பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, செப்டம்பர் 4

எம்ஜிஆர் - பொய்முகம்

இப்படி செருப்பை சாணியில் தோய்த்து முகத்திலடித்திச்சொல்ல யாரும் இங்கே  இல்லாது போனதே தமிழ் மக்களின் துரதிஷ்டம். ராமச்சந்தர் தலைமுதல் கால் வரை சுயநலமிக்க ஒரு பொய் பிம்பம். இந்த நபரால் தமிழகம்  அடைந்த சீர்கேடுகள் மிகஅதிகம் என்பதை தமிழ் மக்கள் இன்னமும் உணரவில்லை. ஒரு காலகட்டத்தில் ஜெயகாந்தன் தனது  அரசியல் கருத்துக்களை பொதுவில் சொல்லுவதையும் நிறுத்திக்கொண்டார். அவர் இப்படித்தான் இதே கருத்தினை சொல்லியிருப்பார்.
______________________________________________________

நாம் ஒரு உண்மையினை சொல்லிவிடுகின்றோம், எம்.ஜி ராமந்திரன் எனும் மாமனிதன் மேல் உனக்கு ஏன் காழ்புணர்ச்சி என கேட்பதால் சொல்கின்றோம்
அம்மனிதன் நிச்சயம் மக்கள் அபிமானம் பெற்றவன் சந்தேகமில்லை, ஆனால் அவரின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதல் சுயநலம் ஒன்றையே சார்ந்திருந்தது, கடைசிவரை அப்படித்தான் இருந்தார்
எது தனக்கு லாபமோ அதை மட்டும் செய்தார், கடைசிவரை தன்நலம் ஒன்றிலே குறியாய் இருந்தார்
முதலில் அவர் பக்திமான், கழுத்தில் ருத்திராட்சமும் பட்டையுமாக வந்த பக்திமான், தேசியவாதி
அதில் நிலைத்தாரா என்றால் இல்லை பகிரங்கமாக நாத்திக கூட்டத்தில் இருந்து ராம்சாமி, அண்ணா, கருணாநிதி என சொல்லிகொண்டிருந்தார்
ஆம் கருணாநிதியின் தமிழ் வசனமும் அண்ணாடுரையின் அங்கீகாரமும் அவருக்கு தேவைபட்டது பயன்படுத்தினார்
கட்சிக்கு அவர் உழைத்தவரும் அல்ல, போராட்டம் செய்தவரும் அல்ல அது நாட்டுக்கு நலல் விஷயம் எனினும் கட்சியின் முகமாக அவர் அறியபட்டிருந்தார், மக்கள் அவரைத்தான் நம்பினர்
காமராஜரை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்தது எம்ஜி ராம்சந்தரின் முகத்தால் என்பது சந்தேகமில்லை, ஆனால் அந்த மக்கள் நம்பிக்கையினையும் அவர் தவறாக தனக்காகவே பயன்படுத்தினார்
1950ல் இருந்து திமுகவில் இருந்த அவருக்கு அங்கு கணக்கு சரியில்லை எனும் ஞானோதயம் 1972ல் அதுவும் தன் தொழிலுக்கு முக முத்து இடைஞ்சல், தனக்கு அமைச்சர் பதவி இல்லை எனும் பொழுதுதான் வந்தது
சரி, திமுக விஷம் என் கண்டவர் என்ன செய்திருக்க வேண்டும்? தமிழகத்தை தேசியம் பால் திருப்பியிருக்க வேண்டுமா வேண்டாமா?
அதை செய்யாமல் கூடுதல் விஷமாக அண்ணா திமுக என ஒன்றை தொடங்கினார்
அதில் என்ன நடந்தது? திமுகவினை விட கூடுதலான ஊழல் நடந்தது. கருணாநிதி தமிழக ஆபத்து, இந்து விரோதி, நாட்டு விரோதி என சொல்லி சொல்லி அதிமுகவினர் சம்பாதித்தனர்
ஜெயலலிதாவுக்கு நிச்சயம் அரசியல் ஆசை இல்லை, அவரை வலிய இழுத்து வந்து அவர் இன்று அனாதையாக சாக காரணம் யார்?
சசிகலாவினை ஜெயலலிதாவுக்கு அறிமுகபடுத்தி பழக்கியது யார்? சசிகலாவுக்கு முதன் முதலில் அரசியல் என்றால் என்ன என சொல்லி கொடுத்தது யார்?
ஈழ சிக்கலுக்கு முதல் காரணம் யாரென கருதுகின்றீர்கள், சாட்சாத் இந்த ராம்சந்திரன்
ஆம், இந்திராவுக்கு பின்னரான ஈழ சிக்கலில் பிரபாகரனை தனக்கு சாதகமாக மடக்கி ராஜூவுக்கு எதிராக பயன்படுத்தியவர் இதே ராம்சந்தர்
சரி, பிரபாகரனுக்காவது விசுவாசமாக இருந்தாரா? அதுவுமில்லை டெல்லி அசோகா ஹோட்டலில் அவனை அம்போ என விட்டது, அமைதிபடை சென்றபொழுது அமைதி காத்ததும் எவ்வகை?
அவருக்கு தன் அந்திம காலம் தெரிந்தது, நிச்சயம் நீண்ட நாள் இருக்கமாட்டோம் என தெரிந்தது, பொறுப்புள்ள மனிதன் தன் கட்சியின் எதிர்காலம் பற்றி, மக்கள் தன் மேல் வைத்த நம்பிக்கை பற்றி யோசிப்பானா மாட்டானா?
இப்படி ஒரு மாநில கட்சி தனக்கு பின் என்னாகும்? தேசியம் இங்கு என்னாகும் என கவலைபடுவானா மாட்டானா?
ஆனால் தனக்கு பின் என்னமும் ஆகட்டும் , யாரும் அழியட்டும் தன்னை நம்பிய மக்கள் கூட்டம் சாகட்டும் என நினைத்த கொடிய மனம் அவருக்கு இருந்தது, அதுதான் இப்பொழுது நாம் காணும் சீரழிவு
இங்கு தனியார் பள்ளி மருத்துவமனைகளை அறிமுகபடுத்தி அனுமதி வழங்கியது யார்?
காவல்துறையின் கொடிய துப்பாக்கி சூடு கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது யார்?
மறவர் சாதி ஒரு வாக்கு வங்கி என உணர்ந்து சாதி அரசியலை தொடங்கி வைத்தது யார்?
அன்றே கருவறுத்திருக்க வேண்டிய மதுகடைகளை திரும்ப கொண்டுவந்து மலர வைத்தது யார்?
அன்றே இந்து கோவில்களை சீர்படுத்தாமல் கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்ய சும்மா இந்து ஆலயங்களை கருவியாக பயன்படுத்தியது யார்?
திருசெந்தூர் ஆலய வேல் முதல் நெல்லை வெள்ளிதேர் விவகாரம் வரை மூடி மறைத்தது யார்?
ஆம், கருணாநிதி ஒரு துளி விஷம் என்றால் ராம்சந்தர் ஒரு குடம் விஷம்
திமுக முதலை பண்ணை என்றால் அதிமுக திமிங்கல பண்ணை
திமுகவில் முட்டாள்கள் அதிகம் என்றால் அதிமுகவில் தந்திரசாலிகள் அதிகம்
திமுக வெளியே தெரிந்த நோய் , அதிமுக வெளியில் தெரியாத கொடும் நோய்
நாம் தேசியவாதி என்பதாலும் இம்மண்ணின் கலாச்சாரம் காக்கபட வேண்டும் தனிதன்மை காக்கபட வேண்டும் எனும் சிந்தனை கொண்டவர் என்பதாலும் சொல்கின்றோம்
இங்கு திராவிட அழிச்சாட்டியத்தை நசுக்கும் பலம் ராம்சந்தருக்கு இருந்தது, திராவிடம் எனும் மாயை அவரின் அழகான முகத்தில்தான் இருந்தது
அதை கொண்டு அவர் திமுகவினை நசுக்கி இருக்கலாம், 1960களில் நசுக்கி இருக்கலாம் செய்யவில்லை
1972ல் நசுக்கி இருக்கலாம் செய்யவில்லை
1986களிலாவது தமிழ்நாட்டை தேசியம்பால் திருப்பிவிட்டு செத்திருக்கலாம் அதுவுமில்லை
எம்மை பொறுத்தவரை நேரத்திற்கொரு நடிப்பு, நாளுக்கொரு தந்திரம் என தமிழக மக்களை ஏமாற்றிய இவரை விட சாகும் வரை தன் கொள்கையில் உறுதியாய் இருந்த எம்.ஆர் ராதா எவ்வளவோ மேல், அவனிடம் உண்மை இருந்தது
விஷம் என்றாலும் இயல்பான மானிட பாசத்தில் தன் குடும்பம் தன் அக்கா குடும்பம் என வாழவைத்தார் கருணாநிதி, ஆனால் தமிழ்நாட்டை யாருக்கெல்லாமோ கூறு போட்டு கொடுத்து எப்படியும் அழியட்டும் என மவுனம் காத்தார் ராம்சந்தர்
தமிழ்நாட்டின் அழிவுக்கெல்லாம், சீரழிவுக்கெல்லாம் ஒரு மனிதரை கைகாட்ட முடியுமென்றால் அது அவர் ஒருவரையே
அவராலே திமுக ஆட்சிக்கு வந்தது, அவராலே இன்றுவரை ஆட்சியிலும் அதிமுக இருக்கின்றது
தமிழக அரசியலில் திமுகவினை காட்டி அதிமுகவும், அதிமுகவினை காட்டி திமுகவும் செய்யும் அராஜக ஊழலுக்கு பிதாமகன் ராம்சந்தர்
1960லே தன் நிலையும் நாட்டின் நிலையும் அவர் உணர்ந்து செய்ய வேண்டியதை செய்திருந்தால் இந்த சீரழிவு வந்திருக்காது
அவர் 1960ல் செய்யாததை, 1972ல் , 1986ல் செய்யாததைத்தான் தேசியம் இங்கு மலர செய்யாத, இங்கு பல சீரழிவு கலாச்சாரத்தை அவர் தடுக்க தவறிய காரியத்தைத்தான் செய்து வைக்க ஒரு கூட்டம் போராடி கொண்டிருக்கின்றது
நாம் உறுதியாக சொல்கின்றோம் தமிழக சீரழிவுக்கு கருணாநிதி பாதி காரணம், முழு காரணம் எம்ஜி ராம்சந்தர் என்பவரே
கோபாலபுரம் மெல்ல கொல்லும் நஞ்சு என்றால் ரமாவரம் உடனே கொல்லும் சயனைடு
இதை என்று தமிழகம் உணருமோ அன்று உருப்படும்
நாம் சொல்வதை சொல்லிகொண்டேதான் இருப்போம், அதை காழ்புணர்ச்சி என்பவனும் அவர் புர்ச்சி தலைவன் என சொல்பவனும் இங்கு தேவையில்லை அவன் கிளம்பலாம்
இப்படிபட்ட அடிமுட்டாள்கள் முக ஸ்டாலின் பின்னால் செல்லும் உபிக்களை விட கேடுகெட்ட முட்டாள்கள், அப்படிபட்டவர்கள் இப்பக்கம் வரவேண்டாம், வந்தாலும் ராம்சந்தர் உத்தமன் என எம்ம்மிடம் சொல்ல வேண்டாம்
அம்மனிதன் யாருக்கும் உண்மையாக இல்லை தன்னை நம்பிய தலமைக்கோ இல்லை நம்பிய மக்களுக்கோ, தனக்கு கட்சி உருவாக்கி தந்த இந்திராவுக்கோ, இல்லை தன்னை அடைக்கலாமக கருதிய பிரபாகரனுக்கோ, கடைசியில் தன்னை முழுக்க நம்பிய ஜெயாவுக்கோ என யாருக்கும் அவர் நன்றியோடு இருந்ததில்லை
முழுக்க சுயநலம்
அதே பாணியில்தான் இன்றுவரை அதிமுக ஆட்சியிலும் இருக்கின்றது, அந்த சீரழிவினை தொடங்கி வைத்தது சாட்சாத் ராம்சந்திரன்
நன்றி என்பதும் கடமை என்பதும் அவர் ரத்தத்தில் இல்லை, எது வாய்ப்போ அதை தனக்கு சாதகமாக திருப்பி கொள்வார்
அவரின் வள்ளல்தன்மை என்பது தன்னை துதிபாட ஒரு கூட்டத்தை உருவாக்க அன்றி வேறு எதற்கும் அல்ல..
அறிவும் மனசாட்சியும் இருந்தால் உங்களிடமே கேளுங்கள் எம்மிடம் கேட்க வேண்டாம்



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக