பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, செப்டம்பர் 20

கடைசி மணி அடிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கின்றது

 இன்றைய தேதி வரைக்கும் ஒரு பயல்  கூட இந்த உண்மைகளை வெளியில் சொன்னதில்லை. இதை  நன்றாக உணர்ந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே. டுபாக்கூர்  மேதாவிகள், எழுத்தாளர்கள், காசுக்கு எழுதும்  அறிவு ஜீவிகள் என எல்லோரும் சகலத்துக்கும் பிரமணர்களை வசைபாடுவதை மட்டுமே பெரிய  புர்ச்சி  என்று இன்றுவரையிலும் நினைத்துக்கொண்டுள்ளனர். 

*****************************************************************************

சுதந்திரத்துக்கு முன்பும் , சுதந்திரம் வாங்கிய பின்பும் அதாவது 1960களிலும் இந்த தலித் கும்பல், திராவிட இம்சைகள் மேல் ஏன் இந்திய மேலிடம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம்

அதில் பல மர்மங்களும் ரகசிய நிகழ்வுகளும் இருந்தன‌

1930களில் கம்யூனிசம் உலகை புரட்டி போட்டு கொன்டிருந்தது, உலக அரசுகளெல்லாம் தங்கள் நாட்டில் அது நடந்துவிடுமோ என அஞ்சியது

இந்தியாவினை தொட்டு அதாவது ஆப்கன் வரை வந்திருந்த சோவியத் யூனியனும், இப்பக்கம் கிழக்கே சீனா, வியட்நாம் கொரியா என எழும்பி கொண்டிருந்த கம்யூனிச அலைகளும் பிரிட்டனை யோசிக்க வைத்தன‌

ஏழைகள் சிக்கலுக்கெல்லாம் பணக்கார வர்க்கமே காரணம் எனும் சித்தாந்தமே கம்யூனிசம், இந்தியாவில் அது எழ மிக அழகான வாய்ப்பும் இருந்தது

பிரிட்டானியர் அதை இங்கு இரு சக்திகள் மூலம் அழகாக திருப்பிவிட்டு பணக்கார சமூகத்தை காத்தனர்

மிராசுகளுக்கும், மில் அதிபர்களுக்கும் இன்னும் ஜமீன்களுக்கும் வர வேண்டிய சிக்கல் அது, நீங்கள் வாழ நாங்கள் உழைத்து சாக வேண்டுமா என வரவேண்டிய குரல் அது

ஆனால் தேர்ந்த ராஜதந்திரத்தில் இந்தியாவில் எல்லா சிக்கலுக்கும் பிராமணன் காரணம் என அது திசைமாற்றபட்டது

வடக்கே அம்பேத்கரும், தெற்கே ஈரோட்டு ராம்சாமியும் அதை திறமையாக செய்தனர்

அம்பேத்கர் பரோடா மன்னனுக்கோ இல்லை டாட்டாவுக்கோ எதிராக ஒன்றும் பேசியவர் அல்ல, அப்படியே ராம்சாமி நிலக்கிழார்களுக்கோ, ஜமீன்களுக்கு எதிராக பேசியதே இல்லை

இருவரும் பிராமணரை குறிவைத்து அடித்தனர், அதில் கம்யூனிச எழுச்சி அடங்கிற்று, பிரிட்டிஷ்காரன் சிரித்து கொண்டான்

ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கி பின் பிரிட்டனும் வெளியேறிற்று

சிக்கல் நேரு தலமையில் விழுந்தது, 1950களில் ஆந்திர கம்யூனிஸ்டுகள் சிலர் ஒரு புரட்சி செய்தனர், அதை வரவேற்றான் சீனத்து மா சே துங்

"இந்தியாவில் கம்யூனிச புரட்சி வெடிப்பது நல்ல விஷயம், சீனா அதை ஆதரிக்கும்" என பகிரங்கமாக சொன்னான் மாவோ

(இன்றுவரை மாவோயிஸ்டுகள் அந்த வகையே)

சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இருக்கும் பரந்த இந்தியா கம்யூனிச நாடாக மாற பல முயற்சிகள் நடந்தன‌

ஆனால் இந்து மதமும், இஸ்லாமியரும், சீக்கியரும் கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசத்தை வரவேற்கவில்லை, ஏழை உழைக்கும் மக்களை கம்யூனிசம் வளைக்கும் ஆபத்து இருந்தது

காரணம் அவர்கள்தான் அதிகம், எண்ணிக்கையில் மிக அதிகம்

இவர்கள் பொங்கியிருந்தால் நிலமை மாறியிருக்கும் ஆனால் அவர்களை பிராமணே உங்களுக்கு சிக்கல் என சொல்லி அவர்களை சிந்திக்க தெரியாமல் திசைதிருப்பினர்

இதனால் தலித் அரசியலும், திராவிட அரசியலும் இங்கு இருக்க வேண்டிய அவசியம் இருந்தது

நிச்சயம் தலித்தியமும் திராவிடமும் தனி நாடு கோராது, இந்தியாவில் அவர்களால் சிக்கல் வராது என மிக கச்சிதமாக கணக்கிட்டது டெல்லி அதில் உண்மையும் இருந்தது

இதையும் மீறி கம்யூனிஸ்டுகள் கேரளாவில் 1960களில் ஆட்சி அமைத்தனர், இந்தியாவில் அமைந்த முதல் கம்யூனிஸ அரசு அது

இது சோவியத் யூனியனுக்கும் , சீனாவுக்கும் உற்சாகமானது அவை இந்திய அரசியலில் தலையிட துடித்தன‌

மலேசியா அப்பொழுது கம்யூனிஸ்டுகளுடன் யுத்தம் நடத்தியது. கொரியா, வியட்நாம், கியூபா என எங்கெல்லாமோ அந்த சண்டை நடந்தது

இந்திய மேலிடம் கேரள நம்பூதிரிபாடு கம்யூனிஸ்ட் ஆட்சியினை டிஸ்மிஸ் செய்தது, இது கம்யூனிச உலகில் பெரும் பரப்பானது

சீனா நேரடியாக சீறியது, கம்யூனிசத்துக்கு விடபடும் சவாலை புறக்கணிக்க முடியாது என சீறிற்று

இந்தியா திபெத் சிக்கலை இழுக்க அது போராய் முடிந்தது, அதன் பின் கம்யூனிஸ்டுகளின் உண்மை முகம் தெரிந்து கட்சி உடைந்தது

ஆனால் இன்றும் அவர்களுக்கு சீனபாசம் உண்டு, அது பல இடங்களில் தெரியும்

ஆக இங்கு கம்யூனிசம் பரவாமல் இருக்க பிராமணனை கைகாட்டி நின்றார் ராம்சாமி, வடக்கே அம்பேத்கர் அதையே செய்தார்

இதை அமைதியாக வேடிக்கை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டது டெல்லி

பணக்காரனும், நவாப்பும், நிஜாமும், பண்ணையாரும், நிலகிழாரும் ஏற்க வேண்டிய பழியினை சுமந்து நாட்டை காத்தது அப்பாவி பிராமண இனம்

இதில் கம்யூனிஸ்டுகள் கொள்கைபடி வாழ்ந்து சரிந்தனர், திமுக சந்தடி சாக்கில் நன்றாக சுருட்டி கொண்டது

இப்பொழுது மோடி அரசு ஒரு காலத்தில் நாட்டில் கம்யூனிசம் பரவாமல் செய்ததற்கு நன்றி, ஆனால் மேற்கொண்டு தமிழ்நாட்டில் திராவிட ஊழலை அனுமதிக்க முடியாது என மறைமுகமாக வருகின்றது

கம்யூனிஸ்டுகளுக்கு கடைசி மணி அடிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கின்றது

அன்று இந்நாட்டின் ஆபத்து கம்யூனிசம், அதற்கு அஞ்சி இங்கு எதையெல்லாமோ வளரவிட்டு பல குழப்பங்கள் வந்துவிட்டன‌

இனி எல்லாவற்றையும் மொத்தமாக கணக்கு தீர்க்க வேண்டும், தீர்க்க தொடங்கியிருக்கின்றது தேசம்

இங்கு கம்யூனிசத்துடனான பெரும் போரில் எல்லா பழியினையும் தன்மேல் தாங்கி கொண்டு தேசத்தை காத்து நின்றது பிராமண இனம்

இது இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாளில் புரியும், அன்று தேசம் ஓளி வீசும்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக