சினிமாவுக்கு போன சித்தாளு கதையை ஜெயகாந்தன் எழுதியதன் காரணம் என்ன ?
ஆண்கள் /பெண்களின் புஜத்தையும், தொடையையும் திரையில் காட்டவேண்டிய நோக்கம் என்ன. ??
திராவிட சிந்தனைகளின் கேவலமான வெளிப்பாடுதான் கலைகள் என்ற பெயரில் தமிழ் சினிமாக்களின் வெளியீடுகள். தினத்தந்தி போன்ற கேடுகெட்ட பத்திரிகைகள் இந்த கேவலங்களைத்தான் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரப்பியது.
இபோதுஇவைகளை பேச ராஜன் கிடைத்திருப்பது இக்கால பிள்ளைகள் கொஞ்சம் அதிஷ்டம் கொண்டவர்கள் போல.
கொஞ்சமும் யோசிப்போ , பகுத்தறிவோ இல்லாமல் தான் தமிழனும் இவைகளை உள்வாங்கிக்கொண்டு திமுகவிற்கும் ராமச்சந்தருக்கும் ஓட்டுக்களை அள்ளி வழங்கி ஆட்சியிலும் அமரவைத்தான்.
*******************************************************************************
நடித்ததெல்லாம் தமிழக அரச கதைகள் , ஆனால் உடையெல்லாம் ரோமானிய , கிரேக்க அரசருக்குள்ளான ஆடைகள்.
எந்த பாண்டியனும் சோழனும் இப்படி மினிஸ்கர்ட் அணிந்து நின்றான்? எந்த தமிழ் மன்னன் குட்டை பாவாடையினை அணிந்திருந்தான்?
தமிழ் அரசர்கள் வேட்டி அணிந்து நெற்றியில் நீறு பூசி , கொண்டையிட்டு தலையிலும் கழுத்திலும் மாலை சூடி, மார்பெல்லாம் சந்தணம் பூசி வலம் வந்தனர்
அந்த காட்சிகளை அப்படியே வைத்தால் தமிழன் ஒரு இந்து என்பதை மக்களிடம் ஒப்புகொண்டதாகிவிடும் என அஞ்சிய திராவிட கும்பல் ஏதோ கான்வென்ட் குழந்தையின் ஸ்கர்ட்டை மாட்டி கொண்டு நடிக்க வந்துவிட்டது
முதுகில் தொங்க வண்ணாந்துறையில் எடுத்து வந்த ஒரு ஜமுக்காளம் வேறு
அதை கைதட்டியும் ரசித்தான் தமிழன், அவனின் அறிவும் தன் இனமான வரலாறும் அப்படி இருந்திருக்கின்றது

0 comments:
கருத்துரையிடுக