பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மே 14

ஒரு வகையான முட்டாள்தனமான அகம்பாவத்தில்

ஈரோட்டு ராம்சாமியின் வரலாற்றை வாசித்தால் அந்த மனிதர் மிகபெரும் தமிழின விரோதியாக இருந்திருக்கின்றார், ஒரு வகையான முட்டாள்தனமான அகம்பாவத்தில் இருந்திருக்கின்றார் என்பது மட்டும் தெரிகின்றது.
1943ல் அவர் "கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கொளுத்துவோம்" என கிளம்பிய செய்தி அதிர்ச்சிதான் அளிக்கின்றது
அவர் இஷ்டத்துக்க் தமிழை திருத்தியிருக்கின்றார், திருகுறளை பழித்திருக்கின்றார் இன்னும் எதை எல்லாமோ உளறி கொட்டி ஒரு மனநிலை பாதிக்கபட்டவர் போல் திரிந்திருக்கின்றார்
அவரின் காங்கிரஸ் எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாகி, பின் இந்து எதிர்ப்பாகி , இந்தி எதிர்ப்பாகி , பின் கட்சிக்குள்ளே எதிர்ப்பாகி , யாரையாவது வெறுப்பது ஒன்றே அவரின் சந்தோஷ கடமையாக இருந்திருக்கின்றது
கம்பராமாயணம் என்பது தமிழரின் மிகபெரும் அடையாளம், ஒரு வாதத்துக்கு ராமன் வடக்கே இருந்துவந்தான் என சொன்னாலும் ராவணன் தமிழ் பிராமணன் என்பதை மறுக்க முடியாது
ராமாயணத்தை விடுங்கள், பெரிய புராணம் யார் வரலாறு?
இந்த தமிழ்திருநாட்டின் சிவனடியார்கள் கதை அல்லவா? அவர்கள் சிவனில் கலந்து உருகி பெற்ற ஞான வரலாறுகள் அல்லவா? அவற்றின் சுவடுகள் எக்காலமும் இங்கு இருக்கும், நிலைக்கும்
அந்த பெரிய புராணத்தினை கொளுத்தவேண்டும் என சொன்னால் என்ன அறிவுகெட்ட வெறுப்பு இருந்திருக்க வேண்டும்
தமிழனுக்கு எதுவுமே பெருமை பாரம்பரியம் அடையாளம் என இருந்துவிட கூடாது அவன் ஒன்றுமில்லாதவன் என நம்பவைக்கபட்டு இந்தியாவில் இருந்து பிரிந்துவர துடிக்க வேண்டும் என்ற விஷ உணர்ச்சி அவரிடம் இருந்திருகின்றது
தமிழகத்தின் தரித்திர காலம் இந்த ராம்சாமிக்கு சிலை வைத்ததில் இருந்துதான் தொடங்குகின்றது என்பது நிதர்சனமான உண்மை.
கம்பராமாயணத்தை கொளுத்துவோம், பெரிய புராணத்தை கொளுத்துவோம் என சொன்ன ஒருவரின் சிலை தமிழகமெங்கும் இருக்குமாம், அதை பற்றி யாராவது சொன்னால் உடனே பொங்குவார்களாம்
காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக