,மாடுகள்,சாணி என்று நிறைய வேண்டுமே!
மிகப்பெரிய ஜனநாயக நாட்டினர் அல்லவா நாம்.!!!!
அதுசரி , ஷார்ஜா ராஜா, அபு தாபி ராஜா அப்புறம் அலைன் ராஜா என்று நிறைய ராஜாக்களாக வந்தால் நன்றாக இருக்கும் . அவர்களையும் அழைத்து வாருங்கள் மறுமுறை.
// படங்களை விட Header படம் தான் தூள்கிளப்புது.//
மிக்க நன்றி வடுவூர் குமார்.
படங்கள் எல்லாம் அருமை ஆகா ஓஹொ..என்று சொல்லி பரவசபடலாம் என்று பார்த்தல்..திரு. ராம்ஜி.யாஹூ அவர்களின் பின்னூட்டத்தை பார்த்தும்... பரவசத்தை எல்லாம் பாடை கட்டி வச்சுட்டு பீல் பண்ண வேண்டியதா போய்டுத்து.
நான் கடந்த 1996 முதல் இங்கு தான் வசிக்கிறேன். ராம்ஜி யின் கருத்துக்கள் உண்மைதான். வாடகை (உள்வாடகை எல்லாம் மலையாளிகள்தான்) வசூலிப்பவர்கள் பேராசைக்காரர்கள்.
குடியிருக்க வருபவர்களோ கஞ்ச பிசிநாரிகள் என்றால் இப்படித்தான் இருக்கும். எப்படியாவது காசை மிச்சம் பிடித்து காலம் தள்ள வேண்டுமெனில் இப்படித்தான் வாழ முடிகிறது இங்கு. இவர்கள்தான் நாடு திரும்பியவுடன் இல்லாத ஆட்டமெல்லாம் ஆடுபவர்கள். முதலில் இடம் கிடைத்தால் போதும் என்று வந்து பின்னர் இது இல்லை அது இல்லை என்று ஒப்பாரி வைக்கும் ரகம். உண்மையில் இவர்களுக்கு அந்த இடத்தை பற்றி சகலமும் தெரிந்த பின்னர் தான் அங்கு குடி ஏறுவார்கள். பின்னர் இப்படி புலம்புவார்கள். இது போன்ற கூத்துக்கள் நம்ம ஊரில் உள்ள பெரிய நகரங்களில் உண்டுதானே! தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்லை. 4000 Dhs. சம்பளம் கிடைத்தவுடன் பெண்டாட்டிய அழைத்துக்கொண்டு வந்து இங்கு குடும்பம் நடத்தும் எல்லாருமே இந்த வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருகிறார்கள். விரலுக்கு தகுந்த வீக்கம் வேண்டும் ரொம்பவும் வீங்கினால் தங்காது.
சரி ஏன் என் பின்னூட்டத்தையும் படிக்கலாமே அதே இடத்தில்.
அதற்காக அபு தாபியின் அழகை ரசிப்பதில் தவறோ பாவமோ இல்ல தலைவா. !!!!
இன்னா !! அந்த ஊரு சொம்மா வெள்ளைக்கார குஜிலி கணக்கா கீதா?
இது மேரி இல்லன்னா , அந்த ஊரு நமபுளுக்கு புடிக்காத போயடுமின்னு தான் சும்மா மன்ஜா தண்ணில மாங்கா காட்டராங்கோ !! அக்காங் !! போனமா , ரவ வேல செஞ்சோமா !!அப்பால ரவ ஊர சுத்திட்டு அப்பிடியே , ஜூட்டா !! சம்பாற்சிக்கீனு வந்து , நம்ப ஊர்ல வித்த காட்னமான்னு இல்லாம , அங்க இது செரி இல்ல அது செரி இல்லைன்னு
கூவக்கூடாது !!
அக்காங் !! இன்னாப்பா இந்த டவுசர் சொல்றது நாயமா இல்லியா ? அத்த சொல்லு மின்ன .
விளக்கமெல்லாம் நல்லாதான் இருக்கு ...நம்மாளுங்கதான் திருந்தற வழியை காணோம்
இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்
இமெயில் முகவரி: infokajan@ymail.com
வலைபூங்கா.காம்
1999 ல் ஒரு வருடம் நான் அங்கு வேலை பார்த்தேன். அப்போது நான் வேலைசெய்த முஸஃபா ஏரியா வெறும் மணல்மேடாக இருந்தது. சாலைகளை அப்போதுதான் போடத்துவங்கினார்கள். சாப்பிட உட்கார்ந்தால் சில நேரங்களில் காற்றில் மண் அடித்து சாப்பிடமுடியாமல் போய்விடும். சென்ற ஆண்டு போய் பார்த்தபோது நான் இருந்தபோது இருந்த எந்த ஒரு அடையாளமுமின்றி முற்றிலும் மாறிவிட்டது.
கருத்துரையிடுக