பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 26

கடனாளியாக்கி அடிமைப்படுத்தும் சீனா..

கடனாளியாக்கி அடிமைப்படுத்தும் சீனாவின் முயற்சி இந்தியா முறியடிப்பு!
உலக நாடுகளை எப்படி கடன் கொடுத்து அடிமை படுத்துகிறது சீனா.. ஒரு பார்வை
சீனா முதலீடு செய்வது குறித்து, உலக நாடுகள் திடீரென கவலை கொள்வதற்கு காரணமும் உள்ளது. கடன் வலையில் விழவைக்கும், சீனாவின் புதிய கொள்கையே, உலக நாடுகளை எச்சரிக்கை அடைய செய்துள்ளன.
உலகின் மிகப் பெரிய உற்பத்தி மையமாக, சீனா விளங்குகிறது. உலகெங்கும் அதன் வர்த்தகம் விரிந்துள்ளது. இதைத் தவிர, மற்ற நாடுகளில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, சீனா பெருமளவு முதலீடுகளை செய்து வருகிறது. இதற்காக கடன்களை அளித்து, அந்த நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஆப்ரிக்க நாடான கென்யாவால், சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பித் தர முடியவில்லை. அதையடுத்து, சீனாவின் உதவியுடன் அங்கு கட்டப்பட்ட, மிகப் பெரிய துறைமுகத்தை, சீனா எடுத்துக் கொள்ளும் நிலை உருவானது.
இது குறித்து, கடந்தாண்டு, கென்யா உலக நாடுகளிடம் வெளிப்படையாக குரல் கொடுத்தது. எந்த நாடும் அன்று கண்டு கொள்ளவே இல்லை,,
இன்று அந்த துறைமுகத்தை சீனா எடுத்து கொண்டது ,, யாரும் தட்டி கேக்க முடியவில்லை,, கென்யாவால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை,,
இதே போல் ஜிம்பாவே, அந்த நாட்டுக்கு அளவுக்கு மீறி கடன் கொடுத்து அந்த நாட்டை வீழ்த்தி கொண்டு இருக்கிறது
இது போன்ற நிலையே, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இவ்வாறு ஒரு நாட்டின் முக்கிய பகுதியை எடுத்துக் கொள்வதன் மூலம், அந்த நாட்டை, தனக்கு அடிமையாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
அதாவது, மறைமுகமாக, தன் நிலப்பரப்பை விரிவுபடுத்தி, உலகெங்கும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா முயன்று வருகிறது.
தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், லாவோஸ், மாலத்தீவுகள், மங்கோலியா, பாகிஸ்தான், மான்டென்க்ரோ, இலங்கை என, பல நாடுகளை, சீனா தன் வலையில் சிக்க வைத்து விட்டது.
இந்த நாடுகளின், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 45 சதவீதம், சீனாவின், மிகப் பெரிய பொருளாதார பெருவழி பாதைக்கான திட்டத்துக்காக தர வேண்டியுள்ளது.
45 சதவீதம், என்றால் யோசித்து பாருங்கள் , மீதி 55 சதவீதம், வைத்து தான் அந்த நாடுகளில் அரசு ஊழியர் சம்பளம் , ராணுவம், உள் கட்டமைப்பு போன்ற தேவைகளை பார்க்க வேண்டி உள்ளது,, அதிலும் இந்த நாடுகளுக்கு தேவையான ராணுவ உதிரி பாகங்கள் சீனா மிரட்டியே விற்று விடும்.. அந்த நாடுகள் சீனாவிடம் வாங்கி தான் ஆகணும்... மிரட்டல் ஒரு புறம்,,, கடன் ஒரு புறம்
நம் அண்டை நாடான பாகிஸ்தானும், 2 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டத்துக்காக வாங்கியது, அதற்கு முன் வாங்கிய கடன் எல்லாம் சேர்ந்து 3 .12 லட்சம் கோடி,, அதற்கு வட்டி எல்லாம் சேர்த்து சீனாவுக்கு, கட்ட வேண்டியதொகை கிட்ட தட்ட 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே, பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தானால், இதை திரும்ப செலுத்துவது கடினமே. இனி சீனா அந்த நாட்டு துறைமுகத்தை வட்டிக்காக மட்டும் கேக்கும் ,,
நம் அண்டை நாடான இலங்கையின் நிலையை பாருங்கள்
இலங்கையின், ஹம்பந்தோட்டால் பகுதியில் சீனா இலவசமாக புதிதாக துறைமுகம் கட்டி கொடுப்பதாக கூறி வேலை நடந்து கொண்டு இருந்தது,, கட்டியும் முடித்து விட்டது,,
இலங்கை முன் வாங்கிய கடன் போக, விடுதலை புலிகளுடன் போர் புரிந்த காலங்களில் கேக்கும் போதெல்லாம் ராணுவ தளவாடங்களை அள்ளி அள்ளி கொடுத்தது சீனா ,, மிகவும் சந்தோசமாக இலங்கையும் வாங்கி மகிழ்ந்தது
ஆனால் இப்போது முதலுக்கு வட்டியை கேட்டது .இலங்கையால் கொடுக்க முடியவில்லை ,,
இலங்கை, வட்டியை திரும்ப செலுத்தாததால், சீனாவுக்கு தர வேண்டிய வட்டிக்கு பதிலாக ,சீனா ஹம்பந்தோட்டா துறைமுகத்தை எடுத்துக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கமும் ஒப்பந்தம் போட்டு கொடுத்து விட்டது
மறுபடியும் வட்டி கொடுக்க முடியாமல் திணறியது இலங்கை,, அந்த வட்டிக்கு பதிலாக துறைமுகம் கட்டிய ஹம்பந்தோட்டா கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் வரை தனது கடல் பகுதி போல் சொந்தம் கொண்டாடி கொள்ள ஒப்பந்தம் போட்டு விட்டது சீனா
மேலும் சீனர்கள் 10 லட்சம் பேருக்கு வியாபாரி விசா வழங்க ஒப்பந்தமும் போட்டுள்ளது,,
மேலும் இலங்கையில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது. இலங்கையில் உள்ள பெரிய பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள். மற்றும் கம்பெனிகள் ஆகியவற்றை சீனர்கள் 99 வருட குததகைக்கு எடுத்து கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளது ,,
சீனாவின் கொடுமையை பாருங்கள், மறுபடியும் 99 வருட குத்தகை என்ற பெயரில் மறுபடியும் அங்குள்ள நிலப்பரப்புகளில் முதலீடு செய்கிறது சீனா ,, இனி 99 வருடம் முடிந்தாலும் பணத்தை திருப்பி கொடுத்தால் தான் ஹோட்டல் மற்றும் நில பரப்பு திருப்பி கொடுக்கப்படும் என்ற நிலை.. வருங்காலங்களில் இலங்கை சீனர்களுக்கே
இவ்வாறே பல நாடுகளும், சீனாவின் சதி வலையில் சிக்குண்டுள்ளன.
#எகிறி அடித்த இந்தியா
அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில், சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம், நம்முடைய நிறுவனங்களை கடனாளியாக்கி, நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற சீனாவின் திட்டமே.
அதை முறியடித்து, அன்னிய முதலீடுக்கு கட்டுப்பாடு விதித்து, சீனாவுக்கு, பிரதமர், நரேந்திர மோடி, 'செக்' வைத்துள்ளார்.
சமீபகாலமாக, சீன நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.
கடந்த, 2014ல், அதன் முதலீடு, வெறும், 12 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சீனா, முதலீடு செய்து உள்ளது.
இந்தாண்டு, ஜனவரி - மார்ச் காலகட்டத்தில், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.75 கோடி பங்குகளை, சீனாவின் மக்கள் வங்கி வாங்கியுள்ளது.
30 இந்திய, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில், 30 ஆயிரம் கோடி ரூபாயை, சீனா முதலீடு செய்துள்ளது.
இதைத் தவிர, சீனாவில் தயாரான, 'மொபைல் ஆப்கள்' பல, இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளன.
இவ்வாறு, சீனா, கொஞ்சம், கொஞ்சமாக, தன் முதலீடுகளை அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில்,நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவே, இதனால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுக்கு பின், இதுபோன்ற நிறுவனங்கள் பல, உடனடியாக தலை துாக்க முடியாமல் திணறும் அபாயம் உள்ளது. அப்போது, பணத்தை கையில் வைத்துக் கொண்டு, 'கை கொடுத்து உதவுவதுபோல், அந்த நிறுவனங்களில் சீனா முதலீடு செய்து, பின், கபளீகரம் செய்து விடும்' என, நிபுணர்கள் எச்சரித்தனர்.
இதை முறியடிக்கவே , அன்னிய முதலீடுக்கு கட்டுப்பாடு விதித்து, சீனாவுக்கு, பிரதமர், நரேந்திர மோடி, 'செக்' வைத்துள்ளார்.
இந்தியா கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
நம் நாட்டிலும், சீனா இவ்வாறு நுழைய முயல்வதை தடுக்கவே, அன்னிய நேரடி முதலீட்டில், புதிய கட்டுப்பாடுகளை, நம்முடைய அரசு கொண்டு வந்துள்ளது. சீனாவின் பிடியில் இருந்து தப்பிக்க, இது உதவும். இதைத் தவிர, இந்த பிராந்தியத்தில், சீனாவின் கட்டுப்பாட்டை தடுக்கும் வகையில், மற்ற அண்டை நாடுகளுக்கு உதவும் முயற்சியிலும், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
KALAVATHI KALA
 

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக