பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 17

இதை சொன்னால் நாம் சங்கி..

ரமலான் நோன்புக்காக 54 லட்சம் கிலோ அரிசியினை அரசு வழங்குகின்றதாம், நல்லது சிறுபான்மையினருக்கு அவர்களின் நம்பிக்கையினை பெற அவர்களின் சம்பிரதாயங்களில் இப்படி நிச்சயம் உதவ வேண்டும்
ஆனால் ஒரு பள்ளிவாசலின் வருமானவது முழுக்க‌
அரசுக்கு வருமா என்றால் வராது,பல சலுகைகள் உண்டு
அதே நேரம் இந்துக்களின் பண்டிகைககளுக்கு அரசு அரைகிலோ அரிசி கொடுக்குமா என்றால் கொடுக்காது, இவ்வளவுக்கும் இந்து ஆலய வருமானெல்லாம் எங்கு செல்லும் என்றால் அரசுக்குத்தான் செல்லும்
கண்காணும் அநீதி இது
சிறுபான்மையினருக்கு வரிபணத்தில் இருந்து கொடுக்கட்டும் , யாரும் எதிர்க்கவில்லை, அம்மக்கள் அவர்களின் மதகடமையினை நிறைவேற்ற முழு துணையாக இருத்தல் வேண்டும்
ஆனால் வருமானத்தை கொட்டிகொடுக்கும் இந்து ஆலய பண்டிகைகளுக்கு அரை கரண்டி நீராவது கொடுக்க வேண்டும் அல்லவா? அந்த ஆலயம் கொடுக்கும் வருமானமென்ன?
இந்துக்களின் ஆலய‌ வருமானத்தை பெற்று கொண்டே அவர்களுக்கு பெரும் துரோகம் அரசால் இங்கு நடத்தபடுகின்றது, ஏற்க முடியா அநீதி இது
இதை சொன்னால் நாம் சங்கி..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக