பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜனவரி 23

ஹிந்து ராம் தன் மெளனத்தை கலைத்து....

1971  சேலம் பஹ்ஹ்த்தறிவு மாநாட்டின் நிகழ்வுகளை  இன்றைய தமிழ் - இந்து  வெளியிட்டுள்ள  ஆச்சர்யம்.

ஒரு வழியாக ஹிந்து ராம் தன் மெளனத்தை கலைத்து 1971 சேலம் ஹிந்து கடவுள் இழிவு ஆர்பாட்டத்தை பற்றிய செய்தியை பதிய வைத்துள்ளார் தமிழ் ஹிந்துவில்.
//இந்த ஊர்வலத்தில் முருகக் கடவுளின் பிறப்பு, முனிவர்களின் தவம், மோகினி அவதாரம் பற்றிய ஆபாசமான படங்கள் இருந்தன. ராமரின் 10 அடி உயரப் படம் ஒரு வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டது. அதை பல பேர் செருப்பால் அடித்துக் கொண்டிருந்தனர்"
மேலும் அந்த செய்தியில், "பெரியார் ஒரு ட்ராக்டரில் அமர்ந்தவாறு அந்தப் பேரணியை தொடர்ந்தார். பேரணியின் முடிவில் ராமரின் கட் அவுட்டிற்கு தீ வைக்கப்பட்டது //..
என்று தங்கள் ஆங்கில செய்தியை தமிழ்படுத்தியிருக்கிறார்கள்.அதோடு மாநாட்டில் பிறன் மனைவியை காதல் செய்யலாம் குற்றமில்லை என்ற தீர்மானத்தை பற்றி ஹிந்து நிரூபர் பதிய வைத்துள்ளார்.
//"மைனர் பெண்ணை கவர்வது தவறு. அது கடத்தல், அதுவும் குற்றமாகும். ஆனால் இன்னொருவரின் மனைவியான, வளர்ந்த, மேஜர் பெண்ணை ஒருவர் தீவிரமாக காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்தப் பெண்ணும் இந்தக் காதலுக்கு சம்மதம் தெரிவித்தால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அந்தப் பெண்ணின் கணவன் இந்தத் திருமணத்தை தடுக்கக் கூடாது// என்று பெரியார் சொன்னதாக பதிவு செய்துள்ளார்கள்..
கடைசியாக அந்த நிகழ்விற்கு அனுமதி கொடுத்தது குறித்து ஹிந்துக்கள் மனம் புண்பட்டிருக்கும் என முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்ததாகவே செய்தி பதிய வைக்கப்பட்டுள்ளது.
//திக நடத்திய பேரணியில் ஆபாச படங்கள் இடம்பெற்றதும், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கியதும் குறித்து நாளிதழ் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டு வருத்தப்படுவதாகவும் முதல்வர் கூறினார். சிலரின் உணர்வுகள் புண்பட்டிருக்கும், அதை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கருணாநிதி சொன்னார்//
செய்தி லிங் கீழே👇👇

https://www.hindutamil.in/news/tamilnadu/536075-ram-ramasamy-and-rajini-what-happened-in-salem-in-1971-1.html

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக