பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஏப்ரல் 30

நண்பன் ரிஷி.

குடந்தை கல்லூரியில் PUC படித்துக்கொண்டிருந்த போது கற்பகம் தியேட்டரில் வெளிவந்த பாபி.சென்னையில் வெளிவந்து பின்னர் ஒருமாதம் கழித்துதான் அங்கெல்லாம் வெளிவரும். படம் வரும் முன்னரே பாபி பாடல்கள் அத்தனையும் சந்து பொந்துகளில் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி விட்டிருந்த நேரம். காலையில் கல்லூரிக்கு செல்லும்பொழுதும், மாலையில் வகுப்புகள் முடிந்து வீடு திருப்பும் பொழுதும், அந்த தியேட்டரின் முன் புறம் பெரிது பெரிதாக நிற்கும் பாபி பட விளம்பர பேனர்களைப்பார்த்துக்கொண்டு செல்வது. நினைத்தபோதெல்லாம் சினிமாவுக்கு போக முடியாது. டிக்கெட்டிற்கு காசு சேரவேண்டும். அப்போது ரிஷிகபூர்/டிம்பிள் கபாடியா ஜோடி இளையவர்களை அதிகம் ஈர்த்த ஒன்று. எப்படியோ படமும் நண்பர்களுடன் பலமுறையும் பார்த்தாகிவிட்டது. ரிஷியிடம் அந்த குழந்தைத்தனமான முகமும், வெகுளியான நடிப்பும் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் பிடித்துப்போன ஒன்று.


நேற்றே ரிஷி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட செய்தி பார்த்து, ஆள் மீண்டும் வந்துவிடுவான் என்றுதான் நம்பினேன். இன்றுகாலையில் இனிமேல் அவன் இல்லையென்ற செய்தி வருத்தமாகவே உள்ளது. சினிமாவில் கிடைத்த நண்பன் ரிஷி. காதல் மனைவி நீத்து சிங் உடன் நடித்த கேல் கேல் மெய்ன் இன்னொரு மறக்கமுடியாத ரிஷியின் படம். உன் ஆன்மா சாந்திஅடைய வேண்டும் கோடிக்கணக்கான இந்திய நண்பர்களின் நானும் ஒருவன் ரிஷி.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக