பாபர் மசூதி தானாகவே இடிந்தது : உபிக்கள் வேதனை, மனுஷ்யபுத்திரர் கவிதை
யழவு கவிதை அவர்களுக்கு மட்டும்தான் வருமா? வேறு யாருக்குமே வராதா?
ஆம் இங்கும் சிலவும் அப்படித்தான்
அண்ணாமலை பல்கலைகழக மாணவன் தானாக குளத்தில் விழுந்து செத்தான்
செத்தவன் மகன் என தந்தைக்கும் தெரியவில்லை
இந்தி எதிர்ப்பில் 100 பேர் ஏன் செத்தான் என அவனுக்கும் தெரியவில்லை
இந்தி திமுகவினர் பள்ளிகளில் இந்தி வந்ததை அவன் ஆன்மா கண்டு அழுதது யாருக்கும் தெரியவில்லை
யார் தூண்டிவிட்டு அத்தனைபேர் உயிர்விட்டான்?
ஒருவரும் தூண்டவில்லை தமிழுக்காய் துப்பாக்கி எடுத்து தன்னை தானே சுட்டும் கொண்டான்.
இந்திராமேல் விழுந்த கொடுங்கற்கள் யார் வீசியது என தெரியவில்லை
ஆனால் அது இந்திரா மேல் படவுமில்லை
எனினும் இந்திராவுக்கு ரத்தம் தானாக நெற்றியில் இருந்து வந்தது
ராஜிவ்காந்தி தானாக வெடித்து சிதறி கிடந்தார், அந்த அப்பாவிகள் 33 பேர் விடுதலை
இன்னும் 7 பேருக்கு ராஜ உபச்சாரம்
சென்னையில் பத்மநாபாவும் அவனுடன் 16 பேரும் ஒருவரை ஒருவர் சுட்டு அவர்களாகவே செத்தும் போனார்கள்
மதுரையில் லீலாவதி தன்னைதானே வெட்டி கொண்டாள்
அவளை காக்கமுடியா தா.கிருட்டினன் ஒரு அதிகாலையில் தானாவே பிளேடால் வெட்டி செத்தார்
குடமுருட்டி பாலத்தில் குண்டு தானாக வெடித்தது
கொடைக்கானல் குண்டுவெடிப்பு தானாய் நிகழ்ந்தது, அதை வேடிக்கை பார்த்த தியாகு பிடிபட்டார்
தியாக தீபம் கருணாநிதி அவனை காத்தார்
சென்னையில் சில அலுவகங்கள் தானே வெடித்தன ,, வெயில் தாளாமல் அவை வெடித்தன
அந்த அதிர்ச்சியில்
கோவையில் ஒருநாள் திடீரென கட்டங்கள் தானாய் வெடித்து சிதறின, அவைகளுக்கு நிற்க பலமில்லை தானே விழுந்தன
250 பேரை கொல்கின்றோமே என தெரியாமலே கொன்று விழுந்தன
பொட்டு சுரேஷ் உட்பட சிலர் மதுரையில் தானாய் செத்தனர்
அண்ணா நகர் ரமேஷும், சாதிக்பாட்சாவும் சந்தோஷமாக தற்கொலை செய்தார்கள்
மதுரை பத்திரிகை அலுவலகம் கண்ணகி பார்க்காமலே தீபிடித்து எரிந்தது
திராவிட ஆட்சியில் திட்டமிட்டு நடந்தாலும் எல்லாம் தற்செயல்
ஆனால் அயோத்தியில் திட்டமிடாமல் நடந்ததெல்லாம் திட்டமிட்ட சதிசெயல்..
குஷ்பு புத்திரன்
30/09/2020
0 comments:
கருத்துரையிடுக