பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மே 11

சங்கி என்பது இங்கு கலாச்சாரம்,


இன்றைய தேதிக்கு இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை எழுத ஒருபயலுக்கும் யோக்கிதை இல்லை. விஷயமும் தெரியாது. பாலகுமாரன் செய்ய இயலாத, மீதமுள்ளவற்றை நிறைவு செய்யவே ஸ்டாலின் ராஜன் இருக்கிறார்.

கிழகிந்திய கம்பெனி இந்தியாவில் போர்சுகீசியரையும் பிரெஞ்சுக்காரரையும் ஒடுக்கி இந்தியாவினை ஆள ஆரம்பித்தபின் முதலில் மதவிவகாரங்களை ஒடுக்கி வைத்திருந்தது, கத்தோலிக்கம் கட்டுபட்டது இதில்தான்
ஆனால் ஆங்கிலேயர் உணர்ந்த விஷயம் இந்தியருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாம் ஆளமுடியாது என்பது, இதற்கு சில அனுமதிகளை செய்தது அதில்தான் கல்விபணி, ஆராய்ச்சி எனும் பெயரில் ஐரோப்பிய மதமாற்ற விஷங்கள் கலந்தன‌
அமெரிக்கா எனும் பெரும் வளமான நாடு கையினை விட்டு சென்றபின்பு இந்தியாவினை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்ல நினைத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவினை 1857ல் தன் கட்டுபாட்டில் எடுத்தது, அதன் பின்பே இங்கு மிஷனரிகள் அட்டகாசம் தொடங்கியது, கால்டுவெல் நாடாரை இழுத்து சர்ச்சையான விஷயங்களும் , கால்டுவெல் செய்த குழப்பங்களையும் முன்பே சொல்லிவிட்டோம்
அடுத்த இன்னிங்கேஸ் புரட்ட்ஸ்டாண்டு கிறிஸ்தவர்களுகும் இந்துக்களுக்குமான சண்டை 1883ல் தொடங்கிற்று
சண்டையினை தொடங்கிவைத்தவன் கால்டுவெல், பதிலுக்கு கிறிஸ்தவ சீற்றம் கடுமையாக இருந்தது, அப்பொழுது யாழ்பாண தமிழர் தமிழக தமிழரோடு சைவம் காக்க தோள் கொடுத்து ஒரே அணியாய் நின்றனர்
நெல்லைமாவட்டத்தில் மதமாற்றம் கடுமையாக இருந்தது, டோனாவூரில் இருந்து செயல்பட்ட மிஷனரிகள் இந்துமதத்தை தாக்க, காசிவாசி செந்தில்நாதய்யர் எதிர்ப்பு தெர்வித்து விளக்கம் கேட்டார், ஆம் அவர் ஒரு பிராமணன்
பதில் வரவில்லை, இதனால் பதிலுக்கு "விவிலிய குற்சிதம்" என நூல் எழுதினார், அதிர்ந்த கிறிஸ்தவதரப்பு "விவிலிய குற்சித கண்டன திக்காரம்" எனும் நூலை எழுதிற்று
இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த , தீ இன்னும் எரிய "சிவனும் தேவனா?" என நூலை எழுதியது கிறிஸ்தவதரப்பு, கொந்தளித்த இந்துக்கள் "கிறிஸ்துவும் கடவுளா?" என மறுப்பு புத்தகம் எழுதி 1500 பிரதிகளை வெளியிட்டனர், அடங்கா சினத்தில் "சிவனை பழித்த தீய நாவுக்கு ஆப்பு" என அடுத்த புத்தகம் வந்தது, 1888ல் கிறிஸ்துவ முகமூடியினை கிழிக்க "வஜரங்கடம் (வயிர கோடாரி)" எனும் நூலை எழுதினார் கி.கா.சூ என்பவர்.
சண்டை தமிழகமெங்கும் பரவியது , ஏற்கனவே யாழ்பாண இந்துக்களுகும் கிறிஸ்தவருக்குமான முறுகலில் இந்த செய்தி ஈழத்தவருக்கும் உற்சாகம் கொடுத்தது
சண்டை நீண்டது, சென்னை கிறிஸ்தவர்கள் நடத்திய "சத்திய தூதன்" இதழ் 1889ல் இந்துக்களை சீண்ட, அரக்கோண கிறிஸ்தவர்கள் "விக்கிரக வணக்க பேதைத்தனம்" என ஒரு நூலை எழுத , இந்துக்கள் பதிலடி கொடுக்க சண்டை நீண்டது.
1898ல் கிருஷ்ணபிள்ளை எனும் கிறிஸ்தவர் "இரட்சணிய சமய நிர்ணயம்" என ஒன்றை எழுத இவருக்கு துணையாக ஈழத்து பாதிரி ஞானபிரகாசமும் வரிந்து கட்ட காட்சிகள் மாறின‌
அங்கே ஆறுமுக நாவலர் சீறி எழுந்தார், தமிழகத்தில் மனோன்மணியம் சுந்தரனார் (தமிழ்தாய் வாழ்த்து எழுதியவர்), தாமோதர பிள்ளை, கனசசபை பிள்ளை போன்றோர் பதிலடிக்கு எழுத ஆரம்பித்தனர்
சாமிநாதய்யர் அச்சில் தமிழ் செய்யுள் நூல்களை கொண்டுவந்து புது வெளிச்சம் காட்டினார்
தமிழகம் தன் பெருமையினை உணர தொடங்கியது, நல்லசாமி பிள்ளை "சித்தாந்த தீபிகை" எனும் ஆங்கில இந்து பத்திரிகையினை தொடங்கி எதிர்தரப்பின் வாதத்தை பொய்யாக்கினார்
ஆறுமுக நாவலர், காசிவாசி செந்தில், சபாபதி நாவலர் ஆகியோர் கடுமையான வாதத்தை முன் வைத்தனர், ஆறுமுக நாவலரின் "சைவ தூஷன பரிகாரம்" எனும் நூல் இந்து மதத்தில் இல்லா தத்துவம் எது கிறிஸ்துவத்தில் உண்டு? எவ்வகையில் அது உயர்ந்துவிட்டது? என சவால்விட்டு லண்டனையே பரபரப்பாக்கியது
ஆம் அது ஆங்கிலத்திலும் வந்தது, மிக கண்ணியமான வார்த்தையுடன் தத்துவார்த்த விளக்கமான அந்நூலை கிறிஸ்தவரே ஏற்றனர்
ஈழத்தில் கத்தோலிக்கரும் தமிழ்நாட்டில் புரட்ட்ஸ்டேன்ட் கிறிஸ்தவரும் பின்னும் அடங்கவிலை , ஈழத்தில் " சத்தியவேத பாதுகாவலன்" சொன்ன பொய்களை இந்துக்களின் "இந்து சாதனம்" "ஞான சித்தி" ஆகியவை உடைத்து போட்டன‌
தமிழ்நாட்டில் இரண்டசணிய சபை நடத்திய "போர் சத்தம்" பத்திரிகையினை "பிரம்ம வித்தியாவும்" "ஆரிய ஜன பரிபாலினி"யும் சமாளித்து அடித்தன‌
எனினும் இந்நேரம் யாழ்பாண ஞானபிரகாச அடிகள் எனும் கத்தோலிக்க பாதிரியின் புத்தகமும் நின்றன, அவரின் தமிழ் அப்படி இருந்தது என்பது ஒரு காரணம்
ஆயினும் அதை எல்லாம் முறியடித்தது இந்து இயக்க பத்திரிகைகள், இந்த போர் நடந்து கொண்டே இருக்கும் பொழுதுதான் இந்தியாவில் சுதந்திர குரல்கள் கேட்டன, காலம் மாறியது
திலகர் கோஷ்டி இந்து ராஜ்ஜியம் என முழங்க, பதிலுக்கு இஸ்லாமிய குரல்கள் எழும்ப தேசம் தடுமாறிற்று, ஆயினும் இங்கே இந்து கிறிஸ்தவ சண்டைகள் வலுவாய் இருந்தன‌
இந்துக்கள் கல்வி ஒன்றே கிறிஸ்தவர் ஆயுதம் என கருதி கல்லூரி பள்ளிகளை மடமடவென திறந்தனர் யாழ்பாணம் முதல் தமிழகமெங்கும் "இந்து கல்லூரி" "இந்து பள்ளிகள்" வந்தன. ஆதீனங்கள், மடங்கள், செட்டியார்கள் , முதலியார்கள் என எல்லா தரப்பும் கல்வி வளர்க்க ஆரம்பித்தன‌
1900க்கு பின் காட்சிகளை மாற்றியது எதிர்தரப்பு, பிராமணரை ஒழித்தால் இந்துமதம் ஒழியும் என கருதி பிராமணருக்கு எதிரான கருத்துக்கள் உள்ளே இருந்து வருமாறு செய்யபட்டன‌
ஆனால் பிராமணலல்லா சங்கத்தார் தாழ்த்தபட்ட மக்களை அடிமைகளாவே வைத்திருந்தனர் என்பது வேறுவிஷயம் எனினும் நீதிகட்சி அது இது என வந்து இந்துக்களிடையே குழப்பத்தை தொடங்கினர், ஆயினும் எச்சாதியாயினும் இந்துக்களாய் இருந்தனர், இதுவும் பலனளிக்கவில்லை
இந்நிலையில்தான் ஈரோட்டு ராம்சாமி என்பவர் வந்தார், அவர் ஒவ்வொரு காரியமும் இந்துக்களை பலவீனபடுத்தி கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு இருந்தன, ராம்சாமியும் கிறிஸ்தவர்களின் சாதிவெறி பக்கம் செல்லமாட்டார், ரஷ்ய பாணியில் கம்யூனிசமும் பேசமாட்டார்
ராம்சாமியின் வருகை இந்துக்களுக்கும் கிறிஸ்தவருக்குமான மோதலை ராம்சாமிக்கும் இந்துகளுக்குமான மோதலாக மாற்றிவிட்டது, கிறிஸ்தவம் அதன் போக்கில் மதபரப்பில் நிம்மதியாக இருந்தது
கிறிஸ்தவரோடு மோத வேண்டிய இந்துக்கள் ராமசாமியுடன் மல்லு கட்டினர், அப்பொழுதும் வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை, சைவ சித்தாந்த கழகம் போன்றவையும் மல்லுகட்டின‌
பேராசிரியர் சேதுபிள்ளையின் புகழை மறைக்க திகவில் ஒரு பேராசிரியர் வந்தார், ஆறுமுக நாவலரின் புகழ் மறைக்க திமுகவில் ஒரு நாவலர் வந்தார், இப்படி திட்டமிட்டு வரலாறுகள் மறைக்கபட்டன‌
ராம்சாமிக்கு ரகசியமாக வெள்ளை அரசின் ஆதரவை மிஷனரிகள் பெற்று கொடுத்தனர், சுதந்திர தாகத்தை குறைக்க, வ.உ.சி போன்ற தமிழர்களின் பிம்பம் அடியோடு அழிய, வாஞ்சிநாதன் போன்ற தியாகிகள் உருவாகாமல் இருக்க வெள்ளை அரசும் இந்த கோமாளி கூத்தை ரகசியமாக ஊக்குவித்தது
விளைவு கம்பராமாயணம் , பெரிய புராணம் இவற்றை கொளுத்துவோம் என சொல்லுமளவு ராம்சாமி சென்றார், திகவினர் இந்து கடவுள்களை ஆபாசமாக மொழிந்தனர், எழுதினர், இல்லா அட்டகாசமெல்லாம் நடந்தது
இந்துக்களின் பதில்குரல் சபையேறா வண்ணம் ஆங்கில அரசு பார்த்து கொண்டது, இந்து எழுச்சி வந்தால் சுதந்திர குரலுக்கு வலுவாகும் என அது அஞ்சியது
ஆயினும் இந்துக்கள் கம்பரசம் எனும் ஆபாச நூலை, ராமாயணத்தை காமநூல் என எழுதிய அண்ணாவின் புத்தகத்தை தடை செய்ய கோரினர், வெள்ளை அரசே தடை செய்த புத்தகம் எனில் அதன் அசிங்கம் எப்படி இருந்திருக்கும்?
அதை எழுதியவன் பேரறிஞன், அதை தொடர்ந்து அண்ணாவினை பொது பட்டிமன்றங்களில் வைத்தே சேதுபிள்ளை, வையாபுரி பிள்ளையெல்லாம் பொளந்து கட்டி தோற்கடித்து அனுப்பிய வரலாறேல்லாம் உண்டு
இக்காலகட்டத்தில் முத்துராமலிங்க தேவர் போன்றோரெல்லாம் திக கும்பலை பெண்டு நிமிர்த்தி கொண்டிருந்தார்கள்
பின் சுதந்திரம் வந்து, ராம்சாமி கோஷ்டி உடைந்து திமுக வந்தது, சுதந்திர நேரம் மிஷனரிகளுக்கு பெரும் சிக்கலை சந்தித்தன, இனி இந்து முஸ்லீம் என சிக்கிவிட்ட இந்தியாவில் இனி இந்துக்கள் நம்மை விட்டு வைக்கமாட்டார்கள் என அவை சிந்தித்தன‌
வெள்ளை அரசின் ஆதரவு ஒன்றே அவர்களுக்கான பாதுகாப்பு, இந்திய அரசு தங்களை விட்டுவைக்காது என அஞ்சினர், ஆனால் நல்லவரும் பாரம்பரியமும் மதபற்றும் இல்லாதவருமான நேரு அவர்களை காத்தார், அதன் பின் நேரு குடும்பம் காத்தது, சோனியா வரை நடந்தது
சுதந்திர இந்தியாவில் திகவில் இருந்த இந்து எதிர்ப்பு சுருங்கி அது தமிழர் நலன் கட்சி என அடையாளபடுத்தி சினிமாவில் விஷத்தை கலந்து ஆட்சிக்கும் வந்தது, வந்தாலும் அதன் தோற்றம் மாறியதே தவிர அடிநாதமான‌ விஷம் மாறவில்லை.
சுதந்திரத்துக்கு முன் நாடகம், பத்திரிகை என செய்த இந்து எதிர்ப்பினை சினிமாவிலும் கடுமையாக செய்தது திராவிட கோஷ்டி
ராம்சாமி எதை கிறிஸ்தவருக்கு செய்தாரோ அதை மகா ஆன்ம சுத்தியுடன் செய்தார்கள், தமிழ் தமிழன் எனும் போர்வையில் சீர்திருத்தம் இன்னும் என்னவோ சொல்லி சினிமாவில் அந்த விஷத்தை கலந்தார்கள்
ஆயினும் அந்த சினிமாவிலே ஆத்திகர்களும் நாத்திகர்களும் மாறி மாறி வந்தார்கள்
சினிமாவில் இந்த திராவிட இந்து சண்டை வந்தாலும், காலம் இப்பக்கமும் சிலரை உருவாக்கி கொண்டே இருந்தது
கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ ராமசாமி மகா முக்கியமாக நாயன்மார்களின் வரிசையில் வரவேண்டிய கிருபானந்தவாரி என ஒரு வரிசை எழுந்து இந்துமதத்தை காத்து கொண்டே இருந்தனர்
சினிமாவில் இந்து எதிர்ப்பினை ஆணிதரமாக காட்டியவர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஆர் ராதாவும்
இருவரும் அதற்குரிய தண்டனையினை பெற்று ஓய்ந்தனர், அதன் பின் படுதீவிரமாக அதை செய்வோர் யாருமில்லை, ஆயினும் சிலர் வாய்ப்பு கிடைக்கும் பொழுது செய்தனர்
முன்பு இந்து எதிர்ப்பு பேசி உருப்பாடாமலே போன திராவிட தலைவர்கள் வரிசையில் கமலஹாசனும் சேர்ந்து நாசமானார், இன்னும் பலரும் சேர்ந்தார்கள்
இந்த கிரேஸி மோகன் எனும் நல்ல கலைஞனும் நாசமானான், விவேக் எனும் தனிபெரும் திறமையாளனும் சிக்கி அடையாளமிழந்தான்
நாத்திகம் பேசாத நடிகர்களான எம்ஜி ராம்சந்தர், ஜெயா போன்றோருக்கு அந்த இடம் தானே வந்தது, ரஜினிக்கும் அந்த இடம் திறந்திருந்தது ஆனால் அவர் உள்ளே செல்லவில்லை
எம்.ஆர் ராதா இடத்துக்கு ஆசைபட்ட கமலஹாசன் உருப்படவிலை, விவேக் உருப்படவில்லை இழப்புகள் அதிகம்
இப்பொழுது அந்த இடத்துக்கு இந்த சமுத்திரகனி, சிவகுமார் குடும்பம், விஜய் சேதுபதி போன்றோர் ஆசைபடுவதாக தெரிகின்றது, அந்த வாசல் வழி சென்றோர் என்ன ஆனார்களோ, அதையே அடைய இவர்களும் அடைய போகின்றார்கள்
ஆக வரலாறு சொல்லும் உண்மை இதுதான்
சங்கிகள் என்பவர்கள் எல்லா காலமும் உண்டு, இந்துமதம் எப்பொழுதெல்லாம் ஆபத்தில் சிக்குமோ அப்பொழுதெல்லாம் உருவாகி வருவார்கள்
கிரேக்க படைகளை எதிர்த்த சமுத்திரகுப்தன் முதல் சங்கி, அவன் வழியில் ஆப்கானிய படைகளை எதிர்த்த எல்லோருமே சங்கி
பவுத்த மதத்தின் பிடியில் இருந்து இந்தியாவினை விடுவித்த ஆதிசங்கரர் ஒரு சங்கி, சமணரை வேரறுத்த நாயன்மார்களும் சங்கி
இலங்கை பவுத்தரை அடக்கி, காலமுள்ள காலம் அளவும் சைவம் நிலைத்திருக்க தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜன் சஙகிகள் தலைவன்
நாயக்க அரசின் அடித்தளத்தை இந்து அடிப்படையில் அதை காக்க உருவாக்கிய முனிவர் வித்யாகர் ஒரு சங்கி, மராட்டிய அரசர் சிவாஜியினை உருவாக்கிய ஆசானும் சங்கி
நாயக்க மன்னர்களும் சங்கி, சிவாஜியும் சங்கி
1800களின் பிற்பகுதியில் கிறிஸ்தவ அழிச்சாட்டியத்தை எதிர்த்த சேதுபிள்ளை, ஆறுமுக நாவலர் போன்றோரும் சங்கி, அந்த சைவ சிந்தாந்த கழகத்தாரும் சங்கி, மனோன்மணி சுந்தரம்பிள்ளையும் சங்கி
கண்ணதாசனும் சங்கி, ஜெயகாந்தனும் சங்கி, அந்த சோ ராமசாமியும், சங்கிகளில் பிரதான கிருபானந்தவாரியும் சங்கி
இப்பொழுது போலி திராவிட கும்பலையும் அவர்களின் புரட்டையும் எதிர்ப்போரும், சினிமாக்காரனின் விஷ வார்த்தைகளுக்கு எதிர்குரல் கொடுப்பவனும் சங்கி
சங்கி என்பது இங்கு கலாச்சாரம், அது காவல் காக்கும் அடியவர்கள் பெயர், இந்த மண்ணுக்கும் பாரம்பரியத்துக்கும் மதத்துக்கும் ஆபத்து வரும்பொழுதெல்லாம் உருவாகி வரும் சக்தியின் பெயர்கள்
அது முனிவர்கள், அரசர்கள், வீரர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகவாதிகள்,இக்கால நம்பிக்கையுடையோர், இன்று பொறுக்கமுடியா பொய் பித்தலாட்டங்களை இந்து மதத்துக்கு எதிரான கொடுமைகளை கண்டிப்போர் என்ற பெரும் வரிசையின் பொதுசொல்
அந்த சங்கிகள் எக்காலமு உண்டு, இக்காலத்திலும் உண்டு, எதிர்காலத்திலும் வருவார்கள்.
வீரம் என்றால் வீரம், தர்க்கம் என்றால் தர்க்கம், ஆச்சரியம் என்றால் பதிலுக்கு பேராச்சரியம், பேச்சு என்றால் பேச்சு, எழுத்து என்றால் எழுத்து என இந்த மண் எக்காலமும் தனக்கான பாதுகாப்பை ஒவ்வொரு வடிவிலும் செய்து கொண்டே இருந்தது
இன்னும் எக்காலமும் செய்யும்.
அந்த ஆன்மீகமும் தைரியமும் உண்மையும் சத்தியமும் தாங்கி நிற்கும் உருவின் திருபெயரான இம்மண்ணுக்கும் அதன் தாத்பரிய நம்பிக்கைக்கும் காவலாக‌ உருவான ஞானிகள், அரசர்கள்,‌ அடியார்கள், ஆழ்வார்களின் இன்றைய பெயரான சங்கி என்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளவேண்டும்.
அந்த பெருமையில் உரக்க சொல்லவேண்டும், நாம் இந்த நாட்டின் பாரம்பரியத்தை காக்க வந்த ஞானமும் தைரியமும் மிக்க , பக்திமிக்க பரம்பரையின் சங்கிகள், அதை காப்பதை தவிர கடமையும் பொறுப்பும் ஏதுமில்லை
சங்கி என்பது பெருமை, சங்கி என்பது கடமை, சங்கி என்பது மண்ணின் உரிமை
(இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம், 1890க்கும் 1950க்கும் இடைபட்ட காலத்தில் இந்துக்கள் எழுதிய ஒப்புயவற்ற நூல்கள் எங்கே? ஆறுமுக நாவலர் எழுதிய அட்டகாசமான நூல்கள் எங்கே?
இந்துக்கள் நடத்திய பத்திரிகை பிரதி எங்கே? அதில் வந்த ஆணிதரமான வாதங்கள் எங்கே? என கேட்கலாம்
கேட்டால் சோகமாக தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை, எல்லாமும் இங்கு மறைக்கபட்டு ஒழிக்கபட்டன, அதுவும் திராவிட அரசுகள் வந்தபின் அவை சுத்தமாக ஒழிக்கபட்டன
கிறிஸ்தவர்கள் எழுதிய துவேஷங்கள் அப்படியே இருக்க இந்துக்கள் எழுதிய பதில்மட்டும் ஒழிக்கபட்டதல்லவா? இதுதான் பகுத்தறிவு, இதுதான் சீர்திருத்தம்
இந்துக்கள் நடத்திய அந்த ஞான தர்க்க போர், சமய போர் மறைக்கபட்டு தமிழக வரலாறு நீதிகட்சி, ராம்சாமி, வைக்கம், பகுத்தறிவு, பிராமணியம் என நிரப்பபட்டிருகின்றது, அது வரலாறும் ஆகிவிட்டது
ஆனால் இந்த இடைபட்ட காலம் இந்துக்கள் செய்த மிகபெரும் எதிர்ப்பையும், அறிவார்ந்த தத்துவ விளக்கத்தையும், கல்வி பணிகளையும் காலம் ஒருநாள் மீட்டெடுத்து கொடுக்கும்
அப்பொழுது பொய் அழியும், சத்தியம் மேலேழும் அன்று ஆறுமுக நாவலர் முதல் ஏகபட்ட பிள்ளைகள், சைவ சித்தாந்த கழக தலைவர்கள் என எல்லோருக்கும் தமிழக வீதிகளில் சிலை எழும்பும், வரலாறு அவர்களால் நிரம்பும்"

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக