பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, பிப்ரவரி 8

பப்புவும் - சுடலையும் ஒரு கதை..




குடியுரிமை சட்டத்திற்கு பிறகு அடுத்த என்ன போராட்டம் பன்னலாம்னு ஆலோசனை பன்ன சுடலை பப்புவை பார்க்க போனார்.
சுடலையை வரவேற்ற பப்பு காரில் ஏற சொன்னார். சுடலை புரியாமல் திருதிருன்னு முழிக்க பப்பு சுடலை காதில் கிசுகிசுன்னு சொன்னார்....
" அமித்ஷா ரொம்ப ஓவரா போறார். நம்ம மேட்டர்லாம் எப்படியோ லீக் ஆகுது. நான் போற இடத்திலெல்லாம் மானாவாரியா வகை தொகையில்லாம மைக்ரோபோனை வச்சி ஒட்டு கேட்கறார்னு நினைக்கிறேன். கார்ல் ஏறுங்க, டிராவல்லயே பேசலாம். "
சுடலை காரில் ஏறுனதும் பப்பு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்ட, வண்டி கிளம்பினது.
தொடர்ந்து நாலு மணி நேரமா ஓடற வண்டியில் ரெண்டு பேரும் பேசினாங்க.... பேசினாங்க... பேசிக்கிட்டே போனாங்க.
திடீர்னு வண்டி நின்னுட்டு. பார்த்தா வண்டியில் பெட்ரோல் இல்லை. வண்டி நானுறு கிலோமீட்டர்க்கு மேல் ஓடி ராஜஸ்தான்ல நிற்கிது.
சரி, உதவிக்கு யாரையாவது வரச்சொல்லலாம்னு பார்ரத்தா அந்த ஏரியாவில் சிக்னலே இல்லை. ஏதாவது வண்டியை நிறுத்தி லிப்ட் கேட்கலாம்னு பார்த்தா....
கைகாட்டறதை பார்க்கறவங்க தூரத்த்திலிரு்தே ஸ்லோ பன்னி கிட்டக்க வந்து நிப்பாட்டறாங்க. ஆனா பக்கத்தில் வந்ததும் ரெண்டு பேர் மூஞ்சியை பார்த்ததும் காறி துப்பிட்டு கதவை திறக்காமலேயே எஸ்கேப் ஆகிடறாங்க.
என்ன பன்றதுன்னு புரியலை. ரெண்டு பேரும் சேர்ந்து புத்திசாலித்தனமா ஒரு முடிவெடுக்கறாங்க. ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில் கிளம்பி போகனும். எங்கே மொபைல் போன் சிக்னல் கிடைக்குதோ அங்கேயிருந்து உதவிக்கு கூப்பிடலாம்னு பேசி ஆளுக்கொரு திசையில் கிளம்பி போனாங்க.
சுடலை நடந்தார் .... நடந்தார்... நடந்துக்கிட்டே இருந்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு டவர் தூரத்தில் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் சுடலைக்கு சந்தோசம். வயலில் எல்லாம் இறங்கி மேலும் ஒரு மணி நேரம் நடந்து அந்த டவருக்கு கீழேயே போய் குந்திக்கிட்டு போனை பார்த்தார். அப்படியும் சிக்னல் இல்லை. ஒரு வேளை போன்ல பால்ட் இருக்கும்னு நினைச்சி போனை சுவிட்ச் ஆப் பன்னிட்டு மறுபடியும் ஆன் பன்னுனார். அப்படியும் சிக்னல் மட்டும் வரலை.
ஒரு வேளை இது வேற செல்போன் டவரா இருக்குமோன்னு சுத்தி முத்தி பார்த்தப்ப தூரத்தில் இன்னொரு டவர் தெரிஞ்சது. சரி அங்க போய் பேசலாம்னு கால்வலியோட வயலில் நடந்து போனார்.
அங்கேயும் அதே கதை தான்., அங்கே பார்த்தப்ப தூரமா இன்னொரு டவர்...! அங்கேயும் போய் டவருக்கு கீழே நின்னும் சிக்னல் கிடைக்கலை. சுடலைக்கு பைத்தியமே பிடிச்சிட்டு. அப்பத்தான் ஒரு விவசாயி டிராக்டரில் வந்தார்.
சுடலை டிராக்டரை நிறுத்தி விவசாயிக்கிட்ட கேட்டார்....,
" ஏம்பா விவசாயி, இந்த ஏரியாவில் எந்தப் பக்கம் போனா செல்போன் கிடைக்கும்.... ? "
" இங்கேயே நல்லா கிடைக்குமே... !"
சுடலை தன் செல்போனை ஆட்டி, உதட்டை பிதுக்கிக்கிட்டே, டவரை கைகாட்டி சொன்னார்....
" எங்கே கிடைக்கிது... ? நானும் மூணு டவர் வரிசையா பார்த்திட்டேன். டவருக்கு கீழே நின்னா கூட சுத்தமா சிக்னல் கிடைக்கலை.... "
அடுத்து உடனே விவசாயி கேட்ட கேள்வி சுடலைக்கு தூக்கி போட்டது.
" யோவ், தமிழ்நாடு தத்தி சுடலை தானே... ? "
" ஆமா, நான் சுடலை தான். எப்படி கரைக்டா கண்டு பிடிச்சி சொன்னீங்க... ? "
விவசாயி அடுத்த கேள்வியை கேட்டார்.
" உன் கூட, இந்தியா தத்தி பப்புவும் வந்தாரா... ? "
இதை கேட்டதும் சுடலை முகம் மாறியது.
" அட ஆமாம். எப்படி இவ்வளவு கரைக்டா சொல்றீங்க... ? எங்களை உளவு பார்க்க அமித்ஷா அனுப்புன ஆள் தானே நீ..... ? "
" அறிவு கெட்ட தத்தி சுடலை, உன்னை உளவு பார்க்க அமித்ஷா ஆள் அனுப்பற அளவுக்கு நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கரா... ? இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா... ? "
" எனக்கே ஓவர்னு தெரியுது, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா தமிழ்நாட்டில் என்னை அறிவாளின்னு ஒரு கூட்டம் பார்ம் ஆயிட்டுய்யா. அதை மெயின்டைன் பன்னிக்கிட்டிருக்கேன். அது சரி என்னை எப்படி சுடலைன்னு சரியா கண்டு பிடிச்ச... ? "
" ஹை வோல்டேஜ் கரண்ட் கம்பி டவருக்கு கீழே நின்னுக்கிட்டு மொபைல் டவர் கிடைக்கலைன்னு சொல்லுற தில்லும், அறிவும் உலகத்திலேயே சுடலைக்கு மட்டும் தான் இருக்கும். "
" சரி, பப்புவோட வந்தேன்னு எப்படி சரியா கண்டு பிடிச்சி சொன்னீங்க... ? "
" அதை வேற சொல்லனுமாக்கும்.... ? இருபது கிமீ தள்ளி ஒருத்தன் உன்னை மாதிரியே கையில் ஏ.சி ரிமோட்டை வைச்சிக்கிட்டு செல்போன் சிக்னல் கிடைக்கலைன்னு சொன்னான். இவ்ளோ பெரிய அறிவாளி உலகத்தில் பப்பு ஒருத்தராத்தான் இருக்க முடியும். "
சுடலை இப்ப பரிதாபமாக கேட்டார்...,
" விவசாயி சார், டவர் கிடைக்கலைன்னு கண்டபடி வந்ததில் திரும்ப போகிற பாதையே தெரியலை. வழியையாவது சொல்லிட்டு போங்க... "
" யோவ் தத்தி... , பப்புவும் உன்னை மாதிரியே ஒவ்வொரு கரண்ட் டவரா சிக்னல் கிடைக்குதான்னு ஏசி ரிமோட்டை பார்த்துக்கிட்டே எதிர் திசையில் இருந்து இந்தப் பக்கம் வந்துக்கிட்டிருக்கார். நீயும் இப்படியே போய்க்கிட்டிரு. ரெண்டு பேரும் மீட் பன்னிக்கிட்டு எனக்கு கரண்ட் டவர் கீழேயிருந்து போன் பன்னுங்க வந்து வழி காட்டறேன். "
சுடலை திருப்தியுடன் தலையாட்டி விட்டு அடுத்த டவரை பார்த்து நடக்க ஆரம்பித்தார்.
-------------- Bommaiyah Selvarajan.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக