பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூன் 22

Trance - ட்ரான்ஸ் - பாருங்கள் !

21 ம் நூற்றாண்டின் மிகப்பெரும் அச்சுறுத்தல்களில் ஒன்று நூற்றுக்கணக்கான பெந்தகோஸ்தே சபைகள் மூலமாக கோடிக்கணக்கான கோடி டாலர்கள் இறைக்கப்பட்டு இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்படும் யேசு வியாபாரம்.
பெரு நகரங்களில் தொடங்கி இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் ஆசிர்வாத பெருவிழா, எழுப்புதல் விழா, சுவிசேஷ பெருவிழா என பலவிதமான பெயர்களில் அரங்கேறிவரும் அராஜகத்தை தட்டி கேட்க யாருமே துணியவில்லை.
கருத்து சுதந்திரம் குறித்து பேசும் எந்த ஊடகவியலாளரோ, படைப்பு சுதந்திரம் குறித்து பேசும் எந்த சினிமா இயக்குனரோ, இந்த மாபெரும் அராஜகத்தை குறித்து வாய் திறப்பதே இல்லை.
ஆனால் சமீபத்தில் வெளியான ஒரே ஒரு திரைப்படம் அந்த குறையை தீர்த்து விட்டது.
அதுதான் Trance எனும் மலையாள திரைப்படம். எனினும் துரதிஷ்டவசமாக கொரானா பிரச்சனையால் இந்த படம் குறித்து இன்னும் பலர் அறிந்திருக்கவில்லை.
அச்சு அசல் ஒரு சுவிசேஷக் கூட்டத்தின் பின்னனியில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறதோ, அதை அப்படியே படம் பிடித்து காட்டி உள்ளது Trance.
படம் பார்க்கையில் ஒருவேளை ஒரு உண்மையான பெந்தகோஸ்தே கூட்டத்தில் அவர்களுக்கு தெரியாமல் கேமரா வைத்து படத்தை எடுத்து விட்டார்களோ என அடியேனுக்கு தோன்றியது.
இந்த படத்தில் யாருமே நடிக்க
வில்லை, வாழ்ந்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கதாநாயகன் ஃபஹத் ஃபைசல் (பேங்களூர் டேஸ் புகழ்) பின்னி எடுத்திருக்கிறார்.
மக்களை சுவிசேஷக் கூட்டங்களில் எப்படி பாஸ்டர்கள் தூண்டி, உணர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு போய் அடிமைகள் ஆக்கிறார்கள் என மிகச்சிறப்பாக தன் அசாத்திய நடிப்பின் மூலமாக சித்தரித்துள்ளார்.
பல ஆயிரம் கோடி சம்பாதித்து விட்ட சுவிசேஷ பேச்சாளர் 'பென்னி ஹின்' ஐ நினைவு படுத்துகிறார்.
கன்னியாக்குமரியில் தன்னம்பிக்கை பேச்சாளராக இருக்கும் விஜு பிரசாதோடு (ஃபஹத்) பயனிக்கிறது திரைப்படம்.
சிறு வயதிலேயே தாய் தற்கொலை செய்து கொள்ள, தம்பியோடு வாழ்கிறார். தாயின் தற்கொலையால் மனம் பாதிக்கப்பட்ட தம்பியும் தற்கொலை செய்துக் கொள்ள, மனமுடைந்து பம்பாய் செல்கிறார்.
வறுமையின் பிடியில் இருக்கும் அவரை அங்குதான் அகில உலக இவாண்ஜிலிஸ்ட் குழுக்கள் தொடர்பு கொள்கிறது. சிறந்த மோட்டிவேஷனல் பேச்சாளரான அவரை ஒரு பாஸ்டராக தேர்ந்தெடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.
தங்களிடம் அனைவரை குறித்த தகவல்களும் உள்ளது என்றும் நாதியற்று இருக்கும் விஜு பிரசாத்தின் பின்னனி தங்களுக்கு நன்கு தெரியும் என்று சொல்கிறது அந்த குழு.
இதுவரை இறை மறுப்பாளராக இருந்த விஜு பிரசாத் பாஸ்டராக மாறி மிகப்பெரும் பணம், புகழ் அந்தஸ்து என மாறுகிறார்.
அதன் பின் அவரை வளர்த்து விட்ட இவாண்ஜிலிஸ்டு குழுக்களுக்கு அடிமையாக இருக்க விரும்பாமல் சுய முடிவுகளை எடுக்கிறார் விஜு பிரசாத்.
இவர்களுக்குள் நடக்கும் மோதல்தான் பிற்பாதி கதை.
எப்படி மக்களின் உணர்வுகளை வைத்து சம்பாதிக்கிறார்கள். எப்படி நுட்பமாக திட்ட்மிடுகிறார்கள்.
எப்படியெல்லாம் நாடகங்களை நிகழ்த்துகிறார்க்ள். எப்படி மக்களை ஆட்டு மந்தைகளாக மாற்றுகிறார்கள் என உண்மை நிலையை அக்கு அக்காக உரித்துப் போட்டுள்ளது இந்த படம்.
எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லை, மத துவேஷம் இல்லை. ஒரு உண்மையை, உலகுக்கு எடுத்து சொல்லும் ஒரு படைப்பாளியின் துணிவு மட்டுமே படத்தில் பார்க்க முடிகிறது.
நூற்றுக்கணக்கான இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து எடுத்திருந்தால் கூட இப்படி ஒரு நிஜத்தை நிதர்சனமாக தோலுரித்து போட்டிருக்க இயலுமா என்பது சந்தேகம்தான்.
படத்தில் கிறிஸ்தவர்கள் பலரும்
பணியாற்றி இருப்பதுதான் ஹைலைட்.
சொல்லப்போனால் இது கிறிஸ்தவத்திற்கு எதிரான படம் அல்ல. கிறிஸ்தவத்தையும் யேசுவையும் வைத்து மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் எவாண்ஜிலிஸ்டுகள், அற்புதங்களை நிகழ்த்துவதாக ஏமாற்றும் தீர்கதரிசிகள், போலி யேசு ஏஜண்டுகள் என அத்தனை பேரையும் உரித்துப் போடும் படம்.
சொல்லப் போனால் இந்த படத்தை கிறிஸ்தவர்கள்தான் அதிகம் பார்க்க வேண்டும்.
இயக்குனர் அன்வர் ரஷீதிற்கு இருகரம் கூப்பிய நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள். (ரசூல் பூக்குட்டியின் பின்னனி இசையும் அருமை).
இன்னும் பிரபலமான மனோத்தத்துவ
மற்றும் மனோவசிய யுக்திகளை எப்படி பெந்தகோஸ்தே சபையினர் கையாள்கிறார்கள் என்பதையும் காட்டியிருக்கலாம்.
நண்பர்களே, இந்த படத்தை அமேஜான் பிரைமில் நீங்கள் பார்க்காவிட்டால் மிகப்பெரும் துரோகத்தை செய்தவராவீர்.
பார்த்துவிட்டு பலரையும்
பார்க்கச் சொல்லுங்கள்.
இந்த படத்தை எப்படியாவது தமிழில் குறைந்தபட்சம் டப்பிங் செய்து வெளியிட இந்து அமைப்பினர் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
அடியேனும் இயன்ற
முயற்சிகளை எடுக்க உள்ளேன்.
எப்படி மிகப்பெரும் அல்லேலூயா நெட்வர்க்குகளை மீறி இந்த படம் வெளிவந்தது என்பதே அடியேனுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.
விசாரித்ததில் முதலில் 17 நிமிடம் படம் வெட்டப்பட வேண்டும் என்று மாநில சென்சார் போர்டு நிர்பந்திக்க, மறு ஆய்வுக்கு மும்பைக்கு அனுப்பி கட் இல்லாமல் படத்தை வெளியிட்டு சாதித்துள்ளாராம் இயக்குநர்.
இப்படத்தை பார்க்குமாறு கடந்த இரண்டு மாதமாக பலர் இன்பாக்ஸில் கூறி வந்தனர்.
மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து இந்த படத்தை காசு கொடுத்து அமேஜான் பிரைமில் பார்த்து விடுங்கள். மற்றவர்களையும் பார்க்க வையுங்கள்.
படித்ததில் பிடித்தது
இந்த ஆதிக்கத்தை தான் மாரிதாஸ் போன்றவர்கள் தோலுரிக்கின்றனர்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக