பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜூலை 7

அது சினிமா கட் -அவுட்....

தாலி என்பது இந்துக்களின் சம்பிரதாயம், மற்ற மதங்களில் அது இல்லை. அப்படி தமிழக கிறிஸ்துவத்தில் மட்டும் இருந்தாலும் அதன் பூர்வீகம் இந்துமதமே
அப்படிபட்ட தாலி தேவையா தொலைகாட்சியில் விவாதம் வைப்பது எங்கணம் சரியாகும், அதைத்தான் மாரிதாஸ் அழுத்தி சொன்னார்
"அவ்வளவு புரட்சியாளர்கள் என்றால் கிறிஸ்தவ மோதிரம் தேவையா, இஸ்லாமிய சடங்குகள் தேவையா என அடுத்தடுத்த விவாதம் ஏன் இல்லை?" என்பது ஒன்றும் தீவிரவாத தாக்குதல் அல்ல‌
அது இந்துக்கள் மனதில் இருக்கும் சாதாரண கேள்வி
இதுதான் மதவாதம் என்றால், இதுதான் மத தீவிரவாதம் என்றால், அவர்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம் இந்துக்கள் அடங்கி இருப்பதுதான் மதசார்பற்ற நாட்டின் தத்துவம் என்றால் மாரிதாஸை முடக்கினாலும் ஆயிரம் பேர் வந்துகொண்டே இருப்பார்கள்
ஒருவிஷயம் எல்லோரும் மறக்கின்றார்கள்
இங்கு பெரும்பான்மையினோர் அமைதியாக இருக்கும் வரைதான் இம்மாதிரி கண்டதை சொல்லிவிட்டு "கருத்து சுதந்திரம்" என சமாளித்து கொண்டிருக்கமுடியும்
அவர்கள் பொங்க ஆரம்பித்தால் புதிய தலைமுறைக்கு அடுத்த தலைமுறை இருக்காது, 18க்கு பின் 19 வராது, நியூஸ் 7 என்பது 6 , 5, 4 என சுருங்கி பூஜ்ஜியம் ஆகிவிடும்
ஊடகங்கள் மத, இன, அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கட்டும். மாறாக ஏதோ ராம்சாமி காலம், நோண்ணாதுரையின் அயோக்கிய காலம்போல அதே நினைப்பில் செயல்பட்டால் இனி சிக்கலே
இதை ஊடக முதலாளிகள் உணர்ந்து கொள்ளட்டும், இந்த பகுத்தறிவு புண்ணாக்கு எல்லாம் அவனவனோடு நிற்கட்டும்
மாறாக இந்துக்களின் நியாயமான கேள்விகளை வலிகளை சொன்னால் மதவாதம், காவி தீவிரவாதம் என சொல்லி சொல்லி அவர்களை இன்னும் வெறுப்பேற்றினால் நிலமை மோசமாகி கொண்டே சென்று அது ஒரு "மத புரட்சியில்" முடியும்.
இன்னொரு நாடாக இருந்தால் தேசதுரோகம், மத சர்ச்சை என இவர்களுக்கு பூட்டு போட்டு விரட்டியிருப்பார்கள்
மதசார்பற்ற இன்னும் பலசார்பற்ற இந்திய சட்டம் இவர்களுக்கு துணைபோகின்றது, அதை முதலில் மாற்றினால் எல்லாம் சரியாகும்
மோகன் சி லாசரஸை விடுவோம் இன்னும் குண்டு வைத்தவனை விடுவோம் ஆனால் இந்துக்கள் தாலியில் தொங்குவோம், எல்லையில் அந்நியன் வந்தால் சிரிப்போம், அந்நிய நாட்டு கொலையாளிகளை விடுவிக்க சொல்வோம்
அந்நிய பொருளை நிறுத்தினால் கேலி பேசுவோம் என்பதெல்லாம் ஊடக அறமா? இதுதான் கருத்து சுதந்திரமா? இதுதான் பத்திரிகை தர்மமா?
இதற்காக ஒரு ஊடகம் இயங்கினால் அதை அனுமதிக்க முடியுமா?

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக