பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூலை 27

இந்த சிறிய உரையை தமிழக மக்களிடம் கொண்டுபோனாலே மனா சாட்சியுள்ள எவரும் திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகளை எளிதாக புறந்தள்ளிவிடுவார்கள்.



நாட்டுக்காய் வாழ்பவர்களை திமுகவுக்கு எக்காலமும் பிடிக்காது.
காமராஜர் எப்படியெல்லாம் அவர்களால் அவமானபடுத்த பட்டாரோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் திமுகவும் அவமானபடுத்தியது, ஜெயலலிதா மவுனமாக அவமானபடுத்தினார்
உண்மையில் திமுக அதிமுக ஆகிய இரு கோஷ்டிகளுமே கலாமுக்கு அஞ்சின, தமிழ்நாட்டில் அவர் ஏதும் மவுனபுரட்சி ஏற்படுத்திவிடுவாரோ என கலங்கின‌
பாஜகவுக்கு ஆதரவாக கலாம் வந்துவிட்டால் தங்கள் இருப்பு கலைந்துவிடும் என அவை அலறின‌
இது பல இடங்களில் தெரிந்தது, திமுக அவரை வேப்பங்காயினை போல் ஒதுக்கி வைத்தது மேற்கொண்டு கருணாநிதி "கலாம் என்றால் கலகம்" என பகிரங்கமாக சொன்னார்
யாருக்கு கலகம் என்பதற்கு அவரிடம் பதில் இல்லை
கருணாநிதியின் அடிபொடியான மனுஷ்யபுத்திரன் கலாம் அறிவாலய எலக்ட்ரிக் பாய் என்பது போல " அவர் ஒரு டெக்னொகிராட்" என இழித்து சொன்னார்.
இன்னும் ஏராளமான காட்சிகளை காணமுடியும், காங்கிரஸ் இதற்கு துணைபோனது
நிச்சயம் கலாமினை இரண்டாம்முறை ஜனாதிபதி ஆக்கியிருக்க வேண்டும், காங்கிரசும் திமுகவும் அதை தடுத்துபோட்டன. தங்களின் ஊழல் ஆட்சிக்கு அவர் தடையாயிருப்பார் தமிழ்நாட்டு ஏகபோகத்துக்கு அவர் இடைஞ்சலாய் இருப்பார் என அவை கருதியிருக்க வேண்டும்
காங்கிரசும், திமுகவும், அதிமுகவும், கம்யூனிஸ்டுகளும் கலாமினை ஓட விரட்டின, பாஜக ஒன்றே அவருக்கான ஆறுதலாய் இருந்தது
கலாமின் இறுதிநிகழ்வில் நடந்ததையும் அதன் பின் நடந்ததையும் தமிழகம் மறக்காது
அவரின் இறுதிஅஞ்சலிக்கு ஜெயா வரவில்லை மாறாக அகில உலக விஞ்ஞானி பன்னீர்செல்வம் அனுப்பட்டார்
சக எழுத்தாளன் இறந்தால் ஓடிசெல்லும் கருணாநிதி கலாமுக்கு வரவில்லை
கடைசிவரை திமுக அதிமுக பிரபலங்கள் கலாமின் நினைவுமண்டபத்தில் கால்பதிக்கவில்லை, இன்னும் விரும்பவுமில்லை
ஆம், தேசத்துக்காய் உழைப்பவர்களுக்கு தமிழகமும் அதன் பிரதான கட்சிகளும் கொடுக்கும் மரியாதை இதுதான்
ஆம் அன்று காமராஜருக்கு நிகழ்ந்தெல்லாம் கலாமுக்கும் இங்கு நிகழ்ந்தது, ஆனால் கலாமுக்கு பாஜக இருந்தது ஓரளவு காத்து அரவணைத்தது
ஆனால் காமராஜருக்கோ யாருமே இல்லை என்பதுதான் மகாசோகம், அணைக்க யாருமின்றி அவமானத்தில் காமராஜரை சாகவிட்ட காங்கிரசைவிட கலாமுக்கு தூணாய் நின்று, இன்றுவரை அவர் புகழை காக்கும் பாஜக நிச்சயம் மகா உயர்வான கட்சியே..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக