பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜனவரி 19

ஒன்றரை பக்க நாளேடு...

1970 தை 14 பொங்கலன்று, எங்களது பள்ளி நாட்கள். வீட்டில் அண்ணன் மார்கள் வழக்கமாக படிக்கும் தமிழ் ஆங்கில வார மாத இதழ்களோடு 1970 தை 14 பொங்கலன்று, புதிதாய் வந்த சோ வின் துக்ளக் பத்திரிகையும் அடக்கம். முதலில் அட்டைப்படத்தில் கார்டூன். இரண்டு கழுதைகள் பேசிக்கொள்ளும்.
1 சோவின் பத்திரிகை வெளிவந்து விட்டதாமே..
2 ஆமாம் இனிமேல் நமக்கு விருந்துதான்...
பின்னர் அடுத்தவருடம் 1971 இல் சேலதில் நடைபெற்ற ஈரோடு ராம்சாமி நடத்திய இந்து மத எதிர்ப்பு ஊர்வலம் பற்றி முன்னதாகே செய்திகள் வர, ஊர்வலம் நடைபெற்ற தினத்தில் நடந்த நிகழ்வுகளை , அன்றைய ஆட்சியில் இருந்த திமுக முத்துவேல் கருணாநிதி வேறு எந்த பத்திரிகையிலும் வெளிவராதவாறு கவனித்துக்கொள்ள, துக்ளக் மட்டும் அந்த ஊர்வல நிகழ்வுகளின் போட்டோக்களாக எடுத்து வெளியிட, விஷயம் கருணாநிதிக்கு தெரியவர. உடனே துக்ளக் பத்திரிகைக்கு தடைபோடப்பட்டது. வெளியான பிரதிகள் அனைத்தும் மாநில அரசால் கைப்பற்றப்பட்டது. இவையெல்லாம் மறுநாள் பத்திரிகை செய்திகளாகவே அன்று தெரிந்துகொள்ள முடியும். இது குறித்து சோ தொடர்ந்த வழக்கில் " இந்துக்களே வேடிக்கை பார்த்துக்கொண்டு தானே நின்றார்கள், அவர்கள் ஊர்வலத்துக்கு தடை சொல்லவில்லையே " என்ற பாணியில் வழக்கை தள்ளுபடி செய்ய, பின்னர் தடை நீக்கப்பட்டு துக்ளக் மறுபடியும் வெளிவந்தது. அப்போதும் அதே இரண்டு கழுதைகளின் கார்டூன் தான் அட்டையில்.
1 சோவின் பத்திரிக்கை மீண்டும் வெளிவந்து விட்டதாமே...
2. ஆமாம் ..இனி நமக்கு விருந்துதான்..
சில ஆண்டுகள் கழித்து எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அன்று சேலத்தில் நடந்த அந்த இழிவான ஊர்வல நிகழ்ச்சிகளின் படங்களை காணும் படி அமைந்தது. அது Illustrated weekly of India அப்போது பிரபலமான பத்திரிகைக்காரர் குஷ்வந்த் சிங் அதன் எடிட்டராக இருந்த நேரம். . இன்று எல்லாமே இணையத்தில் குவிக்கப்ட்டுள்ளன.
ஒன்றரை பக்க நாளேடு -  கும்பலாக  சுற்றி உட்கார்ந்துக்கொண்டு யாராவது ஒருவர் படித்துக்காட்ட.. விழுந்து விழுந்து சிரித்த நாட்கள் அவை..... தினத்தந்தியை சும்மா செமையாக வைத்து செய்யப்படும் பகுதி அது.
தமிழில் கல்கிகுப்பிறகு அரசியலில் சடையர் பாணியைக்கொண்டுவந்தது சோவின் வெற்றிகளில் ஒன்று.







0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக