Stanley Rajan
4h ·
அரசியலுக்கு லாயக்கில்லாதவர் எனும் முழு தகுதியினை பெற்றுவிட்டார் ராகுகாந்தி, இவர் தேசத்தின் மிகபெரிய ஆபத்து
இந்த உலகத்தின் ஒவ்வொரு நாடும் சுயநலமானது, அவர்களின் தேவைக்கும் வாய்ப்புக்கும் மட்டுமே நட்பு பாராட்ட கூடியது
இங்கு "சமாதானத்தை விரும்பினால் முதலில் பலசாலியாக இருத்தல் வேண்டும்" என்பது பொதுவிதி, அதுவும் அண்டை நாடுகள் பலம் பெருகும் பொழுது நாமும் பலம் பெற்றே தீரவேண்டும்
காங்கிரஸ் எங்கே நல்லுறவினை வளர்த்தது என்பதுதான் தெரியவில்லை
பாகிஸ்தானுடன் தீரா பகைக்கு காங்கிரஸ் நடத்திய 3 போர்களே காரணம். இலங்கையில் நடத்த அத்தனை குழப்பங்களுக்கும் காங்கிரஸே காரணம்
இங்கு சில நாட்டு பகைகள் தானாக வரும், பாகிஸ்தானும் சீனாவும் அப்படி. சில பகைகள் உருவாக்கபடும் இலங்கை உள்பட பல நாடுகள் அப்படி
சரி காங்கிரஸ் பலமான நல்லுறவினை வைத்திருந்தால் ஏன் இந்திராவும் சாஸ்திரியும் நேருவும் போர் நடத்தியிருக்க வேண்டும், நல்லுறவிலே சாதித்திருக்கலாமே?
பாகிஸ்தானுடன் நல்லுறவில் காஷ்மீர் சிக்கலை தீர்த்திருக்கலாம், வங்க விடுதலையினை நல்லுறவில் நடத்தியிருக்கலாம்
சீனாவினை நல்லுறவிலே திருப்பி அனுப்பியிருக்கலாம், இன்னும் பஞ்சாப் ஈழமெல்லாம் நல்லுறவிலே தீர்த்திருக்கலாம்
எதற்கு இவ்வளவு போர்? எதற்கு இவ்வளவு ஆயுதம்?
ஏவுகனையும், டாங்கியும், அணுகுண்டும் செய்ய உத்தரவிட்ட இந்திரா என்ன பைத்தியகாரியா? அந்த தலைவிக்கு தெரியாதா எது நல்லுறவு என்பது?
நல்லுறவு முக்கியமெனில் ஏன் ராஜிவ் போபர்ஸ் வாங்கினார்?
ஒரு தேசம் வலுவாக இருக்க பாதுகாப்பு அவசியம், மிக பெரும் பலம் அவசியம். அந்த பலத்தில்தான் நல்லுறவு நிலைக்குமே தவிர வேறு வழியில் அல்ல
இந்திராவின் பேரன் இப்படி அறிவுகெட்டு திரிவது தேசத்தின் அவமானம், ராகுல் என்பவர் இத்தேசத்தின் மிகபெரும் அச்சுறுத்தல், மிகபெரும் பலவீனம், இதுவரை கண்டவர்களில் மடமையான தலைவர்

0 comments:
கருத்துரையிடுக