பாஜக அழகான தேர்தல் வியூகத்தில் இறங்கியிருக்கின்றது, அதாவது ஒன்றுமே இல்லாதவன் பெரும் பலசாலியினை எதிர்ப்பது என்பது அவனுக்கு அரசியலில் தனி கவனத்தை பெற்று கொடுக்கும்
1950களில் திமுக இதை காமராஜரிடமும் நேருவிடமும் செய்தது
ஆம் அன்று திமுகவுக்கு இழக்க எதுவுமில்லை, காங்கிரஸ் வலுவாக இருந்தது அதை சீண்டி சீண்டி வம்பிழுத்தார்கள்
இன்று மிக நுட்பமாக பாஜக அதை திமுகவிடம் செய்கின்றது, மிக அழகாக திமுகவினை சீண்டுகின்றார்கள்
இதற்கு வாய்ப்பு கொடுத்தது யாரென்றால் நிச்சயம் திமுக
பாஜகவினை சீண்டி கோ பேக் என ஒப்பாரி வைத்தது, அகில இந்திய கட்சியாக தன்னை நினைத்து கொண்டு பாஜகவினை சீண்டி வம்பு வளர்த்தது
பழனிச்சாமி இங்கு வலுவாக காலூன்ற , இங்கு இல்லா பாஜகவினை எதிரியாக நினைத்து திமுக அரசியல் செய்ய காட்சிகள் மாறிவிட்டன
இல்லா பாஜக திமுக விரும்பியபடியே இப்பொழுது பெரும் பலத்துடன் களத்துக்கு வருகின்றது
இதில் பாஜக பக்கம் ஒரு சிக்கலுமில்லை, அவர்களுக்கு மாநகராட்சி மேயர் கூட இல்லை, எம்.எல்.ஏ எம்பி என யாருமில்லை
ஆனால் மத்தியில் வலுவான பதவியுடன் மிகபெரும் பலமாக இருக்கின்றார்கள், திமுகவின் பெரும் பலமான பணத்தினை தேர்தல் நேரம் அவர்களால் முடக்க முடியும்
அதையும் மீறி திமுக வென்றாலும் மத்தியில் பாஜக ஆட்சி இவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும்
பாஜக இங்கு சில தொகுதிகள் வென்றாலும் அது அவர்களுக்கு மிகபெரும் வெற்றியே சந்தேகமில்லை
ஆக மிக எளிதாக அசால்ட்டாக எந்த எதிர்பார்ப்புமின்றி ஆட வந்துவிட்டது பாஜக, மிக கனமாக மிக பெரும் நெருக்கடியுடன் களம் இறங்கி குழம்பி நிற்கின்றது திமுக
இதற்கு அவர்கள் கொடுக்க போகும் விலை மிக அதிகம், அது போக போக தெரியும்
தமிழக தேர்தல் களத்தை பாஜகவுக்கும் திமுகவுக்குமான யுத்தமாக மாற்றிவிட்டு டெல்லி பறக்கின்றார் அமித்ஷா, இனி அவரின் வருகை அடிக்கடி இருக்கலாம்
நேற்று அவர் நடந்த அந்த நடை அதற்கான சமிக்ஞை..திமுகவுக்கான பலத்த எச்சரிக்கை
எனினும் ஒரு விஷயம் மகிழ்ச்சி
அமித்ஷா வரும்பொழுது பாஜக வாழ்க என்றோ, அமித்ஷா வாழ்க என்றோ, காஷ்மீர் மீட்ட மன்னன் வாழ்க என்ற சத்தம் வரவில்லை
மாறாக "பாரத் மாதாவுக்கு ஜே..", "பாரதமாதா வாழ்க.." என்ற குரல் கேட்டதல்லவா? அதுதான் மகிழ்ச்சி
கிட்டதட்ட 73 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மீண்டும் அக்குரல் ஒலிக்கின்றது, இது பாஜகவினால் சாத்தியம் என்பதில் மிக்க மகிழ்ச்சி
ஆம் வெள்ளையன் காலத்தில் கேட்ட குரல் இன்று திமுக காலத்தில் திரும்ப ஒலிக்கின்றது என்பதில் என்ன தெரிகின்றது?
தமிழகம் இரண்டாம் விடுதலை போருக்கு தயாராகிவிட்டது தெரிகின்றது
இதனால் உற்சாகமாக சொல்லலாம் "பாரத் மாதாவுக்கு ஜே...வந்தே மாதரம்.."
0 comments:
கருத்துரையிடுக