பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மே 20

உளவுதுறையின் மிகபெரும் சாதனை

நீங்கள் தத்தெடுத்து தேனும் பாலும் கொடுத்து வளர்த்த பிள்ளை ஒன்று திடீரென உங்கள் தலையில் கல்லை தூக்கி போட்டால் எப்படி இருக்கும்?
நீங்கள் சுட்ட தோட்டா திரும்ப வந்து உங்களையே தாக்கினால் எப்படி இருக்கும்
அப்படி பாகிஸ்தான் தலையில் கல்லை தூக்கி போட்டிருக்கின்றது ஆப்கானிய தாலிபன் கோஷ்டி
தாலிபான்கள் இந்த ஈழத்து புலிகள் போல சுத்த அறிவுகெட்ட கோஷ்டி அல்ல, ஒரு இயக்கம் காலத்துக்கு ஏற்ப மாறாவிடில் அழிந்துவிடும். புலிகள் அப்படி அழிந்தனர், தாலிபன்கள் கொஞ்சம் திருந்தியிருக்கின்றன‌
தாலிபான்கள் தங்கள் இமேஜை மாற்றுகின்றனர், அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ய கனவெல்லாம் இல்லை. பொறுப்பாக தங்கள் நாட்டை ஆண்டால் போதும் என முடிவெடுத்துவிட்டனர்
அமெரிக்காவுடன் இன்னும் பேச்சு நடத்தும் தாலிபான்களின் நேற்றைய அறிவிப்பு நம்பமுடியாதது
ஆம், காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு சிக்கல் என்றும் அதில் தாலிபான்கள் தலையிட மாட்டார்கள் என்றும் அறிவித்திருக்கின்றது அந்த இயக்கம்
தாலிபான்களை பாகிஸ்தான் வளர்த்ததே காஷ்மீரில் குழப்பம் ஏற்படுத்த என்ற நிலையில் அவர்களின் இம்முடிவு பாகிஸ்தானை பொறுத்தவரை தற்கொலைக்கு ஒப்பானது.
ஒருவகையில் இது ஆப்கனில் செயல்படும் இந்திய உளவுதுறையின் மிகபெரும் சாதனை என்கின்றது இன்னொரு தரப்பு
தாலிபான்களை இந்தியா கண்டுகொள்ளாது, அதே நேரம் இந்தியாவின் காஷ்மீர் விடயத்தில் தாலிபான்கள் வரகூடாது எனும் ரகசிய ஒப்பந்தம் இந்திய உளவுதுறையால் ஏற்பட்டாயிற்று என்கின்றார்கள்
நிச்சயம் மிகபெரிய வெற்றி, மாபெரும் ராஜதந்திர வெற்றி
(இதெல்லாம் திசைதிருப்பும் வேலை எனும் சந்தேகம் எல்லோருக்கும் உண்டு என்றாலும், ஒரு அமைப்பு இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது மாபெரும் வெற்றி)
ஆக தாலிபான்கள் எனும் மாபெரும் அசுர போராளிகளே காஷ்மீரில் இந்திய நிலைப்பாட்டை ஆதரித்தாயிற்று, ஆனால் உள்ளூர் காஷ்மீர் ஆதரவு போராளிகளிடம் இன்னும் அதிருப்தி
இதிலிருந்து தெரிவதென்ன?
தாலிபான்களை விட தமிழக அல்ட்ராசிட்டிகள் ஆபத்தானவை , அவைகளிடம் எல்லோரும் வலுத்த கவனமாக இருத்தல் வேண்டும்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக